Wednesday 30 October 2013

ஆரம்பம் - ஒரு முன்னோட்டம்


சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு. அ‌‌‌ஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பர் ட்ரெய்லர்.

பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவ‌ரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒருசோறு பதமாக வந்திருக்கிறது ஆரம்பம் படத்தின் ட்ரெய்லர்.

ட்ரெய்ல‌ரில் அ‌‌‌ஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

அ‌‌‌ஜீத்தின் பலவீனம் என்றால் அவ‌ரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். இதுவொரு கறுப்பு ச‌ரித்திரம் என்று (சிட்டிசனில்) நிறுத்தி நிதானித்து பேசுகையில், ச‌ரிதான் எப்போது பேசி முடிப்பார் என்றிருக்கும். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

முக்கியமான அம்சம் யுவனின் இசை. பில்லாவை ஞாபகப்படுத்தும் அந்த தீம் மியூஸிக் அட்டகாசம். ட்ரெய்ல‌ரிலேயே நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

நயன்தாரா, ராணா, அ‌‌‌ஜீத் என்று அனைவருமே துப்பாக்கியால் சரமா‌ரியாக சுடுகிறார்கள். ராணாவுக்கு கமாண்டோ மாதி‌ரியான பொறுப்பு போலிருக்கிறது. என்னப்பா... ஆ ஊன்னா கன்னை தூக்கிடுறீங்க என்கிற ஆர்யாவும் பெ‌ரிய சைஸ் துப்பாக்கியால் சுடுகிறார்.

ட்ரெய்ல‌ரின் இறுதியில் வரும், இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் த பிகினிங் என்ற அ‌‌‌ஜீத்தின் பன்சும், வால் கிளாக்கின் டிக் டிக் ஒலியெழுப்பியபடி அவர் நடந்து செல்வதும் கிளாஸ் என்டிங். இந்த காஸ்டிங், ஒளிப்பதிவு, இசை, ஆக்சன் இவற்றுடன் கொஞ்சமாக கதை இருந்தாலே படம் பட்டைய கிளப்பும் என்பது உறுதி.

Saturday 26 October 2013

சுட்ட கதை - திரை விமர்சனம்


ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த படம் காரணம் அந்த படத்தோட தலைப்பு. தலைவா படத்தின் வெளியிடு காரணமாக தள்ளி போயி பின்பு வேந்தர் மூவிஸால் கைவிடப்பட்ட படம். இந்த படத்தை வெளி கொண்டு வருவதற்குள் இந்த படத்தின் தயாரிப்பாளர் நொந்து நூலா ஆயிருப்பார்.

இது வழக்கமா வர போலீஸ் படம் இல்லை. ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் டா அப்படி பஞ்ச் வசனமெல்லாம் இல்லை. அதுக்காகவே இந்த படத்த எடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

படத்தின் கதை என்ன? கோரமலை என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம். அங்கு இருக்கும் காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேரும்  இரண்டு கான்ஸ்டபில் போலீஸ் அதிகாரிகள் பாலாஜி&வெங்கி.

அந்த கிராமத்தின் மலைவாழ் மக்கள் தலைவரான m.s பாஸ்கர் சுட்டு கொல்லப்பட அவரை சுட்டது யார் என கண்டறிவதே இந்த சுட்ட கதை.

படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் உயர் அதிகாரியாக நாசர், சயின்டிஸ்டாக ஜெயபிரகாஷ், ஜமினாக லட்சுமி ராமகிருஷ்ணன், டிவி தொகுப்பாளர் பாலாஜி அறிமுக நடிகர் வெங்கி என  எல்லாம் இருந்தும் திரைக்கதை அவ்ளோ சுவாரசியமாக இல்லாததால் படம் சப் என இருக்கிறது.

