Sunday 30 June 2013

எம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..? : கவிஞர் கண்ணதாசன்


காவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன்.

நான் மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை ! எனப் பாடி , என்று நிலைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன். தன் மீதான சுய விமர்சனங்கள் உட்பட, எவர் மீதான விமர்சனங்களையும் தயக்கமின்றி வெளிப்படுத்திய கவிஞர்.

அவர் நெருங்கிப் பழகிய முக்கிய அரசியற் தலைவர்கள் இருவரைப் பற்றி அவர் பதிவு செய்திருப்பதை அவரது நினைவில், நன்றியோடு  இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

 “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான். ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.  அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.  திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும். அதனால் எம்.ஜி.ஆருடைய விலக்கம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.  எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இவருக்கு குடும்பம் மட்டும் இல்லன்னா ஒரு நல்ல தலைவரா வந்து இருப்பாரு?

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடைசியில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் : கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

நன்றி!

Friday 28 June 2013

சயின்ஸ் கபாலி 28/06/2013

                          {இதுவரை 30,000 ஹிட்ஸ் பெற வைத்த நண்பர்களுக்கு நன்றி, நன்றி,நன்றி

{சிதைக்கப்பட்ட ஹிரோஷிமா} 

அணுகுண்டுக்கு எப்படி அவ்வளவு சக்தி;

இரண்டாம் உலக போரில் அணுகுண்டு வெடிக்கப்பட்டதால் இலட்சகணக்கான உயிர்கள் பலி ஆகின. பொருட்சேதங்களும் சொல்ல முடியாத அளவில் ஏற்பட்டது. அணுகுண்டுக்கு எப்படி இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்று தெரியுமா?

பொருளின் ஆற்றல் என்பது, பொருண்மையை {எடையை} ஒளியின் வேகத்தால் பெருக்கி, அதனை மீண்டும் ஒரு முறை ஒளியின் வேகத்தால் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பிற்குச் சமமாகும். இதனையே விஞ்ஜானி ஐன்ஸ்டின் கண்டறிந்தார். ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் அப்படியென்றால் ஒரு கிராம் பொருளில் இருந்து எவ்வளவு ஆற்றலை பெற முடியும் என்று கணக்கிட்டாலே  தலை கிறுகிறுக்கும்.

அணுகுண்டும் இதே அடிப்படையில் அணுக்களை பிளப்பதால் தான் அவை சிதைந்து அதிக ஆற்றலை உமிழ்ந்து அழிவை ஏற்படுத்துகிறது. இதே அணுசக்தி முறையில் மின்சாரம் தயாரித்தால் மிகுதியாக மின்சாரம் தயாரிக்க முடியும் என தமிழக அரசிற்கு கூறி கொள்கிறேன்பா ஹிஹி.


பெரிய எரிகல் பள்ளம் உருவானது எப்போது;

உலகிலேயே பெரிய விண்கல் பள்ளம் சைபிரியாவில் உள்ளது. 1908ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி காலை எனிஷி என்ற இடத்தில் இந்த விண்கல் விழுந்தது. நீண்ட தூரத்திற்கு பேரொளி வீசியதை பலரும் கண்டார்கள். பெரிய நிலா அதிர்ச்சியும் ஏற்பட்டது. 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் காடுகளும் கட்டிடங்களும் அழிந்தன. ஏராளமானவர்கள் பலி ஆனார்கள். பூமியில் பெரிய பள்ளமே உருவானது.


உயர்ந்ததும் தாழ்ந்ததும்;

*உலகிலேயே மிக உயர்ந்த பகுதி நேபாள நாட்டில் உள்ள எவரெஸ்ட்.

*உலகின் மிக தாழ்ந்த பகுதி ஜோர்டான் நாட்டில் உள்ள சாக்கடல்.

*உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநிலம் இந்தியாவில் உள்ள சுந்தரவனம்.

*உலகிலேயே மிக பெரிய சமவெளி கங்கை சமவெளி.

 *உலகின் மிக குளிரான பகுதி அண்டார்டிகா.


உங்களுக்கு தெரியுமா?

உலகில் அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடு - சீனா 

சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளன.

உலகின் மிக பெரிய தீவு- கிரின்லாந்து

சங்குகள் வலம்புரி,இடம்புரி என இரு வகைகள் உள்ளன.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகல் பொழுது நீடிக்கும்.



உடலே மந்திரி சபை;

மூளை - பிரதம மந்திரி

காது - தபால்துறை மந்திரி

வயிறு- உணவு&விவசாயத்துறை மந்திரி

இதயம்- நீதித்துறை மந்திரி

கை- தொழிலாளர் நல மந்திரி

தோள் - பாதுகாப்பு துறை மந்திரி

கால்- போக்குவரத்துத்துறை மந்திரி

நாக்கு- ஒலிபரப்புத்துறை மந்திரி

நுரையீரல்- உள்துறை மந்திரி

கண்- நிதித்துறை மந்திரி

தலை- கல்வித்துறை மந்திரி

மூக்கு -சுகாதரத்துறை மந்திரி


நன்றி!

Tuesday 25 June 2013

மிஷ்கின் என்னும் தனித்த ஓநாய்


ஓநாய்கள் கூட்டமாக வாழக் கூடியவை. ஆனால் சில தனித்துவமான ஓநாய்கள் தனியாகவே வாழும். கூட்டத்தின் பொதுத்தன்மைக்கு அவைகளால் ஒத்து வாழ முடியாது. அப்படியொரு தனித்த ஓநாயாகதான் மிஷ்கினையும் பார்க்க முடிகிறது.

