Saturday, 13 July 2013

தோரணம் - 12/07/13


இந்த வார கவிதை;


ஏக்கம்;

கை நிறைய பூக்கள்...

மல்லிகை செடியில்

மலர்கள் பறிக்கிறாள்..!

மடியில் ரோஜாக்கள்

கடவுளுக்கு மாலை தொடுக்கிறாள்..!

தலையில் பூ கூடை வைத்து

கூவி கூவி விற்கிறாள்..!

கட்டிய பூவை,,

தலையில் சுமந்த மலரை,,

கூந்தலில் சூட முடியாத பெண்

சமூகத்தில் விதவை.

ஆர்.சத்யசேகர்  - சாமிதோப்பு


திருடா திருடா;

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் ஆய்வில் தெரிய வந்த தகவல்..

* லண்டனில் ஒவ்வொரு 4.5 வினாடிக்கு ஒருமுறை ஒருவர் தன் பொருட்களை திருடர்களிடம் பரி கொடுக்கிறார். அதாவது லண்டன் நகரில் திருட்டு பயம் அதிகமாம்.

* பெரும்பாலான வழிப்பறி கொள்ளைகள் பகலில் தான் நடைபெறுகிறது.

* உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் திருடர்களில் சராசரியாக 700 பேருக்கு ஒருவர் தான் போலீசாரிடம் பிடிபடுகின்றனர். மற்றவர் சுதந்திரமாக வெளியே நடமாடிக் கொண்டு தான் இருகின்றனர்.

* வீடுகளில் நடக்கும் திருட்டுகளில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வேலைக்காரர்களே ஈடுபடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே உஷாரா இருந்துகோங்க.


இந்த வார நகைச்சுவை;

முதலாளி தனது நண்பருடன் தொழிற்சாலைக்குள் சுற்றிவந்தார். வழியில் ஒரு எந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த தொழிலாளியை நெருங்கி ஏதோ சொன்னவர் மறுபடியும் நண்பருடன் இணைந்து நடக்கலானார்.
“அந்தத் தொழிலாளிகிட்ட என்ன சொன்னாய்?” கேட்டார் நண்பர்.

“வேலையை வேகமா செய்யணும்னு சொன்னேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்கு எவ்வளவு சம்பளம் தர்ற?” கேட்டார் நண்பர்.

“மாசம் ஆறாயிரம் ரூபாய் தர்றேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்குக் கொடுக்கிற சம்பளப்பணம் உனக்கு எப்படிக் கிடைக்குது?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை விற்பதால் கிடைக்குது.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சு கொடுக்கிறது யாரு?” கேட்டார் நண்பர்.

“அந்தத் தொழிலாளிதான்.” சொன்னார் முதலாளி.

“அவரு ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு பொருள்கள் செஞ்சு கொடுப்பாரு?” கேட்டார் நண்பர்.

“ஆயிரம் ரூபாய் இருக்கும்...” சொன்னார் முதலாளி.

“அப்படின்னா மாசம் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவரு செஞ்சுகொடுக்கிறாரு. ஆனா அவரு செய்ற வேலைக்கு நீ அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறதுக்கு பதிலா, ‘வேகமா வேலை செய்யணும்’-னு நீ தினமும் சொல்றதுக்காக அவருதான் உனக்கு மாசம் இருபத்து நாலாயிரம் ரூபாய் கொடுக்கிறாரு, இல்லையா?” கேட்டார் நண்பர்.

“ம்...” என்று சொன்ன முதலாளி உடனே சுதாரித்துக்கொண்டு, ”ஆனா இந்த மெஷின்லாம் என்னோடதாச்சே,” என்றார்.

“இந்த மெஷின்களை நீ எப்படி வாங்கின?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை வித்து அதிலே கிடைச்ச பணத்திலேதான் வாங்கினேன்.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சது யாரு?” கேட்டார் நண்பர்.

இப்போது முதலாளி சொன்ன பதில்: “வாயை மூடிட்டு வா... அவன் காதிலே விழப்போவுது...”


இந்த வார விழிப்புணர்வு தகவல்; 

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை

9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.
இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார் அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்?

நான், அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!


