Wednesday 25 December 2013

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள் !!!

1.காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேக்ஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.

2.காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..

3.காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..

4.உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..

5.காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..

6.முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..

7.ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..

8.உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..

9.உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..

10. கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..

#நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..!

Monday 23 December 2013

முயன்றால் உங்களால் முடியும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
                           
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

இது ஒரு மீள் பதிவு..

Friday 20 December 2013

2013 - சூப்பர் பொழுது போக்கு படங்கள்

இந்த வருடம் வெளியாகி நல்ல படம் & சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியலில் என்னை கவர்ந்த டாப் டென் படங்களை பார்ப்போம்.


10.மூடர் கூடம்;

இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என்று விமர்சகர்கள் கூறினாலும் கொரியன் படமெல்லாம் பார்த்திராத {பார்த்தாலும் எனக்கு புரியாது} என்னை போன்ற சிலருக்கு இந்த படம் ரொம்பவே பிடித்தமான ஒன்றாகி போனது. வெறும் அடிதடி சண்டை என பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. கோடி கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல் வியாதிகளையே மன்னித்து விடும் நாம் இந்த படத்தின் இயக்குனர் நவீனை மன்னித்து விட்டு விடுவோம். இந்த படம் காப்பி இல்லாமல் இருந்தால் முதல் இடம் கொடுத்து இருப்பேன். அடுத்த படமாவது ஒரிஜினல்லா  கொடுங்க மிஸ்டர் நவீன்.


9.கண்ணா லட்டு தின்ன ஆசையா;

நம்ம சந்தானம் நகைச்சுவை நடிகரில் இருந்து தயாரிப்பாளர் ஆக உயர்ந்து அதில் வெற்றியும் பெற்ற படம். இந்த படம் வெற்றி அடைய பெரிய காரணம் வேற என்ன நம்ம பவர் ஸ்டார் தான். குறைந்த முதலிட்டில் பெரிய லாபம் பெற்ற படம். மேல சொன்ன படமாவது கொரியன் படத்தை சுட்டு எடுத்தாங்க ஆனா நம்மாளு சந்தானம் இயக்குனர் பாக்யராஜ் படத்தையே சுட்டுட்டார் என்ன நான் சொல்றது.


8.வருத்தபடதா வாலிபர் சங்கம்;

இந்த படம் எதுக்கு இப்படி ஒடுசுன்னே தெரியல படமும் அவ்ளோ பெரிய காமெடி எல்லாம் இல்ல பாடல்கள் வேணும்னா கேக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. ஹரிதாஸ் மாதிரி நல்ல படமெல்லாம் நம்ம இந்திய ரூபாய்
மாதிரி தள்ளாடும் போது இந்த மாதிரி படங்கள் நல்லா கல்லா கட்டும் போது வருத்தமாகவே உள்ளது.



7.உதயம் NH 4;

சித்தார்த் நடிப்பில் வெளிவந்த படம் இந்த படத்தின் கதையை ஆரம்பம் முதல் சுவாரசியமாக கொண்டு சென்று இருந்தார்கள். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருந்த கே.கே.மேனன் என்னை மிக கவர்ந்தார். இந்த படமும் முதலுக்கு மோசம் இல்லை.


6.எதிர் நீச்சல்;

நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளி வந்து சக்கை போடு போட்ட படம். சிவா இந்த படத்தில் இருந்தே முழு வெற்றி பட நாயகனனார். பாடல்கள் எல்லாம் செம்மையா இருந்துச்சு. படம் முன் பாதி செம்ம காமெடி இடைவேளை பின்பு சுமார தான் இருந்துச்சு. ஆனா படம் வெற்றி படமே அதுல சந்தேகம் இல்லை.


5.ராஜா ராணி;

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் ஹிட் அடித்த ஒரு லவ் ஸ்டோரி. இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் எல்லோரையும் ஓரம் கட்டி விட்டார் நம்ம ஜெய். சந்தானம் காமெடியும் நல்லா தான் இருந்துச்சு. ஆர்யா,நயன்தாரா,நஸ்ரியா என அனைவரும் நன்றாக தங்கள் வேலையை செய்து இருந்தனர். இந்த வெற்றியை அடுத்த படத்திலும் தொடர்வார இயக்குனர் அட்லி பொருத்து இருந்து பார்ப்போம்.


