Thursday 27 December 2012

எனக்கு பிடித்த டாப் 10 - 2012

வணக்கம் நண்பர்களே இந்த ஆண்டு முடிய போகுது புது வருஷம் பிறக்குது எல்லாரும் கடந்த வருஷம் பிடிச்ச நடிகர் நடிகை பாடல் படம் டாப் 10 போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் நம்ம பங்குக்கு நாமளும் வரிசை படுத்தலாம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

இந்த வருடம் நான் பார்த்த படங்கள்:
1.நண்பன்
2.வேட்டை
3.மெரினா
4.தோனி
5.அமபுலி 3d
6.காதலில் சொதப்புவது எப்படி
7.அரவான்
8.கழுகு
9.ஒரு கல் ஒரு கண்ணாடி
10.லீலை
11.வழக்கு எண் 18\19
12.கலகலப்பு
13.தடையற தாக்க
14.சகுனி
15.நான் ஈ
16.பில்லா 2
17.மதுபான கடை
18.அட்டகத்தி
19.நான்
20.முகமூடி
21.சுந்தர பாண்டியன்
22.சாட்டை;
23.தாண்டவம்
24.இங்கிலீஷ் விங்க்ளிஷ்
25.மாற்றான்
26.பிட்சா
27.போடா போடி
28.துப்பாக்கி
29.நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்
30.நீர்பறவை
31.கும்கி
32.நீதானே என் பொன்வசந்தம்


இத்தனை படம் போன வருஷம் நான் பார்த்தது இதுல இருந்து டாப் 10 எனக்கு பிடிச்ச வரிசைல போட்டுருக்கேன் சரியான்னு சொல்லுங்க

10.நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்;
     
தமிழ் சினிமாவின் புதிய முயற்சி சும்மா சொல்ல கூடாது சூப்பர். பெரிய பட்ஜெட் படெமெல்லம் மண்ணை கவ்வ லொவ் பட்ஜெட்ல எடுத்து எல்லார்க்கும் லாபம்  கொடுத்த படம்.படம் அங்க அங்க போர் அடிச்சாலும் வித்தியாசமான முயற்சி பாராட்டியே ஆகணும்.

9.தோனி

தோனி படம் வெற்றி படமா தோல்வி படமான்னு தெரில்ல. ஆனா பார்த்த எனக்கு பிடிச்சு இருந்துச்சு. பிரகாஷ் ராஜ் நடிப்ப பத்தி சொல்ல வேணாம் பின்னி இருப்பாரு குடும்ப தலைவரா. இசைஞானி சூப்பரா பண்ணி இருப்பாரு. வாங்கும் பணத்துக்கும் பாட்டு தான் ரொம்ப நாளா என் ரிங்க் டோன இருந்துச்சு.

 8.சாட்டை;

இந்த படமும் நல்ல பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்ற படம் வசூல்ரீதியா வெற்றி படமான்னு தெரில்ல. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. சமுத்திர கனி நடிப்ப விட தம்பி ராமையா என்னைய கவர்ந்தார். அரசு பள்ளிலையும் தரமான கல்வி கொடுக்க முடியும்னு வலியுறுத்தும் படம்.

7.சுந்தர பாண்டியன்;

நம்ம சசிகுமார் நடிச்ச சூப்பர் ஹிட் படம். நல்ல பொழுதுபோக்கு நெறஞ்ச படம்.பரோட்டா சூரி காமெடி ரொம்ப நல்ல இருந்துச்சு. நம்ம லட்சுமி மேனேன் அறிமுகம். எப்பவும் போல நட்ப பத்தி கடைசில சசிகுமார் பேசும் வசனம் நச் ரகம். வாழ்த்துக்கள் சசி சார்.

6.துப்பாக்கி;

விஜய்க்கு உண்மையான வெற்றி கிடைத்த படம். காமெடி பாடல் சண்டை அனைத்தும் சரிசமமாக கலந்து கட்டி சூப்பர் மசாலா என்டேர்டேய்னர். மொத்தத்தில் இந்த வருடம் அனைத்து முன்னணி கதாநாயகர்களும் மண்ணை கவ்வ 2 சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களின் சிம்மாசனத்தில் இடம் பிடித்து விட்டார் தளபதி.

