Thursday 30 October 2014

கத்தி - என்னையா பண்ணுனான் என் கட்சிக்காரன் ?


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பத்து மாதங்களுக்கு மேல  ஆகிறது. முன்னலாம்  படம் ரிலிஸ் ஆன உடனே படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனாதான் தூக்கமே வரும் ஆனா இந்த ஆன்ராயிட் மொபைல் வந்ததும் சிஸ்டத்தில் உட்காருவதே இல்லை பிற பதிவர்கள் தளத்தில் பதிவுகள் படிப்பதோடு  சரி. இப்போ கத்தி படத்தை பத்தி எல்லோரும் பதிவு எழுதிட்டாங்க சரி நாமலும் நம்ம பங்குக்கு எழுதுவோம்ன்னு உக்காந்தாச்சு. சரி கத்தி படம் எப்படி?

இந்த படத்தோட கதை எல்லாமே ஆல்ரெடி படிச்சு முடிச்சு இருப்பிங்க. பாதி பேரு படத்தையே பார்த்து முடிச்சு இருபிங்க அதனால கதை எல்லாம் வேணாம். அப்பறம் என்னத்துக்கு இந்த பதிவு எனக்கு ஒன்னு மட்டும் தாங்க புரியவே மாட்டேங்குது. அது என்ன நம்ம விஜய் எது பண்ணுனாலும் ஒரு கூட்டம் மட்டும் அவர குறை சொல்லியே காலத்த ஓட்றாங்க.
.
நம்ம தல அஜித் நடிப்பில் ஆரம்பம் ன்னு ஒரு படம் வந்துச்சு அந்த படத்துல புல்லட் ஜாக்கெட் வாங்குனதுல ஊழல் அதை வெளிக்கொணரும் நாயகன் அதான் படத்தோட கதை. இதையே விஷ்ணுவர்த்தன் ஜவ்வு மாதிரி படத்த போட்டு இழு இழுன்னு  இழுத்து இருப்பாரு. க்ளைமேக்ஸ்ல மட்டும் ஊழல பத்தி தல பேசி இருப்பாரு. அந்த படத்த எல்லாம் ஆகா ஒக்கோன்னு புகழ்ந்தாங்க. இதை சொன்னா நீ விஜய் ரசிகன் அப்படின்னு சொல்ல்வாங்க நான் விஜய் ரசிகன் தான் சுறா படம் பார்க்கும் வரை.இப்போ ஒரு சினிமா விரும்பி மட்டுமே.

ஆரம்பம் படத்தை விட வீரம் படம் எனக்கு பிடித்து இருந்தது. வீரம் படம் பிடித்த அளவு ஜில்லா எனக்கு பிடிக்கவில்லை.

படம் முதல் ஐம்பது நிமிடம் போர்...?
ஆரம்பம் படம் முழுசாவே போர் அதை பார்த்த நாம இதை பார்க்க மாட்டோமா?

 பாட்டு நல்லாவே இல்ல,..?
ஒரு பாட்ட தவிர மற்ற அணைத்து பாட்டும் நல்லாத்தான்  இருக்கு.

சவுண்ட் காத கிழிக்குது, 
அனிருத் பண்ணுன படத்திலேயே இந்த படத்தில் தன ரீ ரெக்கார்டிங் சூப்பர்.

விஜய் முகத்துல ரியாக்சனே இல்ல,..
இந்த படத்தில விவசயிகள கொன்னு அவங்க கை ரேகைய பார்த்துட்டு அழுவாரு பாருங்க பக்கத்துல ஒரு அம்மா அழுதுட்டாங்க.

சமந்தா பெரிய ஸ்கோப் இல்ல,..
நீ அஞ்சான் படம் நினப்புலயே போயி படத்த பார்த்தா எப்புடி? 166 நிமிடத்துல அவ்ளோன்  முடியும் ராசா..

திருட்டு கதை,..
தமிழ் சினிமாவே இப்போ அப்படி தான்  இருக்கு.

கார் பெரெட் கம்பெனிட காச வாங்கிட்டு அவங்களையே குறை சொல்றாங்க,
சொல்லிட்டு போறான் அவனே கவலை படல உனக்கு ஏன்?

விளம்பரத்துல நடிச்சுட்டு இவரு அதை சொல்லலாமா,.
ஆமா அவரு சொல்லறத எல்லாம் நீ கேக்குற மாதிரி பெத்தவங்க சொன்னாலே கேக்க மாட்டோம்..

இன்னும் குறைய அள்ளி தெளிக்குறாங்க.

