Showing posts with label இளைய தளபதி. Show all posts
Showing posts with label இளைய தளபதி. Show all posts

Sunday, 23 June 2013

தலைவா வெளியிட்டு விழா படங்கள் & பாடல்கள்


நேற்று மாலை தலைவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. ஜி.வி.பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் விஜய்யை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார்கள். நாளை - அதாவது இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதற்காக.

விழாவின் தொடக்கத்தில் லேசரில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா என உலகத் தலைவர்களின் படங்களை ஒளிரச் செய்தார்கள். கடைசில் நாம் எதிர்பார்த்த அந்த திட்டமிட்ட விபத்தும் நடந்தது. தலைவர்கள் வரிசையில் கடைசியாக விஜய்யின் முகமும் லேசரில் ஒளிர... அரங்கம் அதிர்ந்த அளவுக்கு நம் மனமும் அதிர்ந்தது. பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று....

சத்யராஜ் கொஞ்ச காலமாக விஜய்யின் கொள்கைப் பரப்பு செயலாளராக நடந்து கொள்கிறார். இந்த விழாவிலும் அப்பணியை சிறப்பாகவே செயல்படுத்தினார். இங்கே உலக தலைவர்களின் முகங்களை லேசாரில் காண்பித்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பெரியார், எம்ஜிஆர், பிரபாகரனின் முகங்களும் இடம்பெற்றிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றார். அடுத்து அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் ஜேம்ஸ் கேமரூனின் இதயம் சுக்கு நூறாக உடைந்திருக்கும். தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பாராட்டியவர், அவர் தென்னகத்து ஜேம்ஸ் கேமரூன் என்றார், எவ்வித சங்கோஜமும் இல்லாமல். எப்படிப்பா...?

சந்திர பிரகாஷ் ஜெயின் - படத்தின் தயாரிப்பாளர் - தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று ஆஸ்திரேலிய நிகழ்வு ஒன்றை விவரித்தார். அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் பேச்சை.

ஜுன் 8 நடைபெறுவதாக இருந்த பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டதைப் பற்றி தீனி போடுவார் என்று பார்த்தால், படத்தைப் பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று இரண்டே வார்த்தைகளில் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டார்.

ரசிகர்களின் ஆரவாரத்தை தாண்டி கேட்டது நம் புரட்சி தமிழனின் ஜால்ரா சத்தம்தான். விஜய் தலைவா ஆயிட்டார், இனி அவரது ரசிகர்கள் தளபதிகள் ஆக வேண்டியதுதான் என்றார். அகராதியை தலைகீழாக புரட்டியும் இதற்கு அர்த்தம் விளங்கவில்லை. தெரிந்ந்தவர்கள் பின்னூட்டமிடலாமே.


1.வாங்கண்ணா;

விஜய் & சந்தானம் இணைந்து பாடி அசத்தி இருக்கிறார்கள் கேட்க மிக சூப்பரா இருக்கு. நம்ம தளபதி பாடும் பாடல்கள் அனைத்தும் கலக்கல் ரகம் அதில் இந்த பாடலும் இணைந்து கொண்டது வாங்கண்ணா அசத்துங்கண்ணா. நானும் இந்த பாடல அப்லோட் பன்றேன் 2 மணி நேரம் ஓடுதே தவிர அப்லோட் ஆகவில்லை.

2.யார் இந்த சாலை ஓரம்;

ஜி.வி. பிரகாஷ் அவரின் வருங்கால மனைவி சைந்தவி இணைந்து பாடி இருகின்றனர் லவ்லி மெலோடி சாங். ரசித்து அனுபவித்து இருவரும் பாடி இருக்கின்றர்கள்.

  3.சொல் சொல் அன்பே;

இது இன்னொரு மெலோடி கேட்க மிக சுமார் தான்.

4.தமிழா தமிழா;

தமிழனின் பெருமையை சொல்கிறோம் என்ற பாடல் இந்த பாட்டு திரையில் வரும் பொழுது அனைவரும் தம் அடிக்க வெளியே செல்வது உறுதி.

5.தளபதி தளபதி;

தலைவான்னு பெயர் வச்சாச்சு இளைய தளபதியின் புகழ் பரப்ப ஒரு பாடல் இல்லையேன்றால் எப்படி எனவே மொக்கையா ஒரு பாடல். தளபதி திருந்துனாலும் சுத்தி இருக்குற பக்கிங்க விடாது போல.

எ.எல். விஜய் இயக்கம் இவரின் அனேக படங்கள் காப்பி தான். இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுது கூட தேவர் மகன் படம் தான் நினைவிற்கு வருகிறது. பார்க்கும் பொழுது துப்பாக்கி அளவிற்கு இருக்காது என்றே தோணுகிறது.

ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கு அது என்னன்னு தானே கேக்குறிங்க வழக்கம் போல தீவிரவாதி, குண்டு வெடிப்பு அதுக்கு காரணம் இஸ்லாமியர்கள் இது மட்டும் கண்டிப்பா இடம் பெற்று இருக்கும். 


நன்றி,வணக்கம் 

Tuesday, 21 May 2013

வாழ்க்கை சிறப்பாக அமைய?



ஐபிஎல்;

இந்த வருஷம் நான் ரொம்ப எதிர்பார்த்த அணி ராயல் சேலன்ன்ஜர்ஸ். இறுதியல் பல்பு வாங்கிருச்சு இனி கெயில்,ஏ பி டி அதிரடி ஆட்டங்களை அடுத்த வருடங்களில் தான் காண முடியும். நான் எதிர்பார்கவே இல்ல சன் ரைசெர்ஸ் டாப் 4 வரும் என்று என்ன தான் நாம அய்யாவின் குடும்பத்தை வாரி கொண்டு இருந்தாலும் அவர்கள் கால் பதிக்கும் துறைகளில் வெற்றி பெற்று கொண்டே வருகிறார்கள் இது அவர்களில் குடும்ப ராசி போல.


ஜாதி வெறி;

கால நேரம் நம் மக்களை எவளவோ மாற்றி இருந்தாலும் ஒரு சில மக்கள் இன்னும் மாறவே இல்ல. இன்றைய செய்தி தாளில் ஜாதி மாற்றி காதல் திருமணம் புரிந்து கொண்ட தன் தங்கையை நண்பர்களின் உதவியுடன் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் கைது. இத்தனைக்கும் தன் அண்ணன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் பாசமாக கரி விருந்து எல்லாம் சமைத்து கொடுத்து இருக்கிறார். அதை சாப்பிட்டு விட்டு சென்று விட்டு மது அருந்தி விட்டு வந்து இந்த செயலை அரங்கேற்றி இருக்கிறார் அந்த அண்ணன்.


இளைய தளபதி அறவிப்பு;

இந்த அரசியல்வாதிகளுக்கே உரிய குணம் என்னவென்ரால் சாதாரணமா தான் பேசுவாங்க ஆனா தன் முன்னே மிக பெரிய கூட்டம் நிற்பதை கண்டு விட்டால் எங்க இருந்து தான் வருமோ அப்படியே அருவி போல கொட்டும் பேச்சு. அதும் அவங்க ஆட்சியா இருந்துச்சுன்னா அள்ளி விடுவானுங்க பாருங்க உங்களுக்கா நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஆனா உருப்புடிய  ஒரு ஆணியும் புடுங்க மாட்டங்க. அதே போல மக்கள் கூட்டதை பார்க்கவும் நம்ம இளைய தளபதியும் நடிக்கிரத விட்டுட்டு உங்களுக்கு சேவை செய்யலாம் என தோன்றுகிறது என அள்ளி விட்டார் உடனே நம்ம மக்களுக்கு அவ்வளவு சந்தோசம் பாருங்க கண்டிப்பா மார்க்கெட் போனதும் வருவாரு போல.


புது கவிதை;

பள்ளியில் படிக்கும் நாட்களில் வாரம் வாரம் வரும் குடும்ப மலரில் வெளி வரும் புது கவிதை பகுதியில் வெளி வரும் கவிதைகளில் பிடித்த கவிதைகளை எழுதி வைத்து கொண்டு பொண்ணுகள்ட்ட கூட படிக்கும் பெண்களிடம் நான் எழுதுனதா காட்டி பந்தா பன்றது உண்டு. பின்பு அந்த மாதிரி எழுதி வைக்கும் பழக்கம் போயிருச்சு இப்பலாம் கவிதை படிகிரதோட சரி சமிபத்தில் நான் ரசித்த கவிதை
முதிர்கன்னி
அப்பாவுக்கு கேட்குமா.. 
அடுத்த தெருவில் வரும்.. 

கல்யாண மேளம்?

எழுதியவர்;ராமன்-சென்னை 



பழ மொழிகள்;

மேல படத்தில் உள்ள அனைத்தையும் நம் வாழ்கையில் கொண்டு வருவோமே ஆனால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.


சிந்தனை செய் மனமே;

நல்லதை எடுத்து காட்டுவதே விமர்ச்சனத்தின் நியாயமான குறிக்கோள் ஆகும்.

நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்கு செய்யும் சேவை ஆகும்.

விரும்பியதை செய்வது சுதந்திரம்,செய்வதை விரும்புவது சந்தோசம்.

நூறு சதவித ஈடு பாட்டுடன் செய்யும் எந்த காரியமும் வீணாவதில்லை.

நன்றி.