சித்திரம் பேசுதடி படத்தில் அதனை உணர முடிந்தது. தமிழில் தங்களுக்கென திரைமொழிகளை உருவாக்கி‌க் கொண்டவர்கள் சொற்பம். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என சிலரை மட்டுமே உதாரணமாக சொல்ல முடியும். இளைய தலைமுறையில் வெற்றிமாறன், செல்வராகவன், மிஷ்கின் என்று மிகச் சிலர். அதில் மிஷ்கின் மீது தீராக்காதல் பலருக்கு உண்டு. அதற்கு காரணம் Film Noir என்ற வகைமை.

அதற்கு முன்னால் திரைமொழியை பார்ப்போம்.

எல்லா கலைகளும் அரூபமான ஒன்றையே கைப்பற்ற முயல்கின்றன. அதற்கு அவை பயன்படுத்தும் கருவிகள்தான் இசையும், நடிப்பும், ஒளிப்பதிவும், கதையும், யதார்த்தமும் எல்லாமும். இங்கு முக்கியம் அந்த கலை கைப்பற்ற முனையும் அந்த அரூபமான ஒன்றுதான். அதனை உருவாக்குபவை என்ற வகையில் மட்டுமே நடிப்பு, கதை, நடிகர், யதார்த்தம் எல்லாமும் முக்கியம் பெறுகிறது.

ஆக, எதை சொல்ல வருகிறோம் என்பதுதான் முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது ஒவ்வொரு கலைஞனின் தனித்துவம் சார்ந்தது. இந்த தனித்துவம் ஒருசில‌ரிடம் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் தாம் பார்த்த சினிமாக்களைப் பார்த்து அதே பொதுத்தன்மையுடன் வேறொரு சினிமாவை உருவாக்குகிறார்கள். மிஷ்கின் போன்ற ஒரு சிலரே தங்களின் கற்பனையில் ரசிகத்தன்மையில் புதியதொரு திரை மொழியை படைக்கிறார்கள்.

சித்திரம் பேசுதடியில் வரும் கதாநாயக கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். அதன் உடல் மொழி நாடகத்தன்மை வாய்ந்தது. முதல்முதலாக கதாநாயகியின்பால் காதல் கொள்ளும் தருணத்தை மிஷ்கின் எடுத்திருக்கும் விதம் நாடகத்தன்மையின் ஒரு குறிப்பிடத்தக்க உயரம் எனலாம். சாதாரண திரைப்படத்தில் இப்படியொரு உணர்ச்சி கொந்தளிப்பை பார்க்க முடியாது. ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டது போலவே இருக்கும் அந்த கதாபாத்திரத்தின் அவஸ்தை.

படம் நெடுக அந்த நாடகத்தன்மையை மிஷ்கின் கவனப்படுத்தியிருப்பார். நாயகியை பார்க்காமலே அவளை டீஸ் செய்யும் நபரை அடிப்பது, தனது சகோத‌ரியிடம் நடந்து கொள்ளும்விதம் என எல்லா இடங்களிலும் கதாநாயக கதாபாத்திரம் தரையையே பார்த்துக் கொண்டிருக்கும். முக்கியமாக நாயகியின் அப்பா பாலியல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் இடத்திலும் நாயகனின் பாடிலாங்வே‌ஜ் மேலே குறிப்பிட்ட விதத்திலேயே இருக்கும். ஒரு இயக்குனர் கதை சொல்லும் பாணியை தன்னிடத்தில் தக்க வைத்துக் கொள்ளும் திறமையின் வெளிப்பாடுதான் இது.

குரசோவாவின் படங்களில் நடிகர்களின் உடல்மொழி நாடகத்தன்மையை ஒத்திருக்கும். ரெட்பியர்ட் படத்தில் வரும் இளம் பெண் அளவுக்கதிகமாக தரையை அழுத்தத்துடன் துடைத்துக் கொண்டிருப்பாள். தரையை துடைக்கிறாள் என்பதைத் தாண்டி அவள் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை அந்த காட்சி சொல்லாமல் சொல்லும். மிஷ்கின் படங்களிலும் இதனை காணலாம்.

மிஷ்கின் குரசோவா மற்றும் டகாஷி கிட்டானோவின் தீவிர ரசிகர். அவர்கள் படங்களின் சாயல்களை மிஷ்கின் படங்களில் காணலாம். உண்மையில் ஒரு லெஜன்டைப் பார்த்து தங்களின் கலை வெளிப்பாட்டை தீர்மானிப்பவர்கள் குறைவு. ஒருவகையில் அப்படி இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயு‌ரிய கலை குறித்த கோட்பாடு உள்ளது. அந்த கோட்பாட்டில் இயங்கும், அதனை உச்சத்துக்கு கொண்டு சொல்லும் படைப்பாளியை காணுகையில், அட, இது நம்ம ஆள் என்ற அணுக்கம் தோன்றுகிறது. மிஷ்கினுக்கு குரசோவா, டகாஷி மீது ஏற்பட்டதும் இத்தகைய அணுக்கமே.

குற்றம், குற்றவாளிகள், குற்ற செயல்கள் மீதான ஈர்ப்பு மானுடத்திடம் இன்னும் குறையாமலே உள்ளது. மிஷ்கினின் படங்கள் இதனை அணுகி ஆராய்பவை. தவிர்க்க முடியாமல் இந்த ஒப்பீட்டை சொல்ல வேண்டியதாகிறது. ஹ‌ரியின் சாமி உள்ளிட்ட எந்த படங்களாகட்டும், கௌதமின் காக்க... காக்க., வேட்டையாடு விளையாடு படமாக்கட்டும். குற்றவாளிகள் குடும்பம் இல்லாதவர்களாக பாசம் என்பதை அறியாதவர்களாக பூமிக்கு மேலே அரையடி உயரத்தில் வாழ்பவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள்.

