Sunday 28 April 2013

விஜய் சேதுபதியும்- நானும்


பல சமயங்களில் நாம் நினைப்பது தவறாய் போய் விடுவதுண்டு. நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம் துள்ளுவதோ இளமை படத்தின் ட்ரைலர் டி வி யில் பார்த்த பொழுது இவன்லாம் நடிக்க வந்துட்டான் பாரு என்று நொந்து கொண்டேன் தனுஷை பார்த்த உடன். பதினொன்னாம் வகுப்பு படிக்கும் பொழுது காதல் கொண்டேன் திரை படத்தை பார்த்த பொழுது இவன் இப்படி கூட நடிப்பான என்று பார்த்து வியந்தேன். திருடா திருடி பட ரிலிஸ் அன்று முதல் ஆளை டிக்கெட் எடுத்து பார்த்தேன். அன்று சீ இவன்லாம் நடிக்க வந்துடான்ன்னு நெனச்ச நடிகன் இன்று இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற நடிகனாய் மாறி இருக்கிறார்.

இவர் மட்டும் அல்ல விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என அனைத்து நடிகர்களும் ஆரம்பத்தில் இழி சொல்லுக்கு ஆளானபட்டவர்கள் தான். அந்த இழி சொல்லே இவர்களை உயரத்திற்கு வர காரணமாய் அமைந்தது.


அந்த வரிசையில் தற்பொழுது இருப்பவர் விஜய் சேதுபதி. நான் சிறிது காலம் சென்னை பெரம்பூரில் உள்ள S2 திரை அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போ சுந்தர பாண்டியன் ரிலிஸ் சமயம் அப்ப வேறு ஏதோ படம் பார்க்க வந்து இருந்தார் விஜய் சேதுபதி. திரை அரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணி இருந்தால் மட்டுமே அவர்களின் இருக்கைக்கு சென்று கொடுப்பார்கள். 

அவ்வாறு கொடுக்கும் பொழுது விஜய் சேதுபதி தனக்கும் கொண்டு வந்து தருமாறு என்னுடன் பணி புரிந்த நண்பனிடம் கேட்டு கொள்ள அவனும் கொண்டு வர சென்றான். இதை கண்ட உடன் நான் அவன் என்ன பெரிய இவனா? அவனையே போயி வாங்க சொல்லு ரசிகர்கள் யாரும் ஆட்டோகிராப் கேட்டு தொல்ல பண்ண மாட்டாங்க என்று நண்பனிடம் கூறினேன். என் நண்பனோ சிரித்து கொண்டு விடுப்பா போயிட்டு போறான் என்று கூறி அவனிடம் சென்று அவனது ஆர்டர்ரை கொடுத்து விட்டு என்னிடம் வந்தான். பெரிய பிச்சகாரனாய்  இருப்பான் போல பத்து பத்து ரூபாயாய் வச்சு இருக்கான் என்று என்னிடம் கூறினான்.


இது நடந்து ஆறு மாதத்தில் இன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வசூல் நாயகனாக விஜய் சேதுபதி மாறி இருகின்றார். பிட்சா, நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் என்ற இரண்டு பெரிய படங்கள் ஹிட். கோடி ருபாய் சம்பளம் கொடுக்க தயார். அவரது கால்ஷிட் கிடைக்க தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கின்றனர். நான் யாரை பெரிய ஆளா? அப்படி என்று நினைத்தேனோ அவர் இன்னைக்கு தயாரிப்பளர்கலின் வசூல் ஹீரோ. இனி யாரையும் மட்டமா நினைக்க கூடாது என்று என்னிடம் நானே கூறி கொண்டேன். இறைவன் யாரை எப்போது எங்கு  கொண்டு செல்வான் என்பதை அறிந்தவன் அவன் மட்டுமே.

அவரின் சூது கவ்வும் என்னுடைய அடுத்த எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்.  

Saturday 27 April 2013

நான் ராஜாவாக போகின்றேன் - திரை விமர்சனம்இன்னைக்கு சொல்லிக்கிற மாதிரி இரண்டு தமிழ் படம் ரிலிஸ் ஓன்று நான் ராஜாவாக போகின்றேன் இரண்டு யாருடா மகேஷ். மதியம் வரைக்கும் யாருடா மகேஷ் என்ற படத்த தான் பாக்குற ஐடியா தான் இருந்துச்சு. ஆனா முக நூலில் ஆரூர் மூனா செந்தில் அண்ணன் யாருடா மகேஷ் படம் பார்த்திக்கிட்டு இடைவேளை அப்பவே படம் சுமாரா போயிகிட்டு இருக்குறதா ஸ்டேடஸ் போட்டாரு. அத பார்த்ததுக்கு அப்பறம் நாம அங்க போயி சிக்குவோமா. அதான் பைக்க திருப்பி நான் ராஜாவாக போகிறேனுக்கு விட்டேன்.முதல் நாள் படம் மாதிரியே இல்ல காலியா இருந்துச்சு.டிக்கெட் எடுத்து கொண்டு உள்ளே சென்றேன்.
கதை;
படம் தொடங்கியவுடன் 16 மாதங்களுக்கு முன்பு என்று போட்டாங்க நகுல் ரௌடிகளை துவைத்து எடுத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு லாரி அவரை இடிக்க மருத்துவமையில் ஸ்டேச்சாரில் தள்ளி கொண்டு போகிறார்கள். அங்கு கட் பண்ணினா 26 மாதங்களுக்கு முன்பு என்று மணிவண்ணனின் மரணத்தை காட்டுகிறார்கள். அதை கட் பண்ணி அழகான மலை பிரதேசம் அந்த ரோட்டில் நகுல் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்.

நகுளின் அம்மா சீதாவொடு மேகாலயாவில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.நகுளிற்கு அவங்க அம்மா திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார். ஆனால் நகுலோ சிறுவர்களுடன் ஜாலி யா ஊர சுத்திகிட்டு இருக்கார். ஒரு நாள் நகுல் தவறுதலாய் அங்கு இருக்கும் மிலிட்டரி கேம்பில் நுழைந்து விடுகிறார். அங்கு ஒரு ராணுவ வீரனை சந்திக்கிறார். அந்த ராணுவ வீரன் நம்ம நகுலை ராஜா என்று அழைக்க நான் ராஜா இல்ல சார் ஏன் பேரு ஜீவா என்று கூறுகிறார். ராணுவ வீரருக்கு ஒரே ஆச்சரியம் நீ என்னுடன் கல்லூரியில் படித்த என் நண்பனை போன்றே இருக்கிறாய் என்று கூறி ஒரு விடியோவை காட்ட நகுல் ஆச்சரியப் படுகிறார்.

தன்ன மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள அந்த நகுலை காண இங்கு இருந்து சென்னைக்கு புறப்டுகிறார். அங்கு சென்ற பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே நான் ராஜாவாக போகின்றேன் கதை. கிளைமாக்ஸ் நம்ம தமிழ் படத்துல்ல வரது தான் ஆனா நம்ம யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட் இருக்கு படத்துல்ல சூப்பர்.

