தினம்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. புதிய முயற்சிகளை கை ஆள்பவரே இந்த சினிமாவில் நிலையான இடத்தை பிடிகினற்றனர். புதிய தொழில் நுட்பத்துடன் வெளியிடும் பொழுது படம் பார்க்கும் நமக்கும் வித்தியாசமான அனுபவம் கிடைகின்றது. இந்த முயற்சியினால் சினிமா மிகப் பெரிய தொழிலாகவும் மாறியிருக்கிறது.
உதாரணமாக முன்பு இளையராஜா மேஜையில் மியூஸிக் போட்டு காண்பித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்று ஒரு நபர் சினிமாவில் இசையமைக்க விரும்பினால் பல லட்ச ரூபாய்க்கு இசை சார்ந்த உபகரணங்கள் - கணினி உள்பட வாங்கிய பின்தான் யாரையும் சந்திக்கவே முடியும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அமைக்கப்படும் இசையை அதே துல்லியத்துடன் கேட்க நாமும் பல ஆயிரங்கள் செலவளித்து உபகரணங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இசையை பிரமோட் செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதை காணலாம்.
இப்போ எதுக்கு இந்த மொக்கை எல்லாம் அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. மேட்டர் என்னன்னா?
சிவாஜி படத்தில் டால்பி அட்மஸ் என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். ஆனால் அந்த தொழில்நுட்பத்தில் அப்போது எந்தத் திரையரங்கும் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாமல் போனது. இந்நிலையில் டால்பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள சத்யம் சினிமாஸ் { 10 ருபாய் பாப் கான 120 ருபாய்க்கு விற்கும் திரையரங்கம் } டால்பி அட்மஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துக்கு திரையரங்குகளை மாற்றி அமைக்கிறது.
அவசரமாக இந்த கூட்டணி நிகழக் காரணம் விஜய்யின் தலைவா படத்தையும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள்.
சத்யத்தில் இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்த்தவர்கள் வேறு திரையரங்கு பக்கம் செல்ல மாட்டார்கள். ஆக, மற்றவர்களும் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், டால்பி நிறுவனத்துடன் கூட்டணி போட்டாக வேண்டும். நாளையே டால்பி அட்மஸைவிட நவீன தொழில்நுட்பத்தை டால்பி அறிமுகப்படுத்தினால் இதனை தூக்கிப் போட்டு அதற்கு மாற வேண்டும். டால்பி நிறுவனமும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போதும் பல படிகள் வளரும் பல கோடி லாபம் ஈட்டும்.
வேற வழி இல்ல இப்போ படம் பார்க்க திரை அரங்கத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வரும் நபர்களையாவது தக்க வைப்பதற்கு இதுபோல புதிய முயற்சிகளை கையாண்டே ஆக வேண்டும்.
இல்லையென்றால் கோவிந்தா?கோவிந்தா?
|
|
Tweet |
4 comments:
`புதிய தகவல் அளித்தமைக்கு நன்றி!!
தொழிற்களம் வாசியுங்கள்
புதிய முயற்சி சரி... மற்றவை எல்லாம் மக்கள் தலையில்...!
புதிய தொழில்நுட்பம் பற்றி விரிவாச் சொன்னதுக்கு ந்னறி! இதச் சாக்கா வெச்சு டிக்கெட் ரேட்டைக் கூட்டாம இருந்தாச் சரி...!
மக்கள் திரையல்கங்களுக்கு செல்லாததற்கு டிக்கெட் விலை மட்டும் காரணமல்ல..பாதுகாப்பின்மையும் தான்.
Post a Comment