Sunday 4 November 2012

எதற்கு கொடுத்தோம் லஞ்சம்?


'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்''லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்'

இது ஒரு படத்துல்ல வர வசனம் அது தான் இப்ப நம்ம நாடுள்ள நடக்குற உண்மையான நிலவரம். வயித்து பசிக்காக ஒருவன் திருடும் பொழுது அவனை தண்டிக்கும் நம் சமுதாயம் வேண்டும் என்றே லஞ்சம் என்ற பெயரில் திருடும்  ஒரு அரசியல்வாதியையோ மக்களை சுரண்டும் பெரும் நிறுவனத்தையோ இந்த சட்டமும் சமூகமும் ஒன்றும் செய்வதில்லை. முன்பை விட இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை.

இதனால் மக்களும் லஞ்சம் கொடுக்கும் மன நிலைக்கு வந்து விட்டார்கள். வீட்டில் டெலிபோன் பளுதடைந்தலோ சரி செய்ய வரும் ஊழியர்க்கு கேஸ் தாமதிக்காமல் விட்டிற்கு வர அவருக்கு மணி ஆர்டர் வந்தா அதை கொண்டு வரும் தபால்காரருக்கு வீட்ல பீஸ் போயிட்ட சரி செய்ய வரும் மின்வாரிய ஊழியர்  இப்படி எதற்கெடுத்தாலும் கொடுத்தல்  மட்டுமே நம்மால் எதையும் பெற முடியும் அந்த நிலைமைக்கு வந்து விட்டது நம் அன்றாட நிலைமை.சரி இந்த லஞ்சத்தை எப்படி ஒழிப்பது அதை பற்றிய தொகுப்பு கிழே.

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?




லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்
சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!
[நன்றி-முகநூல்]

இது சிரிப்பதற்காக சொல்லவில்லை நமது நாட்டின் உண்மை நிலை இது தான். திருடன்கிட்டவே சாவிய குடுத்த என்ன ஆகும். நம் நாடுள்ள உள்ள திருடன்லையே பெரிய திருடன் நம்ம அரசியல்வாதி தான். திருடுன்ன என்ன தண்டனைன்னு சட்டம் போடுரவனும் அவன் தன இது வரை தப்பு பண்ணுன யாரும் தண்டனையை முழுதா அனுபவிச்ச மாதிரி தெரியல்ல அப்பரம் எதுக்குயா சட்டம். லஞ்சம் வாங்க கூடாது ன்னு ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து செயல் படும் போது மட்டுமே இவற்றை எல்லாம் ஒழிக்க முடியும்.
அது வரை இது தொடரும்.

Saturday 3 November 2012

விஜய் வெற்றி பெற்றது எப்படி?


நாம் எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா ? இல்லையே . வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும் . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால் , எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ?

நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு ? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும் ? வெற்றி பெறுவதற்க்கு என்ன வழிகள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் 

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. நாம் நமது  தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் , அதை திருத்திக் கொள்வதற்க்கான  பலனும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும் .எமக்கு வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் . வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும் .வெற்றிக்கான வழிகளை விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன.


புதிய புதிய தகவல்களை தேடி கொண்டு இருக்க வேண்டும் [அட்ராசக்க சிபி அண்ணன் கஷ்டம் எம்புட்டுன்னு இப்ப தான் புரியுது இதுக்கே நமக்கு நாக்கு தள்ளுது அவ்வ்வவ்வ்வ்வ்]  நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று இருப்பது பெரிய விடயமல்ல . அதனை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பது தான் முக்கியமான விடயம் . அதாவது சிறந்த நடிகர் என்ற பட்டம் மட்டும் ஒரு நடிகருக்கு போதாது . அதனை அவர் காலா , காலமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் . 

வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு  முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக்குடியேற வந்தால் , அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது. இதனை மனதில் கொள்ள வேண்டும் .

நீங்கள் வெற்றி பெற இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்...

 எல்லோரிடனும் அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள், இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்,  நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்,  ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள், ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் , ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்,  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள், எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள், உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்,  இனிய சொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுங்கள் .


இவை தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வழிகள் ஆகும் . இவற்றை கடைப்பிடித்து வெற்றி பெறுங்கள் . வாழ்வில் வெற்றி , வாழ்க்கைக்கு வெற்றி , புதிய வசந்தத்தின் வெற்றி என உங்கள் வாழ்வில் என்றுமே வெற்றி தான் இருக்க வேண்டும் .
 