படமே ஒன்னே முக்கால் மணி நேரம் தான் அதை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம். படத்தின் ட்ரைலர் பார்த்த போது செம்ம காமெடியா
இருக்கும்ன்னு நினைத்தேன் ஆனா அங்கங்க மட்டுமே சிரிப்பு வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் அந்த மலை பிரதேசமெல்லாம் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு. இசை மேட்லி ப்ருஸ் பின்னணி இசை நல்ல இருக்கு m.s விஸ்வநாதன் குரலில் ஒரு பாடல் சூப்பர்.

படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயகுனர் சுபு. எல்லாம் நல்ல இருக்கு படத்தின் திரைக்கதை இன்னும் நல்ல பண்ணி இருந்தா படம் சூப்பர் ன்னு சொல்லலாம் என்ன பன்றது. அடுத்த தடவ இன்னும் பேட்டர ட்ரை பண்ணுங்க சுபு. 

தஞ்சை ஜூபிடரில் படம் பார்த்தேன் மொத்தமே 15 பேர் தான். டிக்கெட் விலை 60 மட்டுமே. 

சுட்ட கதை - வெடிக்கவில்லை 
 

Tuesday 22 October 2013

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை 18+


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

மூலிகைகள்

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.

உணவு முறைகள்

நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.

ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.

கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.

மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றினால் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு என்ற நோய்களுக்கே இடமின்றி வாழலாம்.

டாக்டர் எம்.சபாபதி

Sunday 13 October 2013

சாப்ளின் என்ற கோமாளி


சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது மனதை உற்சாகப்படுத்தும் நிகழ்வாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அந்த நாடோடி நம்முடைய வாழ்வை காலங்கள் கடந்தும் புனரமைப்பது ஆச்சரியமான நிகழ்வு.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு வேடத்தை எப்படி கமல் திரையில் கொண்டு வந்தார் என்பதை விளக்கியிருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் - குறிப்பாக குள்ள அப்புவை பேசும் போது சார்லி சாப்ளினின் த சர்க்கஸ் திரைப்படம்தான் நினைவுக்கு வரும்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் வீடு, சொந்தபந்தம் எதுவுமில்லாத நாடோடி சாப்ளின். தெருவோர கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்iயில், பிக்பாக்கெட்காரன் தப்பிப்பதற்காக தான் அடித்த பர்ஸை சாப்ளினின் பாக்கெட்டில் வைக்க, பிரச்சனை ஆரம்பமாகும். சாப்ளினின் பாக்கெட்டில் தான் வைத்த பர்ஸை அவன் எடுக்க முனைகையில் போலீஸில் மாட்டிக் கொள்வான். பர்ஸின் திடீர் சொந்தக்காரர் ஆவார் சாப்ளின். இப்போது பர்ஸின் நிஜ சொந்தக்காரர் வர சாப்ளின் திருடனாகிவிடுவார். அதன் பிறகு போலீசுக்கும், சாப்ளினுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் சேஸிங் அவரை கொண்டு சேர்ப்பது ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு.

எதிர்பாராத நிகழ்வுகள் ஒரு கதையின் தொடக்கமாக மாறும் விசித்திரத்தை சாப்ளினின் படங்களில் காணலாம். பிக்பாக்கெட்காரன் இயல்பாக செய்யும் திருட்டுத்தனம் சாப்ளினை சர்க்கஸ் கூடாரத்துக்கு அழைத்து வந்து அவரையொரு சர்க்கஸ் கோமாளியாக மாற்றி, ஒரு பெண்ணை காதலிக்கவும் வைக்கும். சிட்டி லைட்ஸ் படத்தை எடுத்துக் கொண்டால், போலீஸுக்கு பயந்து நிற்கின்ற காரில் ஏறி காரின் அந்தப்பக்கம் உள்ள பிளாட்பாரத்தில் இறங்குவார் சாப்ளின். கார் கதவு திறக்கப்படும் சத்தத்தை வைத்து கண் தெரியாத பூ விற்கும் இளம் பெண் அவரை ஒரு பணக்காரர் என்று தவறாக புரிந்து கொள்வாள். இந்த புரிதல்தான் படத்தை முன்னகர்த்தி செல்லும். இதுபோல் பல உதாரணங்கள்.


