Tuesday 9 July 2013

எந்த வேலை செய்வது?

       
"பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம்.

இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து
 விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்!

சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள்.
1. வாழ்வின் முக்கியதுவம் : 

நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை.

2. வாழ்க்கை ஒரு பாடம் : 

எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

3. உறுதியான சிந்தனை : 

தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

4. நம் நோக்கத்தில் உறுதி : 

உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது.

5. உண்மை நிலை : 

"உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும்.

6. தகவல்களை திரட்டுவது :

 நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

7. கனவை நனவாக்குவது : 

நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும்.

8. மற்றவர்களுடைய ஆதரவு : 

உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும்.

9. வேலையை தொடங்குவது : 

"ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது.

10. நன்றி உணர்வு : 

நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது.

நமது  நண்பர்கள் ஒரு சிறு கதை போட்டி வைத்து உள்ளனர். நம்ம பதிவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

 விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
(see attached 'Marks Calculation Sample')
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Mynthan Shiva (மைந்தன் சிவா)  
Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்) 
Pichaikaaran Sgl (பிச்சைக்காரன்)  
Raja Rajendran (ராஜா ராஜேந்திரன்) 
Val Paiyan (வால் பையன்)  


சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.


5 comments:

Anonymous said...

பயனுள்ள வரிகள்
குறிப்பாக 4 மற்றும் 5.

sathishsangkavi.blogspot.com said...

போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

கூடல் பாலா said...

நல்ல சிந்தனைகள்!

கோகுல் said...

உற்சாகம் தொற்றுநோய் போல-உண்மைதான்.,

Unknown said...

Good Info Brother

keep it up ...

Thanks .