என்றும் வெற்றி, எப்போதும் வெற்றி , எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.

வெற்றிக்கான வழிகளாக வள்ளுவர் கூறுகிறார் . எண்ணத்தில் உறுதி, விடாமுயற்சி ,வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். காலம் நீடித்தல்,  மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்று சொல்கின்றார்.
(வெற்றி பெற போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்)
(இந்த பதிவுல தலைப்புல மட்டும் தான் விஜய் இருக்கார். விஜய்னா வெற்றின்னு அர்த்தமாம் அது மட்டும் இல்ல விஜய்னு போட்ட தான் பதிவு ஹிட்ஸ் அல்லுமாம் நம்ம ராஜபாட்டை ராஜா ப்ளாக் பின்னோடதுள்ள யாரோ சொன்னது அதான் ஹிஹிஹி.)



Friday 2 November 2012

சட்டம் தன் கடமையை செய்வது சினிமாகாரர்களுக்கு மட்டுமா?

நம்ம நாடுள்ள நடக்குற அனைத்து சம்பவங்களையும் பார்க்கும் பொழுது சட்டம் என்பது யாருக்கு என்ற ஒரு கேள்வி எழுகிறது.  இப்போது எந்த ப்ளாக் போனாலும் சின்மயி பத்தின பதிவு தான்.சரி நம்மளும் அத பத்தி எழுத வேணாம். நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது வேற. அப்பறம் எதுக்கு இந்த பதிவுனா. எனக்கு ஒன்னு புரியவே இல்லங்க. நமக்கு ஒரு பிரச்னைனு போன நமது காவல் துறை இந்த அளவு செயல்படுவாங்களானு சந்தேக இருக்கு. சினிமாகாரங்க, விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் இவங்களுக்கு தான் சட்டம் வளைந்து கொடுகிறது.  எப்ப பாரு நமக்கு ஒரு பிரச்சன அப்டின்னு மனு கொடுக்க போன கலெக்ட்டர் ஆபிஸ் பியூன் கூட மதிக்காம அலட்சியம் பண்ணுவான். அதே நம்ம நடிகர்கள்கு ஒரு பிரச்னைனு வந்துட்ட முதல் அமைசர் வீட்டுல தேநீர் விருந்தோட கவனிப்பு. அதுக்கு பேரு மரியாதையை நிமித்தமான சந்திப்பு அப்படின்னு நியூஸ் பேப்பர் செய்தி. ஆமா அப்படி அந்த சினிமாக்காரன்  என்ன சாதனை பண்ணிடாங்கனு  அவ்வளவு பரபர நடவடிக்கை. சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாங்கள. 

[நான் தான் நல்ல குடிமகனாம்]

காவல் துறையின் மெத்தனம் பற்றி பத்தி பத்தியாக எழுதும் பத்திரிகைகள், ஒரு புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்போது அதை கண்டுகொள்வதில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. காவல் துறை மட்டுமல்ல எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யும்போது யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். கடமையை செய்ய தவறும்போதுதான் அத்தனை கண்களும் நம்மை கவனிக்கின்றன. சட்டமும் அப்படித்தான் செயல்படுகிறது. இருந்தாலும் எப்போதாவது எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளை ஊடகங்கள் பதிவு செய்ய தவறுவதில்லை.இதேபோல் முன்பு  நடிகை ஷோபனா புகார் கொடுத்த சில மணி நேரத்துக்குள் காவல்துறை பம்பரமாக சுழன்று அவரது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த செய்தி அத்தகைய ஒன்று. ஆழ்வார்பேட்டையில் செல்வந்தர்கள் வசிக்கும் அமைதியான பகுதியில் ஷோபனா குடியிருக்கிறார். அருகிலுள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் டீக்கடை நடத்துகிறார் ஒரு பெண்மணி. அங்கு டீ குடிக்கும் வாலிபர்கள், தன்னிடம் நடனம் கற்றுக் கொள்ள வரும் பெண்களை கிண்டல் செய்வதாகவும் தட்டிக் கேட்டால் மிரட்டுவதாகவும் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகை. உடனே விரைந்து சென்று டீக்கடையை அப்புறப்படுத்திய காவலர்கள், நடன மாணவிகளின் பாதுகாப்புக்காக சீருடை அணியாமல் அப்பகுதியில் ரோந்து செல்லவும் ஆரம்பித்துள்ளனர்.