படத்தின் ஆரம்பம் மட்டுமின்றி கதை நகரும் ஒவ்வொரு பகுதியைம் இப்படியான அசந்தர்ப்பமான சூழல்களை வைத்தே சாப்ளின் பின்னுகிறார். சாப்ளின் தப்பிக்க நுழையும் சர்க்கசானது திவாலாகும் நிலையில் உள்ளது. கோமாளிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடிவதில்லை. எதிர்பாராமல் உள்ளே நுழையும் சாப்ளின் போலீஸிடமிருந்து தப்பிக்க செய்யும் சேஷ்டைகள் அவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அந்த சர்க்கஸின் கோமாளியாக அவர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். அவரால் சர்க்கஸ் களைகட்டுகிறது.

ஆனாலும், குறைந்த சம்பளத்தில் அடிமட்ட வேலைக்காரராக அவர் நடத்தப்படுகிறார். இந்த சர்க்கஸே அவரால்தான் களைகட்டுகிறது என்று சர்க்கஸ் முதலாளியின் (வளர்ப்பு) மகள் அவருக்கு புரிய வைக்கிறாள். அவள் மீது சாப்ளினுக்கு காதல் வருகிறது. அவளுக்கு பரிசளிக்க மோதிரம் வாங்குகிறார். இந்நிலையில் சர்க்கஸுக்கு புதிதாக வரும் கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரரின் மீது சர்க்கஸ் முதலாளியின் மகளுக்கு காதல் வருகிறது. பொறாமையில் சாப்ளினும் கயிறு மேல் நடக்கும் வித்தையை முயற்சி செய்கிறார். ஒருமுறை அந்த சாகஸக்காரன் காணாமல் போகையில் கயிறு மேல் நடக்கிற வித்தையை செய்யும் சந்தர்ப்பம் சாப்ளினுக்கு கிடைக்கிறது. இந்தப் பகுதியை சாப்ளினின் அதியற்புத திறமையின் உதாரணமாகச் சொல்லலாம்.

கயிறு வித்தையின் தொடர்ச்சி சர்க்கஸ் முதலாளியுடனான கைகலப்பில் முடிய, சர்க்கஸிலிருந்து சாப்ளின் வெளியேற்றப்படுகிறார்.


தனது வளர்ப்பு தந்தையின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் சாப்ளினின் ஒருதலை காதலியும் உடன் வருகிறாள். இறுதியில் அவளுக்கும், அவள் காதலித்த அந்த சாகஸக்காரனுக்கும் சாப்ளின் திருமணம் செய்து வைக்கிறார். புது ஜோடியுடன் சர்க்கஸ் வேறு இடத்துக்கு கிளம்புகிறது. சாப்ளின் முதல் காட்சியில் தோன்றிய அதே நாடோடியாக சர்க்கஸ் செல்லும் திசைக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

அபூர்வ சகோதரர்களுக்கு முன்பே கமல்ஹாசன் த சர்க்கஸை பார்த்திருப்பார். என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒரே படம் சாப்ளினுடையது என்று அவர் முன்பு சொன்னதாக ஞாபகம். சாப்ளினால் இன்ஸ்பயர் ஆகாமலிருந்தால்தான் ஆச்சரியம். சாப்ளினேகூட த சர்க்கஸ் திரைப்படத்தை அவரின் விருப்பத்துக்குரிய பிரெஞ்ச் நகைச்சவை நடிகர் மேக்ஸ் லிண்டரின் த கிங் ஆஃப் த சர்க்கஸ் திரைப்படத்தின் பாதிப்பில் எடுத்ததாக கூறுகிறார்கள்.