5. ஒரு கல் ஒரு கண்ணாடி;

அரசியல் உலக வாரிசு கலை உலகில் அறிமுகமான படம். உதயநிதி அடிதடி பண்ணி நம்ம எல்லாரையும் சாவ அடிக்காம. அமைதியா தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருப்பாப்ல. அதுக்கே அவர பாராட்டனும். நம்ம சந்தானம் போன வருஷம் காமெடி ல கலக்குன படம். நம்ம மொழு மொழு ஹன்சிகா படம் புல்லா ஓடுன படம். வசூல் ரீதியா பெரிய வெற்றி அடைஞ்ச படம். எல்லாருக்கும் பிடித்த படமாக அமைஞ்சது.

4.பிட்சா;

போன வருஷம் இவருக்கு தான் நல்ல வருடமா அமைஞ்சு இருந்துச்சு. இவரு வில்லனா பண்ணுன சுந்தர பாண்டியன் ஹிட் அடிக்க புதிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அசத்தலான இயக்கம் மூலம் வெளி வந்த இந்த படம் பட்டைய கிளப்பியது.வித்தியாசமான திரைகதை திரிலிங்க் சவுண்ட் எபெக்ட் எல்லாம் சூப்பரா இருந்துச்சு. இது மாறி அவரு வித்தியாசமா ட்ரை பண்ணனும்னு வாழ்த்துவோம்.

3.வழக்கு எண் 18\19

பெரிய எதிர்பார்போடு வந்த படம். ஒரு படம் வந்த உடனே நம்ம பதி உலகத்துள்ள உள்ள எல்லாம் போட்டு கிழிகிழி ன்னு கிழிப்பாங்க. அதும் விஜய் படம்னா அல்வா தான். ஆனா அந்த அளவு கிழியாம பாராட்டு பெற்ற படம். நம்ம பதிவர்கள் அதிகமா பாராட்டுன படம் இதுவா தான் இருக்கும்னு நான் நெனைக்குறேன். படம் கடைசில நானே அழுதுட்டேன். புதுமுகம்கல்ட்ட இந்த அளவு நடிப்ப வர வைக்க நம்ம பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குனர்களால் தான் முடியும்.

2.நண்பன்;

மிக பெரிய எதிர்பார்போடு வந்த படம். இந்த மாறி படங்களா தேர்தெடுத்து நடிச்சா நம்ம தளபதி என்னைக்குமே தளபதி தான். மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம். இவங்களுக்கு சம்பளம் கொடுத்தே 80% பட்ஜெட் வந்து இருக்கும். அனைவர்க்கும் பிடித்த படம். பெரிய நடிகர்கல்ன பஞ்ச் பேசி 50 பேர அடிக்கணும்குற ட்ரென்ட் மாறி இப்படியும் நடிக்கலானு நம்மள சந்தோஷ படுதுன படம். இது மாறி படங்கள் வரணும்குறது தான் நம்ம ஆசை.all is well.

1.நான் ஈ

என்ன படம் யா போன வருடம் சூப்பர் டூப்பேர் மாஸ் பம்பர் பிக்கேஸ்ட் ஹிட். அப்டின்னா அது இந்த படம் தான்யா. ஒரு ஈ ய வச்சுகிட்டு சும்மா பூந்து விளையாடி இருபாரு நம்ம ராஜமௌலிகாரு. அவருக்கு என்னோட சல்யுட். நம்ம திலிப் வில்லாத்தனதுல மிரட்டி இருப்பாரு. நம்ம அழகுசிலை சமந்தா பார்த்துகிட்டே இருக்கலாம். நாணி அவரும் நல்ல பண்ணி இருபாரு. சந்தானம் 2 சின் வந்தாலும் பின்னிருபாறு காமெடி ல இதை எல்லாத்தையும் விட ஒரு ஈ இவ்ளோ அருமையா காட்டி இருபாங்க. மொத்ததுல கலக்கலான படம்.

  மற்றும் வசூல் ரீதியா  வெற்றி பெற்ற படங்களான அட்டகத்தி,தடையற தாக்க, கும்கி,கலகலப்பு,நான், போன்ற படங்கள் டாப் 10ல் இடம் இல்லாத காரணத்தால் இடம் பெறவில்லை. இருப்பினும் இவையும் வரவேற்பு பெற்ற படங்களே.நன்றி மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

Tuesday 25 December 2012

கும்கி திரை விமர்சனம்

பாகனின் காதலை, கும்கி யானையை மையமாக வைத்து பசுமை பொங்க சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.கேரளா வனக்காடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் கும்கி படம் முழுவதும் ஒரே பசுமையாக தெரிகிறது.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு, தன் தாத்தாவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.யானைக்கு கொடுக்கப்பட்ட கதையை வைத்தே கதாநாயகனை இப்படத்தில் காண்பித்திருக்கிறார் பிரபு சாலமன்.அனாதையான விக்ரம்பிரபு, தன் மாமாவான தம்பி ராமையா மற்றும் வளர்க்கும் யானை மாணிக்கத்துடன் ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் கலந்து கொண்டு பிழைத்து வருகிறார்.கொமெடியாக காட்டப்பட்டுள்ள மாமா தம்பி ராமையாவின் பேச்சைக்கேட்டு யானை ஒரு கடையில் ஊருகாய் பாக்கெட்டை திருட இதை விக்ரம் பிரபு பார்த்து விடுகிறார்.
                         