அன்பு, பாசம், இரக்கம், கருணை, அர்ப்பணிப்பு எல்லாம் ஹீரோவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மட்டுமே உ‌ரியது. வில்லன்கள் கோல்ட் பிளட் மர்டர்கள் மட்டுமே. இவனையெல்லாம் கோர்ட்டுக்கு கூட்டிப்போய் விசாரணை செய்து, பாதுகாப்பு என்ற பெய‌ரில் பல ஆயிரங்கள் செலவழிப்பதைவிட ஐம்பது ரூபாய் தோட்டாவால் ஒரே போடாகப் போட்டால் வேலை முடிந்தது என காக்க.. காக்க... ஹீரோ சொல்லும் போது அப்ளாஸ் பறக்கிறது. ஆனால், குற்றவாளியும் இந்த சமூகத்தின் ஓர் உறுப்பு என்பதை நாம் பார்க்க தவறிவிடுகிறோம். மேலும் இளவேனில் சொல்லும், இன்று குற்றவாளிகளுக்கு மறுக்கப்படும் நீதி நாளை நிரபராதிகளுக்கும் மறுக்கப்படும் என்ற உண்மையை நாம் மறந்துவிடுகிறோம்.

மிஷ்கின் படங்களில் குற்றவாளிகளின் உலகம் மிகச்சிறப்பாக - குறைந்தபட்சம் தமிழ் சினிமா அளவுக்காவது - நேர்மையாக படைக்கப்பட்டிருக்கிறது எனலாம். அஞ்சாதேயில் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் எடுபிடியாக இருப்பது கால் ஊனமான ஒரு நபர். அவரை போலீஸார் என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போது அவரது மகனின் துடிப்பை காட்சிப்படுத்தியிருப்பார் மிஷ்கின். 

சாதாரண படங்களில் அந்த நபர் கொடூரமாக கொல்லப்படுவார். வில்லன் செத்தான் என்ற நிம்மதி ரசிகர்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த மனிதனும் சமூகத்தின் ஒரு உறுப்பு, அவனுக்கும் களங்கம் என்ன என்று தெ‌ரியாத மகன் ஒருவன் இருக்கிறான், அவனை நம்பியும் குடும்பம் ஒன்று இருக்கிறது என காண்பிக்கையில் நல்லவன் - கெட்டவன், ஹீரோ - வில்லன் என்ற எதிர்மறைகளைத் தாண்டி சமூக யதார்த்தத்தை இன்னொரு கோணத்தில் பார்க்க நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

மிஷ்கினால் டூயட் பாடல்களை எடுக்க முடியாது என்பதை முதல் படத்திலேயே நுட்பமான ரசிகன் தெ‌ரிந்து கொள்வான். ஆனால் அவ‌ரின் முதல் படத்தை வெற்றிப்படமாக்கியது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... கானாப்பாடல்தான். கமர்ஷியல் சினிமாவில் இயங்கும் ஒருவருக்கு இது மிகச்சிரமமான கடிவாளம். அதனால்தான் நிர்ப்பந்தத்துக்காக கானாப் பாடல்களை டாஸ்மாக் பின்னணியில் தொடர்ந்து எடுத்தார் மிஷ்கின். கனவுப்பாடல்கள் அவரது படத்தில் வேண்டா வெறுப்பாகவே வந்து போகும்.

எல்லா காம்ப்ரமைஸுகளுடன் எடுத்த முகமூடி தோல்வி அடைந்தது ஒருவகையில் நல்லதுதான். எல்லா காம்ப்ரமைஸுகளுக்குப் பிறகும் தோல்விதான் என்ற பிறகு, காம்பரமைஸே செய்யாமல் படம் எடுத்தால் என்ன என்றுதான் ஒரு படைப்பாளிக்கு தோன்றும். மிஷ்கினுக்கும் அப்படிதான் தோன்றியிருக்கிறது. (இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். நமது மண்ணில் ஒரு சூப்பர்ஹீரோ தோன்றுவதற்கான சாத்தியத்தை எல்லா லா‌ஜிக்குடன் முகமூடியிலும் சிறப்பாகவே உருவாக்கியிருப்பார் மிஷ்கின். பிரச்சனை ஹீரோயினும், நியாயத்தை ஜெயிக்க வைக்கிற ஹீரோயிசமும். இரண்டுமே மிஷ்கினுக்கு அந்நியமானவை). ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நாயகி இல்லை, அதனால் காதல் இல்லை, எப்போதும் போல அசட்டு காமெடி இல்லை. எதை சொல்ல வருகிறோம். எதை சொல்ல விரும்புகிறோம் என்பதற்கு நடுவில் எதுவுமில்லை.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ஸ்டில்களை மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார். கல்லறைத் தோட்டத்தில் புத்தகம் படிக்கும் ஸ்டில் ஒன்றே பல கதைகள் சொல்கிறது. அவர் வழக்கமான கேன்வாஸை தவிர்த்து புத்தம் புதிய கேன்வாஸில் தனது படத்தை வரைகிறார். அதன் வண்ணமும் சொல்முறையும் இயங்குதளமும் எப்போதும் நம்மை ஈர்ப்பதாகவே அமைகிறது.

சினிமா மேடைகளில் உணர்ச்சிவசப்படுகிற, இரவிலும் கூலிங் கிளாஸ் அணிகிற, தேவையில்லாமல் கருத்து சொல்கிற சமூக பிராணியாகவே மிஷ்கினை அறிந்து வைத்திருக்கின்றன மீடியாக்கள். அவற்றை தாண்டிய தனித்துவமிக்க திரைமொழியும், திறமையும் கொண்ட தனி‌த்த ஓநாய் அவர். கூட்டமாக தி‌ரியும் ஓநாய்களின் செயல்களையும், வாழ்க்கை முறையையும் கொண்டு தனித்த ஓநாய்களை ஒருபோதும் கணிக்க முடியாது. சொல்லாலும், செயலாலும், கற்பனை திறத்தாலும் தனித்த ஓநாய்கள் தனித்துவமானவை, ஒப்பிட முடியாதவை.

(ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபோது தயக்கத்தை மீறி விழுந்த வார்த்தைகளே இவை. மிஷ்கின் படம் குறித்த முழுமையான பார்வையல்ல இவை. ஆனால் இவை இல்லாமல் எந்தப் பார்வையும் முழுமையடையாது).

நன்றி;வெப் துனியா

Sunday 23 June 2013

தலைவா வெளியிட்டு விழா படங்கள் & பாடல்கள்


நேற்று மாலை தலைவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. ஜி.வி.பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் விஜய்யை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார்கள். நாளை - அதாவது இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதற்காக.

விழாவின் தொடக்கத்தில் லேசரில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா என உலகத் தலைவர்களின் படங்களை ஒளிரச் செய்தார்கள். கடைசில் நாம் எதிர்பார்த்த அந்த திட்டமிட்ட விபத்தும் நடந்தது. தலைவர்கள் வரிசையில் கடைசியாக விஜய்யின் முகமும் லேசரில் ஒளிர... அரங்கம் அதிர்ந்த அளவுக்கு நம் மனமும் அதிர்ந்தது. பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று....

சத்யராஜ் கொஞ்ச காலமாக விஜய்யின் கொள்கைப் பரப்பு செயலாளராக நடந்து கொள்கிறார். இந்த விழாவிலும் அப்பணியை சிறப்பாகவே செயல்படுத்தினார். இங்கே உலக தலைவர்களின் முகங்களை லேசாரில் காண்பித்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பெரியார், எம்ஜிஆர், பிரபாகரனின் முகங்களும் இடம்பெற்றிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றார். அடுத்து அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் ஜேம்ஸ் கேமரூனின் இதயம் சுக்கு நூறாக உடைந்திருக்கும். தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பாராட்டியவர், அவர் தென்னகத்து ஜேம்ஸ் கேமரூன் என்றார், எவ்வித சங்கோஜமும் இல்லாமல். எப்படிப்பா...?

சந்திர பிரகாஷ் ஜெயின் - படத்தின் தயாரிப்பாளர் - தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று ஆஸ்திரேலிய நிகழ்வு ஒன்றை விவரித்தார். அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் பேச்சை.

ஜுன் 8 நடைபெறுவதாக இருந்த பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டதைப் பற்றி தீனி போடுவார் என்று பார்த்தால், படத்தைப் பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று இரண்டே வார்த்தைகளில் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டார்.

ரசிகர்களின் ஆரவாரத்தை தாண்டி கேட்டது நம் புரட்சி தமிழனின் ஜால்ரா சத்தம்தான். விஜய் தலைவா ஆயிட்டார், இனி அவரது ரசிகர்கள் தளபதிகள் ஆக வேண்டியதுதான் என்றார். அகராதியை தலைகீழாக புரட்டியும் இதற்கு அர்த்தம் விளங்கவில்லை. தெரிந்ந்தவர்கள் பின்னூட்டமிடலாமே.


1.வாங்கண்ணா;

விஜய் & சந்தானம் இணைந்து பாடி அசத்தி இருக்கிறார்கள் கேட்க மிக சூப்பரா இருக்கு. நம்ம தளபதி பாடும் பாடல்கள் அனைத்தும் கலக்கல் ரகம் அதில் இந்த பாடலும் இணைந்து கொண்டது வாங்கண்ணா அசத்துங்கண்ணா. நானும் இந்த பாடல அப்லோட் பன்றேன் 2 மணி நேரம் ஓடுதே தவிர அப்லோட் ஆகவில்லை.

2.யார் இந்த சாலை ஓரம்;

ஜி.வி. பிரகாஷ் அவரின் வருங்கால மனைவி சைந்தவி இணைந்து பாடி இருகின்றனர் லவ்லி மெலோடி சாங். ரசித்து அனுபவித்து இருவரும் பாடி இருக்கின்றர்கள்.

  3.சொல் சொல் அன்பே;

இது இன்னொரு மெலோடி கேட்க மிக சுமார் தான்.

4.தமிழா தமிழா;

தமிழனின் பெருமையை சொல்கிறோம் என்ற பாடல் இந்த பாட்டு திரையில் வரும் பொழுது அனைவரும் தம் அடிக்க வெளியே செல்வது உறுதி.

5.தளபதி தளபதி;

தலைவான்னு பெயர் வச்சாச்சு இளைய தளபதியின் புகழ் பரப்ப ஒரு பாடல் இல்லையேன்றால் எப்படி எனவே மொக்கையா ஒரு பாடல். தளபதி திருந்துனாலும் சுத்தி இருக்குற பக்கிங்க விடாது போல.

எ.எல். விஜய் இயக்கம் இவரின் அனேக படங்கள் காப்பி தான். இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுது கூட தேவர் மகன் படம் தான் நினைவிற்கு வருகிறது. பார்க்கும் பொழுது துப்பாக்கி அளவிற்கு இருக்காது என்றே தோணுகிறது.

ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கு அது என்னன்னு தானே கேக்குறிங்க வழக்கம் போல தீவிரவாதி, குண்டு வெடிப்பு அதுக்கு காரணம் இஸ்லாமியர்கள் இது மட்டும் கண்டிப்பா இடம் பெற்று இருக்கும். 


