Saturday 30 March 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.1

[குழந்தையாக ஹிட்லர்]
இரண்டாம் உலக போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே அவர் தான் அடால்ப் ஹிட்லர். முதல் உலக போரின் போது ஜெர்மனி படையில் இராணுவ வீரராக இருந்த ஹிட்லர். இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனியின் சர்வதிகரியாக விளங்கினார். அவர் பெயரை கேட்டு அஞ்சாதவர்களே இல்லை.இரண்டாம் உலக போர் மூள்வதற்கும் அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் செத்து மடிவதற்கும் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிட வைக்கும் சம்பவங்களும் நிறைந்தது அதை அறிந்து கொள்ளவே இந்த தொடர் பதிவு. பதிவின் நீளம் கருதி பாகமாக வெளியிடப்படுகிறது.
ஹிட்லரின்  தந்தை 

தோற்றம்;அடால்ப் ஹிட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை அலாய்ஸ் ஹிட்லர்-க்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான். தந்தை அலாய்ஸ் ஹிட்லர் சுங்க இலாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக தான் வளர்த்தார். ஒரு வருடத்திற்கு பின்பே உடல் நலம் பெற்றார்.
ஹிட்லரின் தாயார் 

அலோய்ஸ் கண்டிப்பான தந்தை சுங்க அதிகாரியாக பணியாற்றியதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். எனவே தாயின் அரவணைப்பில் தான்  ஹிட்லர் வளர்த்தார். அதனால் தாயின் மேல் அளவற்ற அன்பும் பக்தியும் ஹிட்லருக்கு உண்டு.இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை அலோய்ஸ் குடி பழக்கம் கொண்டவர். குடும்பத்தினரை அடிமையாக நடத்துபவர்.அலோய்ஸ் தன் மகனை பெயர் சொல்லி அழைக்க மாட்டார். ஒரு விசிலை எடுத்து ஊதியதும்    ஹிட்லர் ஓடி வந்து நிற்க வேண்டும். எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் இன்னும் அளவுகடந்த பாசம் கொண்டார். அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார். பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.
[ஹிட்லர் சிறுவனாக]

கல்வி; 
தொடக்கத்தில் ஹிட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர்.

ஓவியராதல்;
ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஹிட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார்.

அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்;
''அடால்ப்''' என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். [[1920]] களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

நன்றி;விக்கிபிடியா

Wednesday 27 March 2013

கோடி ருபாய் வேணுமா உங்களுக்கு ?இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். அதனால்தான், ரியல் எஸ்டேட் புள்ளிகளும் திடீர் பணக்காரர்களும் பணத்தை மடியில் கட்டிக் கொண்டு படம் எடுக்க வருகிறார்கள். அவர்களது வாரிசுகளை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த நாளே அவர் கோடீஸ்வரன்தான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் படம் எடுத்தார்ஒரு பட வெற்றி அவரை இழந்த பணத்தை மீட்க வைத்து கோடீஸ்வரனாக்கி விட்டது. கூத்துப் பட்டறையில் கிளர்க்காக இருந்தவர் விஜய்சேதுபதி. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வெறும் 20 ஆயிரம் சம்பளத்தில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் நடித்தார். “பீட்சா”வின் வெற்றிக்கு பிறகு இப்போது அவர் கையில் பத்து படங்கள். “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்”, “பீட்சா” படங்களுக்கு எட்டு லட்சம் சம்பளம் வாங்கியவர். இப்போது கேட்பது ஒண்ணேகால் கோடி.


முதலிடத்தில் ரஜினி
இந்த சம்பள விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது எப்போதும் போல சூப்பர் ஸ்டார் ரஜினிதான். “எந்திரன்” படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 23 கோடி. “கோச்சடையான்” மகள் படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட்டில் ரஜினியின் சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும். ரஜினி அடுத்து வெளி பேணர்களில் நடித்தால் 50 கோடி சம்பளம் தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.

இரண்டாம் இடம் கமலுக்கு
கமலுக்கு இரண்டாவது இடம். கமலை பொறுத்தவரை இவ்வளவு தான் சம்பளம் என்று பிக்ஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். வெற்றிகளுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி வாங்குவார். “தசாவதாரம்” படத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அடுத்து அவர் நடித்த உன்னைபோல் ஒருவனும், விஸ்வரூபமும் சொந்தப் படங்கள். விஸ்வரூபம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது தன் சம்பளத்தை 25 கோடியாக பிக்ஸ் செய்திருக்கிறார்.

