Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Thursday, 30 October 2014

கத்தி - என்னையா பண்ணுனான் என் கட்சிக்காரன் ?


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பத்து மாதங்களுக்கு மேல  ஆகிறது. முன்னலாம்  படம் ரிலிஸ் ஆன உடனே படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனாதான் தூக்கமே வரும் ஆனா இந்த ஆன்ராயிட் மொபைல் வந்ததும் சிஸ்டத்தில் உட்காருவதே இல்லை பிற பதிவர்கள் தளத்தில் பதிவுகள் படிப்பதோடு  சரி. இப்போ கத்தி படத்தை பத்தி எல்லோரும் பதிவு எழுதிட்டாங்க சரி நாமலும் நம்ம பங்குக்கு எழுதுவோம்ன்னு உக்காந்தாச்சு. சரி கத்தி படம் எப்படி?

இந்த படத்தோட கதை எல்லாமே ஆல்ரெடி படிச்சு முடிச்சு இருப்பிங்க. பாதி பேரு படத்தையே பார்த்து முடிச்சு இருபிங்க அதனால கதை எல்லாம் வேணாம். அப்பறம் என்னத்துக்கு இந்த பதிவு எனக்கு ஒன்னு மட்டும் தாங்க புரியவே மாட்டேங்குது. அது என்ன நம்ம விஜய் எது பண்ணுனாலும் ஒரு கூட்டம் மட்டும் அவர குறை சொல்லியே காலத்த ஓட்றாங்க.
.
நம்ம தல அஜித் நடிப்பில் ஆரம்பம் ன்னு ஒரு படம் வந்துச்சு அந்த படத்துல புல்லட் ஜாக்கெட் வாங்குனதுல ஊழல் அதை வெளிக்கொணரும் நாயகன் அதான் படத்தோட கதை. இதையே விஷ்ணுவர்த்தன் ஜவ்வு மாதிரி படத்த போட்டு இழு இழுன்னு  இழுத்து இருப்பாரு. க்ளைமேக்ஸ்ல மட்டும் ஊழல பத்தி தல பேசி இருப்பாரு. அந்த படத்த எல்லாம் ஆகா ஒக்கோன்னு புகழ்ந்தாங்க. இதை சொன்னா நீ விஜய் ரசிகன் அப்படின்னு சொல்ல்வாங்க நான் விஜய் ரசிகன் தான் சுறா படம் பார்க்கும் வரை.இப்போ ஒரு சினிமா விரும்பி மட்டுமே.

ஆரம்பம் படத்தை விட வீரம் படம் எனக்கு பிடித்து இருந்தது. வீரம் படம் பிடித்த அளவு ஜில்லா எனக்கு பிடிக்கவில்லை.

படம் முதல் ஐம்பது நிமிடம் போர்...?
ஆரம்பம் படம் முழுசாவே போர் அதை பார்த்த நாம இதை பார்க்க மாட்டோமா?

 பாட்டு நல்லாவே இல்ல,..?
ஒரு பாட்ட தவிர மற்ற அணைத்து பாட்டும் நல்லாத்தான்  இருக்கு.

சவுண்ட் காத கிழிக்குது, 
அனிருத் பண்ணுன படத்திலேயே இந்த படத்தில் தன ரீ ரெக்கார்டிங் சூப்பர்.

விஜய் முகத்துல ரியாக்சனே இல்ல,..
இந்த படத்தில விவசயிகள கொன்னு அவங்க கை ரேகைய பார்த்துட்டு அழுவாரு பாருங்க பக்கத்துல ஒரு அம்மா அழுதுட்டாங்க.

சமந்தா பெரிய ஸ்கோப் இல்ல,..
நீ அஞ்சான் படம் நினப்புலயே போயி படத்த பார்த்தா எப்புடி? 166 நிமிடத்துல அவ்ளோன்  முடியும் ராசா..

திருட்டு கதை,..
தமிழ் சினிமாவே இப்போ அப்படி தான்  இருக்கு.

கார் பெரெட் கம்பெனிட காச வாங்கிட்டு அவங்களையே குறை சொல்றாங்க,
சொல்லிட்டு போறான் அவனே கவலை படல உனக்கு ஏன்?