4.பாண்டிய நாடு;

ரொம்ப நாளா வெற்றி படமே கொடுக்க முடியாமல் இருந்த விஷாலை நடிகராக வெற்றி பெற வைத்தது மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வைத்த ஒரு படம். படம் எந்த இடத்திலும் போரடிக்காமல் அழகாக விறு விறுப்பாக கொண்டு சென்று இருந்தார் இயக்குனர் சுசிந்திரன்.


3.சூது கவ்வும்;

விஜய் சேதுபதி யின் வித்தியாசமான முயற்சிகளில் மிக பெரிய வெற்றி பெற்ற படம். குறும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் சக்கை போடு போட்டது. குறும்பட நடிகர்கள் அனைவரும் கலக்கி இருந்தார்கள் பாடல்கள் பின்னணி இசை என எல்லாம் கலகலாக அமைந்து வசூலும் கலக்கல். இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட்களில் இதும் ஓன்று.


2.சிங்கம் 2;

சூர்யாவின் தொடர் தோல்விகளுக்கு பின்பு வெளிவந்து அவரை நிமிர்ந்து உட்கார வைத்த படம். சும்மா சொல்ல கூடாது படம் ஆரம்பித்ததில் இருந்து செம்ம ஸ்பீட். அதும் சண்டைகள் எல்லாம் சும்மா ஜிவ்ன்னு இருந்துச்சு.
ஹரி சும்மா பரபர ன்னு இயக்கி இருந்தார். ஆனா இந்த வருஷம் வித்தியாசமான முயற்சிகள் செய்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இந்த படத்தின் வெற்றியை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவை மசாலாவில் இழுத்து விட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு உள்ளது.


1.விஸ்வரூபம்;

படம் வெளி ஆக விடாமல் எவ்வளவு போராட்டம் அதை வெளி கொண்டு வர எம்புட்டு கஷ்டம் நம்ம உலக நாயகனுக்கு. மிக பெரும் எதிர்ப்பை சமாளித்து மிக பெரிய வசூலை வாரி குவித்த படம். இன்றும் நடிப்பில் கமலை மிஞ்ச ஆள் இல்லை அந்த முதல் பாடலிலேயே ஒரு பெண்ணுக்கு உரிய நளினமான அசைவுகளை கண் முன் நிறுத்தி ஆடி இருப்பார். ஆனா இந்த படம் பார்க்க என் கூட வந்த என் சித்தப்பா தூங்கி விட்டார். எல்லோருக்கும் பிடித்த படமா என தெரியவில்லை. எனக்கு பிடித்து இருந்தது.

இது தவிர கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதலால் காதல் செய்வீர், சென்னையில் ஒரு நாள், ஹரிதாஸ், ஆரம்பம், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஒநாயும் ஆட்டுக்குட்டியும், என சுமாரான படங்களும் வெற்றி படங்களே... 

Wednesday 18 December 2013

கபாலி இன்னா சொல்றாருன்னா ?


அறிந்துகொள்வோம்;

வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள்.

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்

மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம்.

வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும்

பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.

உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும்.


வீட்டில் எலி தொல்லையா...?

வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு.

எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சனையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

குப்பைகளை கொட்டியப்பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும்.

தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.

இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.


இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசக‌ற்பூர‌ம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தா‌ல் எலிகள் அப்பக்கமே வராது.


Monday 16 December 2013

2013 - ஆக சிறந்த மொக்கை படங்கள்

2013 ம் வருடம் தரமான படங்களை தவிர அதிகம் மொக்கை படங்களே வந்துள்ளன அவற்றில் நாம் ரொம்ப எதிர்பார்த்த இயக்குனர்கள்&நடிகர்கள் படம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபட்டு உள்ளன அவை இதோ.

