Saturday, 27 July 2013

பட்டத்துயானை - மலைகோட்டை பார்ட் 2




ரொம்ப நாள் ஆச்சு படம் வெளி ஆகும் அன்னைக்கே அந்த படத்த பார்த்து விமர்சனம் எழுதி அதனால இந்த படத்துக்கு முதல் நாளே கிளம்பிட்டேன்.

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் விஷாலை கட்டி அனைத்து பூபதி பாண்டியன் அழுதார் என செய்திகள் வந்தது அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது. இப்படி பட்ட மொக்கை படத்துல்ல நீங்க நடிக்கிரின்களே உங்க மனசு யாருக்கு வரும் தம்பின்னு நினச்சு அழுதுஇருப்பாரோ? சரி இனி இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அழுவாரு. {கருப்பு எம்.ஜி.ஆர் சந்தோசமா இருப்பாரு}



கதை;

வழக்கமான விஷால் படம் தான். சண்டகோழி படத்தில் இருந்தே விஷாலின் எல்லா படங்களிலும் விஷால்  இருக்குற ஊருக்கு வில்லன்கள் அவரை தேடி வந்து அடி வாங்கி செல்வதே வாடிக்கை. அதே கதை தான் இங்கயும் மலைகோட்டை படத்துல்ல மிச்சம் மீதி வைத்த வில்லன்களை எல்லாம் மீண்டும் திருச்சிக்கு சென்று மிதி மிதி என மிதித்து, புரட்டி புரட்டி அடித்து, நம் உயிரையும், பாக்கெட்டில் இருந்து பணத்தையும் எடுப்பதே இந்த படம்.

நீங்க மலைகோட்டை படம் பார்த்திங்களாஅதே கதை தான் பெருசா மாற்றம் ஒன்னும் இல்லை.

1. அந்த படத்தில் ப்ரியாமணியை கல்லூரிக்கு பாதுகாப்பாக தேர்வு எழுத அழைத்து செல்வார் அதே போல இங்கு ஐஸ்வர்யாவை ஸ்கூல் தேர்விற்கு அழைத்து செல்கிறார்.

2. அந்த படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் பட்டுகோட்டையில்இருந்து திருச்சி வருவாரு. இந்த படத்துல்லசரவணன் என பெயர் மாற்றி மதுரையில் இருந்து வருகிறார்.

3. அந்த படத்தில் ரௌடி அண்ணன் தம்பியை கொல்லுவார். இந்த படத்தில் மாமா,மைத்துனர்.

4. அந்த படத்தில் ஒத்தை ஆளாக வருவார். இந்த படத்தில் 5 அல்லகைகள் பத்தாததுக்கு கையில் சானக்கரண்டி உடன் திருச்சியில் அலைகிறார். கேட்டால் சமையல் செய்பவராம் சமைக்கிரத தவிர மத்த எல்லாம் பன்றானுங்க.

5. அந்த படத்தின் பாடலாவது தேவலாம் இங்கே அதும் சுத்த வேஸ்ட்.
   

விஷால் நீங்க நடிச்ச சண்டகோழி படம் மட்டுமே எங்களுக்கு போதும் அதையே நாங்க திரும்ப திரும்ப பார்த்துக்குறோம். நீங்க மேற்கொண்டு நடிச்சு எங்கள சாவ அடிக்காதிங்க. நீங்களும் உங்க அண்ணனை போல கல்யாணம் செய்து கொண்டு வேற எதாவது பொலப்ப பார்கலாம்.



ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த பாப்பலாம் நடிக்க வரலைன்னு யாரு அழுத? அதான் ஆக்சன் கிங் நிறைய சம்பாதிச்சு துட்டு சேர்த்து வச்சு இருக்காருல்ல பேசாம கல்யாணத்த பண்ணிட்டு போங்க. தமிழ் சினிமால தான் இந்த மாதிரி கூத்துலாம் நடக்கும் சிங்கம 2 ல ஹன்சிகா பள்ளி கூடம் போவாங்களாம், இந்த படத்துல்ல இந்த பாப்பா பள்ளிக்கு போகுது விட்டா இவனுங்க பரவை முனியம்மாவயே ஸ்கூல்லிற்கு அனுப்புவாங்க. அதையும் நாம பார்த்து தொலையனும் என்ன கருமம்டா.



இந்த படத்துல வர ஒரே ஆறுதல் நம்ம சந்தானம் தான். கௌரவம் என்ற கதாபத்திரத்தில் நம்ம சிரிக்க வைக்கிறாரு. அவரும் இல்லேன்னா நான் பாதி படத்தில் இருந்தே ஓடி வந்து இருப்பேன். அவரோட காமெடியும் ரொம்ப சூப்பராலாம் இல்ல ஏதோ இந்த மொக்கை படத்த பார்க்குறதுக்கு அது தேவலைன்னு தோணுது.

இசை தமன் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரிலாம் இல்ல.



இயக்குனர் பூபதி பாண்டியன் இவரது திருவிளையாடல் ஆரம்பம், காதல் சொல்ல வந்தேன் என்னை ரொம்ப கவர்ந்த படங்கள் இவரு அதே போல மென்மையான நகைச்சுவை கலந்த காதல் படங்கள் எடுப்பதோட நிறுத்திக்கலாம். வராதத எதுக்கு போயி எடுத்து அசிங்க படனும் இந்த மாதிரி மசலா படமெல்லாம் நம்ம ஹரி பார்த்துகுவாறு.

தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன் 100 ரூபாய் கட்டணம் இந்த படம் பார்க்குறதுக்கு பார்காமலே இருந்துறலாம் காசாவது மிச்சம்.

மொத்தத்தில் பட்டதுயானை நம்மல துரத்தி மிதிக்க வருது எல்லாம் தப்பிச்சு ஓடிருங்க.  


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல பேரை தப்பிக்க வைத்தமைக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பட்டத்து ஆனைதான் பொத்துன்னு விழுந்துருச்சே... அப்புறம் எப்படி துரத்தி மிதிக்கிறது... எப்படியோ நிறைய பேர் பர்சைக் காப்பாத்திட்டீங்க...

கவிதை வானம் said...

நல்ல நகைச்சுவை ...உங்கள் பதிவைச் சொன்னேன் நன்றி