விளம்பரத்துல நடிச்சுட்டு இவரு அதை சொல்லலாமா,.
ஆமா அவரு சொல்லறத எல்லாம் நீ கேக்குற மாதிரி பெத்தவங்க சொன்னாலே கேக்க மாட்டோம்..

இன்னும் குறைய அள்ளி தெளிக்குறாங்க.

இந்த படத்த பார்த்துட்டு இண்டர்வெல்ல போயி கோக் வாங்கி குடிச்சுகிட்டு படம் சூப்பர்ல அப்படின்னு சொல்லும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பார்த்துட்டு கோக் குடிக்காம போகும் ரசிகர்கள் இருந்தாங்க  பாருங்க அதுல தான் முருகதாஸ் ஜெயித்துவிட்டார்.

கத்தி-தெறி தெறி தெறி



Saturday, 27 July 2013

பட்டத்துயானை - மலைகோட்டை பார்ட் 2




ரொம்ப நாள் ஆச்சு படம் வெளி ஆகும் அன்னைக்கே அந்த படத்த பார்த்து விமர்சனம் எழுதி அதனால இந்த படத்துக்கு முதல் நாளே கிளம்பிட்டேன்.

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் விஷாலை கட்டி அனைத்து பூபதி பாண்டியன் அழுதார் என செய்திகள் வந்தது அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது. இப்படி பட்ட மொக்கை படத்துல்ல நீங்க நடிக்கிரின்களே உங்க மனசு யாருக்கு வரும் தம்பின்னு நினச்சு அழுதுஇருப்பாரோ? சரி இனி இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அழுவாரு. {கருப்பு எம்.ஜி.ஆர் சந்தோசமா இருப்பாரு}



கதை;

வழக்கமான விஷால் படம் தான். சண்டகோழி படத்தில் இருந்தே விஷாலின் எல்லா படங்களிலும் விஷால்  இருக்குற ஊருக்கு வில்லன்கள் அவரை தேடி வந்து அடி வாங்கி செல்வதே வாடிக்கை. அதே கதை தான் இங்கயும் மலைகோட்டை படத்துல்ல மிச்சம் மீதி வைத்த வில்லன்களை எல்லாம் மீண்டும் திருச்சிக்கு சென்று மிதி மிதி என மிதித்து, புரட்டி புரட்டி அடித்து, நம் உயிரையும், பாக்கெட்டில் இருந்து பணத்தையும் எடுப்பதே இந்த படம்.

நீங்க மலைகோட்டை படம் பார்த்திங்களாஅதே கதை தான் பெருசா மாற்றம் ஒன்னும் இல்லை.

1. அந்த படத்தில் ப்ரியாமணியை கல்லூரிக்கு பாதுகாப்பாக தேர்வு எழுத அழைத்து செல்வார் அதே போல இங்கு ஐஸ்வர்யாவை ஸ்கூல் தேர்விற்கு அழைத்து செல்கிறார்.

2. அந்த படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் பட்டுகோட்டையில்இருந்து திருச்சி வருவாரு. இந்த படத்துல்லசரவணன் என பெயர் மாற்றி மதுரையில் இருந்து வருகிறார்.

3. அந்த படத்தில் ரௌடி அண்ணன் தம்பியை கொல்லுவார். இந்த படத்தில் மாமா,மைத்துனர்.

4. அந்த படத்தில் ஒத்தை ஆளாக வருவார். இந்த படத்தில் 5 அல்லகைகள் பத்தாததுக்கு கையில் சானக்கரண்டி உடன் திருச்சியில் அலைகிறார். கேட்டால் சமையல் செய்பவராம் சமைக்கிரத தவிர மத்த எல்லாம் பன்றானுங்க.

5. அந்த படத்தின் பாடலாவது தேவலாம் இங்கே அதும் சுத்த வேஸ்ட்.
   

விஷால் நீங்க நடிச்ச சண்டகோழி படம் மட்டுமே எங்களுக்கு போதும் அதையே நாங்க திரும்ப திரும்ப பார்த்துக்குறோம். நீங்க மேற்கொண்டு நடிச்சு எங்கள சாவ அடிக்காதிங்க. நீங்களும் உங்க அண்ணனை போல கல்யாணம் செய்து கொண்டு வேற எதாவது பொலப்ப பார்கலாம்.



ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த பாப்பலாம் நடிக்க வரலைன்னு யாரு அழுத? அதான் ஆக்சன் கிங் நிறைய சம்பாதிச்சு துட்டு சேர்த்து வச்சு இருக்காருல்ல பேசாம கல்யாணத்த பண்ணிட்டு போங்க. தமிழ் சினிமால தான் இந்த மாதிரி கூத்துலாம் நடக்கும் சிங்கம 2 ல ஹன்சிகா பள்ளி கூடம் போவாங்களாம், இந்த படத்துல்ல இந்த பாப்பா பள்ளிக்கு போகுது விட்டா இவனுங்க பரவை முனியம்மாவயே ஸ்கூல்லிற்கு அனுப்புவாங்க. அதையும் நாம பார்த்து தொலையனும் என்ன கருமம்டா.



இந்த படத்துல வர ஒரே ஆறுதல் நம்ம சந்தானம் தான். கௌரவம் என்ற கதாபத்திரத்தில் நம்ம சிரிக்க வைக்கிறாரு. அவரும் இல்லேன்னா நான் பாதி படத்தில் இருந்தே ஓடி வந்து இருப்பேன். அவரோட காமெடியும் ரொம்ப சூப்பராலாம் இல்ல ஏதோ இந்த மொக்கை படத்த பார்க்குறதுக்கு அது தேவலைன்னு தோணுது.

இசை தமன் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரிலாம் இல்ல.



இயக்குனர் பூபதி பாண்டியன் இவரது திருவிளையாடல் ஆரம்பம், காதல் சொல்ல வந்தேன் என்னை ரொம்ப கவர்ந்த படங்கள் இவரு அதே போல மென்மையான நகைச்சுவை கலந்த காதல் படங்கள் எடுப்பதோட நிறுத்திக்கலாம். வராதத எதுக்கு போயி எடுத்து அசிங்க படனும் இந்த மாதிரி மசலா படமெல்லாம் நம்ம ஹரி பார்த்துகுவாறு.

தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன் 100 ரூபாய் கட்டணம் இந்த படம் பார்க்குறதுக்கு பார்காமலே இருந்துறலாம் காசாவது மிச்சம்.

மொத்தத்தில் பட்டதுயானை நம்மல துரத்தி மிதிக்க வருது எல்லாம் தப்பிச்சு ஓடிருங்க.  


Friday, 17 May 2013

நேரம்-திரைவிமர்சனம்


ஒரு படம் நல்லா எடுத்தா மட்டும் போதாது அந்த படத்த மக்களிடம் அழகாக கொண்டு வந்து சேர்க்கணும் அப்போது தான் அந்த படம் வெற்றியடையும். நிறைய நல்ல படங்கள் இது போல சரியாக விளம்பர படுத்தாமல் வந்ததே தெரியாமல் தியேட்டரை விட்டு காணாமல் போயி இருக்கிறது. உதரணமாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற படமான ஆரண்ய காண்டம் இந்த படம் பலத்த பாராட்டை பெற்றாலும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காததால் தோல்வி அடைந்தது. சில மட்டமான படம் மிக பெரிய விளம்பரத்தால் ஒரு வாரத்திலேயே நல்ல லாபம் அடைவதும் உண்டு.

நேரம் இப்படி ஒரு படம் தயாரானதே ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை பல பேருக்கு தெரியாது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின்னின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் கைப்பற்றி வெளியிடுகிறது என்ற உடனே படத்திற்கு ஒரு வித எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

கதை;

 வேலை இல்லாத ஒரு பட்டதாரி வாலிபன் நிவின் தன் தங்கையின் திருமணத்திற்காக ஒரு மோசமான கந்து வட்டிகாரன் சிம்ஹாவிடம் கடன் பெற்று தன் தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இதனுடன் அவனிற்கு தன் சிறு வயதில் இருந்தே இவனுடன் சேர்ந்து படித்த பெண் நஸ்ரியாவின் மேல் காதல் வருகிறது. தன் காதலை அவளிடம் வெளிபடுத்த அவளும் ஏற்று கொள்கிறாள். இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தகப்பன் தம்பி ராமையாவிற்கு தெரிய வர அவரும் முதலில் ஒத்து கொள்கிறார். பின் நிவின்ற்கு வேலை போனது தெரிந்தும் தன் மகளிற்கு வேறு இடத்தில மாப்பிளை பார்க்கிறார்.