நடிகர்&நடிகைகள்;
ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கும் நகுல் படம். இவர் கடைசியா நடிச்ச படம் மண்ணை கவ்வ ஆளையே கொஞ்ச நாளா காணோம். தற்பொழுது இந்த படத்தின் மூலம் திரும்பி வந்தி இருக்கார். இவர் அறிமுகம் ஆனா பாய்ஸ் படத்தில் இருந்தே இவரை எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்கள் கமல் மாதிரி வித்தியாசம் எல்லாம் காட்டவில்லை. ஆனால் நன்றாக இருக்கிறது.
இந்த ஸ்டில் பார்த்து தான் நான் ஏமாந்துட்டேன் 

கதாநாயகியாக இரண்டு பேர். ஒருவர் பாக்யராஜ் அவர்களால் அறிமுகம் செய்ய பட்ட சாந்தினி. இவர் படத்திற்குள் என்டர் ஆனா பின்பே கதையில் வேகம் பிறக்கிறது. சட்ட கல்லுரி மாணவியாக இயல்பாக நடித்து இருக்கிறார். ஆனா பார்க்க ரொம்ப சுமாரா இருக்கிறார்.

இன்னொரு அறிமுக கதாநாயகி  அவானி. நகுல் நண்பியாகவும் அவரை ஒரு தலையாய் காதலிப்பதாகவும் அவருக்கு கொடுத்த பாத்திரத்தை குறை இல்லாமல் செய்து இருக்கிறார். அழகில்ஷந்தினிக்கு எவ்ளவோ தேவலாம்.

அம்மாவாக சீதா, குண்டு ஆர்த்தி, வனிதா விஜயகுமார், சேத்தன் இன்னும் நிறைய பேரு இருகாங்க.

இந்த படத்தில் இசை எல்லாம் பெரிதாக தெரியவில்லை. பாடல்கள் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஒரு குத்து பாடலில் ஆடும் நடிகை பார்க்க கேத்ரின கைப் மாதிரி இருகார்.நான் கூட அவர்தன்னோன்னு நினைத்து விட்டேன்.பிரகாஷ் சார் என்ன ஆச்சு.

சண்டை காட்சிகள் இயல்பாய் உள்ளது.

வசனம் வெற்றி மாறன். படத்தை இயக்கி இருப்பவர் ப்ரித்வி ராஜ்குமார்.

மத்த  எல்லாம் ஓகே. மொக்கை படம் ன்னு சொல்ல முடியல்ல. சூப்பர் படம்னு சொல்ல முடியாது. சுமாரா இருக்கு.

தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன். 80ருபாய் டிக்கெட் விலை. கொடுத்த காசுக்கு ஓகே தான்.

Thursday 25 April 2013

வாலிப வாலி ஒரு தெ‌ள்ளிய நீரோடை


வாலி என்றாலே ஜாலிதான். கவிதையாகட்டும், பேச்சாகட்டும் எதுகைக்கும் மோனைக்கும் நடுவில் ஹாஸ்யம் உருண்டோடும். பொதிகையில் 82 வாரங்கள் வாரம் ஒருமுறை வாலி பேசியதை கேட்டவர்கள் பாக்கியவான்கள். அவருக்கே அந்த 82 வாரமும் வசந்தகாலம்தான். அவரே சொல்லியிருக்கிறார். விகடனில் படம் வரைந்த மாலியைப் போல நீயும் வரணும் என்று ரங்கராஜனுக்கு அவரது நண்பர் வைத்த பெயர்தான் வாலி. அப்போதே தொடங்கிவிட்டது எதுகையும் மோனையும்.

அந்த 82 வார நிகழ்ச்சியை அப்படியே எழுத்து வடிவில் புத்தகமாக்கியிருக்கிறார் நெல்லை ஜெயந்தா. பெயர் வாலிப வாலி. வாலியை ஆரம்ப காலத்தில் எழுதத் தூண்டியவர்கள் இருவர். கவிஞரும் எழுத்தாளருமான ந.பிச்சமூர்த்தி. இன்னொருவர் என்.எஸ்.கிருஷ்ணன். 

என்.எஸ்.கிருஷ்ணனிடம் வாலியை அறிமுகப்படுத்துகிறார்கள். என்.எஸ்.கே. எப்படிப்பட்ட ஆள். "ஓஹோ நீரு கவிஞரா" எனக் கேட்டு முயல் ஆமை கதையை கூறியிருக்கிறார்.

"முயல் ஆமையிடம் ஏன் தோற்றது?" - இது என்.எஸ்.கே.

"முயல் தூங்கிப் போச்சு அதனால் தோற்றது" - இது வாலி.

ஒத்துப்பாரா என்.எஸ்.கே.? மறுபடியும் அதே கேள்வி. மறுபடியும் அதே பதில். ஒருவழியாக விளையாட்டு முடிந்து, என்.எஸ்.கே. சொன்னார்.

"முயல் ஆமையால் தோற்றது." 

அதையே நாலைந்து முறை சொல்லச் சொல்கிறார்.

முயல் ஆமையால் தோற்றது... முயல் ஆமையால் தோற்றது... முயல்லாமையால் தோற்றது... முயலாமையால் தோற்றது...

யுரேகா... வாலி கண்டுபிடிச்சிட்டார். முயலாமையால் முயல் ஆமையிடம் தோற்றது. 

என்.எஸ்.கே. வாலியிடம் இப்படி சொல்லியிருக்கிறார்.

"கண்டுபிடிச்சே. ஆனா தாமதமாதான் கண்டுபிடிச்சே. அதனால தமிழ் உனக்கு தாமதமாத்தான் சோறு போடும்."


அந்த காலகட்டத்தில் திராவிட பேச்சாளர்களையும், பெ‌ரியாரையும் கடந்துதான் யாராக இருந்தாலும் வர வேண்டும். பெ‌ரியாரும் அவரது கழகமும் அப்போது சுனாமி மாதி‌ி.அந்த‌் சுழலில் இருந்து யாராலும் தப்ப முடியாது. சூ‌ரியகாந்தி நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் பெ‌ரியார் கையால் கேடயம் வாங்கினார் வாலி. அன்றைக்கும் நாடகம் போட்டார்கள். மேடைக்கு எதிரே ஜமுக்காளம் வி‌ரித்து தனது நாயுடன் அமர்ந்துவிட்டார் பெ‌ரியார். ஒரு காட்சியில் பெ‌ரியார் வேடத்தில் ஒருவர் வர பெ‌ரியா‌ரின் அருகிலிருந்த நாய் ஓடிச் சென்று அந்த டம்மி பெ‌ரியா‌ரின் வேட்டியை கிழித்திருக்கிறது. பெ‌ரியார் கைத்தடியை தட்டி நாயை அழைத்த பிறகே அது அடங்கியிருக்கிறது. கம்பன் வீட்டு கட்டுத்தறி கவிபாடுகையில் பொ‌ரியா‌ரின் நாய் ரௌத்திரம் பழகியதில் என்ன வியப்பு.