10.அன்னக்கொடி;

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம் எடுத்து நம்ம தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் என்ற துடிப்பான ஹீரோவையும் ராதா என்ற அழகான ஹீரோயினையும் கொடுத்தவர் நம்ம இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அதே போல தன் மகளுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் தன்  மகளான கார்த்திகாவை நடிக்க வைத்தார் ராதா. ஆனா இந்த படத்தோடு மும்பைக்கு கார்த்திகா மூட்டை கட்டுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.


9.கடல்;

மணிரத்னத்தால் ரொம்ப பில்டப் பண்ணபட்ட படம். பாடல்களை தவிர படத்தில் வேற ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த ஆளு இப்படி இருட்டுளையும்,புரியாத வசனத்தையும் வச்சு படம் எடுப்பாருன்னு தெரியலையே.


8.ஆதி பகவான்;

அமீர் இவரு அடுத்த பில்டப் மேன். வருஷக் கணக்கா இந்த படத்த எடுத்தார்யா இந்த மனுஷன். அப்படி இந்த படத்தில் என்ன இருக்குன்னு இத்தனை வருஷமா இழு இழு ன்னு போட்டு எடுத்தார் இந்த ஆளு. ஒரு வேலை பாங்காங்ல இந்த பட ஹீரோயின் நீது சந்திராவோடு பல்லாங்குழி விளையாடி இருப்பாரோ.


7.கௌரவம்;

என்னா டைரக்டர்யா இவருன்னு நினைத்த ஒருத்தர் திரு.ராதாமோகன். அவரோடைய முந்தைய படங்கள் அந்த மாதிரி. அவரோட முதல் படமான அழகிய தீயே என்னோட பேவரிட் படம். அவரோட அனேக படமான பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம் என அனைத்துமே என்னால் ரசிக்கப்பட்ட படம். ஆனா இவரிடம் இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை. கருத்தான படம் தான் ஆனா மக்களிடம் எடுபடவில்லை.


6.மூன்று பேர் மூன்று காதல்;

இந்த வருஷம் நாம ரொம்ப எதிர்பார்க்கும் இயக்குனர்கள் எல்லாம் மண்ணை கவ்விட்டாங்க அதுல இவரும் ஒருத்தர் திரு.வசந்த். இவரு படத்தில் பாடல்களாவது தேறும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை தவிர சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை.


5.இரண்டாம் உலகம்;

இயக்குனர் செல்வராகவனின் கனவு படம். ஆனா இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் தூக்கம் தொலைந்து போய் விட்டதாக கூறுகிறார்கள். இனிமேலாவது செல்வராகவன் கனவு காண்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


4.பட்டது யானை;

ஏற்கனவே விஷாலை வைத்து மலைகோட்டை என்று படம் எடுத்துட்டு அதே விஷாலை வைத்து அதே கதையை பெயரை மற்றும் மாற்றி மறுபடி ரீமேக் பண்ணி இருக்கார் நம்ம இயக்குனர் திரு.பூபதிபாண்டியன்
ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் துணிச்சல்.


3.தலைவா;

இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றதுமே எனக்கு தெரிந்து விட்டது எப்படியும் இது தளபதிக்கு பட்டை தான் என்று என் நினைப்பு பொய் ஆகவில்லை. நன்றி இயக்குனர் விஜய் அவர்களுக்கு. தமிழகத்தை ஆளும் கனவில் இருந்து விடுபட்டு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் தளபதி ஆட்சி தான்.


2.நையாண்டி;

தேசிய விருது பெற்ற இயக்குனர்&நடிகர் இணைந்து செய்த படம் ஆனா இப்படி படம் பார்க்க சென்ற மக்களை நையப்புடைப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இதில் படத்திற்கு மட்டமான விளம்பரம் வேற போங்கடா டேய்.


1.அலெக்ஸ் பாண்டியன்&அழகுராஜா;

இந்த வருடம் கார்த்திக்கு சிறப்பானதாக அமையவில்லை பாவம் மனுஷன் ஹிட் மேல ஹிட் கொடுத்து இப்போ பிளாப் மேல பிளாப் பா கொடுத்து கொண்டு இருக்கிறார். அதுக்கு தான் ஓவரா பேச கூடாது இனிமே பேச்சை குறைத்து கொண்டு கொஞ்சம் நடிங்க பாஸ்.

