Sunday, 28 July 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - அடக்கி வாசிக்கும் ஷாருக்


தமிழில் ர‌ஜினி, அ‌ஜித் இருவரும் தங்கள் படங்களின் ப்ரமோஷனில் கலந்து கொள்வதில்லை. விஜய், படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வார், நான்கைந்து பேட்டிகள் தருவார். மற்ற நடிகர்களும் அப்படியே.

ஆனால் இந்தியில் படத்துக்கு உழைத்த அளவுக்கு ப்ரமோஷனுக்கு மெனக்கெட வேண்டும். ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நடத்துவார்கள், பேட்டி தருவார்கள், நடனம் ஆடுவார்கள். தேவைப்பட்டால் குட்டிக்கரணம்கூட அடிப்பார்கள். அவ்வளவும் செய்தால்தான் நூறு இருநூறு கோடிகள் கிடைக்கும்.

ரா.ஒன் படத்தின் ப்ரமோஷனுக்காக பத்து கோடிகள் செலவளித்தார் ஷாருக். ப்ரமோஷன் ஓவர் டோஸாகி, பில்டப்புக்கு ஏற்ற சரக்கு இல்லையே என ப்ரமோஷன் பேக் ஃபயரானது. அந்த தவறை சென்னை எக்ஸ்பிரஸில் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஷாருக்.

சென்னை எக்ஸ்பிரஸின் ப்ரமோஷன் இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லையே என்ற கேள்விக்கு ஷாருக் தரப்பில் தரப்பட்டிருக்கும் விளக்கம்தான் இது. மேலும், ரா.ஒன் சயின்ஸ் பிக்சன். ரசிகர்கள் படம் பார்க்கும் முன் நிறைய சொல்லவும், விளக்கவும் வேண்டியிருந்தது.


சென்னை எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை ரோஹித் ஷெட்டி இயக்கம் என்றாலே படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெ‌ரிந்துவிடும், ப்ரமோஷனே தேவையில்லை என்கிறார்கள்.

இவ்வளவு சொன்னாலும் சில பிரமாண்ட அறிமுக நிகழ்ச்சிகள், பேட்டிகள் படத்தின் ‌ரிலீஸையொட்டி நடக்கயிருக்கிறது.


படத்தில் தீபிகா படுகோனுடன், மனோரமா உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 9 படம் திரைக்கு வருகிறது.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வெற்றி பெற வாழ்த்துவோம்...

திண்டுக்கல் தனபாலன் said...

பார்ப்போம்... எப்போது ரீலீஸ்...?