நன்றி,வணக்கம் 

Saturday 22 June 2013

தோரணம் 22/06/2013


அரசியல் கூத்து;

எனக்கு ரொம்ப நாள ஒரு சந்தேகம் இந்த அரசியல் வியாபாரிகள் எல்லாம் கோடை காலம் வந்தாலே போதும் உடனே நம்ம தமிழக மக்களின் தாகத்தை தணிக்க வந்த குற்றால அருவி போல தண்ணீர் பந்தல் என்ற பெயரில் ஒரு கொட்டகை போட்டு அவங்க விளம்பரத அதுல எழுதி அன்னைக்கு சிறப்பு விருந்தினர் ஆகா அந்த ஊரு எம் எல் ஏ வந்து எல்லாருக்கும் தாகத்தை தணிப்பராம். அதுக்கு பிறகு அந்த ஆள மறுபடி தேர்தல் வரும் போது தான் பார்க்க முடியும்.

என் கேள்வி இது தான். இவனுங்க நடத்துன்ன நாடகத்த மறுநாள் போயி பாருங்களேன். பானை எங்கயோ உருண்டு போயி கிடக்கும் தண்ணி குடிக்க பிடிச்சு வைக்க மாட்டாங்க அப்பறம் என்ன மயித்துக்கு இவ்ளோ விளம்பரம் இந்த பரதேசி நாயிகளுக்கு.


குதிரை பேரம்;

நம்ம தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கும் நம்ம மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறவும் நியமிக்கபடுபவர்கள் இந்த எம் பி கள். ஆனா இப்போ நடக்குற கூத்த பாருங்க. இப்படி பேரம் பேசி இவங்க பாடுபட்டு போறது நம்ம மக்களோட நலனுக்காகவா இல்லை.

எல்லாரையும் பாருங்க எவனுக்கு எதிர்பார்த்த தொகை எங்க கிடைக்குதோ அங்க எல்லாம் ஓடி போறானுங்க. இந்த கிருஷ்ணசாமி,ஜவஹிருல்லாஹ் எல்லாரையும் பாருங்க போன சட்டசபை நிகழ்ச்சில மூடிகிட்டு ஓரமா உக்காந்துகிட்டு அம்மா புகழ் பாடிகிட்டு இருந்தாங்க. இப்போ ஆதரவு திமுகவிற்காம்  அங்க தொகை ஏதும் ஒத்து வரலையோ ஒரு இடத்துல்ல இருந்து பழக்கமே இல்லையா உங்களுக்கு எல்லாம் ?


ஜிகர்தண்டா;

போன வருடம் சத்தமே இல்லாமல் சாதனை புரிந்த படம் பிட்சா. அந்த படத்தோட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பு இந்த ஜிகர்தண்டா. படத்தோட நாயகன் சித்தார்த் நாயகி லட்சுமி மேனன் மற்றும் சிம்ஹா கர்ணா என முதல் படத்தில் கலக்கியவர்கள் இதிலும் தொடர்கிறார்கள் இவங்க நடிக்கிறாங்க.

மதுரை தான் கதைக்களம் பெயர பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஆனா இதற்காகவெல்லாம் இந்த படத்தின் மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கவில்லை ஒரு ஆளு அவரு பெயர்  சோமசுந்தரம் யாருடா இந்த ஆளுன்னு கேக்குறிங்களா எஸ்.பி.சரண் தயாரிப்பில் வந்து அவருக்கு துண்டை போட்டு விட்ட படமான ஆரண்ய காண்டம் அந்த படத்துல்ல ஒரு சிறு வயது மகனுடன் எதார்த்தமாக இயல்பான  ஒரு தந்தையாக கலக்கி இருப்பாரே அவரு தான்.

அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் அவரை காண முடியவில்லை. நம்ம தமிழ் சினிமால இயல்பாய் நடிக்க தெறித்த ஆளாக இருந்தாலே தூரத்தி விட்டு விடுவார்கள் போல.



இரங்கல்;

மணிவண்ணன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர்களில் நடிகர்களில் ஒருவர். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிக இயல்பாக கொண்டு வரும் ஆற்றல் கொண்டவர்.

அவரை நான் இயக்குனராக ரசித்ததை விட ஒரு நல்ல காமெடியனாக ரசித்ததே அதிகம். உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, நினைத்தேன் வந்தாய், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் அவரது காமெடி மிக நன்றாக இருக்கும். இத்தனை வயதினிலே அவர் இறந்தது தமிழ் சினிமாவிற்கு இழப்பு தான்.



எதிர்நீச்சல்;

இந்த படம் வந்தப்பவே பார்க்கணும் என்று நினைத்தேன் நல்ல விமர்சனம் பெற்று இருந்தது. என்னமோ தெரியல்ல இந்த படத்த பார்க்கும் சந்தர்பம் அமையவே இல்லை. நானும் இந்த படத்த மெனக்கெட்டு பார்க்க விரும்பவும் இல்லை. ஏன் என்றால் சின்னத்திரையில் ரசித்த அளவிற்கு பெரிய திரையில் அவரை பார்க்க பிடிக்கவில்லை.

நேற்று தான் படம் பார்த்தேன் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழகாகவும் நன்றாகவும் நடித்து இருக்கிறார். படத்தில் சிவாவை விட அவரது நண்பராக நடித்துள்ள சதீஷ் மிகவும் கவருகிறார். படம் இடைவேளை வரை மிக நகைச்சுவையாக செல்கிறது அதன் பின்பு மாரத்தான் ஆரம்பம் ஆனவுடன் தொய்வடைந்து முடிகிறது. அவரின் முந்தைய படத்திற்கு இது தேவலாம்.


மனிதநேயம்;
எவ்வளவு உண்மையான வரிகள்

நன்றி வணக்கம்

Tuesday 18 June 2013

சயின்ஸ் கபாலி {18.06.2013}


இதயம் துடிக்கும் போது சத்தம் வருவதேன்?