இதை தவிர பாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள், மொக்க சிவா நடித்த யாயா&சொன்னா புரியாது&தில்லு முல்லு, தனுஷின் மரியான், விக்ரமின் டேவிட் என நீண்ட பட்டியலே இருக்கிறது. மொத்தத்தில் 2013 ம் ஆண்டு பல மொக்கைகளை கொண்டு உள்ளது.

Wednesday 11 December 2013

எல்லா புகழும் இறைவனுக்கே !!!!!


சுமந்தது நீ அல்லவா!!!
பிறகு சுமப்பவன் நான் அல்லவா!!

பெற்றது நீ அல்லவா!!
பேணி காப்பவன் நான் அல்லவா!!!

வலியால் துடிப்பது நீ அல்லவா!!
மனத்தால் துடிப்பவன் நான் அல்லவா!!

இத்தனையும் எதற்காக?
என்று தோன்றும் முன்னர்...
"குவா குவா..." சதம் கேட்டு
அத்தனையும் மறந்துபோக...

ஓடிச்சென்று கையில் எடுக்க...
வாரி அணைத்து முத்தம் கொடுக்க...
உற்ற துணையை உற்று நோக்க...
நீர் மல்க என்னை கண்ணால் அழைக்க...

வேண்டி நின்ற வரம் இன்று...
வந்ததென அவள் உரைக்க...
நாடி வந்து என் தோளில்...
ஆறுதலாய் முகம் புதைக்க...

என்ன தவம் செய்தேனென்று மனம் நினைக்க...
என் கணங்களில் இருந்து நீர் வழிந்தோடியது!!!

ஆனந்தக்கண்ணீர்!!! - முதன்முறையாக!!!

கவிதையை எழுதியவர்- மலர்விழி (A) Malar

இப்போ எதுக்கு இந்த கவிதைன்னு கேக்குறிங்களா? ஆமாங்க நேற்று தான் நான் அப்பா ஆனேன். இனி இந்த உலகத்தில் எங்களுக்கு என்று ஒரு சொந்தம் மலர்ந்து விட்டது.

பிரசவ அறையில் வழியில் துடித்தது என்னவோ என் மனைவி தான். ஆனால் வெளியில் நின்ற எனக்கு? அந்த நிலையை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.

எல்லாம் இனிதாய் முடிந்து அந்த பெண் மருத்துவர் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று என் குழந்தையை என் கைகளில் கொடுத்த பொழுது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர். இதற்கு பெயர் தான் ஆனந்த கண்ணீரோ? சத்தியமா இதுக்கு முன்னாடி நான் அழுததே இல்லைங்க.

தாயையும்&மகளையும் எந்த குறையும் இல்லாது என்னிடம் சேர்த்த அந்த இறைவனுக்கு என் நன்றியை செலுத்துகிறேன். இறைவனின் நாட்டத்தை செயல்படுத்திய அந்த பெண் மருத்துவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது சந்தோசத்தை என் பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே...

Monday 9 December 2013

“எனக்கு சினிமா இயக்குவது செக்ஸ் வைத்துக்கொள்வது போல...”


எட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.

ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து...

'' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவையான சினிமா!'' என்று உரையாடலைத் தொடங்கிவைக்கிறார் சசி.

''இந்தப் படத்துல சார் நடிச்சிருக்கார். ஆனா, அந்தக் கேரக்டர்ல அவர்தான் நடிக்கப்போறார்னு எனக்குத் தெரியாது. கதை சொல்லி முடிச்ச பிறகு, 'உங்களுக்கு ஒரு விஷயம் காட்டுறேன்’னு சொல்லி ஒரு தாத்தாவின் போட்டோ காட்டினார். 'யார் சார் இவர்? கண்ணு பவர்ஃபுல்லா இருக்கே. உங்களுக்கு இன்னொரு சொக்கலிங்க பாகவதர் கிடைச்சிட்டாரு’னு சொன்னேன். 'நான்தான் இது. அந்தக் கேரக்டர்ல நான்தான் நடிக்கப்போறேன்’னு  சார் சொன்னார்!'' என்று சசிகுமார் முடித்த இடத்தில் இருந்து தொடங்குகிறார் பாலுமகேந்திரா.