                                             
இதனால் கோபித்துக்கொண்டு நாயகன் செல்ல, யானை குழந்தையாட்டம் பின் தொடர்கிறது.யானை வேகமாக நடந்து வருவதைக்கண்டு மக்கள் பயந்தோட பொலிஸார் வருகிறார்கள்.யானையின் உரிமத்தை பொலிசார் கேட்க, அது தவறிவிட்டது என தம்பி ராமய்யா பதிலளிக்க இதனால் யானை பறிபோகிறது.பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் நாயகன் யானையை மீட்கின்றார்.இந்த சமயத்தில் ஆதிகாடு என்ற ஊரில் விவசாய அறுவடைக்காக காட்டு யானைகளை விரட்ட ஒரு கும்கி யானை தேவைப்படுகிறது என்ற செய்தி நண்பர் மூலம் நாயகனுக்கு தெரியவருகிறது.கும்கி என்பது காட்டு யானைகளை விரட்ட உதவும் யானைகள். மிகவும் பலம்வாய்ந்தவை.
                               
ஆனால் நாயகனிடத்தில் இருப்பதோ, திருவிழாக்களில் பங்கேற்கும் யானை.இருப்பினும் தன் யானையை மீட்டுத்தந்த நண்பருக்கு மீண்டும் ஏதாவது உதவி செய்யவேண்டுமென எண்ணுகிறார் விக்ரம்.இன்னும் 2 நாட்களில் கும்கி யானையை ஏற்பாடு செய்துவிடுவதாக நண்பர் சொல்ல ஆதிகாட்டிற்குள் நுழைகிறார் நாயகன்.அப்போதே நாயகி லட்சுமிமேனனை நாயகன் விக்ரம் பார்க்க, காதலில் மூழ்கிறார்.காதலில் மூழ்கினாலும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட என்ன செய்யப்போகிறோம்? என்று நாயகன் நினைக்க அதற்கேற்றாற்போல் தன் யானைக்கு பயிற்சியும் தருகிறார்.ஆனால் பயிற்சியை ஏற்றுக்கொள்வது போல் யானை இல்லை, எருமைமாட்டைக் கண்டு யானை பின்வாங்குவது கை தட்டல்கள்.இந்நேரத்தில் நாயகி லட்சுமி மேனனுக்கு வீட்டில் திருமணம் நிச்சியிக்கப்படுகிறது. தன் காதலை சொல்ல நினைக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது வாய்ப்பாக அமைய, காதலை சொல்கிறார்
                               
அவர் காதலை லட்சுமி மேனன் ஏற்றுக்கொண்டாலும் நாயகியின் தந்தை, விக்ரம் பிரபு மேலும் நாயகியின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார்.நாயகனும் நாயகியும் தனியாக இருக்கும் நேரத்தில் வன அதிகாரியொருவர் இவர்களை பார்த்துவிடுகிறார்.அதை லட்சுமி மேனனின் தந்தையிடம் கூற, அவர் நம்ப மறுக்கிறார்.இதனால் நாயகனும் நாயகியும் தங்களது காதலை மறந்து பிரிந்து விடுகின்றனர்.மறுநாள் அறுவடைத்திருவிழா என்பதால் அறுவடை ஜோராக நடக்கிறது.
இந்நேரத்தில் தன் யானைக்கு மதம் பிடிக்க, அதை கட்டிப்போட்டு விடுகிறார் நாயகன்.அப்போதே கொம்பன் என்ற காட்டு யானை நாயகனின் தங்குமிடத்திற்கு வர, இரண்டு யானைகளும் சண்டை போடுகிறது.இதில் மாணிக்கம், கொம்பனை வீழ்த்தினாலும் இரண்டு யானைகளும் இறந்துவிடுகிறது.
                         