செல்வாக்கு உள்ளவர்களுக்கு சட்டம் செல்லப்பிள்ளை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக சைக்கிளுக்கு காற்றடித்து பிழைக்கும் பெரியவர் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. அவருக்கும் முன்னாலிருந்து டீக்கடை நடத்தி வந்த நெல்லைக்கார பெண்மணிக்கு ஷோபனா வீட்டின் காவலாளிதான் உள்ளிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்து உதவுவாராம். சமீபத்தில் குடிவந்த ஷோபனாவுக்கு இது தெரிந்ததும் காவலாளியை கண்டித்துள்ளார். டீக்கடை பெண்மணி முன்வந்து  மன்னிப்பு கேட்டும் பயனில்லை. சைக்கிளுக்கு காற்றடிப்பவருக்கும் மூன்று முறை அம்மணியால் இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதாம். அதிகாரிகள் தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டதால் இப்போது அவருக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

பங்களாக்களில் எப்போதும் ஏதாவது வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். அந்த வேலைகளை செய்யும் கூலித் தொழிலாளர்கள் அவ்வப்போது ஒரு டீ குடிக்க ஒரு கிலோமீட்டர் போய்வர இயலாது. விட மாட்டார்கள். சாப்பாடும் பிரச்னைதான். அளவு சாப்பாடு 80 ரூபாய் விற்கும் பவன்களின் கிளைகள்தான் பக்கத்தில் இருக்கும்.   இப்படி ஒருவாய் சோற்றுக்கும் தேனீருக்கும் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ முளைத்தவை தள்ளுவண்டி கடைகள். உழைப்பும் பிழைப்பும் சங்கமமாவது அங்கேதான். சைக்கிளுக்கு காற்றடிப்பவர், அறுந்த செருப்புக்கு தையல் போட்டு தருபவர், குடை ரிப்பேர் செய்பவர், இஸ்திரிக்காரர், வறுகடலை வண்டிக்காரர் இவர்களெல்லாம் மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கு அவசியப்படாமல் போய்விட்ட உழைப்பாளிகள். கீழ்த்தட்டு மக்களின் பிழைப்புக்கு இன்றியமையாத அச்சாணிகள். இவர்களை வேரோடு பிடுங்கி தூரத்தில் விட்டெறிய வேண்டும் என்று நினைப்பது பாவம்.
மாநகரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் புல்டோசர் விளையாட்டு அதைத்தான் செய்ய முனைகிறது. மூன்று நான்கு தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்துவதே தவறு. ஆக்கிரமித்த பகுதிகளுக்கு மின்சார இணைப்பு, சாலை, குடிநீர் குழாய், ரேஷன் கடை, வாக்காளர் அட்டை எல்லாமும் கொடுத்த அதிகாரிகளையும் அவர்களுக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளையும் எவரும் குறை சொல்வதில்லை. சாக்கடையாக நாறும் கூவத்தின் கரையோரம் குடிசை போட்டு குடியிருக்க ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஆசை பிறக்குமா? அரை நிமிடத்தில் பாலத்தை கடப்பதற்குள் எந்த நோய் புகுந்துவிடுமோ என்ற பயத்தில் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்கிறோம். அவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்கேயே வசிப்பது ஆசையினால் அல்ல. நகரங்களில் ஒரு சதுர அடி பாக்கியில்லாமல் மொத்த நிலமும் பணக்காரர்கள் கைக்கு போய்விட்டது. நடுத்தர வர்க்கம் வாடகை கொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த  வீட்டுச் சந்தையில் தினக்கூலிகள் எங்கே போக முடியும். டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு செல்பவர்களுக்கு ஈவ் டீசிங்கில் ஈடுபட நேரமிருக்காது. அதற்கு பிறகு சிகரெட் வாங்குபவர்களுக்கு 10 நிமிடம் கிடைக்கிறது. டீக்கடைகளில் சிகரெட் விற்கக்கூடாது என்ற தடையை கண்டிப்புடன் அமல்படுத்திய வரையில் இதுபோன்ற புகார்கள் வரவில்லை. ஈயை ஒழிக்க வீட்டை கொளுத்த வேண்டுமா, என்ன?