மனிதன் இதயத் துடிப்பின் போது லப்டப் ஓசை கேட்பதாக சொல்கிறோம். இந்த சப்தம் எப்படி ஏற்படுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

மனித இதயம் நான்கு அறைகளை கொண்டது. மேல உள்ளவை வலது,இடது ஆரிகிள்கள். கிழே உள்ளவை வலது,இடது வென்ட்ரிகில்கல். ஆரிகில்களையும், வென்ட்ரிகில்கலையும் இரு வால்வுகள் இணைகின்றன. அவை ஈரிதழ் வால்வு மற்றும் மூவிதழ் வால்வு என அழைக்கப்படுகின்றன.
இந்த வால்வுகளே இரத்தத்தை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்ல அனுமதிகின்றன.

இதயம் சுருங்கி விரிதலின் போது ஒரு ஆரிக்கிள் சுருக்கம், ஒரு வென்ட்ரிக்கில் சுருக்கம், அதையெடுத்து சிறு ஓய்வு இவற்றை உள்ளடக்கியதே இதய துடிப்பாகும்.இந்த செயலின் போது வால்வுகள் மூடுவதால் இரு வகை ஒலிகளை கேட்கிறோம். வென்ட்ரிக்கில் சுருக்கத்தின் போது வால்வு இழுத்து மூட படுவதால் "லப்" என்ற ஒலி உண்டாகிறது. வென்ட்ரிக்கில் விரிவடையும் போது "டப்" என்ற ஒலியும் உண்டாகிறது. இந்த செயல் மாறி மாறி நடைபெறுவதால் நம்மால் லப்டப் என்ற ஒலியை கேட்க முடிகின்றது. 


 வினோத விலங்குகள்;

*சிங்கத்தின் கர்ஜணை அதிகபட்சம் நான்கு மைல் தூரம் வரை கேட்கும்*

*துருவ கரடிகள் இடது கையை தான் அதிகம் பயன்படுத்தும்*

*பற்கள் இல்லாத பாலுட்டி எறும்புதின்னி*

*கண் இமைகள் உடைய ஒரே மீன் இனம் சுறா. இவற்றால் இமைகளை சிமிட்ட முடியும்*

*இறால் மீனின் இதயம் தலை பகுதியில் உள்ளது* 

*ஆந்தையால் நீல நிறத்தை பார்க்க முடியும்*

*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட 2 மடங்கு நீளம் கொண்டது*


இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் உயிரினம்;

மனிதர்களாகிய நமக்கு இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் திறன் இல்லை. அதாவது அவை மீண்டும் நமக்கு வளர்வது இல்லை. இந்த விஷயத்தில் சாலமண்டர் என்ற உயிரினம் நமக்கு உதவகூடும் என்று விஞ்ஜானிகள் கருதுகின்றனர்.

நீரிலும், நிலத்திலும் வாழ கூடும் சாலமண்டர் ஒரு அதிசய உயிரினம். காரணம் இது இழக்கும் உறுப்புகள் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. கால்கள்,தண்டுவடம்,முளைத்திசு, இதயத்தின் சில பகுதிகள் என இவற்றை இழந்தாலும் இவை மீண்டும் எவ்வித குறை பாடு இன்றி வளர்ந்து விடுகிறது. 

சாலமன்டரின் இந்த அதிசய திறனுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என கண்டறிந்து உள்ளனர்.  சாலமற்றரின் நோய் எதிர்ப்பு செல்களை நீக்கியவுடன் அதனால் இழந்த  உறுப்புகளை  திரும்ப பெற முடிவது இல்லை.
இதுகுறித்த ஆய்வை தொடந்து வரும் விஞ்ஜானிகள் மனிதர்களுக்கு இந்த சிறப்பை ஏற்படுத்த முடியுமா என்ற நோக்கில் உழைத்து வருகிறார்கள்.



புகழ்பெற்றவர்களின் படைப்புகள்;

* காளிதாசர் - ரகு வம்சம் *

*பான பட்டர் - ஹர்ஷ சரிதம் *

*மகாத்மா காந்தி - சத்திய சோதனை *

*ரவீந்த்ர நாத் தாகூர் - கீதாஞ்சலி *

*ரூசோ - சமுதாய ஒப்பந்தம் *

*ஷேக்ஸ் பியர் - மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ் *

*மார்க்சிம் கார்க்கி - தாய் *

*சார்லஸ் டிக்கன்ஸ் - எ டேல் ஆப் டூ சிட்டிஸ் *

*வால்டர் ஸ்காட் - ஜவன் ஹோ  *

*காரல் மார்க்ஸ் - மூல தனம் *


வாழ்த்துகளுடன்!

Thursday 13 June 2013

கோச்சடையானை முந்தும் தலைவா

தினம்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. புதிய முயற்சிகளை கை ஆள்பவரே இந்த சினிமாவில் நிலையான இடத்தை பிடிகினற்றனர். புதிய தொழில் நுட்பத்துடன் வெளியிடும் பொழுது படம் பார்க்கும் நமக்கும் வித்தியாசமான அனுபவம் கிடைகின்றது. இந்த முயற்சியினால் சினிமா மிகப் பெரிய தொழிலாகவும் மாறியிருக்கிறது.

உதாரணமாக முன்பு இளையராஜா மேஜையில் மியூஸிக் போட்டு காண்பித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்று ஒரு நபர் சினிமாவில் இசையமைக்க விரும்பினால் பல லட்ச ரூபாய்க்கு இசை சார்ந்த உபரணங்கள் - கணினி உள்பட வாங்கிய பின்தான் யாரையும் சந்திக்கவே முடியும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அமைக்கப்படும் இசையை அதே துல்லியத்துடன் கேட்க நாமும் பல ஆயிரங்கள் செலவளித்து உபகரணங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இசையை பிரமோட் செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதை காணலாம்.