இந்த சண்டையின் போது நடந்த தீ விபத்தில் தம்பி ராமைய்யாவும் இறந்துவிட நாயகன் அனாதையாக்கப்படுகிறார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.இந்த க்ளைமேக்ஸ் பிடிக்க வில்லை என சிலர் கூறினாலும் படம் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள்.கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது.புற்களுக்கு இடையில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு.யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

மொத்தத்தில் கும்கி நிறைவு 

நான் விஜய் ரசிகை

 {தல எப்படி இருக்காறு}

ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொகுத்து வழங்கிய ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்' நிகழ்ச்சியில் அறிமுகமாகி, விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் பிரபலமானவர் ராகினிஸ்ரீ. இன்றைக்கு திரைப்படப் பின்னணிப் பாடகியாக உயர்ந்துள்ள அவர், துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு குரல் கொடுத்துள்ளார். தன்னுடைய இந்த பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

டி.வி. சேனல்கள் நடத்தின இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். பாராட்டுகள், அங்கீகாரம்னு என்னை அறியாம, என் வாழ்க்கை இசை உலகத்துக்குள்ள வேகமெடுக்க ஆரம்பிச்சது.

திடீரென்று யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘காதல் டூ கல்யாணம்' படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி படத்தில் கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு பின்னணி பேச வாய்ப்பு கிடைத்தது.

படம்  பார்த்த எல்லாரும் ஹீரோயின் குரல் நல்லாருக்குன்னு பாராட்டறாங்க. அத்தனை கிரெடிட்டும் முருகதாஸ் சாருக்குத் தான்...'' என்கிறார் ராகினி. திரைப்படப்பாடல், பின்னணிக்குரல் என்று அசத்துகிற ராகினிஸ்ரீ நடிகர் விஜய்யின் ரசிகையாம். பிரசாத் ஸ்டூடியோவில் ‘துப்பாக்கி' பட பிரமோஷன் நடந்தபோது அங்கு சென்ற ராகினி ஸ்ரீயை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். அப்போது விஜய், காஜலோட நடிப்புக்கு உங்க குரல் கரெக்ட்டாக மேட்ச் ஆயிருந்தது' என்று பாராட்டி கை கொடுத்தாராம். அப்போது விஜய் உடன் போட்டோ எடுத்த ராகினிஸ்ரீ, அது கனவா, நனவான்னு இன்னும்கூட என்னால நம்ப முடியலீங்க என்கிறார்.

Music Is My Life Says Raginisri
{வாழ்த்துக்கள் }
எப்படியோ தமிழ் திரைப்படத்துறைக்கு ஆண்ட்ரியா, சின்மயி வரிசையில் இன்னும் ஒரு பாடகி, ப்ளஸ் பின்னணி குரல் கிடைத்திருக்கிறது

தல படத்திற்கும் மேட்டெர் கும் சம்பந்தம் இல்லை.

Monday 24 December 2012

ரசிக்க மட்டும்

               

பில்கேட்ஸ்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை,புள்ளி போட்ட  டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில 
உட்கார்ந்திருந்தார் நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.


”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

Thursday 20 December 2012

சிந்திக்க தூண்டும் சில வரிகள்?


1.உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன...

2.உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பும் ஒரு காரணமே...

3.ஆன்மீகவாதியை நம்புவதை விட அரசியல்வாதியை நம்பு ஏனென்றால் முதாலாமவன் சிறிது சிறிதாக கொல்வான் இரண்டாமவன் உடனே கொன்றுவிடுவான்...

4.எப்பொருளும் உன்னுடன் வருவதில்லை உன் இறப்பிர்க்கு பின்னால்...

5.வாழ்க்கையில் அவசரப்படுபவனுக்கு ஆறடி நிலம் கூட இப்பொழுது கிடையாது ஒரு பிடி சாம்பல் மட்டுமே மிச்சம்...

6.உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன...

7.பணம் என்பது பலரின் உயிர்கொல்லி...

8.ஒருவனின் இறப்பு, பலருக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்...

9."இன்முகத்தோடு வரவேற்பு" 
இன்று எந்த இல்லத்திலும் இது இல்லை...

10.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் அனைத்தையும் விற்க கூடாது வெளிநாட்டில் ...இன்றைய நிலை

11.காதல் இருப்பவனுக்கு காமம் முக்கியமாகத் தெரியாது...

12.உழைப்பவன் என்றென்றும் உழைத்துக்கொண்டேயிருக்கின்றான்...

13.ஒருவனின் வார்த்தை தான் அவன் வாழ்க்கையை தீர்மானிக்கிறது...

