Thursday, 25 July 2013

கோச்சடையான் கதை முழு விவரம்


ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் இந்த வருடம் இறுதியில் ரிலீசாகிறது. பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங், மிக்சிங் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கிராபிக்ஸ் போன்ற பணிகள் சென்னை, மும்பை ஸ்டூடியோக்களில் முழுவீச்சில் நடக்கிறது.

‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் போன்று முதல் இந்திய அனிமேஷன் படமாக ‘கோச்சடையான்’ வருகிறது. ரூ.120 கோடி செலவில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி தந்தை மகன் என இரு வேடங்களில் வருகிறார். தந்தை ஜோடியாக ஷோபனாவும், மகன் ஜோடியாக தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோரும் உள்ளனர்.

இந்த படத்துக்கான கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ராஜீவ்மேனன் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவும் செய்துள்ளனர்.


சரித்திரகால பாணியில் தயாராகியுள்ளதாக கதை பற்றிய விவரம் கசிந்துள்ளது. தந்தை ரஜினி ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார். மக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பதே அவர் குறிக்கோள். இதற்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றுகிறார். செல்வத்தை மக்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார். பொற்கால ஆட்சி நடத்துவதாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

அப்போது மண்ணன் ரஜினிக்கு எதிராக சதித் திட்டங்கள் அரங்கேறுகின்றன. நெருக்கமான நண்பனாக இருக்கும் ஒருவன் தளபதிகளை கையில் போட்டுக் கொண்டு நாட்டை அபகரிக்கிறான். ரஜினியை நாட்டை விட்டே துரத்துகிறான். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைதான் இன்னொரு ரஜினி.

வீர தீர சாகச சண்டைகளில் மகன் ரஜினி தந்தையை மிஞ்சுகிறார். காட்டுக்குள் சிறு படையை உருவாக்குகிறார். அங்கிருந்து நாட்டுக்குள் ஊடுருவி சண்டையிடுவதும் நாட்டை மீட்பதுமே கதை. சுறா மீனுடன் ரஜினி மோதும் காட்சி ஹாலிவுட்டுக்கு இணையாக எடுக்கப்பட்டு உள்ளதாம்.


இப்படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்து பாராட்டியதாக டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

கோச்சடையான் படம் பிரமாதமாக வந்துள்ளது. சர்வதேச தரத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. ரஜினியும் நானும் படத்தை பார்த்தோம். படம் முடிந்ததும் சிறப்பாக இருப்பதாக ரஜினி பாராட்டினார். சவுந்தர்யா அனிமேஷன் படிப்பு படித்துள்ளார். கிராபிக்ஸ் வேலைகளும் தெரியும் எனவேதான் இவரிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. திறமையாக படத்தை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கதை சாதாரணம்...!

விமல் ராஜ் said...

ஹ்ம்ம்... ஆரம்பத்திலேயே கதையை போட்டு உடைத்து விட்டீர்களே !!!!!!

'பரிவை' சே.குமார் said...

சாதாரணக் கதைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும்தான் இவ்வளவு பில்டப்பா....

இப்படி கதையைப் போட்டு உடச்சிட்டிங்களே....

கார்த்திக் சரவணன் said...

இம்சை அரசன் கதையும் இதேபோல் தான்... ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் வித்தியாசம் காணலாம்...