சிங்கம் 2 - கர் புர் கிர்;

வர வர தமிழ் நாட்டு ஜன தொகைய விட தமிழ் சினிமா பைடேர்ஸ் தொகை அதிகமாயிருச்சு போல. சிங்கம் 2 படத்துல்ல எம்புட்டு பேர கொலையா கொன்னு எடுக்குறாரு அம்மாடியோவ். ஓங்கி அடிச்சா ஒண்ணுக்கு போற வெய்ட்ல சீ ஒன்னற டென் வெய்ட்ல, நாடுவிட்டு நாடு காண்டம் விட்டு காண்டம் சாரி சாரி கண்டம் கண்டம் பறந்து தாக்குற எவுகனைடா அப்படின்னு அவரு ஓங்கி ஓங்கி அடிக்கும் போது அந்த புள்ளைங்க எல்லாத்தையும் பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு இந்த காசுக்காக எம்புட்டு அடி வாங்குறாங்க.

சூர்யா நல்ல அடிக்கிறாப்ல, பறந்து பறந்து பந்தாடுறாரு, பயங்கரமா பஞ்ச் அடிகிறாரு எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் விஜய் பண்ணுனா நம்ம ஆளுங்க விட்டு கிழிக்கிறாங்க அத இந்த ஆள அவரு தம்பியலாம் லைட்டா களாய்சிட்டு விட்டுடுறாங்க அது ஏன். அய்யா சூர்யா சிங்கம் 1ல சென்னைல உள்ள ரௌடிய காலி பண்ணிடிங்க சிங்கம்2 ல வெளிநாட்டுக்காரன்ன போயி புடிச்சுட்டு வந்திங்க. சிங்கம் 3 ல செவ்வாய் கிரகம் போவிங்களா.

இசையை பத்தி சொல்லணுமே காது சவ்வு அருந்துருசுல. மொத்ததுல்ல படம் பார்த்துட்டு வெளிய வந்து சாரிடான் மாத்திரை வங்கி போட்டது தான் மிச்சம்ல. படம் பார்த்த தலை வலி வரும்ன்னு நான் ஜோக்கா தான் படிச்சு இருக்கேன் அத நேற்று தான் அனுபவிச்சேன்ல. 


மதம்;

நான் பொதுவா மத விசயங்களை பதிவாக எழுதுவதில்லை. இன்னைக்கு மெட்ராஸ் பவன்ல சிவகுமார் மோடியின் பேட்டியை பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தாரு அத படிச்சதுக்கு அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் போல இருக்கு.

எந்த மதமும் பிறர் உயிரை எடுக்க வேண்டும் என்று  சொல்லவில்லை. எல்லா மதங்களும் நல்லதையே போதிகின்றன. அதை பின்பற்ற வேண்டிய ஐந்து அறிவு மனிதனே தவறு செய்கிறான். தவறு செய்யாதவர்கள் எந்த மதத்திலும் இல்லை அவ்வாறு செய்பவன் மனிதனே இல்லை.

நன்றி!

7 comments:

கவியாழி said...

விதவையின் கவிதை அருமை

Anonymous said...

romba paraparappana pathivu

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாவற்றையும் விட முடிவில் சிறப்பு... பாராட்டுக்கள்...

ராஜி said...

தோரணம் நல்லா இருக்கு. விழிப்புணர்வு பத்தி சொன்னது நடைமுறைல எவ்வளவு சாத்தியம்ன்னு தெரியலை:-)

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - சமூகத்தில் விதவை - பூக்கள் விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கும் சமூகம் அவர் தலையில் சூடுவதை மட்டும் மறுப்பதேன் - திருந்த வேண்டாமா ?

திருடா திருடா - உஷாரா இருங்கப்பா

நகைச்சுவை சூப்பரோ சூப்பர்

ரேஷன் கடையில் சரக்கிருப்பு விவரமறிய பொது ம்க்களுக்கு ஒரு வாய்ப்பு - அருமையான தகவல் பகிர்வினிற்கு நன்றி

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - இதற்கெல்லாம் விடிவு காலம் தான் என்ன ? என்று தான் புரிந்து கொள்ளப் போகிறோம் கரம் சிரம் புறம் பற்றி ....

சிங்கம் - 2 - விமர்சனம் நன்று

மதம் பற்றிய கருத்தும் அருமை

நல்வாழ்த்துகள் சக்கர கட்டி -= நட்புடன் சீனா

Unknown said...

தங்கள் கருத்திற்கு வருகைக்கு நன்றி சீனா ஐயா

கவிதை வானம் said...

சிங்கத்தின் கர்ஜனையை விட ஊளை ...சூப்பர்