இந்த படத்த பார்த்துட்டு இண்டர்வெல்ல போயி கோக் வாங்கி குடிச்சுகிட்டு படம் சூப்பர்ல அப்படின்னு சொல்லும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பார்த்துட்டு கோக் குடிக்காம போகும் ரசிகர்கள் இருந்தாங்க  பாருங்க அதுல தான் முருகதாஸ் ஜெயித்துவிட்டார்.

கத்தி-தெறி தெறி தெறிThursday 20 March 2014

சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை


ஒரு சிலருக்கே ஆண்டவன் தனித்துவமான குரல் வளத்தையும், நடனம் ஆடும் ஆற்றலை இறைவன் வழங்கி இருப்பான். அவ்வாறு இரண்டையும் ஒரு சேர பெற்றவர் தான் சந்திரபாபு. அவரது பாட்டிற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் பாடிய அனேக பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். அவரது நடனமும் தனித்துவம் வாய்ந்தது. அது மட்டும் இல்லாமல் நகைச்சுவையில் பின்னி எடுப்பார். நகைச்சுவையால் பலரை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை மிக சோகமானது. அவரை பற்றிய ஒரு நினைவு பதிவு.


சந்திரபாபு எம்.‌ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா‌ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ‌ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.‌ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.‌ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.


அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா‌ரித்து, ஏழையானார் சந்திரபாபு.


மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.‌ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா‌ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான்.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

சந்திரபாபு புத்திசாலி.

Wednesday 12 February 2014

அடிமையாகாதே ! ! !


போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

Wednesday 8 January 2014

தமிழ் சினிமா 2013 - டாப் 10 கதாநாயகர்கள்


போன வருடத்தின் டாப் 10 ஹீரோஸ் யார் என பார்ப்போமா ...

10. சீயான் விக்ரம் & விஜய்  ;

போன வருடம் விக்ரம் நடிப்பில் வெளி வந்த படம் ஒன்றே ஓன்று டேவிட்.
ஹிந்தி & தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எந்த மொழி ரசிகர்ளை திருப்தி படுத்துவது என தெரியாமல் இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார் குழம்பி படத்தையும் குழப்பிவிட்டார். எனவே இந்த ஆண்டில் வெளிவரும் ஷங்கரின் ஐ படம் அவரை காப்பாற்றும் என நம்புவோம்.

போன வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தலைவா இந்த படம் வெளிவருவதற்குள் நொந்து நுடுல்ஸ் ஆகி விட்டார் நம்ம தளபதி. நன்றாக ஹிட் கொடுக்கும் போதே அப்பாவின் அரசியல் ஆசையால் இதுபோல மொக்கை படமாக நடித்து பெயரை கெடுத்து கொள்வதே அவருடைய வாடிக்கை அதில் இந்த படமும் ஓன்று. இந்த வருடத்தில் அவருக்கு  ஒரு நல்லது நடந்து இருக்கிறது என்றால் அது ஒன்றே ஓன்று தான். அவரது அப்பாவின் அரசியல் ஆசையால் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை அறிந்து கொண்ட விஜய் அவரது அப்பாவை இனி தன்னுடைய தொழிலில் தலையிட தடை விதித்து விட்டாராம் இனி அவருக்கு நல்ல காலம் தான்.


9. கார்த்தி ;

போன வருடம் இவர் நடித்த அலெக்ஸ் பாண்டியன் & ஆல் இன் ஆள் அழகுராஜா போன்ற படங்களை கண்ட ரசிகர்கள் இவர் மேல் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். தொடக்கம் சரியாக அமையாவிட்டால் எப்படி இந்திய அணி தடால் என கிழே விழுந்து தோற்று போகிறதோ அதே போல இவரும் ஆண்டின் துவக்கத்தில் கிழே விழுந்தவர் வருட கடைசிவரை அடிமேல் அடி தான். ஆண்டின் இறுதியில் வெளி ஆகி இருந்த பிரியாணி ஏதோ ஒரு அளவுக்கு இவரை காப்பாற்றி விட்டது இது மட்டுமே ஒரே ஒரு ஆறுதல் போன வருடத்தில் இவருக்கு.


8. தனுஷ் ;

போன வருடம் ஒரு தயாரிப்பாளராக வெற்றி பெற்ற தனுஷ் ஒரு நடிகராக கோட்டை விட்டு விட்டார் என்றே கூற வேண்டும். அவருடைய மரியான்& நையாண்டி என்ற இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. ஹிந்தியில் அவர் நடித்த ரஞ்சனா என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தமிழில் மரியான் என்ற படத்தில் தனுஷ் பார்வதி இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது இருந்தும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நையாண்டி ரசிகர்களை நையாண்டி செய்துவிட்டு போனது தான் மிச்சம். மொத்தத்தில் போன வருடம் தனுஷிற்கு ராசியாக அமையவில்லை.