நாடகம், சிறுகதை, ஓவியம் என்று அலைபாய்ந்த வாலியை திரைப்படப் பாடல்களை நோக்கி இழுத்தது ஒரு பாடல். படம் பாசவலை. தீபாவளிக்கு திருச்சி வெலிங்டன் டாக்கீஸில் படம் வெளியாகியிருக்கிறது. செம பாட்டுப்பா என்று ஒரே பேச்சு. அப்படி என்னதான் பாட்டு என்று வாலியும் பாசவலைக்கு போயிருக்கிறார்


"குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ளந‌ரிக்குச் சொந்தம்
குள்ளந‌ரி தப்பி வந்தா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் 
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா 
எட்டடிதான் சொந்தம்"

வாழ்க்கை தத்துவத்தை எட்டே வ‌ரியில் நெற்றிப் பொட்டில் அடித்த மாதி‌ரியான பாடல். எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாட்டை கேட்ட வாலிக்கு பிறகு யோசிக்க எதுவும் இருக்கவில்லை. வாலிக்குள் அலைந்து கொண்டிருந்த ஓவியனையும், சிறுகதையாசி‌ரியனையும், நாடகக்காரனையும் அந்த எளிமையான தத்துவப்படல் துடைத்தெறிந்தது. புதிய பாடலாசி‌ரியன் அன்று பிறந்தான். 

வாலியின் பேச்சிலர் வாழ்க்கையில் அவ‌ரின் சாயந்திர துணை ஸ்காட்ச் விஸ்கி. வழக்கம் போல பாட்டிலை திறந்து மோனத்தில் இருக்கையில் அவரைத் தேடி ஆள் வந்திருக்கிறது. செட்டியார் வெயிட் பண்றார் என்று சொல்லி. அழைக்க வந்த 
ஆளுக்கும் ஸ்காட்ச் தந்து, அவரை அழைக்க வேறு ஆளை வரவைத்திருக்கிறார் வாலி.

காத்திருப்பது மெய்யப்ப செட்டியார். சர்வர் சுந்தரத்தில் வாலி பாட்டெழுத வேண்டுமாம். அரை மணியில் தயாராகி பாட்டில் தந்த மயக்கத்திலேயே வாலி எழுதிய பாடல்தான் அவளுக்கென்ன அழகிய முகம்... 

வார்த்தையெல்லாம் நல்லாதான் இருக்கு, வாசனைதான் ச‌ரியில்லை என்று சொல்லி ஊதுபத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார் செட்டியார்.


நான் ஆணையிட்டால் பாடலை வாலி முதலில் வேறு மாதி‌ி எழுதியிருந்தார். நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்... படத்தை தயா‌ரித்த நாகிரெட்டிக்கு உடன்பாடில்லை. ரொம்ப அரசியல் என்றிருக்கிறார். சென்சார் உறுப்பினர் பத்து வ‌ரியை நீக்கச் சொல்லியிருக்கிறார். கடைசியில் பஞ்சாயத்து வந்தது எம்‌ஜிஆ‌ரிடம். நானாக இருந்தால் பிள்ளையார் சுழியைத் தவிர எல்லாத்தையும் நீக்கச் சொல்லியிருப்பேன் என்றிருக்கிறார். பின்னே... அண்ணா இருக்கையில் எம்‌ஜிஆர், நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால்... பாடுவதா? கடைசியில் அண்ணாதான் வாலிக்கு வார்த்தை தந்தார். நான் ஆணையிட்டால் தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசியதை வைத்து நான் அரசன் என்றால் நான் ஆணையிட்டால் என மாறியது. பாட்டும் இன்றுவரை சூப்பர்ஹிட்.

படகோட்டி சமயம் வாலிக்கு ஃப்ளூ காய்ச்சல், 104 டிகி‌ி. 7 பாடல்களில் 6 முடித்தாயிற்று. ஒன்று பாக்கி. வாலியை தொந்தரவு பண்ண வேண்டாம் வேறு யாரையாவது எழுதச் சொல்லலாம் என்கிறார் தயா‌ரிப்பாளர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு அதில் உடன்பாடில்லை. இசைக்கசக்ரவர்த்திக்கு ஏது ஈகோ. ஆர்மோனிய பெட்டியுடன் வாலியின் வீட்டுக்கே சென்று டியூன் போட, படுத்துக் கொண்டே வாலி பாட்டெழுதினார்.

வாலி ஸ்காட்ச் அடித்தும் பாட்டெழுதியிருக்கிறார், காய்ச்சலில் படுத்தும் எழுதியிருக்கிறார். ஆரோக்கியம் இதேபோல தொடர்ந்தால் வயசில் சென்சு‌ி அடித்தும் எழுதுவார். 

இவை வாலி என்னும் வார்த்தை கடலின் சில துளிகள் மட்டுமே. அள்ளி குடிக்க விரும்புகிறவர்களுக்கு நெல்லை ஜெயந்தனின் வாலிப வாலி ஒரு தெ‌ள்ளிய நீரோடை என்ற நூலில்..

Tuesday 23 April 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.4


அரசியலில் நுழைவு
ஹிட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் ஹிட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அப்போது அந்த கட்சியின் பலமே சிறு நூறு தான். அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் ஹிட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்.

அதன்பொருட்டு ஹிட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் ஹிட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். ஹிட்லர் உணர்ச்சி பிழம்பாய் உடல் நடுங்க கண்கள் சிவக்க ஆவேச பெருக்கோடு அவர் ஆற்றிய உரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 ஹிட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் பேச்சை கேட்பதற்காகவே லட்ச கணக்கில் மக்கள் குவிய தொடங்கினர். உலகில் மிக சிறந்தவர்கள் ஜெர்மானியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதித்தார் ஹிட்லர். ஸ்வஸ்திகா சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார். அரசாங்கத்தின் நிர்வாக திறமின்மையால் தான் வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி விட்டதாக பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்ற்று அதில் தோல்வி அடைந்தார்.

1923ல் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக ஹிட்லர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மன் அரசு அவருக்கு 5 ஆண்டு காலம் தண்டனை விதித்து பின்பு ஒரு ஆண்டு காலமாக குறைக்க பட்டது. முதல் பொது கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சியால் ஆளும் அரசாங்கத்தையே பயமுறுத்தும் அளவிற்கு கட்சியை வளர்த்தது ஹிட்லரால் மட்டுமே முடியும். சித்தாந்தம் இல்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தம் உருவாக்கியதும் அப்போதுதான்.