''நம் குடும்பங்களின் அடிப்படை உறவுகள்தான் படத்தின் கரு. நம் குடும்பங்களைத் தூக்கிச் சுமந்து கரைசேர்ப்பது நம் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதை. பெண்கள் மீது எனக்குள்ள ஆராதனை கலந்த மரியாதையும் மதிப்பும் படத்தில் வெளிப்படும்!''

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்குகிறீர்கள். ஏதேனும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?''

''திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்... இந்த நாலு பேரும்தான் படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தில் அந்த நாலுமே நான்தான். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. என் படத்தை நானே எழுதி, நானே ஒளிப்பதிவு பண்ணி, நானே இயக்கி, நானே எடிட் செய்தால்தான் எனக்குத் திருப்தி. ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.

ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை. காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''

''சினிமா 100 விழாவைப் புறக்கணித்து உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தீர்கள். அந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?''

''கலந்துக்கலைனுதான் சொன்னேனே தவிர, என் ஆதங்கத்தை எங்கேயும் நான் வெளிப்படுத்தலை. அதைப் பத்தி ஏன் என்கிட்ட கேக்குறீங்க? இப்படி சிண்டு முடிந்துவிட்டு கலைஞர்களை சிக்கலில் மாட்டிவிடும் வேலை வேண்டாமே?''

''இது சிண்டு முடிவதற்கான கேள்வி அல்ல. அரசு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அந்த நிகழ்வுக்கு அளித்திருக்கிறது. அது சினிமாவுக்கு ஆக்கபூர்வமான நன்மைகளை விளைவித்திருக்கிறதா என்று ஒரு சினிமா படைப்பாளியான உங்களிடம் கேட்கிறேன்!''

''அரசைக் கேளுங்கள். அல்லது இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். ஆனால், ஒரு விஷயம் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொக்கிஷம்னா, அது பழைய படங்கள்தான். அதோட நெகட்டிவ்களைக் காப்பாத்த, பாதுகாக்க ஒரு காப்பகம் தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. இதை மூணு வருஷமா சொல்லிச் சொல்லி தலப்பாடா அடிச்சுட்டு இருக்கேன். ஆனா, அதை யாரும் கண்டுக்கவே இல்லை!''

''இதை ஏன் அரசாங்கம் செய்யணும்னு நினைக்கிறீங்க? சினிமாத் துறையினரே சேர்ந்து செய்யலாமே!''

''செய்யணும்தான்! அதுக்கான முறையையும் சொன்னேன். கேளிக்கை வரி மூலம் அரசாங்கம் வருமானம் ஈட்டுவதால், பாதி பணத்தை அரசாங்கம் போடட்டும். சினிமாத் துறையினர் மீதியைச் செலவழிக்கட்டும். மேற்கொண்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, சினிமாவில் ஆர்வமுள்ள ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் சில சிப்பந்திகள் மட்டுமே போதும். இப்படியான ஒரு காப்பகம் இல்லாமல் நிறைய தமிழ்ப் படங்கள் அழிஞ்சிருக்கு. 'அழியாத கோலங்கள்’, 'வீடு’, 'சந்தியா ராகம்’, 'மூன்றாம் பிறை’, 'மறுபடியும்’ போன்ற என் படங்களின் நெகடிவ்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் வந்த படங்கள் இல்லை. வெறும் 20 வருடங்களுக்குள் வந்த படங்கள். சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், இந்தப் புள்ளியிலிருந்து தங்கள் பணிகளைத் தொடங்கலாம்!''

நன்றி;விகடன்

Friday 6 December 2013

வெங்காயத்தின் மகிமை


வெங்காயத்தின் காரத் தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும், வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலின் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும், வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செ‌லினியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சனை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும் தேவையான செலினியச் சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள் செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.