த சர்க்கஸில் மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் சாப்ளினின் டைமிங். அவர் மட்டுமில்லை, படத்தில் வரும் சிங்கம், குரங்குகள், குதிரை என்று விலங்குகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. போலீஸுக்குப் பயந்து தெருவோர கலைநிகழ்ச்சிக்குள் சாப்ளின் காட்டும் வித்தைகள் சிரிப்பை வரவழைப்பவை. முக்கியமாக கண்ணாடிகளால் சூழ்ந்த அரங்கத்துக்குள் எப்படி கேமரா தெரியாமல் படமாக்கினார்கள்? த சர்க்கஸ் வெளியானது 1928 ல் என்பதை இங்கு நினைவுகூர்வது சாலப்பொருத்தம்.

சிங்கத்தின் கூண்டுக்குள் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் போது நடக்கும் சம்பவங்களை இன்றைய தொழில்நுட்ப யுகத்தில்கூட எடுக்க முடியுமா? கயிறு மேல் சாப்ளின் நடக்கையில் குரங்குகள் அவர் உடையை அவிழ்த்து, மூக்கை கடித்து, வாயில் வாலைவிட்டு... அத்தனை குரங்கு குறும்புக்கு நடுவிலும் சாப்ளின் கயிற்றில் தள்ளாடிக் கொண்டே பேலன்ஸ் செய்வது... சாப்ளினால் மட்டுமே ஆகக்கூடிய சாகஸங்கள்.


படங்கள் பேச ஆரம்பித்த பிறகும் சாப்ளின் மௌனப் படங்கள் எடுப்பதையே விரும்பினார். வசனம் படத்தின் கற்பனையை, பன்முகத்தன்மையை அழித்து ஒருபடித்தானதாக்கிவிடும் என்று அவர் நம்பினார். அவரின் படங்களில் எழுத்துக்களில் விளக்கம் முக்கியமான தருணங்களில் மட்டுமே வரும். பெரும்பாலும் தத்துவ தெறிப்பாக அல்லது சூழலை விளக்கும்விதமாக அவை இருக்கும். சர்க்கஸ் முதலாளி, சாப்ளினால்தான் சர்க்கஸ் களைகட்டுகிறது என்ற விவரம் சாப்ளினுக்கு தெரிய கூடாது என்பதில் குறியாக இருப்பார். அது தெரியாத அளவுக்கு அவரிடம் அதிகமாக வேலை வாங்கு என்று தனது ஆளிடமும் அறிவுறுத்துவார். பண்ணையார் யுகத்திலிருந்து ஐடி யுகம்வரை இதுதான் நடக்கிறது. தனக்கு கீழ் உள்ளவர்களை அடக்கி ஆள மேலிருப்பவர்கள் செய்யும் தந்திரம் இது. அவர்களால் எதுவுமே நடக்கவில்லை, முதலாளிகள்தான் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு வேலை தருகிறார்கள் என்ற தோற்றம் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரத்துக்கும் தேவைப்படுகிறது.

கலை என்பது ஆற்றொழுக்காக மேலெழுவது. அசந்தர்ப்பங்களால் கட்டமைக்கப்பட்டது. திட்டமிட்ட வழியில் அதனை சாத்தியமாக்குவது இயலாத காரியம். தொழில்முறை சர்க்கஸ் கோமாளிகளின் திட்டமிட்ட வித்தைகளை சாப்ளினால் கற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருமுறையும் தவறிவிடுகிறார். ஆனால் அந்த சட்டகத்தை தாண்டி அவர் செய்யும் கோமாளித்தனங்கள்தான் பார்வையாளர்களை கவர்கிறது. அவர்களை தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது. கலை குறித்த இந்த நுண்ணுணர்வு படத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.

படத்தின் கதையை எழுதி சாப்ளினே இயக்கி, இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு எப்படி இசையமைப்பது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம். சாப்ளின் தனது படங்களில் நகைச்சுவையின் நடுவே வாழ்வின் சாராம்சத்தை, அதன் வலியை, மகத்துவத்தை, கொண்டாட்டத்தை பொதிந்து தருகிறார். நாம் அந்த சாராம்சத்தை விடுத்து கோமாளித்தனத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். சாப்ளினை இன்றும் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பெரும்பாலானவர்களின் மனதில் தங்கிப் போனது காலக்கொடுமை.