சிறையில் இருந்தவாறு எனது போராட்டம் [mein kempf ] என்ற நூலை எழுதினார். இது உலக புகழ் பெற்ற நூல். இதில் உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யுனிஸ்ட்களையும் மிக கேவலமாக எழுதினார். யூதர்கள் ரஷ்யர்கள் மன நிலை பாதிக்க பட்டவர்கள் இல்லாத புதிய யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்  வைத்தார்.
1928ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. அனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை நாஜி கட்சி என்று மாற்றி நாடு முழுவதும் திவிரவாததில் ஈடுப்பட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஓன்று திரட்டினார். ஹிட்லரின் இடைவிடாத உழைப்பும் ராஜா தந்திரமும் வெற்றி பெற்றது. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்க தக்க வகையில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் மூத்த தலைவர் ஹிண்டன்பர்க் வெற்றி பெற்றார். இருந்தாலும் அவர் ஆட்சி அமைக்க ஹிட்லரின் ஆதரவு அவருக்கு தேவை பட்டது.  எனவே கூட்டனி அரசில் ஹிட்லருக்கு சான்சலர் பதவி தர பட்டது. ஆனால் ஹிட்லரின் மீது இருந்த பயம் காரணமாக அதிகாரம் குறைத்து வழங்கப்பட்டது. அந்த சமயம் பாராளுமன்ற கட்டிடம் கொளுத்தப்பட்டது.  ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க் மக்கள் போராட்டத்திற்கு அடி பணிந்தார். 1933ல் 30ம் தேதி ஹிட்லரை அழைத்து பிரதமாராக அறிவித்தார்.

அன்று முதல் ஹிட்லருடைய ஆட்சி ஆரம்பம் ஆனது. ஹிட்லர் பதவி ஏற்ற ஒரு ஆண்டில் ஜனாதிபதி ஹிண்டென்பெர்க் மரணமடைந்தார். பின்பு ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றி கொண்டு எதிர்பாளர்களை எல்லாம் ஒழித்து கட்டி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அமர்ந்தார் ஹிட்லர்.


Friday 19 April 2013

உதயம் NH4-திரை விமர்சனம்


இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும் பொழுது அம்சமான க்ரைம் ஸ்டோரி ன்னு  நெனச்சேன். ஆனா எதிர் பார்த்த த்ரில் இல்லை.

கதை;

பெருசா என்ன இருக்க போகுது வழக்கமான அரத பழசான அதே கதை தான். கர்நாடகாவின் மிக பெரிய அரசியல்வாதி அவருக்கு ஒரே பொண்ணு.  அவ படிக்கிற காலேஜ்ல சென்னையில் இருந்து வந்து சேரும் நாயகன். இருவருக்கும் காதல் வருகிறது. உடனே அரசியல்வாதி என்ன பண்ணுவாரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணுறாரு. அரசியல்வாதியின் எதிர்ப்பை சமாளித்து நண்பர்களின் உதவியோடு  நாயகியை மீட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதே கதை.

நாயகனாக சித்தார்த். கல்லூரி மாணவராக வருகிறார். அவருக்கு ஏத்த கதாபாத்திரம் தான். இந்த படத்துல்ல பெருசா சொல்லிக்கிற மாதிரி நடிபெல்லாம் இல்ல. காலேஜ் போறாரு தம் அடிக்கிறார், சரக்கடிகிறார். ஆனா படிக்கிற மாதிரி படத்துல்ல காட்சியே இல்ல. காதலியை அவரது மாநிலத்தில் இருந்து தன்னோட மாநிலத்துக்கு கொண்டு போய்விட்டால் பிரச்னை இல்லைன்னு பிளான் பண்ணுறாரு. எல்லாம் மட்டமான பிளான்பா. இது மட்டும் இல்லாம படத்தோட இறுதி காட்சில்ல உதடோட உதடு வச்சு ஒரு பச்சக் அடிக்கிறார். அது மட்டும் தான் படத்துல்ல அவர் நடிச்சதுள்ள எனக்கு பிடிச்சது. அதோட அவருக்கு முடிஞ்சு வேலை.

நாயகியாக அஷ்ரிதா ஜட்டி சாரி ஷெட்டி. பாப்பா பார்க்குறதுக்கு ஓகே பரவா இல்ல. ஆனா தமிழ் பேசுறத பார்க்கும் பொழுது நமக்கு அழுகையே வந்துரும் போல. யாருய்யா டப்பிங் பேசுனது. எரிச்சல்லா இருந்துச்சு பார்க்க. படத்துல்ல நாயகனுக்கே வேலை இல்ல. பின்ன இவங்களுக்கு மட்டும் என்ன  இருக்க போகுது ஓகே.
(ஆளு சூப்பரா இருக்காருல்ல)

(+)
படத்துல்ல எனக்கு மிகவும் பிடிச்சதுன்னு சொன்ன அந்த அசிஸ்டென்ட் கமிஷ்னராக வரும் கே.கே.மேனன். மலையாளத்தில் இருந்து வந்து இருக்கிறார். அட்டகாசமாக நடிச்சு இருகார். அந்த போலீஸ்கே  உள்ள மிடுக்கு சூப்பர். ஆனா நிஜத்துள்ள அப்படி போலீஸ்காரங்க யாரையும் பார்கள பா.
இவர தான் படத்துல்ல எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகர் கிடைத்து உள்ளார்.

இந்த குறும் படங்களினால்  தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்லது நடந்து  இருக்கு. திறமையான இயகுனர்கள் ஆனா பிட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி தந்த பாலாஜி மோகன், நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனரான பாலாஜி பரணிதரன் போன்றோர். மற்றும்  குறும் படத்தில் இருந்து வந்த நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா படத்தில் நடித்த  கண்ணாடி அணிந்த அந்த நபர் அவரு பேரு தெரில்ல. அந்த வரிசையில் ஒரு மேலும்  நடிகர் கிடைத்து உள்ளார். இவரு பேரும் தெரில்ல இவரு நடிச்ச குறும் படங்களை நான் பார்த்து இருக்கிறேன்.படத்துல்ல இவரு ஒரு காமெடி பண்ணி இருக்காறு பாருங்க அத நினைத்து நான் வீடுக்கு வர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன். இது மாதிரி திறமை உள்ளவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா.


படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணம் கான பாலா பாடிய ஒரே கண்ணாலே அந்த பாடல் தான். கானா பாலாவே அந்த பாடலை படத்தில் பாடுகிறார்.அந்த பாட்டு பாதி தான் படத்துல்ல வருது. அந்த பாடலை படமாக்கிய விதம் சுத்தமா நல்லாவே இல்ல. பாடல் கேட்க மட்டும் நன்றாய் உள்ளது.


(-)
நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க நண்பர்கள் அனைவரும் பைக், கார் என அனைத்து உதவிகளும்  செய்கின்றனர். ஆனா நமக்கு உள்ள நண்பர்கள்ட பைக் கேட்டா மச்சான் பெட்ரோல் இல்லடா அப்ப்டிம்பானுங்க. இதெல்லாம் படத்துல்ல தான் நடக்கும்.

இந்த காலத்துள்ள யாருங்க இந்த அளவு சீரியசா காதலிகிரங்க. 50 ரூபாய்க்கு டாப் அப் பன்னலனாலே கோயிந்தா இப்ப போயி இந்த மாதிரி படம் எடுத்துக்கிட்டு உஸ்ஸ்ஸ்.

இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. சித்தார்த் நடித்த 180 படம் விஷுவலாய் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இந்த படம் என்னமோ அந்த அளவு கிளியறாய் இல்ல. பார்க்க ஏதோ பழைய படம் பார்க்குற மாதிரியே ஒரு பீலிங்.