மூன்று – நான்கில் விஜய் – அஜித்
10 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த விஜய் “துப்பாக்கி” ஹிட்டுக்கு பிறகு 15 கோடியாக உயர்த்தி விட்டார். “தலைவா”வுக்கும் “ஜில்லா”வுக்கும் உயர்த்திய சம்பளத்தைத்தான் வாங்குகிறார். 2014ல் தன் சம்பளத்தை 20 கோடியாக உயர்த்துவார். ஒருவேளை தலைவாவும், ஜில்லாவும் சரியாக போகவில்லை என்றால் மீண்டும் 10 கோடியிலிருந்து கணக்கை துவக்குவார்.
* கிட்டத்தட்ட விஜய் ரேன்ஞ்சுதான் அஜீத்தும். 8 முதல் 12 கோடி வரை ஆளுக்கு தக்கபடி பெற்றுக் கொள்வார் “பில்லா 2″ வுக்கு அவர் வாங்கிய சம்பளம் 12 கோடி. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பளம் கேட்கவில்லை. படத்தின் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுங்கள் என்று பேசியிருப்பதாக தகவல். காரணம் தயாரிப்பாளர் இப்போது சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை. அடுத்து விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

* நடிகர்களில் சம்பள விஷயத்தில் சூர்யாவும், கார்த்தியும் மிகவும் புத்திசாலிகள். தெலுங்கு பக்கம் தங்கள் படம் நன்றாக ஓடும் என்பதால் அதற்கும் சேர்த்து சம்பளம் பேசுவார்கள். அல்லது தெலுங்கு ரைட்சை தனியாக வாங்கிக் கொண்டு அதை பலகோடிக்கு விற்று விடுவார்கள். இது தவிர சூர்யா படத்துக்கு 7 முதல் 10 கோடி வரை வாங்குகிறார். கார்த்தி 5 முதல் 7 கோடி வாங்குகிறார். விளம்பர வருமானங்கள் தனி. ஆக…. இப்போது சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது சிவகுமார் பேமிலிதான்.

* சூர்யாவைப் போலவே தெலுங்கு ரைட்சையும் சேர்த்து வாங்கும் நடிகர் விஷால். 3 முதல் 5 கோடி சம்பளம் வாங்கும் விஷால் கூடவே தெலுங்கு ரைட்சை வாங்கி அதனையும் 3 கோடி வரைக்கும் விற்றுக் கொள்வார். ஆர்யாவின் சம்பளம் விஷால் அளவுதான். ஆனால் தெலுங்கு ரைட்ஸ் கேட்பதில்லை. “சேட்டை” படத்துக்கு நாலரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

* விக்ரம் 10 கோடியை தாண்டித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறார். இருந்தாலும் ஷங்கரின் “ஐ” படத்துக்கு அவர் பெற்றுள்ள சம்பளம் 11 கோடி. சிம்புவின் சம்பளம் 5 முதல் 7 கோடி. கிட்டத்தட்ட தனுஷின் சம்பளமும் சிம்பு அளவுதான். ஆனால் தனுஷிடம் ஒரு நல்ல பழக்கம், நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார். “மரியான்” படத்தில் குறைந்த சம்பளம் பெற்றே நடித்து வருகிறார். ஜீவாவின் சம்பளம் 5 கோடிக்கு உள்தான். சமீபத்திய படங்களின் தோல்வியால் 3 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஜெயம்ரவியின் சம்பளம் 3 முதல் 5 கோடி.

* காமெடியன்களில் அதிகம் சம்பளம் வாங்குவது இன்றைய நிலவரப்படி சந்தானம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 லட்சம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சத்தியமா நம்புங்க பவர் ஸ்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வாங்குகிறார். வடிவேலு முன்பு தினசரி சம்பளம் வாங்கினார். இப்போது ஒரு படத்துக்கு இத்தனை கோடி கொடுத்து விடுங்கள் என்கிறாராம். குணசித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ். காட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெற்றுக் கொள்வார்.

நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா டாப்
நடிகைகளில் கோடியை தாண்டி சம்பளம் பெறுகிறவர்கள் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா ஆகியோர். இப்போது இந்த பட்டியலில் அமலாபாலும், காஜல் அகர்வாலும், சமந்தாவும், ஸ்ருதியும் இணைந்திருக்கிறார்கள். த்ரிஷா எப்போதும் ஒரே மாதிரியாக சம்பளம் பெறுவார். தமிழ் என்றால் 60 லட்சமும், தெலுங்கு என்றால் 75 லட்சமும் பெற்றுக் கொள்வார். அஞ்சலி 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
அப்பறம் என்ன கிளம்பும்க அப்பு கோடி கோடியா சம்பாரிக்கலாம்.

நன்றி;

Thursday 21 March 2013

வியாபாரி

(அரசியல் ராஜ தந்திரி) 

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
(பல்டி ராணி) 

மற்றொரு பேருந்தில் ஏற
ிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
(அடிக்கடி காணாமல் போகும் எதிர்கட்சி தலைவர்)
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
(அரசியல் வியாபாரி)

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
(நடையரசர்) 
இது மாதிரி ஏமாற்றும் வியாபாரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற மறுபடி காமராஜர் பெரியார் போன்றோர் மீண்டும் பிறந்தால் மட்டுமே மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அது வரை நமது நிலைமை???????????
(யாராச்சும் காப்பாத்துங்க)

Tuesday 19 March 2013

மாணவர்கள் நினைத்தால்?


இன்று தமிழகமே உற்று நோக்கியுள்ளது மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தை தான். காலம் காலமாக அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போன மாணவர்கள் இனியும் ஏமாற தயார் இல்லை. இனி எம் இன மக்களை தாங்களே காப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

அரசியல்வாதிகளால் தபாலும், தந்தியும் மட்டுமே அனுப்ப முடியும் என்று உணர்த்து விட்டனர். அரசியல் என்ற பெயரில் நீங்கள் நடத்தும் அனைத்து அக்கிரமங்களையும் இனியும் பொருத்து கொள்ள முடியாது. எம் இன மக்களுக்கு உண்மையான நீதி வழங்கப்பட வேண்டும். 

இந்தியாவை ஆளும் அரசாங்கத்திற்கும், சட்டையை கிழித்து, மேஜையை தட்டி சுய நலத்திற்காக வேஷம் போடும் எதிர்கட்சி யினற்கும், அரசியல் என்னும் போர்வைக்குள் மறைந்து கொண்டு சுய நலமாக செயல் படும் சிறிய பெரிய கட்சிகளுக்கும், இந்த போராட்டம்  அவர்களை காணாமல் போக செய்து விடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

மாணவர்களால் மட்டுமே இதை சாத்திய படுத்த முடியும். அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சனை விளம்பரமாகவும், பிழைப்பாக மட்டுமே இருக்க முடியும். நாம் அனைவரும் இந்த மாணவ சமுதாயத்திற்கு ஆதரவளிப்போம்.

தமிழ் இனமே எழுச்சி கொண்டு நீ எழுந்து போராடு...

உன் இனத்தை அழித்தவர்கள் எவராயிருந்தாலும் தண்டனைகள் பெற்று 

கொடுக்கும் வரை போராடு.....

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழம் மலரும்


மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

Friday 15 March 2013

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

                        
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்கு
கள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
                         
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

'' அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

'' பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்,தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
                              
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

Wednesday 13 March 2013

பாலா மன நோயாளியா?

[பவர் ஸ்டார ஒரு பாட்டுக்கு போடலாமா]

காலை எழுந்தவுடன் நம்ம பிரபல பதிவர்கள் எழுதுன பதிவுகள படிச்சுட்டு இருந்தேன். அப்ப நம்ம அண்ணன் கேபிள் சங்கர்  ப்ளாக் ல நம்ம இயக்குனர் பாலாவோட படத்த பத்தின  டீசர் ஒன்னு அப்லோட் பண்ணி இருந்தாரு. அந்த  வீடியோவ பார்த்தேன். அப்படியே ஷாக் ஆயிட்டேன் இந்த ஆளு படமெடுக்குரார இல்ல மாடு மேய்கிறாரா. அவங்கள் எல்லாம் நடிகர்கள்னு நெனைக்கிறாரா இல்ல அடிமைகள்னு நினைத்து கொண்டரானு தெரியல்ல. அவர் பக்கத்துல்ல நின்று கொண்டு இருக்கும் பொழுது கூட நடிப்வர்களின் முகத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது ஏதோ பேயறைந்தது போல முகம் விளரி போயி காணப் படுகிறார்கள். எல்லா ஆளையும் வெளுதுட்டு அண்ணன் ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க நான் சொன்ன மட்டும் போதாது. நீங்களே இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.


