கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க கதையின் கருவுக்கு ஏற்றவாறு தற்போது 'ஆரம்பம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நன்றி ; சினிமா செய்திகள்
|
|
Tweet |
2 comments:
க.வீதியை முந்தி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்...! ஹிஹி... பார்ப்போம்...
வெளியாகிடுச்சா...
Post a Comment