Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, 9 September 2013

கபாலி இன்னா சொல்றாருன்னா 09/09/2013


எழுத்துகள்;

தமிழ் மொழி 247 எழுத்துகள் கொண்டது என்பது நமக்கு தெரியும் அதேபோல பிற மொழிகளும்  எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

ஆங்கிலம் -  26 எழுத்துகள்
ஸ்பெயின் - 27 எழுத்துகள்
இத்தாலி  - 20 எழுத்துகள்
அரபு - 28 எழுத்துகள்
லத்தின் - 22 எழுத்துகள்
துருக்கி - 28 எழுத்துகள்
கிரேக்கம் - 24 எழுத்துகள்
பாரசீகம் - 31 எழுத்துகள்
ஜெர்மனி - 26 எழுத்துகள்
சமஸ்கிருதம் - 48 எழுத்துகள்
பிரெஞ்சு - 26 எழுத்துகள்
சீனா - 214 எழுத்துகள்


தெரிந்து கொள்ளுங்கள் ;

1. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் லண்டனில் உள்ள 'மெட்ரோ பாலிடன் லைன்' ஆகும்.

2. விமானம் ஓட்ட லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய தொழில் அதிபர் ஜே.ஆர்.டி.டாடா ஆவார்.

3. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு அமெரிக்கா.

4. 'இக்ளு' எனப்படும் வீடுகள் பனிக்கட்டிகளால் கட்டப்பட்டது.

5. தங்க கடற்கரை என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்க நாடு கானா ஆகும்.

6. ஆங்கில கால்வாயை முதலில் நீந்தி கடந்தவர் 'மேத்யு வெப்' ஆவார்.

7. செவ்வாய் கிரகத்தில் முதலில் இறங்கிய ரோபோ 'ஆரெஸ் வல்லிஸ்'


எறும்பு ?  

எறும்புகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடம். 50 முதல் 100 நாட்கள் வரை இரை இல்லாமல் உயிர் வாழும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு. ஆனால் அவற்றின் சேமிப்பு பழக்கத்தால் அவை பட்டினி கிடக்கும் வாய்ப்புகள் குறைவு தான். ஏனெனில் ஒவ்வொரு எறும்புக்கும் தல 200 கிராம் உணவு வீதம் சேமித்து வைக்கபட்டிருக்கும்.


உலகின் அசுத்தமான நகரங்கள்;

உலகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, அசுத்த காற்று மற்றும் காரில் இருந்து வெளி வரும் அசுத்த புகை ஆகியவற்றை கணக்கிட்டு  அசுத்த நகரங்களாக 5 நகரங்களை குறிப்பிட்டுள்ளனர் அவை;

1. பாங்காங்
2.பீஜிங்
3.டெல்லி
4.கொல்கத்தா
5.டெக்ரான்

இன்னும் பிற தகவல்களுடன் வேறொரு பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்!

Tuesday, 30 July 2013

சயின்ஸ் கபாலி இன்னா சொல்லுறாருன்னா 30/07/13


இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !

•வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது.

• குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.

• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாகஉள்ளது என அர்த்தம்.

• கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

• சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

• இயர் (ear) போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், வெடிக்கும்.

• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறுவிதமாக இருக்கும்.

• 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

• சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

• பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம்வலது, இடது என நடக்கும்.

• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

• பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

• 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

• குழந்தைகள் பிறக்கும் போதுமூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

• வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

• சூயிங்கத்தை முழுங்கினால்,வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

• கண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,"பாஸ்பீன்ஸ்" எனப்படும்..


கொய்யா - அடங்கொய்யா;

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துகள் இருப்பதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றாக பழுத்த கொய்யாவுடன், மிளகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் நீங்கி சோர்வு இருந்த இடம் தெரியாமல் போய் விடுமாம்.

கொய்யா பழத்துடன் சப்போட்டா பழம் தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக செரிமானம் ஆவதுடன் மலசிக்கல் தீரும் வயிற்று புண்ணும் குணமாகும்.