நான் இதுவரைக்கும் எத்தனையோ படம் பார்த்து இருக்கேன். எல்லா படத்துக்கும் ஒரு இடைவேளை தான் விடுவாங்க. ஆனா இந்த படத்துக்கு மட்டும் மூன்று இடைவேளை விட்டாங்க. ஏன்னு கேக்குறிங்களா! பவர் கட் தான். படம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் கழிச்சு பவர் கட் ஆச்சு அப்பறம் இருட்டுள்ள சும்மா 30 நிமிஷம் உக்கார வச்சுட்டானுங்க. மறுபடி படம் ஆரம்பத்துல்ல இருந்து போடுறானுங்க. அப்பறம் நிறுத்திட்டு 10 நிமிடம் கழித்து ஆரம்பம் ஆகியது. ஏண்டா டேய் தியேட்டர் கட்டுன்ன மட்டும் போதுமா அத ஒழுங்கா உருபுட்டியா செய்ய மாட்டிங்களா. இந்த லட்சனத்துள்ள இவனுகளுக்கு 5 ஸ்க்ரீன் வேற விளங்கிரும்.

கதை வசனம் வெற்றி மாறன் இத நீங்க எழுதாமலே இருந்து இருக்கலாம்.
இயக்கம் மணிமாறன். சாரி அடுத்த படம் நல்ல பண்ணுங்க பாஸ்.

மொத்ததுல்ல இந்த படத்துக்கு போயி ஏன்டா போனேன்னு ஆயிருச்சு.


Wednesday 17 April 2013

சந்தானம்- விடிவி கணேஷின் 'இங்கே என்ன சொல்லுது'வின்சென்ட் செல்வா தன் பெயரை வி.செல்வா என்று மாற்றிவிட்டார். ப்ரியமுடன், யூத், ஜித்தன், வாட்டாக்குடி இரணியன் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மீதிருக்கும் மரியாதை காரணமாக இப்பெயரை வைத்துக் கொண்டதாக ஆரம்ப காலங்களில் கூறி வந்தார்.
இப்போது அந்த மரியாதை குறைந்துவிட்டதா என்று கேட்காதீர்கள், இது காலத்தின் கட்டாயம்.

தற்போது ஒரு படத்தை இயக்கி அது இன்னும் வெளிவராத நிலையில் அதிரடியாக தன் பெயரையும் மாற்றி தனது யூஷுவலான ஸ்டைலையும் மாற்றி வேறொரு படத்தை இயக்கப் போகிறார் வி.செல்வா. படத்தின் பெயர் 'இங்க என்ன சொல்லுது?'

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் விடிவி கணேஷ், சிம்புவின் நெஞ்சை தொட்டு கூறும் 'இங்க என்ன சொல்லுது' என்கிற வசனத்தையே படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தில் வி.டி.வி கணேஷ்தான் ஹீரோ. இவரது பேவரைட்டான சந்தானம் இன்னொரு ஹீரோ. ஏற்கனவே இருவரும் 'வானம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' ஆகிய படங்களை இணைந்து கொமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர்கள்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை எவ்வாறு கலாயாத்தாரோ அது போல இந்தப் படத்திலும் விடிவி கணேஷை சந்தானம் கலாய்க்க இருக்கிறார்

இந்த விடிவி கணேஷுக்கு ஜோடி யாரென்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் மீரா ஜாஸ்மினேதான். இப்படத்தை இந்த யூத்களும் விரும்புகிற அளவுக்கு கலகல மசாலாவாக அரைக்க முடிவு செய்திருக்கிறார் வி.செல்வா.

முதலில் இந்த கதையை சினேகாவுக்குதான் சொன்னாராம். அவரும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தாராம். அவ்வளவு புகழ்ச்சியும் சில நாட்களில் அந்தர் தியானமாகிவிட்டது. காரணம், உங்களுக்கு ஜோடியாக நடிப்பவர் வி.டி.வி கணேஷ்தான் என்று சினேகாவிடம் செல்வா கூற, வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாராம் அவர். வேற ஆன பாருங்க என்றும் உறுதியாக கூறிவிட்டாராம். இத்தனைக்கும் கொழுத்த சம்பளத்தை தர தயாராக இருந்தது படத்தை தயாரிக்கும் வி.டி.வி நிறுவனம். அதாவது கணேஷின் சொந்த நிறுவனம்.

கடைசியாக சினேகா அளவுக்கு அழகும், புகழும் இருக்கிற நடிகையாக வேறொருவரை தேட, இனி சினிமாவே வேணாம் என்று விரக்தியில் இருந்த மீரா ஜாஸ்மின் சிக்கியிருக்கிறார். அவருக்கும் இந்த அழைப்பு புத்துணர்ச்சியை கொடுத்திருப்பதால், வேக வேகமாக படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார்கள்.
பிரசாந்துடனேயே நடிச்சாச்சு. இனி கணேஷாவது காக்கா கோபாலாவது. பொளந்து கட்டுங்க மீரா..
நன்றி;சினி உலகம் .

Monday 15 April 2013

பிரபல பதிவர்களை காணவில்லை?


நானும் ப்ளாக் ஆரம்பிச்சதுள்ள இருந்து மத்த ப்ளோக்ல இருக்குற மாதிரி ஒட்டு பட்டைகளை நம்ம ப்ளாக்ல சேர்க்கணும்னு ஒரு வருசமா முயற்சி பண்ணுறேன் முடியல்ல. வழி முறை எல்லாம் பார்த்து செட்டிங்க்ஸ் உள்ள போனால் ஒரே கசமுசான்னு இருக்கு ஒண்ணுமே புரியல்ல யாருட்டடா கேக்குறதுன்னு ஒரே யோசனை. அப்பறம் தான் நம்ம தல  தமிழ் வாசி பிரகாஷ் அண்ணன்க்கு மெயில் பண்ணினேன் உடனே அண்ணன் ஒட்டு பட்டைகளை எல்லாம் இணைத்து குடுத்தாரு. அதுக்கு அப்பரம்மா தான். ஹிட்ஸ் அதிகமா ஆகி இருக்கு. இந்த பதிவின் வழியாக அண்ணன் பிரகாஷிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
  
1.பன்னிகுட்டி ராமசாமி;

அண்ணனே கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. இவரு கடைசியா மார்ச் 4 கடைசியா ஒரு பதிவு போட்டதோட காணோம். இவரோட பதிவெல்லாம் படிச்சா யப்பா என்னமாதிரி நகைச்சுவையா எழுதி இருப்பாரு.அண்ணனை கண்டு பிடித்து பதிவெழுத சொல்பவர்க்கு அண்ணனிடம் இருந்தே ஒரு பெட்ரோமாஸ் லைட் வாங்கி இனமாக தரப்படும். 

2.செங்கோவி;

தலைவரு சொல்லிட்டே கிளம்பிட்டாரு. இரண்டு மூன்று மாதங்களுக்கு வர முடியாது என்று. தல சிக்கிரம் வந்து பதிவ போடுங்க.

