Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Friday, 6 December 2013

வெங்காயத்தின் மகிமை


வெங்காயத்தின் காரத் தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும், வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலின் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும், வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செ‌லினியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சனை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும் தேவையான செலினியச் சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள் செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

Saturday, 8 June 2013

அறிவியல் ஆயிரம் 08.06.13


வணக்கம் நண்பர்களே! 

நாம படிச்ச எவ்ளவோ நல்ல விசயங்களை இந்த பதிஉலகில் பதிவாக  பகிர்ந்து இருப்போம். அது அதிகமான வாசகர்களை போய் சேருவதில்லை. ஆனா இந்த சினிமாவ பத்தின பதிவு போட்டா மட்டும். மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது.  அந்த அளவு இந்த சினிமா மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சும்மாவா அதனாலேயே எத்தன தகுதி இல்லாத சினிமாகாரர்களை நம்ம மக்கள் முதல்வர் ஆக்கி அழகு பார்த்து இருகாங்க பார்த்து கொண்டும் இருகாங்க கொடுத்து வச்சவங்கயா சினிமாக்காரர்கள். அப்பறம் என்ன 
ம--துக்கு  சினிமாவ பத்தி நீ எழுத்துற அப்படி என்று நீங்கள் கேட்கலாம். அண்ணே ஹிட்ஸ் அப்படிங்குறது பதிவர்கள் ரத்தத்திலேயே ஊறி போனதுன்னே அத மாத்த முடியும்மா முடியாது அதான் யாருமே படிக்காத செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு அனைவரும் படிக்க விரும்பும் செய்திகளை  வெளியிடலாம் என்ற எண்ணம் தான். 

ஆனாலும் நல்ல விடயங்களை தேடி படிக்கும் நபர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவாக வாரம் வாரம் பொது அறிவு விரும்பிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவியல் ஆயிரம் பகுதி வெளி இடப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

கடல் நீர் எப்படி குடி நீர் ஆகிறது?

கடல் நீர், ரொம்பவே உப்புக் கரிப்பதை அறிவிர்கள். அதிலிருந்து குடிநீர் தயாரித்து விநியோகிப்பதாக செய்திகளையும் படித்திருப்பிர்கள். அவ்வளவு உப்பு நீர் எப்படி குடிநீராக மாறுகிறது என்று தெரியுமா?

கடல் நீரிலுள்ள உப்புகளை நீக்கினால் அது குடிநீராக மாறிவிடும். கடல் நீரை குடிநீராக்கும் முறைக்கு 'உப்பு நீக்குதல் முறை' என்றே பெயர். 3 முறைகளில் கடல் நீரை உப்பு நீக்க செய்யலாம்.

அனைவரும் பரவலாக அறிந்த உப்பு நீக்கும் முறை 'ஆவியக்குதல் முறை' கடல் நீரை ஆவியாக்கி குளிர்விக்கும் பொழுது ஆவியாகி குளிர்ந்தது குடிநீராகவும், உப்புகள் படிமனாகவும் மாறுகிறது.

உறைய வைத்தல் முறையிலும் உப்பு நீரை குடி நீராக்கலாம். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் நிறைந்து இருப்பதை அறிவிர்கள். அவை எல்லாமே நல்ல குடிநீர் தான். இதே போல உறைய வைத்தல் முறையிலும் குடிநீர் தயாரிக்கலாம்.

மின் கலவை பகுப்பு முறையிலும் குடி நீர் தயாரிக்கபடுகிறது. சவ்வூடு பரவல், அயனிப் பரிமாற்றம் ஆகிய முறைகளிலும் கடல் நீரின் உப்பு தன்மையை நீக்கலாம். ஆனால் இவை எல்லாமே செலவு மிக்கவை.

பாம்பு பால் குடிக்குமா?

நமது ஹாலிவுட் புகழ் இயக்குனர் இராம நாராயணன் படங்களில் நாம் பார்த்து இருப்போம் பாம்பு பால் குடிப்பது போல காட்சிகள் இருக்கும் ஆனால் உண்மையிலேயே பாம்பு பால் குடிக்குமா என்றால் குடிக்காது என்பதே உண்மை. பொதுவாக பாம்புகள் திட பொருட்களையே உணவாக உண்ணும். தவளை,தேரை,எலிகள்,சிறு பறவைகள், பூச்சிகள் ஆகியனவையே பாம்பின் உணவுகள். பாம்பகள் திரவ நிலையில் எதையுமே உண்ணாது. சில பாம்புகள் அரிதாக நீரை பருகும். இதுபோலவே பாம்புகள் மகுடிக்கு ஆடும் என்பதே பொய்.

காது சொல்லும் செய்தி;

காதுகள் மூலம் செய்திகளை கேட்கலாம் சொல்ல முடியுமா?

பிரபல காட்டு நாய் இனம் ஜேக்கல். இவை தங்கள் கூட்டதினருக்கு காது அசைவின் மூலமே செய்திகளை சொல்கின்றன. அதே போல கால்கள், மற்றும் வாலை அசைத்தும் சங்கதிகளை பரிமாறி கொள்கின்றன.

மாறாத வெப்பநிலை;

பூமியில் இன்ன்றைய வெப்ப நிலை நாளை கூடி விடுகிறது. மறு நாள் மழை பெய்து வெப்ப நிலை அப்படியே தலை கீழாய் குறைந்து விடுகிறது. இது போலவே பூமியின் உட்பகுதியிலும் வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்குமா என்றால் இல்லை. பூமியின் உட்பகுதி மாறாத வெப்பநிலையை கொண்டது.

பாரிஸில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில் தரைக்கு கீழே 28 மீட்டர் ஆழத்தில் பாதாள அறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு லாவைய்ச்சர் என்ற அறிவியல் வல்லுநர் வெப்பமானி ஒன்றை வைத்தார். அது இன்றைக்கும் ஒரே வெப்ப நிலையை தான் காட்டிக்கொண்டு உள்ளது. அந்த அளவு 11.7 சென்டிகிரேட் வெப்ப நிலையாகும். இதிலிருந்து பூமியின் வெப்ப நிலை மாறுவதில்லை எனபது தெளிவானது.

ஆனால் பூமிக்கடியில் ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து கொண்டே போகும் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா.

நம்ம பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் ஸ்பெஷல் தலைப்புல பதிவு எழுதுறாங்க உதாரணதுக்கு

மெட்ராஸ்பவன்ல -ஸ்பெஷல் மீள்ஸ்
பரிசல்காரன்-அவியல்
வீடு திரும்பல்- தொல்லை காட்சி
கேபிள் சங்கர்-கொத்து பரோட்டா
ஜாக்கி சேகர்-உப்பு காத்து
பிலாசபி-பிரபா ஒயின்ஷாப்

இதுபோல வாரம் வாரம் நம்ம வலைதளத்திலும் பதிவு இடம் பெறும் அதற்கான தலைப்பு தான் இன்னும் சரியாய் கிடைக்கல உங்களுக்கு தெரிஞ்ச தலைப்ப பின்னோட்டத்தில் சொல்லுங்களேன். அழகான தலைப்பு கூறுவோருக்கு பரிசு காத்து இருக்கிறது.



  

Friday, 5 April 2013

தொப்பையை குறைக்க வழி;



* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.


* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.


* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.


இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.


நன்றி;முக நூல்