அதோடு வயிற்றுபோக்கு, மூட்டுவலி,அரிப்பு,மூல நோய், தொண்டை புண் போன்ற பாதிப்புகளும் அகலும் என்று கூறுகிறார்கள்.

கொய்யா பழத்திலும் அதன் கொட்டைகளிலும் புரதம்,கொழுப்பு சத்து, மாவு சத்துகள் சிறிதளவே இருக்கும் வேளையில் நார்ச்த்து, கால்சியம் ,இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

பழுக்காத கொய்யா காய் வயிற்று கடுப்பையும் வயிற்றோடத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தில் பட்டையும் வேர் ஆகியவற்றை கொண்டு தயாரித்த கசாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வாயிற்று போக்கை தடுக்கும்.

படித்தீர்களா கொய்யாவின் மகத்துவத்தை.

Saturday, 8 June 2013

அறிவியல் ஆயிரம் 08.06.13


வணக்கம் நண்பர்களே! 

நாம படிச்ச எவ்ளவோ நல்ல விசயங்களை இந்த பதிஉலகில் பதிவாக  பகிர்ந்து இருப்போம். அது அதிகமான வாசகர்களை போய் சேருவதில்லை. ஆனா இந்த சினிமாவ பத்தின பதிவு போட்டா மட்டும். மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது.  அந்த அளவு இந்த சினிமா மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சும்மாவா அதனாலேயே எத்தன தகுதி இல்லாத சினிமாகாரர்களை நம்ம மக்கள் முதல்வர் ஆக்கி அழகு பார்த்து இருகாங்க பார்த்து கொண்டும் இருகாங்க கொடுத்து வச்சவங்கயா சினிமாக்காரர்கள். அப்பறம் என்ன 
ம--துக்கு  சினிமாவ பத்தி நீ எழுத்துற அப்படி என்று நீங்கள் கேட்கலாம். அண்ணே ஹிட்ஸ் அப்படிங்குறது பதிவர்கள் ரத்தத்திலேயே ஊறி போனதுன்னே அத மாத்த முடியும்மா முடியாது அதான் யாருமே படிக்காத செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு அனைவரும் படிக்க விரும்பும் செய்திகளை  வெளியிடலாம் என்ற எண்ணம் தான். 

ஆனாலும் நல்ல விடயங்களை தேடி படிக்கும் நபர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவாக வாரம் வாரம் பொது அறிவு விரும்பிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவியல் ஆயிரம் பகுதி வெளி இடப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

கடல் நீர் எப்படி குடி நீர் ஆகிறது?

கடல் நீர், ரொம்பவே உப்புக் கரிப்பதை அறிவிர்கள். அதிலிருந்து குடிநீர் தயாரித்து விநியோகிப்பதாக செய்திகளையும் படித்திருப்பிர்கள். அவ்வளவு உப்பு நீர் எப்படி குடிநீராக மாறுகிறது என்று தெரியுமா?

கடல் நீரிலுள்ள உப்புகளை நீக்கினால் அது குடிநீராக மாறிவிடும். கடல் நீரை குடிநீராக்கும் முறைக்கு 'உப்பு நீக்குதல் முறை' என்றே பெயர். 3 முறைகளில் கடல் நீரை உப்பு நீக்க செய்யலாம்.

அனைவரும் பரவலாக அறிந்த உப்பு நீக்கும் முறை 'ஆவியக்குதல் முறை' கடல் நீரை ஆவியாக்கி குளிர்விக்கும் பொழுது ஆவியாகி குளிர்ந்தது குடிநீராகவும், உப்புகள் படிமனாகவும் மாறுகிறது.

உறைய வைத்தல் முறையிலும் உப்பு நீரை குடி நீராக்கலாம். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் நிறைந்து இருப்பதை அறிவிர்கள். அவை எல்லாமே நல்ல குடிநீர் தான். இதே போல உறைய வைத்தல் முறையிலும் குடிநீர் தயாரிக்கலாம்.