3.இரவு வானம்;

நம்ம ஆளு கடைசியா பிப்ரவரி மாசம் பதிவு எழுதுனது தான். நல்ல எழுதுவாரு. இது மாதிரி நல்ல எழுத தெரிந்த ஆளுங்க எல்லாம் எழுதம இருந்த எங்கள மாதிரி மொக்கையா எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் பார்த்துகோங்க சுரேஷ்.

4.கிஷோகரின் பக்கங்கள்;

தம்பி கடந்த 3 மாத காலமாக பதிவு எழுதாமல் இருக்கிறார். ஆனா முக புத்தகத்தில் மட்டும் பெண்களுடன் அரட்டை அடிப்பதாக தகவல் வந்து உள்ளது.உண்மையா தம்பி.

5.அகாதுகா அப்பாடக்கர்ஸ்;

நம்ம காமெடி சூப்பர் ஸ்டார்ஸ் சந்தனத்தின் ரசிகரால் எழுதப்படும் இந்த ப்ளாக். கடந்த இரண்டு மாதங்களாக எழுதபடாமல் உள்ளது. மிண்டும் சந்தனத்தை வைத்து திறப்பு விழா எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபடுகிறது.

6.அவிங்க;

நம்ம தலைவரு எல்லாத்தையும் கலந்து எழுதுவாரு. சூப்பரா இருக்கும் கோபால் அப்படின்னு ஒரு கதாபாத்திரத தனது நண்பனாக ஆக்கி நல்ல காமெடி யா எழுதி இருபாரு. சூப்பர் சூப்பர். எனக்கு அந்த கோவாலு கலந்து கொள்ளும் ஒரு கோடி பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சது. அண்ணே அமெரிக்கால இருக்காருன்னு நெனைக்கிறேன். அவரும் தொடர்சிய பதிவு எழுதுனா சந்தோசமா இருக்கும்.

7.நாய்_ நக்ஸ்;

நம்ம ஆள  போன வருஷம் கடைசியா பதிவு போட்டதோட காணவில்லை.
கடைசியா கவிதை ன்னு எழுதி ஒரு பதிவு போட்டாரு பாருங்க அதுக்கு அப்பறம் தான் ஆளையே காணோம். அந்த கவிதைய படிச்சு அவரே மயக்கமாயிட்டாரோ??

இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இன்னும் ஒரு சில ப்ளாக் லாம் இருக்கு அந்த ப்ளாக் பெயரலாம் சொல்லல. அந்த ப்ளாக் ல உள்ள பதிவெல்லாம் காமெடி யா இருந்தாலும் அதிகமான உள் குத்து பதிவாக இருந்ததால படிச்சு சிரித்ததோட முடிச்சுகிட்டேன். அவங்களும் பதிவு எழுதுனா நல்ல இருக்கும்.

மத்தபடி இப்ப  நெறைய பதிவு எழுதி சந்தோஷ படுத்துறது நம்ம வீடு சுரேஷ் குமார் அண்ணன் தான். அண்ணே நீங்க இது மாதிரி எழுதிகிட்டே இருங்க. அப்பரம் நம்ம ஆரூர் மூனா அண்ணே அவங்களும் அடிகடி பதிவு போடுறாங்க சந்தோசம். மெட்ராஸ் பவன் சிவகுமார் அண்ணே,அதிரடிக்காரன், பிலாசபி பிரபாகரன் வாரம் ஒண்ணு இரண்டு பதிவு எழுதுறாங்க அதிக படுத்தனும்னு கேட்டு கொள்கிறேன்.

நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணன பத்தி சொல்லணும் நானும் எந்த ப்ளாக் போனாலும் முதல் ஆள எல்லோர்க்கும் முன்னாடி  அண்ணன் தான் பாரட்டுறாரு. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரொம்ப நன்றிண்ணே.

நன்றி.. 

Saturday 13 April 2013

உதயம் NH4- ஒரு பார்வை


பொதுவாவே நான் எந்த படத்தையும் ரொம்ப எதிர் பார்த்துலாம் போக மாட்டேன்.நம்ம பதிவர்கள் படத்த பார்த்து கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட்டதுக்கு அப்பறம் தான் போயி பார்ப்பேன்.ஆனா ஒரு பாடல் அந்த பாடலினால் இந்த படத்த முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்று எனக்கு தோன்றி விட்டது இந்த படம். அந்த பாட்டு நம்ம கான பாலா பாடின ஒர கண்ணாலே என்ற பாடல் தான். ட்ரைலர் கூட பார்த்தேன் லவ் ஸ்டோரி அண்ட் திரில்லர் மூவி மாதிரி இருக்கு. 

ஹீரோ நம்ம ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சித்தார்த். இவர் அந்த படத்திலேயே நடிச்சு இருந்தாலும் அடுத்து வேற ஏதும் பெரிய  படமாக அமையல. தெலுங்குல தான் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு    இவரும் பெரிய ஸ்டார் ஆயிட்டாரு. தமிழில் நீண்ட இடைவேளைக்கு அப்பறம் இவர் நடிப்பில் வெளி வந்த படம் தான் 180 படம். அந்த படம் சுமாரா போச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுக்கு அப்பறம் காதலில் சொதப்புவது எப்படின்னு ஒரு படம் பண்ணி இருந்தாரு. செம்மயா போச்சு அந்த படம் போன வருட ஹிட் லிஸ்டில் உள்ள படம். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளி வரும் படமே உதயம் nh 4.
(பாப்பவ பார்குறப்ப ஒரு ஜாடைல சன்னி லியோன் மாதிரி இல்ல )

ஹீரோஇன் அர்ஷிதா ஷெட்டி அறிமுகம் ஆகுறாங்க. பாப்பா பார்க்க சுமாரா இருக்கு படம் வெளி வரட்டும் மத்தத அப்பறம் பார்த்துக்கலாம்.

இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இரண்டு பாடல்கள் தான் கேட்டேன் இரண்டுமே சூப்பர். அதுலயும் நம்ம பாலா பாடுன்ன அந்த பாட்டு சூப்பர் டுப்பர் ஹிட். பின்னணி இசை படம் வந்ததுக்கு பின்பு.

ஒளி பதிவு வேல்ராஜ் எடிட்டிங் கிஷோர் வசனம் நம்ம  வெற்றி மாறன் தனது உதவியாலருக்காக எழுதி இருக்கார்.

இயக்கம் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி ஆற்றிய மணிமாறன் என்பவர். படத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. படத்தை ரெட் ஜெயெண்ட் மூவி வெளியிடுகிறது.

வரும் 19 தேதி படம் வெளியாகிறது.

Thursday 11 April 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:


முக நூல் சும்மா அரட்டை அடிக்க மட்டும் இல்லைங்க. பல நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நமக்கு அப்படியே ஏத்த மாதிரி இருக்கும். அப்படி தான் இந்த தகவலும் பெரும்பான்மையான கணவன்மார்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே எனக்கு பட்டது. அதான் இதை இங்கு பகிர்ந்து உள்ளேன்.