இப்போ எதுக்கு இந்த மொக்கை எல்லாம் அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. மேட்டர் என்னன்னா?

சிவாஜி படத்தில் டால்பி அட்மஸ் என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். ஆனால் அந்த தொழில்நுட்பத்தில் அப்போது எந்தத் திரையரங்கும் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாமல் போனது. இந்நிலையில் டால்பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள சத்யம் சினிமாஸ் { 10 ருபாய் பாப் கான 120 ருபாய்க்கு விற்கும் திரையரங்கம் } டால்பி அட்மஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துக்கு திரையரங்குகளை மாற்றி அமைக்கிறது.

அவசரமாக இந்த கூட்டணி நிகழக் காரணம் விஜய்யின் தலைவா படத்தையும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள்.

சத்யத்தில் இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்த்தவர்கள் வேறு திரையரங்கு பக்கம் செல்ல மாட்டார்கள். ஆக, மற்றவர்களும் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், டால்பி நிறுவனத்துடன் கூட்டணி போட்டாக வேண்டும். நாளையே டால்பி அட்மஸைவிட நவீன தொழில்நுட்பத்தை டால்பி அறிமுகப்படுத்தினால் இதனை தூக்கிப் போட்டு அதற்கு மாற வேண்டும். டால்பி நிறுவனமும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போதும் பல படிகள் வளரும் பல கோடி லாபம் ஈட்டும்.

வேற வழி இல்ல இப்போ படம் பார்க்க திரை அரங்கத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வரும் நபர்களையாவது தக்க வைப்பதற்கு இதுபோல புதிய முயற்சிகளை கையாண்டே ஆக வேண்டும்.

இல்லையென்றால் கோவிந்தா?கோவிந்தா?

Tuesday 11 June 2013

பேருந்தில் பெண்கள் படும் அவஸ்தை?


இந்த பஸ்ல போறது இருக்கே எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் அதனாலே பொதுவாவே நான் வெளியூர் போறதெல்லாம் விரும்புவது இல்லை. ஆனா என்ன பன்றது நான் வேலை செய்யும் ஆபீஸ்க்கு தினமும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு அதுக்கு சரக்கு ஊத்தனும் அதாங்க பெட்ரோல் இதே பஸ்ல போயிட்டு வந்தா 25 ரூபாயில் முடிந்து விடுகிறது. வேற வழி இல்ல என்ன பன்றது

 சரி பஸ்ல போறோம்னா இந்த கவெர்மெண்ட் பஸ்காரங்க பன்ற ரவுசு தாங்கலப்பா இங்க நிக்கமட்டோம் அங்க நிக்கமாட்டோம் அப்படின்னு பஸ்க்கே முதலாளி மாதிரி பம்மாத்து வேலை காட்றானுங்க. ஆனா இவனுகளுக்கு பின்னாடி கிளம்புற தனியார் பஸ் இவனுகளுக்கு முன்னாடி போயிருது.

பொதுவாக பேருந்தில் ஆம்பளைங்க எப்பவும் பின்னாடி தானே ஏறனும் அதானே முறை. ஆனா சில பேர பாருங்களேன் முன்னாடி ஏறிக்கிட்டு உள்ளேயும் போகாம பின்னாடியும் ஏறாம படியிலேயே நின்னு தொங்கிகிட்டு பன்ற சேட்டை இருக்கே பந்தாவாம். இவனுங்கள எல்லாம் செவுளுலையே போடணும்.  

படில பந்தா பன்றவனுங்கள கூட விட்டுரலாம் இன்னொரு குருப் ஆளுங்க இருக்கானுங்க அவனுங்க தான் நம்ம இடியமின்கல்.  இவனுங்கள பத்தி சொல்லியே ஆகணும். போறவறவங்க எல்லாத்தையும் இடிசுகிட்டு ரொம்ப அப்பாவியா முகத்த வச்சுகிட்டு நிப்பானுங்க. இவனுகள பார்த்தாலே கடுப்பா வருது. இந்த மாதிரி இடிமாடுகளிடம் சிக்கி பாடுபடும் ஒரு பெண் அதை தனது முக நூலில் மிக எதார்த்தமாக அழகாக செருப்பால அடிக்காத குறை தான் எழுதி இருகாங்க படிச்சு பாருங்க.


ஒரு பெண்ணின் பதிவு :

குனிந்து எடுத்த நொடியில்...

என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்...

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர்

கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்

ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!


நன்றி;

Saturday 8 June 2013

அறிவியல் ஆயிரம் 08.06.13


வணக்கம் நண்பர்களே! 

நாம படிச்ச எவ்ளவோ நல்ல விசயங்களை இந்த பதிஉலகில் பதிவாக  பகிர்ந்து இருப்போம். அது அதிகமான வாசகர்களை போய் சேருவதில்லை. ஆனா இந்த சினிமாவ பத்தின பதிவு போட்டா மட்டும். மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது.  அந்த அளவு இந்த சினிமா மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சும்மாவா அதனாலேயே எத்தன தகுதி இல்லாத சினிமாகாரர்களை நம்ம மக்கள் முதல்வர் ஆக்கி அழகு பார்த்து இருகாங்க பார்த்து கொண்டும் இருகாங்க கொடுத்து வச்சவங்கயா சினிமாக்காரர்கள். அப்பறம் என்ன 
ம--துக்கு  சினிமாவ பத்தி நீ எழுத்துற அப்படி என்று நீங்கள் கேட்கலாம். அண்ணே ஹிட்ஸ் அப்படிங்குறது பதிவர்கள் ரத்தத்திலேயே ஊறி போனதுன்னே அத மாத்த முடியும்மா முடியாது அதான் யாருமே படிக்காத செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு அனைவரும் படிக்க விரும்பும் செய்திகளை  வெளியிடலாம் என்ற எண்ணம் தான். 