அவன்-இவன் படத்துல்ல அந்த வயசான ஜெமின்தார் கதா பாத்திரத நிர்வாணமாக ஓடவிட்டார். நான் கடவுள் படத்துல்ல ஆர்யாவ கோமணதோட ஓட விட்டார். தத்ருபமாக படம் எடுக்கலாம் அதற்காக இந்த அளவு கொடுமைபடுத்த கூடாது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை எல்லாம் நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. நடிப்பதற்காக இவ்வளவு மெனக்கெடல்கள் படும் பொழுது மிக வருத்தமாக உள்ளது.

[எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்]

அதர்வா பார்க்க எவ்வளோ அழகா இருப்பாப்ல அவர இப்படி நடிக்க வச்சாலும் பரவா இல்லை. பிரம்பால போட்டு இந்த வெளு வெளுதுட்டார். பாவம் யா இந்த கதா நாயகிங்க அது ஏன்யா கருப்பா  நம்ம தமிழ் நாடுள்ள கதா நாயகிங்க இல்லையா வெள்ளை தோல் உள்ள ஆளா பிடிச்சு கருப்பு பெய்ன்ட் அடிக்கிறிங்க. பெய்ன்ட் செலவாவது மிச்சம் ஆகும். 

[அண்ணே விட்ருகண்ணே நாங்க பாவம்]

பாலா அவர்களே நீங்க திறமையான இயக்குனர் தான். அதுக்காக நடிகர்களை மிருகங்களாக பயன் படுத்தாதிர்கள். சுதந்திரமாக நடிக்க விடுங்க. உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்னு நினைக்க வேண்டாம். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் இவர்களை விடவா. சொந்த காச வேற படத்துல்ல முதலீடு பண்ணி இருக்கீங்க அதனால ரொம்ப தத்ருபமா வரணும்னு நினச்சுடின்களா பயபடாதிங்க போட்ட காச எடுத்துறலாம். அடுத்த படத்துல்ல இருந்து கதை களத்த மாத்துங்க.  நாங்களும் உங்கள்ட வேற மாதிரியான படங்களை எதிர்பார்கிறோம். 
[இதே மாறி நம்ம படத்துக்கு கூட்டம் வருமா?]

மற்றவை படம் வெளி வந்த பிறகு பார்க்கலாம்.

நன்றி!
      

Friday 8 March 2013

ஹரிதாஸ் விமர்சனம்


கதை;
ஆள் கடத்தி பணம் பறிக்கும் வில்லன் ஆதியை என்கவுண்ட்டர் செய்ய அமைக்கப்படும் போலீஸ் படைக்கு கிஷோர்தான் தலைவர். மனைவியை இழந்த கிஷோர் தன் மனவளர்ச்சி குன்றிய மகனை கிராமத்திலிருக்கும் தாயிடம் அனுப்பி பராமரிக்க வைக்கிறார். திடீரென தாயும் இறந்து போக, குழந்தையை தன்னிடமே வளர்க்க வேண்டிய நிர்பந்தம். என்கவுன்டர் பொறுப்பை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையை வளர்க்க கிளம்பும் கிஷோர் எதிர்கொள்ளும் சவால்களும் சங்கடங்களும்தான் படம். முடிவில் கிஷோர் நினைத்த மாதிரி மகன் ஓட்டபந்தய வீரன் ஆகிவிட்டான். ஆனால் கிஷோர் என்ன ஆனார்? கனத்த மவுனத்தோடு படம் முடிய, அதைவிட பெருத்த மவுனம் ஒவ்வொரு ரசிகனின் மனசையும் ஆட்டிப்படைகிறது  ஹரிதாஸ்.

ஹீரோ;
இந்த படத்தின் ஹிரோ அந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவனாக நடித்திருக்கும் பிருதிவிராஜ் தாஸ். நல்ல நடிப்பு. செம்ம பெர்பாமன்ஸ். அந்த பையன்ட்ட இருந்து நடிப்ப கொண்டு வர இயக்குனர் எவ்ளோ முயற்சி பண்ணி இருப்பாரு. ஆட்டிசம் பாதித்த குழந்தை எவ்வாறு இருப்பார்களோ அதை அப்படியே பிரதிபலித்து இருக்கின்றான்.