சாப்ளின் கோமாளிதான், சாகஸக்காரர்தான். அதேநேரம் அந்த கோமாளி தோற்றத்தில் அவர் சுட்டிக் காட்டுவது - த சர்க்கஸ் படத்தின் இறுதிக் காட்சியைப் போல் - எப்போதும் கோமாளித்தனத்துக்கு எதிர்திசையைதான். அதனை புரிந்து கொள்ளாமல் சாப்ளினின் படத்தைப் பார்ப்பது, குருடன் யானையை தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது.

Wednesday 9 October 2013

எறும்பின் தன்னம்பிக்கை

                                   

தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர்கள். இது உங்களுக்கானது முழுவதையும் படியுங்கள்.

இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.

கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.

இது ஒரு மீள் பதிவு..

Sunday 6 October 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்! 18+


டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.

Thursday 3 October 2013

சச்சினின் 200வது டெஸ்டை வைத்து அரசியலா? வியாபாரமா?


நியாயமாக தென் ஆப்பிரிக்காவில்தான் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் பிரவேசம் நடந்திருக்கவேண்டும். ஆனால் இடையில் இந்தியாவில் அதனை நடத்த மேற்கிந்திய தீவுகளை அவசரம் அவசரமாக வரவழைத்து 2 டெஸ்ட் போட்டித் தொடரை பிசிசிஐ நடத்துவதில் எங்கோ இடிக்கிறது.

சச்சினின் 200 வது டெஸ்ட் என்ற ஒரு பிம்பத்தை வத்து கல்லா கட்ட நினைக்கிறதோ பிசிசிஐ என்ற ஐயம் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்தால் அதனால் பிசிசிஐ.-யிற்கு என்ன லாபம் இருக்க முடியும் என்பதும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விவகாரம்தான்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்க தலைவராக ஹரூன் லோர்கட் நியமிக்கப்பட்டதை பிசிசிஐ பகிரங்கமாக எதிர்த்தது. அவர் ஏதோ 2011 உலகக்கோப்பை நடத்தப்பட்ட விதம் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தாராம்! பிசிசிஐ-யிற்குத்தான் விமர்சனம் என்றாலே அலர்ஜியாயிற்றே?

ஐசிசி.யில் எதிர்கால பயணத்திட்டம் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகும். அதனை நாடுகளின் வாரியங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கான ஷெட்யூல் ரொம்ப கச்சடாவாக இருக்கிறது என்று பிசிசிஐ. ஆட்சேபணை தெரிவித்தது. அதனால் ஒரு நல்ல தொடர் குறைக்கப்பட்டுள்ளது.


ஹரூன் லோர்கட்டிற்கும், பிசிசிஐ.யிற்கும் இடையே இருக்கும் சொந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை பகடைக்காயாக வாரியம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

200டெஸ்ட் ஆடி விட்டு சச்சின் ஓய்வு பெறலாம் என்பது போன்ற தேவையற்ற செய்திகளை அசட்டு ஊடகங்கள் பரப்பிவந்ததும் பிசிசிஐ-யின் இந்த தந்திரோபாயத்திற்கு மறைமுகமாக உதவி புரிந்தது.

சொந்த நாட்டில், சொந்த மண்ணில் சச்சின் 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவேண்டும் என்பதெல்லாம் சச்சின் டெண்டுல்கருக்கே பிடித்தமான விஷயமா என்பதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஒரு கிரிக்கெட் வீரராக எங்கு வேண்டுமானாலும் ஆடும் மனோ பலம் படைத்தவர்தான் சச்சின். எனவே சச்சின் கூறி இதனை பிசிசிஐ செய்திருக்கும் என்பதில் நியாயமில்லை.