14.தகுதி என்பது யார் கொடுத்தது நமக்கு நாமே சூட்டிக்கொண்ட மகுடம் தாம்...சுயதம்பட்டம்

15.அன்புக்கு அடிமைப் படுவதில் ஆண்களும் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதில் அதிகம் ஆர்வம் கொள்ளுகிறார்கள் அறியாமையால்

16.உன்னதமான பொறுப்பை உன்னதமானவர்களிடம் மட்டுமே தரப்படவேண்டும்...

17.உயிரின் மதிப்பு அனைவருக்குமே போகும் போது தான் அதன் மதிப்பு தெரிகிறது....

18.ஏதோ ஒரு அடையாளத்தை தேடியே மனித மனம் அலைகிறது.....

19.தன்னை பெருமையாக நினைத்துக்கொள்வதிலேயே பலரின் வாழ்க்கை தட்ம்புரண்டுவிடுகிறது...

20.நம் பக்கத்து வீட்டில் சண்டை நடக்கிறது நாம் விலக்க தயாரா இல்லை ஏன் என் சொந்த விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிட்டால் என் கெளரவம் குறைந்துவிடும் அதனால்....

21.பொன் நகையை அணிவதை விட புன்னகை ஒன்றே பலரையும் நம்மை நேசிக்க வைக்கும்...

22.சக மனிதனைக் கொல்லும் போதே அவன் முழு மிருகமாகிவிடுகிறான்...

23.கோவிலில் காணிக்கை செலுத்துவது சாமிக்காகவா?ஆசாமிக்காகவா? அல்லது செய்யும் பாவங்களுக்காகவா?

24.கடவுளை மனிதன் படைத்தானா?கடவுள் மனிதனை படைத்தானா?

ஏன் இந்த கேள்வி என்றால் அடுத்த தெருவில் ஒரு கோவில் கட்ட ஆரம்பித்தால் உடனே இந்த தெருவிலும் இன்னொரு கோவில் கட்டுகிறார்கள் சிலை வைக்கிறார்கள் 

யார் யாரை உருவாக்குகிறார்கள் இதைப்பார்த்தால் மனிதன் தான் என்று தோன்றுகிறது...

25.தாய் என்றும் இறப்பதில்லை...

26.படிக்கும் குழந்தைகளின் மனதில் பாடங்களை விட படங்களே மனதில் பதிகின்றன...

27.இன்று பலரும் உபயோகிக்கும் வார்த்தைகளில் 90% தகாத வார்த்தைகளையே உபயோகிக்கிறோம்...

28.ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை விமர்சித்துகொண்டே தான் வாழ்கிறோம்....

29.இறக்கும் நிலையிலும் பல மனக்குறைகளோடுதான் பிரிகிறது உயிர்.....

30.எல்லோர் மனதிலும் உதவும் எண்ணம் மறுக்கப்பட்டே வளர்க்கப்படுகிறது....

31.உதவுபவர்களையும் கேலி செய்து தடுக்கும் நபர்கள் நம் அருகிலேயே இருப்பவர்கள் தான்...

32.எந்நேரமும் உயிர் பிரிந்தாலும் எந்த ஆசையையும் விட்டுக்கொடுக்க தயாராயில்லை......

33.புரிந்து கொள்ளத்தான் போறாடுகிறோம் ஒவ்வொருவரும் மனதின் வலியை....

34.பல நேரங்களில் நாம் கட்டிய கோட்டைகள் அனைத்தும் கண்விழித்ததுமே சரிந்துவிடுகின்றன கனவுகள் போலவே..

35.புறப்படும் போது நாம் சென்று சேர்வோம் என்ற திடமான நம்பிக்கையே நம்மை செல்ல வழிவகுக்கிறது....

36.தன் முழு முயற்சியும் தோல்வி அடையும் போதே மனிதன் தன்னை மீறிய சக்தியை உணருகிறான்...

37.தன் அருகில் இருந்து துன்பப்படுபடுபவனை கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதனின் முக்கியமான குணம் தற்போது....

38.தன் உணர்வுகளை தானே கட்டுப்படுத்த இயலாதவன் மனிதே அல்ல....

39.மன்தின் தேடல் பொருள் கிடைத்தவுடன் திருப்தி அடையாமல் மீண்டும் அடுத்து அதன் தேடல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது....


40.தோல்வியில் இருந்து மீள்வது சுலபம் வெற்றியை தற்காத்து கொள்வது கடினம்...

41.சில உண்மை முகங்களை அடையாளம் காண நம் தோல்வி தான் வழி காட்டுகிறது....

42.உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுதரமாட்டேன் என்று நீங்கள் சண்டையிட்டால் அதற்கு பெயர் மனோவியாதி...