7. ஆர்யா ;

போன வருடம் ஆர்யாவிற்கு நல்லதும் கேட்டதும் சேர்ந்து அமைந்த ஆண்டாக உள்ளது. சேட்டை என்ற தோல்வி படத்தை கொடுத்து பின்பு ராஜாராணி என்ற ஹிட் படம் கொடுத்து பின்பு  தல அஜித்துடன் இவர் சேர்ந்து நடித்த ஆரம்பம் படமும் வசூலை குவிக்க அது முடிவதற்குள் செல்வராகவனின் இரண்டாம் உலகம் இவரை காலை வாரிவிட்டது. ஆர்யாவிற்கு 2013 சுமாரான ஆண்டாக அமைந்தது.


6. சிவகார்த்திகேயன் ;

2013ம் வருடம் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஆண்டாக அமைந்து விட்டது. இவரின் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்து படங்களும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்து உள்ளது. ஆடி கார் கூட சிவா வாங்கிட்டாராம் அப்புறம் என்ன அடிச்சு தூள் கிளப்புங்க சிவா. ஆனா முகத்தை மட்டும் அழுவுன வாழைபழம் மாதிரி வட்சுக்காதிங்க.


5. விஷால் ;

ஆண்டின் தொடக்கத்தில் சமர் என்ற சுமாரான படமும் நடுவில் பட்டத்துயானை என்ற மொக்கை படமும் கொடுத்து இறுதியில் பாண்டிய நாடு என்ற நல்ல படத்தை கொடுத்து தப்பித்து விட்டார். விரைவில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக பரிசிலனை செய்வதாக கிசுகிசு தலைவா படம் சந்தித்த பிரச்சனையை மறந்து இருப்பரோ?  வேணாம் விஷால் அரசியல் ஆசை இருந்தால் இப்போதே லப்பர் வைத்து அழித்து விட்டுடுங்க.


4. விஜய் சேதுபதி ;

தமிழ் சினிமாவின் அரத பழசான ட்ரெண்டை மாற்றி தமிழ் சினிமாவை புதிய தளத்திற்கு அழைத்து சென்றவர். இவரின் வருகைக்கு பின்பு புதிய பரிசிலனை முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதேபோன்று பல வித்தியாசமான கதைகளை நாம் விஜய் சேதுபதியிடம் எதிர்பார்ப்போமாக.


3. சூர்யா ;

கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிய சூர்யா 2013ம் வருடம் சிங்கம்2  படத்தின் மூலம் தன்னை வசூல் ராஜாவாக நிலைநிறுத்தி கொண்டார். கௌதம் மேனன் படத்தில் இருந்து விலகியது சூர்யாவிற்கு இழப்புதான். அவரை தமிழ் சினிமாவின் ஸ்டாராக உயர்த்தியது கௌதம் என்பதை மறுக்க முடியாது. சரி இந்த வருடம் சூர்யாவிற்கு ஓகே ஓகே.


2. அஜித் ;

தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்றால் மிக நல்லவனாகவும்  மக்களை காப்பாற்றும் சக்தியாகவும் வில்லனுடன் சண்டை போடவும் கதாநாயகியுடன் கட்டி உருளவும் என விதிமுறை எல்லாம் இருக்கிறது. அதை எல்லாம் செய்யாமல் ஒரு நடிகனால் வெற்றி பெற முடியும் என்றால் அது அஜித் என்ற நடிகனால் மட்டுமே முடியும். அனைத்து நடிகர்களுடன் இணைத்து நடித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. தன் படம் என்றால் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைக்காமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து நடிக்க அவரால் மட்டுமே முடியும். ஆரம்பம் படம் அஜித் என்ற நடிகனை தவிர்த்து வேறு யாரும் நடித்து இருந்தால் இந்தளவு வசூலை குவித்து இருக்குமா எனபது சந்தேகமே.


1. கமல்ஹாசன் ;

உலக நாயகனின் நடிப்பில் 2013ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளி வந்த படம் விஸ்வரூபம். இந்த படம் வெளியாவதற்கு எவ்ளோ சிரமங்களை சந்தித்தார் கமல். அத்தனை தடங்களையும் தாண்டி வசூலை குவித்தது இந்த படம். ஆனா ஆண்டின் இறுதியில் பட்டிமன்றம் நடத்தி அடுத்த படத்திற்கு சிக்கல் வராமல் பார்த்து கொண்டார் கமல். உலக நாயகன் மூளைனா சும்மாவா உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?


நன்றி