ஏனெனில் சச்சின் டெண்டுல்கர்...அடுத்த ஆண்டு லார்ட்ஸில் ஆடுவார் என்று ரவி சாஸ்திரி கூறியதையத்து சச்சின் ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனவே சச்சினின் கடைசி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவேண்டும், அவரது சொந்த மண்ணில் அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிசிசிஐ செயல்பட்டிருக்குமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.


பிசிசிஐ-யிடம் பெரும் ஸ்பான்ஸர்கள் உள்ளனர். அவர்களிடம் இந்த ஆண்டு ஒன்றும் இல்லை என்று கூறுவது எவ்வளவு கடினமோ அதேபோல்தான் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கும்.

அவர்களும் ஏன் இதனை முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கேட்க நியாயம் உண்டு.

ஒரு வீரரை முன் வைத்து ஒரு நாடு எதிர்கால பயணத்திட்டத்தை மாற்றுவது கூடாது. ஒருவரின் லாபத்திற்காக அடுத்த கிரிக்கெட் வாரியத்தை நஷ்டமடையச் செய்வது வணிக அறம் அல்ல.

சொந்த விறுப்பு வெறுப்புகள் கிரிக்கெட்டில் தலைகாட்டுவது சரியல்ல. ஏன் மேற்கிந்திய தீவுகள் திடீரென அழைக்கப்பட்டது என்பதை பிசிசிஐ வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான்! பிசிசிஐ இதில் மௌனம் சாதிப்பது சச்சின் டெண்டுல்கர், தோனி கூறியதால்தான் மேற்கிந்திய தீவுகள் அழைக்கப்பட்டது என்ற முடிவுக்கு தேவையில்லாமல் அனைவரையும் நகர்த்துகிறது.

பிசிசிஐ வெளிப்படையாக பதில் அளிக்குமா?

Wednesday 2 October 2013

தல, தளபதியுடன் மோதும் வைகைப்புயல்!


வருகிற பொங்கலுக்கு விஜய், அஜித், கார்த்தியுடன் மோதவிருக்கிறார் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவேளைக்குப் பின் நமது வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் ஜகஜல புஜபல தெனாலிராமன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, இப்படம் டிராப் ஆகிவிட்டது என கொலிவுட்டில் தண்டோரா அடித்தனர்.

ஆனால் நமது வைகைப்புயல் தட்டி முட்டி படத்தை 60 சதவீதம் முடித்து விட்டாராம். அதுமட்டுமின்றி தற்போது ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியிட்டுள்ளார்.

அது வேறொன்றுமில்லை, இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டம் தீட்டி வருகின்றனராம்.

ஏற்கெனவே வருகிற பொங்கல் ஜல்லிக்கட்டில் அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய பபடங்கள் களமிறங்கவுள்ளது.

தற்போது வடிவேலுவும் இந்த ரேசில் கலந்து கொள்ளப்போகிறாராம்.

இப்படத்தை போட்டா போட்டி புகழ் யுவராஜ் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

                                                                                                                                 அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்;

இந்த உலகம் அன்பு என்னும் அச்சாணியின் மூலமே இயங்குவதாக நாம் அனைவரும் படித்து இருப்போம். ஆனால் இப்பொழுது நடக்கும் உலக நிகழ்வுகளை நாம் பார்க்கும் பொழுது அதெல்லாம் வெறும் பேச்சு மட்டுமே. அன்பை மட்டுமே போதித்த புத்தனை  வணங்கும்  நாட்டில் தான் லட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்க பட்டார்கள்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க அந்த நாட்டை அடிமை படுத்தும் செயல்களில் இறங்குகிறது. முடியவில்லை என்றால் அந்த நாட்டிற்கு எந்த வகையில் தொல்லை கொடுக்க முடியுமோ என்னென்ன குழப்பங்கள் விளை விக்க முடியுமோ அனைத்தையும் செய்து தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்கிறது.

