நான் மட்டும் அல்ல என்னுடன் எனது பெஞ்சில் அமர்ந்து இருந்த எனது நண்பர்கள் நான்கு பேரும் விஜய் ரசிகர்கள் தான். சிறிது நாட்களில் எங்களின் நண்பனில் ஒருவன் அஜித் ரசிகனாய் வேறு மாறி விட்டான். அவனுடன் நாங்கள் அதற்காக சண்டை கூட போட்டு விட்டோம். அந்த அளவு எனக்கு அவரை பிடிக்காமல் போக என்ன காரணம் என்று நண்பன் கேட்டான்.
ஆமா அந்த ஆளு ரொம்ப ஆடம்பரம் எதாவது விழாவிற்கு போகும் போது பாரேன் கோட் சூட் போட்டு தான் போவான். தெனாவட்டா எல்லாரையும் பேசுறது அவன கண்டாலே பிடிகலப்பா என கூறுவேன்.
விஜய் அஜித் படங்கள் ஒரே தினத்தில் போட்டி போட்டு கொண்டு வரும் பொழுது அந்த நடிகர்களை விட எங்களுக்கு தான் பக்பக்ன்னு இருக்கும் படம் எப்படி இருக்கோ நம்ம தலைவர் படம் அவன் படத்த விட நல்லா ஓடணுமே என்றெல்லாம் நினைப்போம்.
உன்னை கொடு என்னை தருவேன் என்ற அஜித் படத்துடன் போட்டியாக குஷி என்ற விஜய் படம் வெளியானது. அஜித்தின் படம் அட்டர் பிளாப் விஜய் படமோ செம்ம ஹிட் அப்போ நாங்க பட்ட சந்தோசம் இருக்கே. அனேகமாக போட்டியாக படம் வெளி இடும் போதெல்லாம் விஜய் படங்களே அதிக வெற்றி பெற்றேன.
அஜித் படம் பிளாப் ஆனா அப்படி ஒரு சந்தோசம் இதெல்லாம் எது வரை என்றால் திருப்பாச்சி படம் வர வரைக்கும் அட்டகாசம் படத்தில் விஜய்யை தாக்கி அஜித் பாட்டு வைத்த பொழுது தலைவர் அதுக்கு பதிலா இந்த படத்துல்ல பதில் சொல்வாரு என நினைச்சு போன எங்களுக்கு ஏமாற்றம் தான். நீயும் நானும் அண்ணன் தம்பிடா ன்னு பாட்டு வச்சு சண்டைய முடிவுக்கு கொண்டு வந்து இருபாங்க. இந்த பனி போரை நிறைவு செய்து வைத்தவர் நம்ம பேரரசு தான்.
அதன் பின்பு அஜித்தின் திருப்தி படத்திற்கு விஜய் குத்துவிளக்கு ஏற்ற இருவரும் நண்பர்களாக நாங்களும் அஜித்தின் மேல் கொண்ட வெறுப்பு குறைந்தது. அஜித்தின் படம் என்று தியேட்டரில் சென்று நான் நான் பார்த்த படம் என்றால் அது வரலாறு படம் தான்.
அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல ஒரு தந்தை ஆகா மாறிய பிறகு அவரின் நடவடிக்கைகள் மென்மேலும் மாறியது. ஒரு நடிகனாக எனக்கு பிடிக்காத அஜித் அவரின் பொது வாழ்கையில் ஒரு மனிதனாக என்னை மட்டும் அல்ல அனைத்து மக்களையும் கவர்ந்தார்.
1.மனதில் பட்டதை வெளியில் சொல்லும் மனிதனாக
2.சக நடிகர்களை மதிக்கும் நடிகனாக
3.பிறரின் துன்பத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் ஒரு நல்லெண்ணம் உடையவராக
4.தலைக்கணம் அற்றவராக
5.சக மனிதர்கள் மேல் அன்பு செலுத்துபவராக
6.ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தாதவனாக
இது போன்ற காரணத்தினால் அவரை எனக்கு ஒரு நடிகனாக இல்லாமல் ஒரு நல்ல மனிதனாக பிடித்தது. நாலு பேரு சேர்ந்தாலே அலப்பரை பண்ணும் மனிதர்களுக்கு மத்தியில் ரசிகர்களை சுயநலனுக்காக பயன்படுத்தாத அஜித் எனக்கு ஒரு ஆச்சரியக்குறி தான்.