Saturday, 22 June 2013

தோரணம் 22/06/2013


அரசியல் கூத்து;

எனக்கு ரொம்ப நாள ஒரு சந்தேகம் இந்த அரசியல் வியாபாரிகள் எல்லாம் கோடை காலம் வந்தாலே போதும் உடனே நம்ம தமிழக மக்களின் தாகத்தை தணிக்க வந்த குற்றால அருவி போல தண்ணீர் பந்தல் என்ற பெயரில் ஒரு கொட்டகை போட்டு அவங்க விளம்பரத அதுல எழுதி அன்னைக்கு சிறப்பு விருந்தினர் ஆகா அந்த ஊரு எம் எல் ஏ வந்து எல்லாருக்கும் தாகத்தை தணிப்பராம். அதுக்கு பிறகு அந்த ஆள மறுபடி தேர்தல் வரும் போது தான் பார்க்க முடியும்.

என் கேள்வி இது தான். இவனுங்க நடத்துன்ன நாடகத்த மறுநாள் போயி பாருங்களேன். பானை எங்கயோ உருண்டு போயி கிடக்கும் தண்ணி குடிக்க பிடிச்சு வைக்க மாட்டாங்க அப்பறம் என்ன மயித்துக்கு இவ்ளோ விளம்பரம் இந்த பரதேசி நாயிகளுக்கு.


குதிரை பேரம்;

நம்ம தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கும் நம்ம மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறவும் நியமிக்கபடுபவர்கள் இந்த எம் பி கள். ஆனா இப்போ நடக்குற கூத்த பாருங்க. இப்படி பேரம் பேசி இவங்க பாடுபட்டு போறது நம்ம மக்களோட நலனுக்காகவா இல்லை.

எல்லாரையும் பாருங்க எவனுக்கு எதிர்பார்த்த தொகை எங்க கிடைக்குதோ அங்க எல்லாம் ஓடி போறானுங்க. இந்த கிருஷ்ணசாமி,ஜவஹிருல்லாஹ் எல்லாரையும் பாருங்க போன சட்டசபை நிகழ்ச்சில மூடிகிட்டு ஓரமா உக்காந்துகிட்டு அம்மா புகழ் பாடிகிட்டு இருந்தாங்க. இப்போ ஆதரவு திமுகவிற்காம்  அங்க தொகை ஏதும் ஒத்து வரலையோ ஒரு இடத்துல்ல இருந்து பழக்கமே இல்லையா உங்களுக்கு எல்லாம் ?


ஜிகர்தண்டா;

போன வருடம் சத்தமே இல்லாமல் சாதனை புரிந்த படம் பிட்சா. அந்த படத்தோட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பு இந்த ஜிகர்தண்டா. படத்தோட நாயகன் சித்தார்த் நாயகி லட்சுமி மேனன் மற்றும் சிம்ஹா கர்ணா என முதல் படத்தில் கலக்கியவர்கள் இதிலும் தொடர்கிறார்கள் இவங்க நடிக்கிறாங்க.

மதுரை தான் கதைக்களம் பெயர பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஆனா இதற்காகவெல்லாம் இந்த படத்தின் மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கவில்லை ஒரு ஆளு அவரு பெயர்  சோமசுந்தரம் யாருடா இந்த ஆளுன்னு கேக்குறிங்களா எஸ்.பி.சரண் தயாரிப்பில் வந்து அவருக்கு துண்டை போட்டு விட்ட படமான ஆரண்ய காண்டம் அந்த படத்துல்ல ஒரு சிறு வயது மகனுடன் எதார்த்தமாக இயல்பான  ஒரு தந்தையாக கலக்கி இருப்பாரே அவரு தான்.

அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் அவரை காண முடியவில்லை. நம்ம தமிழ் சினிமால இயல்பாய் நடிக்க தெறித்த ஆளாக இருந்தாலே தூரத்தி விட்டு விடுவார்கள் போல.



இரங்கல்;

மணிவண்ணன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர்களில் நடிகர்களில் ஒருவர். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிக இயல்பாக கொண்டு வரும் ஆற்றல் கொண்டவர்.

அவரை நான் இயக்குனராக ரசித்ததை விட ஒரு நல்ல காமெடியனாக ரசித்ததே அதிகம். உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, நினைத்தேன் வந்தாய், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் அவரது காமெடி மிக நன்றாக இருக்கும். இத்தனை வயதினிலே அவர் இறந்தது தமிழ் சினிமாவிற்கு இழப்பு தான்.



எதிர்நீச்சல்;

இந்த படம் வந்தப்பவே பார்க்கணும் என்று நினைத்தேன் நல்ல விமர்சனம் பெற்று இருந்தது. என்னமோ தெரியல்ல இந்த படத்த பார்க்கும் சந்தர்பம் அமையவே இல்லை. நானும் இந்த படத்த மெனக்கெட்டு பார்க்க விரும்பவும் இல்லை. ஏன் என்றால் சின்னத்திரையில் ரசித்த அளவிற்கு பெரிய திரையில் அவரை பார்க்க பிடிக்கவில்லை.

நேற்று தான் படம் பார்த்தேன் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழகாகவும் நன்றாகவும் நடித்து இருக்கிறார். படத்தில் சிவாவை விட அவரது நண்பராக நடித்துள்ள சதீஷ் மிகவும் கவருகிறார். படம் இடைவேளை வரை மிக நகைச்சுவையாக செல்கிறது அதன் பின்பு மாரத்தான் ஆரம்பம் ஆனவுடன் தொய்வடைந்து முடிகிறது. அவரின் முந்தைய படத்திற்கு இது தேவலாம்.


மனிதநேயம்;
எவ்வளவு உண்மையான வரிகள்

நன்றி வணக்கம்

4 comments:

வெற்றிவேல் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

மனித நேய கவிதை சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் said...

தோ"ரண"மும், கவி வரியும் அருமை...

ராஜி said...

தோரணம் நல்லாவே இருக்கு

JR Benedict II said...

கலக்கல் தோரணம் தல.. சினிமா செய்திகளை குறைச்சா (தோரணத்துக்கு 1 படி ஓகே) இன்னும் சூபரா இருக்கும்