இவ்வுலகம் எங்கும் சுயநலம் மட்டுமே சூழ்ந்துள்ளது. இவைகளை களைய நாம் என்ன செய்ய போகின்றோம். நம் வருங்கால தலை முறையினற்கு என்ன விட்டு செல்ல போகின்றோம். சக மனிதனை மனிதனாய் மதிக்கும் நிலை எப்பொழுது வரும்.

ஏன் இந்த நிலை? கணவன் மனைவிகுள் பிரச்னை,அண்ணன் தம்பிக்குள் தகராறு, என்று ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே இந்த காலத்தில் ஒற்றுமை இல்லை எனில் நாம் எப்படி இந்த உலகத்தில் அதை எதிர் பார்க்க முடியும்.

இவை அனைத்தும் மாற என்ன வழி?அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்;

எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை, ஆதரிக்கவில்லை.
பிறரிடம் அன்பு செலுத்துங்கள். நம்மை சார்ந்தவர்களுக்கும், நமது சந்ததியினற்கும் கற்று கொடுங்கள்.

உ‌ங்க‌ள் குடும்பத்தாரிடம் க‌ண்டி‌ப்பை ‌விட அ‌திகமாக அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்.

அ‌ன்பை எ‌ந்த வ‌ற்புறு‌த்தலு‌ம் இ‌ல்லாம‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள். மற்றவர்களிடம் இரு‌ந்து வரு‌ம் அ‌ன்பை முழுதாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அவ‌ர்க‌ள் ‌மீது ‌நீ‌ங்க‌ள் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ன்பை அ‌வ்வ‌ப்போது வா‌ர்‌‌த்தைகளா‌ல், செயலா‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம். எனவே இந்த சமுகத்தில் நீ‌ங்களு‌ம் அ‌ன்பு எனு‌ம் ஒரு வ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ள் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

எதையு‌ம் அ‌ன்பாக‌க் கூறுவத‌ன் மூல‌ம் ந‌ல்ல‌ப் பலனை அடையலா‌ம். அதே‌ப்போல அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் தவறுகளை க‌ண்டி‌க்காம‌ல், எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள். ‌மீ‌ண்டு‌ம் தவறு செ‌ய்யாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை‌யு‌ம் அ‌ன்புட‌ன் எ‌ச்ச‌ரியு‌ங்க‌ள்.

நாம் நம்மை மாற்றி கொள்வோம். இந்த உலகம் தானாய் மாறும்.

இது ஒரு மீள் பதிவு..

Tuesday 1 October 2013

எம்.என்.நம்பியார்- நேசிக்க வைத்த வில்லன்!


எம்.என்.நம்பியார்… தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த நடிகர்களில் ஒருவர். கையை பிசைந்து, கழுத்தை சிறுத்து, கட்டை குரலில் அவர் நாயகியை மிரட்டத் தொடங்கும்போது திரையரங்கு சூடேற ஆரம்பிக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆற்றல்மிகு ஹீரோவுக்கு இறுதிவரை ஈடுகொடுத்த ஒரே வில்லன்.

எம்.என்.நம்பியார் எ‌ன்ற மன்சரி நாரயண நம்பியார் பிறந்தது கேரளாவில் உள்ள கண்ணூர். வருடம், 1919 மார்ச் 7. சின்ன வயதிலேயே அவரது மனதில் நடிப்பு ஆசை துளிர்விடத் தொடங்கியது. தனது 13வது வயதில் நவாப் ராஜமாணிக்கம் குருப்பில் சேர்ந்தார் நம்பியார். அன்றிலிருந்து நடிப்பே அவரது வாழ்க்கையின் எல்லாமுமாக மாறியது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பியார் என்ற பெயர் உருவாக்கும் பிம்பம் அனைவரும் அறிந்தது. ஏழைகளின் விரோதி, காமுகன், பணத்தாசை பிடித்தவர் இன்னும் தவிர்க்க வேண்டிய அனைத்து குணங்களின் கருவறை அவர். திரை உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைபிடித்தவர் அவர் என்பது ஆச்சரியமான உண்மை.