43.எல்லோருக்கும் நல்லவனாக இருக்க யாராலும் முடியாது....

44.சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஒருவர் நினைப்பது பேராசையில்லை....

45.சந்தோசம் என்பது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கிறது ...

46.சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருப்பவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்கமாட்டான் அதற்க்காக அவன் அலையபோவதில்லை...

47.ஒவ்வொருவரும் தன் விருப்பத்தை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே பயணிக்கின்றனர் வாழ்க்கையில்......

48.ஒவ்வொரு மனித மனங்களுக்கு பின்னால் ஒரு மிருகம் கட்டாயம் இருக்கும் அது வெளிப்படும் தன்மையை பொருத்து தான் அவர்களின் வாழ்க்கை செல்லும்...

49.யாரோ ஒருவரால் நேசிக்கப்படவேண்டும் என்று எல்லோரது மனமும் கட்டாயம் ஏங்கவே செய்கிறது....

50.என்றாவது ஒரு நாள் வாழ்வில் வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் தான் பிச்சையெடுத்தாவது வாழ துடிக்கிறான் மனிதன்.....


51.பல நேரங்களில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு காரணம் என்னவென்றே தெரியாது.....

52.முதியோர்களை தன்னோடு வைத்துக்கொண்டு வார்த்தை ஈட்டிகளால் குத்தி கொல்லுவதை விட முதியோர் இல்லங்களில் சேர்பதே மேல் ...

53.எந்த நிலையிலும் தன் நிலை தவறாமல் வாழவேண்டும்.....

54.உயிரை கொடுத்தவனும் யாரென்று தெரியாது எடுத்துக்கொள்பவனும் யாரென்று தெரியாது...

55.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மானுட ஜென்மங்கள் இது தான் ஆறாம் அறிவின் சிறப்போ...

56.தன் உயிரை தானே அழித்துக்கொள்வதால் துன்பங்கள் தீர்ந்துவிடுமா?

57.எந்த நிலையிலும் உன்னை நீ தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் நம்பிக்கை என்ற கடவுளால்....

58.புன்னகை செய்யும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் வாழ்க்கையில் பொன்னான நேரங்களே...

59.உண்மைகளை பல இடங்களில் வெளிப்படையாக சொல்ல இயலாது....

60.விருப்பங்கள் அதிகமாக அதிகமாக துன்பங்களும் அதிகமாகிவிடும்...

Thursday 13 December 2012

தலைவனுக்கு வேண்டிய தகுதிகள் ?

(தலைவரே இது சினிமா இல்ல)


நாவடக்கம்

வளர்ந்து வரும் மனிதனுக்கு நாவடக்கம் மிகவும் இன்றியமையாதது. வளர்ந்து வரும் மனிதர்கள் துணிவாகப் பேசினாலும் திமிராகப் பேசுவதாகவே கருதுவார்கள். அதனால் துணிவைக்கூட மென்மையாகவே சொல்ல வேண்டும்.

நண்பர்கள்

மனம் சோர்வடையும் போதும் துன்பம் அடையும்போதும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள மனம் ஒப்பியவர்களை மட்டுமே தேடுகிறது. அவர்களே நல்ல நண்பர்கள். அவர்களே வாழ்க்கைக்கு துணையானவர்கள்.

நேர்மை

நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்து நிற்பதில்லை. நிறைவைக் கொடுப்பதும் இல்லை.

நியாயம்

பெரிய பதவியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். ஏதேனும் ஒரு குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அது பற்றிக் கவலைப்படாமல், நியாயம் எதுவோ அதைச் செய்துவிட்டால் போதுமானது.
(மீடியா முன்னாடி இப்படி எப்பவும் சிரிக்கணும் )

நல்லவர்

ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடிவதில்லை. அப்படி இருப்பதும் இயலாத காரியம்.

நாட்டுக்கேற்ற விதி

இன்னும் நாம் ஆங்கிலேய விதிமுறைகளிலிருந்து விடுபடவில்லை. நம் நாட்டுக்கு ஏற்ற விதிமுறைகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டின் கடமை

பொறுப்புணர்ச்சி உள்ள மக்களை உருவாக்காத நாம் ஒருக்காலும் முன்னேறாது.

நன்மை தருவது

எவ்வளவு மறைத்தாலும் ஒரு மனிதனின் நடைமுறைகள் அவனை வெளிக்காட்டி விடும். அதனால் உண்மையாக நடந்து கொள்வதைவிட நன்மை தருவது வேறொன்றும் இல்லை.
(பொது வாழ்கையுளையும்  நடிக்க தெரியனும் )

Monday 10 December 2012

சிரிப்போம் சிந்திப்போம்




மனிதர்களில் சிலபேர்… எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு.

எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவர் 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான்.

ஒரு நாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.

“நான் சொன்னபடியே செய் தண்ணிய மடக் மடக்குன்னு குடி அப்புறம் பாரு என்ன நடக்குதுண்ணு”. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மடாரென்று கீழே “ஓ” வென்று கத்தி அழுதது.

கிழவனார் குழந்தையைப் பார்த்தார். சத்தமான குரலில் “எந்தருச்சுவாடா.. தூக்கி விடுகிறேன்” என்று கத்தினார். குழந்தை அதே வேகத்தில் எழுந்த ஓடி அவரிடத்தில் வந்தது.

“முட்டாப் பயலே.. நீயா எந்திருச்சு வந்தப்பெறுகு நானா தூக்கி விடுவேன் போடா!” குழந்தை குழப்பமாக அவரைப் பார்த்தபடி நின்றது.
                                                                                                                          

புதிதாக வகுப்பிற்கு வந்த ஆசிரியர் வருகைப் பதிவை எடுத்து பெயர் வாசித்தார். பலர் வரவே இல்லை. கோபம் வந்தது அவருக்கு.

“டேய் வராதவனெல்லாம் ஒழுங்கா எந்திரிங்கடா”இருந்த மாணவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்.
                                                                                                                          

என் நண்பர் ஒருவர், தொடர்ந்து எப்பதும் யாராவது ஒருவருக்குத் கடிதம் எழுதிக்கண்டே இருப்பார் பதில் வருமா? வராதா? அதைப் பற்றியெல்லாம் கலைப்படமாட்டார். எல்லாம் எழுதிவிட்டுக் கடைசியில் ஒரு வரி மறக்காமல் எழுதிவிடுவார்.

“இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே பதில் எழுது” இதற்கு என்ன பொருள் என்று எனக்கு இன்றைக்கும் விளங்கவில்லை.
                                                                                                                            

சிலர் யாரையும் ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.

ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை கடவுள் மயங்கி விழுந்தார்.
                                                                                                                            

ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னோடு வந்த ஒருவர் கவலையோடு என்னிடம் கேட்டார்” உங்களுக்கு ஜிலேபி போட்டார்களா?”

“இல்லையே”என்றேன்.

“நல்லவேளை, எனக்கும் போடல… அதான் கேட்டேன்” திருப்தியாக நடந்து போனார்.

வாசலில் என் செருப்பைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த “ஜிலேபி” மீண்டும் வந்தார். “சே – 300, 400 ரூபாய் இருக்கும் புத்தம் புது செருப்பு. சாப்பிட்டு வந்து பார்க்கிறேன் காணம் சார்”

“ஐயோ அப்பறம் என்ன பண்ணீங்க” நான் கவலையோடு கேட்டேன்
.
“அப்புறம் என்ன.. என் செருப்பைத் போட்டுட்டு வந்தேன்… எல்லாம் நேரம் சார் நேரம்!” அவர் பேசிக்கொண்டே போனார். எனக்கு பிறகுதான் புரிந்தது, யாரோ ஒருவருடைய செருப்பை இவர் பார்த்து வைத்து அது கிடைக்காத ஏக்கத்தில் பேசுகிறார் என்று.
                                                                                                               

“எங்க அப்பா ரெண்டு கையிலேயும் ஒரே தள்ளு…. பஸ் ஓடியே போயிரும்” சொன்னான் ஒரு சிறுவன் பெருமையாக.

“ம்… இதென்ன பெரிசு, எங்கப்பா ஒரே கையில பஸ்ஸைத் தள்ளிருவாரு!” இன்னொரு பையன் சொன்னான்.

மூன்றாவது பையன் சொன்னான்; “எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னா போதும் பஸ் ஓடியே போயிரும்”.

ஆமா உங்கப்பா யாரு பயில்வானா?”

“இல்லடா… கண்டக்டரு”
                                                                                                               

புதுவருட காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய ஆசிரிய நண்பர் மகிழ்ச்சியோடு சொன்னார் “அட, இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல தான் வருது… பார்த்தீங்களா?”

இந்த மாதிரித் தொடர் குழப்பங்கள் உங்களுக்கு வந்ததுண்டா?