ஒரு நாள் சிம்ஹா  இன்று மாலை 5 மணிக்குள் தனது கணக்கை முடிக்க வேண்டும் என கூறுகிறான். அதே நேரம் தன்னுடைய காதலி நஸ்ரியா அவளின் அப்பன் தம்பி ராமையா தனக்கு வேறு மாப்பிளை பார்பதாகவும் அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் போன் பண்ணி கூருகிறாள். இதனிடையே நிவின் மச்சான் இன்று மாலை 5 மணிக்குள் தனக்கு சேர வேண்டிய டௌரி பணத்தை கொண்டு வருமாறு கேட்கிறார். தனது மகளை கடத்தியதாக தம்பி ராமையா போலிசிடம் புகார் தருகிறார். போலீஸ் நிவினிற்கு போன் செய்து 5 மணிக்குள் நஸ்ரியாவை  ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கிறது.

இத்தனை பிரச்சனைகளையும் ஒரே நாளில் எதிர்கொள்ளும் நிவின் தனது நண்பனிடம் பணத்தை கடனாக பெற்று கொண்டு சிம்ஹாவிடம் கொடுபதற்காக வரும் பொழுது அவரிடம் இருந்து பணத்தை ஒருவன் திருடி கொண்டு ஓடுகிறான். இதனிடையே நஸ்ரியாவை தவறுதலாக சிம்ஹா கடத்த நிவின் இத்தனை பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை படம் காலையில் துவங்கி மாலையில் முடிகிறது.

 நடிகர்,நடிகைகள்;

அறிமுக நடிகர் நிவின் நன்றாக இயல்பாக நடித்துள்ளார் தமிழில் பெரிய ரவுண்டு வருவரா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அறிமுக நடிகை நஸ்ரியா ஆளு பார்க்க சொக்க கீது இப்பவே பாப்பாக்கு நிறைய வாய்ப்பு வராத கேள்வி பட்டேன் தனுஷ் கூட ஒரு படம் பன்றாங்க
கண்டிப்பா நல்ல எதிர்காலம் இருக்கு.

சூது கவ்வும் படத்தில் தூள் கிளப்பிய பகலவன் கதாபத்திரத்தில் நடித்த சிம்ஹா இதில் கந்து வட்டிகரனாக வருகிறார். அந்த படத்தில் இவரை காமெடி யா பார்தனளவோ என்னவோ இவர பெரிய வில்லனாலம் ஏத்துக்க முடியல்ல ஆனா இதுலயும் நல்லா பண்ணி இருகார்.

 தம்பி ராமையா வழக்கம் போல அருமை. ரொம்ப நாட்களுக்கு பிறகு சார்லி நடிச்சு இருக்கிறார். நண்பர்களாகவும், திருடர்களாகவும் நடித்து இருக்கும் அனைவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.

சிறிது நேரமே வந்தாலும் நாசரின் நடிப்பு கலக்கல்.



இசை;

அறிமுக இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது. கதை ஓட்டத்துடன் வரும் சோமாரி என்ற கானா பாடல் ஆட்டம் போட வைக்கிறது பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு அமைந்து உள்ளது.

இயக்கம் அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். புதியவர்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யமானதாக அமைந்து உள்ளது. இவர்களின் அடுத்த அடுத்த படைப்புகள் நாம் ஆவலுடன் எதிர்பார்க்க தூண்டுகிறது.  

படத்தின் முதல் பகுதி மெதுவாக செல்கிறது. இடைவேளை பின்பு தான் படமே வேகம் எடுக்கிறது. இந்த படத்தின் வெளியிட்டாளர்  உதயநிதி படத்த மூன்று தடவை பார்த்தாராம். அந்த அளவு நமக்கு பொறுமை இல்லைங்க உங்களுக்கு டைம் இருந்தா போயி படத்த பாருங்க ஒரு தடவ பார்க்கலாம். 

தஞ்சை ஜி வி ஸ்டுடியோல பார்த்தேன் 60 ரூபாய் டிக்கெட் விலை கூட்டம் சுமாரா இருந்துச்சு.

நேரம்- நல்ல நேரம் தமிழ் சினிமாவிற்கு