 கிஷோர் இந்த படத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி கஷ்ட படுவார்களோ  அவர்கள் மனது எந்த அளவு வலி நிறைந்து இருக்குமோ அதை அப்படியே நம்ம கண் முன்னாடி கொண்டு வருகிறார். அதும் தான் பெற்ற பையனுக்காக ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ள அவர் பேசும் பொழுதும் தன் மகன் நிலை கண்டு அவனிடம் பேசும் பொழுதும் ஹரி... ஹரி... எனக்கு பிறகு நீ எப்படிடா வாழப் போறே என்று அவர் கதறி அழுகிற காட்சி நம்மையும் கலங்க செய்து விடுகிறது.

சினேகாதான் அம்சவல்லி டீச்சர். மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் மீது தனி அக்கறை எடுத்துக் கொண்டு அவனை கவனிப்பதில் இருந்து 'நான் ஹரியோட அம்மாவா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்' என்று சினேகா படீரென போட்டு உடைக்கும் போதும் நல்ல பண்ணி இருகாங்க.

டாக்டராக வரும் யூகி சேது  கோச்சாக வரும் ராஜ் கபூர் பரோட்டா சூரி கிஷோரின் நண்பர்களாக வரும் நபர்கள் படத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கும் ஓமக்குச்சி உள்ளிட்ட சிறுவர்களும் மலைக்க வைக்கிறார்கள் நம்மை. வசனங்கள் சில இடங்களில் அழவும் பல இடங்களில் நம்மையறியாமல் புன்முறுவல் பூக்கவும் வைக்கிறது. அவன் கோச் இல்ல... சரியான காக்ரோச்! என்னங்க... டாக்டர் கோச் மாதிரி பேசுறாரு. கோச் டாக்டர் மாதிரி பேசுறாரு. அவங்களுக்கெல்லாம் மேட்ச்ல ஜெயிச்சாதான் வெற்றி. இந்த மாதிரி குழந்தைகளை வச்சுருக்கிற எங்களுக்கு இவங்க கலந்துகிட்டாலே வெற்றி இப்படி வசனங்களில் கண்ணிரையே  வரவழைக்கிறார் வசனகர்த்தா வெங்கடேஷ்.

மிக ஷார்ப்பான, சுவாரஸ்யமான எடிட்டிங். நடத்திக் காட்டியிருக்கிறார் ராஜா முகமது. எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு நிற்காத இசையை தந்திருக்கிறார் விஜய் ஆன்டனி. 

ஆட்டிஸம்' என்ற மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனையும், காவல் துறையின் அதிகாரி ஒருவரின் ஆபத்தான வாழ்க்கையையும் வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படத்தை உருவாக்கியிருக்கிற விதம், அதன் திரைக்கதை, அதை படமாக்கிய விதம் என மொத்தத்தில் ஒரு மன நிறைவான படத்தை இயக்கியிருக்கிறார் குமாரவேலன்.

தஞ்சை விஜயாவில் இந்த படத்தை பார்த்தேன் கடைசியா இந்த தியேட்டரில் காதல் படம் பார்த்தது அதுக்கு அப்புறம் இந்த படம் தான் பார்க்கிறேன். இந்த படத்தின் வசூல் அவ்வளவு திருப்பதியாக இல்லை என்றே செய்திகள் வருகின்றன. இது மாறி படத்திற்கு நாம் ஆதரவு தர வில்லை என்றால் அலெக்ஸ் பாண்டியன் போல மொக்கை படம் தான் நமக்கு கிடைக்கும்.


ஹரிதாஸ்=மன நிறைவு 

நன்றி.

Friday 1 March 2013

காதல் நகைச்சுவை கதைகள்

வணக்கம் நண்பர்களே! எல்லோரும் நலம் தானே.  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு வழியா உங்க எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. ஒரு மாதம் காலமாக பதிவு போடாம  உங்க எல்லாரையும் நிம்மதியா இருக்கு விட்டாச்சு. இனிமே இம்சை ஆரம்பம் படிங்க சிரிங்க ஹிஹி.


1.காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.
திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.


2.ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.
அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.
உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.
பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான். 
அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.
3.ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.
பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.
கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.