Saturday 8 December 2012

நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் திரை விமர்சனம்

கதை
நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர். நண்பர்களில் நான்கு பேரில் ஒருவர் இயக்குநர், இன்னொருவர் ஒளிப்பதிவாளர் மற்றுமொருவர் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு மூன்று பேர் இந்த படத்திலேயே பணிபுரிந்துள்ளனர்.



நடிகர்கள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பிட்சா படத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் என்று மூன்று புது முகங்களும் நடிக்கிறார்கள். பெங்களுரை சேர்ந்த காயத்ரி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர்இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவர் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்று மாநில விருதினை பெற்றுள்ளார்.
இவர் இரண்டு குறும்படங்களை இயக்கி உள்ளார். அந்த படத்திற்கு—- விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் வர்ணம், ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார். இது இவரது முதல் படம்.

தயாரிப்பாளர்Leo Vision என்ற நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரிப்பவர் V.S. ராஜ்குமார். இது இவருக்கு முதல் படம். இவர் ஏற்கனவே Leo vision என்ற பெயரில் sound studio நடத்தி வருகிறார்.Executive Producer: K.Sathish.

இசைஅறிமுக இசையமைப்பாளர் வேத்சங்கர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் A.R. Rahman Studio-வில் இசை மற்றும் sound engineer course படித்துள்ளார்.
He is the Roll number: 1 student at AR Rahman music conservatory.

ஒளிப்பதிவுசிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்ற பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் C. பிரேம்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும் திரைப்படக் கல்லூரியில் பயின்று ஒளிப்பதிவு பிரிவில் மாநில விருதினை பெற்றுள்ளார்.
இயக்குநரும் ஒளிப்பதிவாளாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே கருவாக எடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர்.

படத்தொகுப்புஇந்த படத்தின் படத்தொகுப்பாளர் R. கோவிந்தராஜ். இவரும் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்றவர். வெயில் பட படத்தொகுப்பாளர் மதன் குணதேவாவிடம் வெயில், பூ போன்ற படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கலை இயக்குநர்கலை இயக்குநர் G. வீரமணி. இவர் சிங்கம், பயணம் போன்ற படத்தின் கலை இயக்குநர் கதிரிடம் உதவி கலை இயக்குநராக பணி புரிந்தவர்.



சுவாரஸ்யமான சம்பவங்கள்நடிகர்களுக்கு dialogue சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லையாம். ஏனென்றால் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது dialogue-ஐ finger tip-லே வைத்திருந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் shooting-க்கு முன்னால் எடுத்துகொண்ட rehearsal.

pre-production மட்டும் ஒரு வருடம் எடுத்து கொண்டு, script wirting, script reading. script correction, audition, rehearsal என ஒவ்வொரு process-ற்கும் அதற்கேற்றார் போல உழைத்திருக்கிறது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் டீம். உழைப்பிற்கான பலனை பெற்று இருக்கிறது படம். சூப்பரா போயிகிட்டு இருக்கு. இந்த வாரதுள்ள படத்துக்கு தியேட்டர் காட்சி அத்தனையும் அதிகமாக்கி இருகாங்க பிரபல இயக்குனர்கள் மொக்கையா படம் எடுத்துகிட்டு இருக்குறப்ப புது முக இயக்குனர்கள் அசத்துரங்க இது மாறி நெறைய இயக்குனர்கள் வரணும்னு நம்ம பதிவுலகம் சார்பா வாழ்த்துகிறோம்.



படத்துல்ல வர அத்தன பேருமே இயல்பா நடிச்சு இருகாங்க. நம்ம விஜய் சேதுபதி ப்பா யாருட இந்த பொண்ணு பேயி மாறி  இருக்கான்னு சொல்லறப்ப தியேட்டர் சிரிப்புல அதருது. இது மாறி  வித்தியாசமான முயற்சிகளில் நடிக்கணும் இப்படி அவரு நடிச்சா  பெரிய அளவு வர வாய்ப்பு இருக்கு. இரண்டாவது வெற்றி பெற்றதுக்கு வாழ்த்து  சொல்லிகிறேன்.அப்புறம் நண்பர்களா நடிச்ச 3பேருமே செம்ம நடிப்பு அதும் நம்ம பக்ஸ் செம்மைய பண்ணிருக்காறு .அவரும் படம் டைரக்ட் பண்ண போறதா படத்துள்ள சொல்லிருகாங்க அவரு படமும் நல்ல வரணும்னு வாழ்த்துகிறோம். மொத்ததுல்ல நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் 2 மணி நேரம் நம்ம மன கஷ்டத்த எல்லாம் காணாம ஆக்கிருச்சு.