ரொம்ப நாள் ஆச்சு சாமி படம் பார்த்து சிறு வயதில் சிவாஜி கணேசன் சிவனாக நடித்து டி வியில் பார்த்ததுண்டு அது போல இந்த படமும் சிவபெருமானின் திருவிளையாடலே.
படம் டைட்டிலே நவீன சரஸ்வதி சபதம் என்று இருந்ததால் இது சாமி படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடவுள் நாரதர் பார்வையில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சிவபெருமானாக சுப்பு பஞ்சு நாரதராக மனோபாலா. சாமி படம் என்றதும் பூஜை,நாட்டியம் அப்படி நினைச்சுறாதிங்க. இவரு ஹைடெக்கான சிவபெருமான் சிஸ்டம்,ஆப்பிள் போன், ஐ பேட் என கலக்கலா இருக்காரு.
கதை;
சிவபெருமானான சுப்பு நாரதரான மனோபாலாவிடம் இந்த உலகில் தான் விளையாண்டு ரொம்ப நாள் ஆகுது அதுனால ஒரு நான்கு பேர தேர்ந்து எடு அவர்களோடு நாம் ஒரு திருவிளையாடல் விளையாடுவோம் என கூறுகிறார். மனோபாலாவால் தேர்ந்து எடுக்கப்படும் அந்த நால்வர் நம்ம ஜெய், வி.டி.வி கணேஷ், சத்யன், அப்பறம் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் பஜ்ஜி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
முதல் பாதி முழுவதும் இந்த நால்வரின் அறிமுகம் அவர்களை பற்றிய முன் கதை என நல்லா ஜாலி யா நகைச்சுவையா போகுது. அதிலும் ஜெய் கதாநாயகி நிவேதா தாமஸ் மேல் கொள்ளும் காதல் அத பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சூப்பர். நிவேதா பார்க்கவும் நல்ல அழகா இருகாங்க. ஒரு ஜாடையில் பார்க்கும் போது கண்ணா லட்டு திண்ண ஆசையா விசாகா மாதிரி இருக்கு. படம் இடைவேளை வரை தான் நிவேதாவிற்கு வேலை அதுக்கு அப்பறம் படத்தின் இறுதியில்தான் வாய்ப்பு. எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல.
காதல் செட் ஆனதும் என்ன கல்யாணம் தானே. ஜெய் நிவேதா இருவருக்கும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் செய்வதாக நிச்சயம் ஆகிறது. ஜெய் தன் நண்பர்கள் நான்கு பேருக்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுக்க பாங்காங் செல்கிறார். அங்க தான் நம்ம சிவபெருமான் என்ன பண்ணுறாருன்னா ஹாலிவுட் படமான ப்ளூ லாகூன் பார்த்துட்டு அந்த படத்தில் வருவது போலவே இந்த நால்வரையும் ஒரு தீவில் சிக்க வைக்கிறார்.
அந்த சிக்கலில் இருந்து மீண்டு நால்வரும் ஊர் திரும்பி சென்றார்களா. ஜெய்யின் திருமணம் நடைபெற்றதா என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இந்த நவீன சரஸ்வதி சபதம்.
இரண்டாம் உலகம் பார்த்து வெறுத்து போய் இருந்த எனக்கு இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. ஜெய் வழக்கம் போல கலகல நடிப்பு அவரது அறிமுக கதை செம்ம காமெடி. இந்த ரூட்டில் பயணம் செய்தாலே போதும் ஜெய் சூப்பர் கலக்குங்க.
அடுத்து கதாநாயகி நிவேதா அழகு அவங்க வேலை என்னவோ அதை செய்து இருகாங்க.
படத்தில் ரொம்ப கவர்வது நம்ம கணேஷ் தான் அவரது கரகர குரலாகட்டும் பேச்சாகட்டும் செம்ம சிரிப்பு. அப்பறம் நம்ம சத்யன்,பஜ்ஜி எல்லாம் ஓகே குறை சொல்ல முடியல.
படத்தில் குறையே இல்லையா இருக்கு இடைவேளைக்கு பின்பு அந்த தீவில் இந்த நால்வரையே பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையா இருக்கு ப்ளூ லாகூன் ஆங்கில படத்தில் கெல்லி ப்ரொக் அந்த தீவில் ரொம்ப ப்ரீயா இருப்பாங்க பார்க்க கிளுகிளுப்பா இருந்துச்சு ஒரு பிட் கூட படத்தில் சேர்த்து இருப்பாங்க அந்த சீனுக்காகவே படம் நல்ல இருந்துச்சு எனக்கு. அது இந்த படத்தில் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் சென்சார்ல அவனுங்க பார்த்துட்டு கட் பண்ணிருவானுங்க பொறமை பிடிச்சவனுங்க.
படம் மொக்கைலாம் இல்ல கண்டிப்பா ஒரு தடவ பார்க்கலாம் நான் மறுபடி ஒரு தடவ பார்க்கணும். சுமாரான கூட்டம் படத்திற்கு 80 ரூபாய் தான் டிக்கெட்.
நவீன சரஸ்வதி சபதம் - மொக்கை இல்லை