மின் கலவை பகுப்பு முறையிலும் குடி நீர் தயாரிக்கபடுகிறது. சவ்வூடு பரவல், அயனிப் பரிமாற்றம் ஆகிய முறைகளிலும் கடல் நீரின் உப்பு தன்மையை நீக்கலாம். ஆனால் இவை எல்லாமே செலவு மிக்கவை.

பாம்பு பால் குடிக்குமா?

நமது ஹாலிவுட் புகழ் இயக்குனர் இராம நாராயணன் படங்களில் நாம் பார்த்து இருப்போம் பாம்பு பால் குடிப்பது போல காட்சிகள் இருக்கும் ஆனால் உண்மையிலேயே பாம்பு பால் குடிக்குமா என்றால் குடிக்காது என்பதே உண்மை. பொதுவாக பாம்புகள் திட பொருட்களையே உணவாக உண்ணும். தவளை,தேரை,எலிகள்,சிறு பறவைகள், பூச்சிகள் ஆகியனவையே பாம்பின் உணவுகள். பாம்பகள் திரவ நிலையில் எதையுமே உண்ணாது. சில பாம்புகள் அரிதாக நீரை பருகும். இதுபோலவே பாம்புகள் மகுடிக்கு ஆடும் என்பதே பொய்.

காது சொல்லும் செய்தி;

காதுகள் மூலம் செய்திகளை கேட்கலாம் சொல்ல முடியுமா?

பிரபல காட்டு நாய் இனம் ஜேக்கல். இவை தங்கள் கூட்டதினருக்கு காது அசைவின் மூலமே செய்திகளை சொல்கின்றன. அதே போல கால்கள், மற்றும் வாலை அசைத்தும் சங்கதிகளை பரிமாறி கொள்கின்றன.

மாறாத வெப்பநிலை;

பூமியில் இன்ன்றைய வெப்ப நிலை நாளை கூடி விடுகிறது. மறு நாள் மழை பெய்து வெப்ப நிலை அப்படியே தலை கீழாய் குறைந்து விடுகிறது. இது போலவே பூமியின் உட்பகுதியிலும் வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்குமா என்றால் இல்லை. பூமியின் உட்பகுதி மாறாத வெப்பநிலையை கொண்டது.

பாரிஸில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில் தரைக்கு கீழே 28 மீட்டர் ஆழத்தில் பாதாள அறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு லாவைய்ச்சர் என்ற அறிவியல் வல்லுநர் வெப்பமானி ஒன்றை வைத்தார். அது இன்றைக்கும் ஒரே வெப்ப நிலையை தான் காட்டிக்கொண்டு உள்ளது. அந்த அளவு 11.7 சென்டிகிரேட் வெப்ப நிலையாகும். இதிலிருந்து பூமியின் வெப்ப நிலை மாறுவதில்லை எனபது தெளிவானது.

ஆனால் பூமிக்கடியில் ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து கொண்டே போகும் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா.

நம்ம பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் ஸ்பெஷல் தலைப்புல பதிவு எழுதுறாங்க உதாரணதுக்கு

மெட்ராஸ்பவன்ல -ஸ்பெஷல் மீள்ஸ்
பரிசல்காரன்-அவியல்
வீடு திரும்பல்- தொல்லை காட்சி
கேபிள் சங்கர்-கொத்து பரோட்டா
ஜாக்கி சேகர்-உப்பு காத்து
பிலாசபி-பிரபா ஒயின்ஷாப்

இதுபோல வாரம் வாரம் நம்ம வலைதளத்திலும் பதிவு இடம் பெறும் அதற்கான தலைப்பு தான் இன்னும் சரியாய் கிடைக்கல உங்களுக்கு தெரிஞ்ச தலைப்ப பின்னோட்டத்தில் சொல்லுங்களேன். அழகான தலைப்பு கூறுவோருக்கு பரிசு காத்து இருக்கிறது.