1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


மனைவியிடம் பிடிக்காத விஷயங்கள் 12 இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள் ஆயிரத்திற்கு மேல் உள்ளது. [வீட்ல சோறு கிடைக்கணும்ல நண்பர்களே! அதான் கடைசி இரண்டு வரிகள் நம்ம  பிட்டு எப்புடி?


நன்றி!!!!!!!!!! 

Tuesday 9 April 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.3


ஹிட்லரின் இராணுவ பிரவேசமும் வெற்றியும்;

ஹிட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு ரன்னெர் பணி தரப்பட்டது. முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடி சென்று தருவது தன ரன்னெர் பணி. துப்பாக்கி குண்டுகள் பொழிய வெடி குண்டுகள் முழங்கிடும் போர்களத்தில் தனது வீரத்தை வெளி காட்ட இது தான் சமயம் என ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பது தான். பல ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.

1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் ஹிட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை ஹிட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

15 அக்டோபர் 1918 ஹிட்லர் நச்சுக்காற்றுக் குண்டு மஸ்டர்ட் வாயு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.

ஹிட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார்.மருத்துவ மனையில் இருந்த ஹிட்லர் துரோகம் இது என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார்.கம்யுனிஸ்ட்களும் யூதர்களுமே ஜெர்மனியின் தோல்விக்கு இரகசியமாக வேலை செய்தார்கள்.அவர்களை அழிக்காமல் விட மாட்டேன் என்று கர்ஜித்தார் ஹிட்லர். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.

ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.

ஹிட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. ஹிட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் ஹிட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2
http://chakkarakatti.blogspot.in/2013/04/2.html

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.1
http://chakkarakatti.blogspot.in/2013/03/1.html

Sunday 7 April 2013

ஒரு கையெழுத்து மாறியது தமிழனின் தலை எழுத்து?


விளம்பரம் ரொம்ப அவசியமான ஓன்று. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது உற்பத்தி பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல இது உதவும். அதுக்கு மட்டும் இல்லாம மக்களிடம் எதையும் கொண்டு போகணும்னா விளம்பரம் மிக இன்றி அமையாதது. ஒரு ப்ரோக்ராம் டி .வி ல பார்க்கணும்னு உட்காந்த விளம்பரத போட்டு நம்மள ஒரு வழி பண்ணிருவாங்க. பார்க்க சகிக்க முடியாத விளம்பரமா இருக்கும். 

அதும் இந்த பாடி ஸ்ப்ரே விளம்பரம் இருக்கு பாருங்க. அந்த ப்ரண்ட் யூஸ் பண்ணுனா பக்கத்துக்கு வீட்டு ஆன்டி, அடுத்தவன் பொண்டாட்டி, எல்லாம் நம்ம பக்கம் ஓடி வந்துருவாங்கலாம். ஏன்டா நாயிங்களா உங்களுக்குலாம் அறிவே கிடையாதா. 

நாம சினிமா பார்க்க போகும் போது விளம்பரமா போட்டு நம்மள கொலையா கொல்லுவாங்க. அதும் இப்ப புகை பிடித்தலுக்கு எதிரா கட்டாயம் அந்த விளம்பரத்த போட்டு ஆகணும்னு தமிழக அரசு சொல்லிட்டதால நம்ம முகேஷு விளம்பரத படம் ஆரம்பிக்குரப்பவும், இடைவேளை அப்பவும் போட்டுறாங்க. நம்ம ஆளுங்க அதையும் பார்த்துட்டு போயி தான் ஊதி தள்ளுறாங்க. என்னமோ இவங்க சொல்லி அவங்க கேட்க போறது மாதிரி.

அப்பறம் மது இவங்களே விப்பாங்களாம் இவங்களே குடிக்க வேணான்னு விளம்பரமும் பண்ணுவாங்களாம் என்ன கன்றாவிடா.

இப்ப ஒரு விளம்பரம் படம் இடைவேளை அப்ப பார்த்திங்களா. ஒரு கையெழுத்து! மாறியது தலை எழுத்து. அப்படின்னு சொல்லி நம்ம புரட்சி தலைவி, பாரத தாய், வருங்கால பிரதமர், அகிலாண்டேஸ்வரி, அம்மா தமிழக மக்கள் அனைவருக்கும் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், வீடு, மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், லேப்டாப், எல்லாம் கொடுக்குறாங்க. தமிழக மக்கள் தலை எழுத்து மாரிபோச்சமாம். ஆமா இதெல்லாம் எங்க ஊருக்கு கொடுக்கவே இல்லையே. அப்ப நாங்க தமிழ் நாட்டுள்ள இல்லையா? 

நல்ல ரோடு, குடி நீர் வசதி, சிறப்பான கல்வி, படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அரசு அலுவலகத்தில் மக்களுக்கு தரமான சேவை, விலைவாசிய குறைக்க குறைந்த விலை உணவகம் ஆரம்பிகிறான்கலாம் நாலு இடத்துல்ல இவங்க ஆரம்பிச்சுட்டா  மத்த  ஊர்ல உள்ளவன்லாம் மண்ணையா தின்பாங்க.இவங்க அரசு ஆஸ்பத்திரி நிலைமை நமக்கு தெரியாதா? முக்கியமா மிக பெரிய பிரச்சனையான மின்சாரம், இதுக்கு வழி என்னடானு பார்காம சும்மா 40 பேருக்கு இதெல்லாம் கொடுத்துட்டு மிச்சத இவங்க பங்கு போட்டு கிட்டு மக்கள் ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இவங்களே நினச்சுகுறாங்க. 

ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டம் பெரிய அளவு பேச பட்டது. அவங்க அந்த அளவு போராடி என்ன மாற்றம் வந்தது என்று எனக்கு தெரியல்ல. பழைய மாதிரி கிரிக்கெட் போட்டதும் மொத்த பேரும் போயி அங்க நிக்குரானுங்க. உலகத்துள்ள எங்க போனாலும் தமிழன் தான்யா மிதி வாங்குறான். மிதி வாங்குநதையும் மறந்துறான். 

ஒரு நாட்டுள்ள தமிழ் இனத்தையே அழிகிறாங்க. நமக்கு தர வேண்டிய தண்ணிய பக்கத்துக்கு மாநிலகாரன்  தர மாட்றான். எல்லா பிரச்சனைக்கும் முடிவு எடுக்க வேண்டிய நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாத்தையும் அரசியல் ஆக்குரான்களே தவிர பிரச்சனைய தீர்க்க மாட்டேன்கிறான்.

தமிழனா பிறந்தாலே தர்ம அடித்தானா? எப்ப தான் மாற போகுதோ..?