ஆனாலும் நல்ல விடயங்களை தேடி படிக்கும் நபர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவாக வாரம் வாரம் பொது அறிவு விரும்பிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவியல் ஆயிரம் பகுதி வெளி இடப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

கடல் நீர் எப்படி குடி நீர் ஆகிறது?

கடல் நீர், ரொம்பவே உப்புக் கரிப்பதை அறிவிர்கள். அதிலிருந்து குடிநீர் தயாரித்து விநியோகிப்பதாக செய்திகளையும் படித்திருப்பிர்கள். அவ்வளவு உப்பு நீர் எப்படி குடிநீராக மாறுகிறது என்று தெரியுமா?

கடல் நீரிலுள்ள உப்புகளை நீக்கினால் அது குடிநீராக மாறிவிடும். கடல் நீரை குடிநீராக்கும் முறைக்கு 'உப்பு நீக்குதல் முறை' என்றே பெயர். 3 முறைகளில் கடல் நீரை உப்பு நீக்க செய்யலாம்.

அனைவரும் பரவலாக அறிந்த உப்பு நீக்கும் முறை 'ஆவியக்குதல் முறை' கடல் நீரை ஆவியாக்கி குளிர்விக்கும் பொழுது ஆவியாகி குளிர்ந்தது குடிநீராகவும், உப்புகள் படிமனாகவும் மாறுகிறது.

உறைய வைத்தல் முறையிலும் உப்பு நீரை குடி நீராக்கலாம். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் நிறைந்து இருப்பதை அறிவிர்கள். அவை எல்லாமே நல்ல குடிநீர் தான். இதே போல உறைய வைத்தல் முறையிலும் குடிநீர் தயாரிக்கலாம்.

மின் கலவை பகுப்பு முறையிலும் குடி நீர் தயாரிக்கபடுகிறது. சவ்வூடு பரவல், அயனிப் பரிமாற்றம் ஆகிய முறைகளிலும் கடல் நீரின் உப்பு தன்மையை நீக்கலாம். ஆனால் இவை எல்லாமே செலவு மிக்கவை.

பாம்பு பால் குடிக்குமா?

நமது ஹாலிவுட் புகழ் இயக்குனர் இராம நாராயணன் படங்களில் நாம் பார்த்து இருப்போம் பாம்பு பால் குடிப்பது போல காட்சிகள் இருக்கும் ஆனால் உண்மையிலேயே பாம்பு பால் குடிக்குமா என்றால் குடிக்காது என்பதே உண்மை. பொதுவாக பாம்புகள் திட பொருட்களையே உணவாக உண்ணும். தவளை,தேரை,எலிகள்,சிறு பறவைகள், பூச்சிகள் ஆகியனவையே பாம்பின் உணவுகள். பாம்பகள் திரவ நிலையில் எதையுமே உண்ணாது. சில பாம்புகள் அரிதாக நீரை பருகும். இதுபோலவே பாம்புகள் மகுடிக்கு ஆடும் என்பதே பொய்.

காது சொல்லும் செய்தி;

காதுகள் மூலம் செய்திகளை கேட்கலாம் சொல்ல முடியுமா?

பிரபல காட்டு நாய் இனம் ஜேக்கல். இவை தங்கள் கூட்டதினருக்கு காது அசைவின் மூலமே செய்திகளை சொல்கின்றன. அதே போல கால்கள், மற்றும் வாலை அசைத்தும் சங்கதிகளை பரிமாறி கொள்கின்றன.

மாறாத வெப்பநிலை;

பூமியில் இன்ன்றைய வெப்ப நிலை நாளை கூடி விடுகிறது. மறு நாள் மழை பெய்து வெப்ப நிலை அப்படியே தலை கீழாய் குறைந்து விடுகிறது. இது போலவே பூமியின் உட்பகுதியிலும் வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்குமா என்றால் இல்லை. பூமியின் உட்பகுதி மாறாத வெப்பநிலையை கொண்டது.

பாரிஸில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில் தரைக்கு கீழே 28 மீட்டர் ஆழத்தில் பாதாள அறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு லாவைய்ச்சர் என்ற அறிவியல் வல்லுநர் வெப்பமானி ஒன்றை வைத்தார். அது இன்றைக்கும் ஒரே வெப்ப நிலையை தான் காட்டிக்கொண்டு உள்ளது. அந்த அளவு 11.7 சென்டிகிரேட் வெப்ப நிலையாகும். இதிலிருந்து பூமியின் வெப்ப நிலை மாறுவதில்லை எனபது தெளிவானது.

ஆனால் பூமிக்கடியில் ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து கொண்டே போகும் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா.

நம்ம பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் ஸ்பெஷல் தலைப்புல பதிவு எழுதுறாங்க உதாரணதுக்கு

மெட்ராஸ்பவன்ல -ஸ்பெஷல் மீள்ஸ்
பரிசல்காரன்-அவியல்
வீடு திரும்பல்- தொல்லை காட்சி
கேபிள் சங்கர்-கொத்து பரோட்டா
ஜாக்கி சேகர்-உப்பு காத்து
பிலாசபி-பிரபா ஒயின்ஷாப்

இதுபோல வாரம் வாரம் நம்ம வலைதளத்திலும் பதிவு இடம் பெறும் அதற்கான தலைப்பு தான் இன்னும் சரியாய் கிடைக்கல உங்களுக்கு தெரிஞ்ச தலைப்ப பின்னோட்டத்தில் சொல்லுங்களேன். அழகான தலைப்பு கூறுவோருக்கு பரிசு காத்து இருக்கிறது.