நம்பியார் புலால் உண்பதில்லை, புறணி பேசுவதில்லை, ஆடம்பர செலவுகளை ஒருபோதும் விரும்பியதில்லை. பாய்ஸ் நாடக கம்பெனியில் பணிபுரிந்தபோது தனக்கு சம்பளமாக கிடைத்த 3 ரூபாயில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயை தனது தாய்க்கு தவறாமல் அனுப்பி வைத்தவர் அவர்.

நம்பியாரின் திரைப்பிரவேசம் 1935ல் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான பக்த ராமதாஸ் படத்தில் நிகழ்ந்தது. வில்லனாக அறிமுகமான அவர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தும் இறுதிவரை வில்லன் முத்திரையுடனே அறியப்பட்டார்.

ஏறக்குறைய 1,000 படங்கள் நடித்திருக்கிறார் ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இந்த பழம்பெரும் நடிகர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களுடன் ஆங்கில படமொன்றும் இவரது கணக்கில் வருகிறது. 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் படத்தில் சிறிய வேடமொன்றில் இவர் நடித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டபோது அதில் நம்பியாரும் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரையை பங்கு போட்டிருக்கிறார் நம்பியார். அவருக்கு பிடித்தமான நடிகர் எம்.ஆர்.ராதா என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். பிடித்த நடிகை சாவித்திரி.

அனைவரும் அறிந்த நடிகராக இருந்தும் நடிகன் என்ற எல்லை தாண்டி தனது பிரபலத்தை விலை பேச அவர் ஒருபோதும் முயன்றதில்லை என்பது பலரிடம் காண முடியாத அரிய குணம்.


படத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் அவரது நாடக ஆசை தணியவில்லை. சொந்தமாக நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அந்த நாடக கம்பெனி கவியின் கனவு, கல்யாண சூப்பர் மார்க்கெட் ஆகிய இரு நாடகங்களை அரங்கேற்றியது. அதில் கல்யாண சூப்பர் மார்க்கெட் நகைச்சுவை நாடகம் என்பது நம்பியாரின் ரசனை அவரது திரை பிம்பத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.

நம்பியாரின் ஆன்மீக முகம் பிரசித்தமானது. ஐய்யப்பனின் சீரிய பக்தர். 65 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்தவர். குருசாமிகளுக்கெல்லாம் மேலான மகா குருசாமி. அவர் மாலை அணிவித்து சபரிமலை அழைத்து சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். தனது ஆன்மீக செயல்பாட்டை பொது வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதமாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதில்லை.

நம்பியார் இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கல்யாணி, கவிதா என்ற அந்தப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. திகம்பரசாமியார் என்ற படத்தில் பதினொரு வேடங்களில் அவர் நடித்தது பலரும் அறியாத ஆச்சரியம்.

உடம்பை பேணுவதில் நம்பியாருக்கு நிகராக சொல்ல யாருமில்லை. வயதான காலத்திலும் உடம்பை கட்டுக் கோப்பாக பேணியவர் அவர். அதன் முக்கியத்துவத்தை இளையவர்களுக்கு பலமுறை போதித்தும் இருக்கிறார். தான் நடித்த படங்களில் நம்பியாருக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். எம்.ஜி.ஆருடன் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன், சிவாஜியுடன் நடித்ததில் அம்பிகாபதி, ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா, ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீ‌ரியலிலும் நடித்தார்.

எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது நடிகராக நம்பியாரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள அதிகம் இல்லை என்றாலும், குரூரம் தெறிக்காத அவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். வில்லனாக நடித்தே தமிழ் மனங்களின் நேசத்துக்குரியவரானவர் அவர். நடிகர்களின் திரை பிம்பத்தை அப்படியே நம்பும் பாமர ரசனையை தனது நெறி பிறழாத வாழ்க்கையால் முறித்துப் போட்டவர்.

எப்படிப் பார்த்தாலும் நம்பியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்.