Friday 5 April 2013

சேட்டை திரை விமர்சனம்


மிக பெரிய எதிர்பார்போடு வெளி வந்திருக்கும் படம். நான் ரொம்ப ஆவல இருந்தேன் இந்த படத்த பார்க்க. ஏனென்றல் ஹிந்தியில் மிக பெரிய வெற்றி பெற்ற டெல்லி பெல்லி என்ற ஹிந்தி படத்தை தான் தமிழில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். அந்த படத்தை ஹிந்தியில் மொழி புரியாமல் பார்த்து இருக்கிறேன். அதை பார்த்த பொழுது இந்த படத்துல்ல அப்படி என்ன இருக்கு என்று நினைத்து கொண்டேன். இப்போது பார்த்த பிறகு தான் புரிகிறது ஏன் வெற்றி பெற்றது என்று. முழு நீள நகைச்சுவை திரைப்படம்.

படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டு வீட்டம்மாகிட்ட பொய்ய சொல்லிட்டு கிளம்பக்ககுள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. அப்டியே அரக்க பறக்க போறகுள்ள ஐந்து நிமிடம் தாமதம் ஆயிருச்சு. போயி உட்கார்ந்தேன். லேட்டா போன நாள நம்ம முகேஷ  பார்க்க முடியல்ல.
[என்ன சோப்புமா போடுற] 
கதை;

நம்ம பிரியாணி ஆர்யா, கோமாளி பிரேம்ஜி ஒரே பத்திரிகை ஆபிஸ்ல வேலை செய்கிறாங்க. அங்க புதுசா வேலைக்கு சேருறாரு. நம்ம காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம். என்ன காமெடி சூப்பர் ஸ்டார்னு சொல்றேன்னு பாற்குரிங்களா. டைட்டில்லயே அப்படி தான் போட்டாங்க. நம்ம தல கௌண்டமணி கூட பட்டமெல்லாம் போட்டுகல்ல அவரோட ஜெராக்ஸ் இவருக்கு போட்டு இருகாங்க ஓகே விட்ருவோம் அதும் அவருக்கு நல்ல தான் இருக்கு. இதுல்ல நம்ம பிரியாணிய நம்ம பூசணிக்காய் காதலிக்குது அது யாருன்னு கேக்குறிங்களா நம்ம ஹன்சிகா தான் முன்ன விட ரொம்ப கும்சிக்காவா இருகாங்க. [ஒரு சில காட்சில பாப்பா ஒல்லியா தெரியுது].
இன்னொரு பத்திரிகை ஆபீஸ்ல நம்ம முதிர்கன்னி அஞ்சலி வேலை பாக்குராங்க.

பூசணிக்காய் ஹன்சியோட  நண்பி ஒருத்தி ஒருத்தன் கொண்டு வர பார்சல்ல வாங்கி ஒரு அட்டறேஸ்ல பூசணிக்காய் ஹன்சிய  கொடுக்க சொல்லுறா. அது என்ன பண்ணுது தன்னோட பிரியாணி ஆர்யாட கொடுத்து டெலிவெரி பண்ண சொல்லுது. அவன் தன்னோட நண்பர்கள்ட கொடுத்து கொடுக்க சொல்றான்.
இப்படி மாத்தி மாத்தி பார்செல் போயி சேராம பார்செல்லுக்கு சொந்தகாரனான  நாசர் தேடி வராரு.

அந்த பார்சல்ல என்ன இருந்துச்சு?

நாசர்க்கு அது கிடைச்சுச்சா?

பிரியாணி ஆர்யா யாருக்கு சொந்தம் ஆனாரு?

இவை அனைத்திற்கும் நகைச்சுவையாக பதில் சொல்லி இருகாங்க.

படம் முழுக்க ஒரே கலாட்டா தான்.

நடிகர்கள்;

ஆர்யா இவர என்னமோ எனக்கு அவ்ளவா பிடிக்கல. கூட நடிக்கிற எல்லாத்துக்கும் பிரியாணி ஆக்கி போட்டு கவர் பன்றாரு. இவரு அஞ்சலிக்கு கொடுத்த முத்த காட்சிய கண்ணுல காட்டல.நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க.
மொத்ததுல்ல அவர பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல ஓகே.

இரண்டு ஹீரோஇன் ஹன்சிகா, அஞ்சலி அவங்களுக்கு பெருசா நடிப்புல்ல பெரிய வேலை இல்ல. அவங்க டான்ஸ் பன்றப்ப சதை தனியா ஆடுது. அம்மா தாயிங்கள உடம்ப குறைங்க பார்க்க சகிக்கல.

அடுத்து நம்ம போண்டா பிரேம்ஜி. அவருக்கு பொருத்தமான வேடம் தான். இவருக்கு தனிய ஒரு குத்து பாட்டு வேற ஆர்யாக்கு உள்ள பாட்ட விட நல்லா இருக்கு. மத்த படத்துல்ல வர மாதிரி ஏதும் கோமாளித்தனம் பன்னல. அது வரைக்கும் சந்தோசம்.

நாசர் இவர்ட எந்த கதா பாத்திரம் கொடுத்தாலும் மனுஷன் பின்னிருவாறு.
அவர் மூக்க குறி வச்சு சந்தானம் அடிக்கிற பஞ்ச் எல்லாம் செம்ம.
[பாப்பா சூப்பர்] 

இறுதியா படத்துக்கு மிக பெரிய பலம் நம்ம சந்தானம் தான். என்னா பஞ்ச் டா செம்மையா கலக்கி இருக்காரு. இவரு சொல்ற ஒவ்வொரு பஞ்ச்சும் சூப்பர்.இவர தவிர வேற யாரும் இவ்வளவு நல்லா பண்ணி இருக்க முடியாது. டைட்டில்ல இவரு பேர பார்த்ததுமே கை தட்டல் அள்ளுது. காமெடி சூப்பர் ஸ்டார் பொருத்தமான பட்டம் தான்.

இசை தமன் பாடல்கள் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. நம்ம தள தள  நீது சந்திரா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுறாங்க நல்ல இருக்கு. பிரேம்ஜிக்கு கொடுத்த பாட்டு நல்லா இருக்கு. வேற பாட்டு ஒன்னும் நல்லா இல்ல. ஆனா பின்னணி இசை சூப்பர் சூப்பர் பா கலக்கலா இரூக்கு.
[போட்டோனாலே கைய கட்டனும்மா பாஸ் ]

இயக்கம் கண்ணன். ஏற்கனவே கண்டேன் காதலை என்ற படத்தை இயக்கியவர். அதும் ஹிந்தி ரீமேக் தான். ரீமேக் படம்னா இனி இவர் தான் போல நல்லா பண்ணி இருக்காறு. வெல் டன் கண்ணன்.

யூ.டிவி தயாரித்து முதல் முறையாக லாபம் சம்பாரிக்கும் படம் இதுவாக தான் இருக்கும். தப்பிச்சார் தனஞ்செயன்.

மொத்ததுல்ல படம் நல்ல பொழுது போக்கு அம்சம் உள்ள படம். குடும்பத்தோட போக வேணாம். தனியா போயி பார்த்த நல்லா என்ஜாய் பண்ணலாம்.

சேட்டை தலைப்புக்கு ஏத்த மாதிரி சேட்டையா இரூக்கு.

தஞ்சை ஜுபிட்டர் ல பார்த்தேன் பெரிய கூட்டமெல்லாம் இல்லை.

நன்றி..