புதினாவின் மகத்துவம் ;
நறுமணமும், நற்சுவையும், மூலிகை தன்மையும் புதினாவின் புகழுக்கு காரணம். இதில் அடங்கி உள்ள சத்துக்களை இந்த வாரம் பட்டியல் போடுவோம்.
* புதினா ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம்.தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. நிழல் மிகுந்த பகுதிகளில் இது நன்கு வளரும்.
* புதினாவில் தாவரங்களில் காணப்படும் சிறப்பு ரசாயன மூலகூறுகல் பல உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாகும்.
* புதினாவின் நோய் எதிர்ப்பு தன்மையை அளவிட்ட ஆய்வாளர்கள், 100 கிராம் புதினா 13 ஆயிரத்து 978 மைக்ரோ முலக்கூறு டி.இ. அளவு நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது என கூறுகிறார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரி-ரேடிக்கல்களை விரட்டும் அளவை கொண்டு, நோய் எதிர்ப்பு அளவு கணக்கிடப்படுகிறது.
* கெட்ட கொழுப்புகள் எதுவும் புதினாவில் இல்லை. உடலுக்கு அவசியமான எண்ணெய்ப் பொருட்கள், ஏராளம் உள்ளன.
* மென்த்தால், மென்த்தோன்,மென்த்தால் அசிடேட் போன்ற எண்ணெய் பொருட்கள் இதில் உள்ளன. இவை எளிதில் ஆவியாகக் கூடியது.
தோல் தொண்டை, வாயிப் பகுதிக்கு நன்மை அளிக்கக் கூடியது.உடலில் காணப்படும் துளைகள் சரியாகச் செயல்பட இவை துணை நிற்கும். அவற்றில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கும்.
*மென்த்தால் சிறந்த வலி நிவாரணியாக பயன் பெறுகிறது. மயக்கமூட்டும் பொருளாகவும்,எரிச்சலை குறைக்கும் பொருளாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
* ஐ.பி.எஸ் மற்றும் கொலிக் பெய்ன் டிஸ்ஸாடர் போன்ற வியாதி பாதித்தவர்களுக்கு புதினா திரவம் உடலில் பூசப்படுகிறது. இது நோயின் திடீர் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.
* பொட்டாசியம் ,கால்சியம் ,இரும்பு ,மக்னிசியம் ,போன்ற அத்தியவாசிய தாது உப்புகள் புதினாவில் உள்ளது. 100 கிராம் புதினாவில் 569 மில்லிகிராம் பொட்டசியம் உள்ளது. இது உடல் வளவளப்பு தன்மையுடன் இருக்க அவசியமாகும். இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துவதில் பொட்டசியம் பங்கு வகிக்கிறது.
*மாங்கனிசு மற்றும் தாமிரம் போன்றவை நோய் எதிர்ப்பு நொதிகள் போன்றவை சிற்பக செயல்பட துணைக்கரணியாக விளங்கும்.
*சிறந்த நோய் எதிர்ப்பு வைட்டமினான வைட்டமின் ஏ புதினாவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. பி குழும வைட்டமின்கலான போலேட், ரிபோப்லேவின், பைரிடச்சின் மற்றும் வைட்டமின் கே ஆகியவை குறிபிட்ட தக்க அளவில் உள்ளது.
இப்போ சொல்லுங்க புதினா மகத்துவமானது தானே.
சாப்பிட்டவுடனே செய்யக்கூடாதவை:
1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.
3. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும்.
8. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!
9. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
கொட்டாவி;
ஓரிடத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் அவரை பார்த்த மற்றவருக்கும் கொட்டாவி வரும் என்பது பரவலாக நம்பபடுகிறது. இது ஒரு பொய்யான நம்பிக்கை தான்.
கொட்டாவி ஒரு வகை அனிச்சை செயலாகும்.மூளைக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு குறையும் பொழுது, மூளை செல்கள் களைப்படையும் போது நுரையீரல் செயலியலைத் துரிதபடுத்தவும் கொட்டாவி நிகழ்வு ஏற்படுகிறது.
ஒரே சுழலில் வேலை பார்க்கும் பலருக்கும் பணித் தன்மையால் ஒரே மாதிரி சோர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொட்டாவி விடலாம். ஒருவரை பார்த்து ஒருவருக்கு கொட்டாவி வர வாய்ப்பில்லை.{ஆனா நமக்கு வருதே பா}
காற்றை விழுங்கும் குழந்தைகள்;
பால் குடித்த குழந்தைகள் அநேக நேரங்களில், சில நிமிடங்களில் பாலை கக்கி விடுவதை பார்த்து இருப்பிர்கள். இதற்கு காரணம் குழந்தைகள் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்குவது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தை பாலை குடித்ததும் தாய் குழந்தையை தோளில் போட்டு முதுகை தட்டி கொடுத்தால், குழந்தையின் வயிற்றுக்குள் போன காற்று வெளியேறும்.
இல்லாவிட்டால்தான் குழந்தை கக்கும் வயிறு உப்புசமாகும்.
நன்றி.
|
|
Tweet |
9 comments:
பயனுள்ள தகவலுக்கு நன்றி
5 ரூபாய்க்கு வாங்குற புதினா பற்றிய புதிய தகவல்கள் . . . சிகரெட் ! ! ம்ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்தான் . . தகவல்களுக்கு நன்றி .
மிகவும் பயனுள்ள ஒன்று...
கருத்திட்டமைக்கு நன்றி கண்ணதாசன் சார்
மிக்க நன்றி தினகரன் &சங்கவி
பயனுள்ள விளக்கங்களுக்கு நன்றி...
தனபாலன் அண்ணே ரொம்ப நன்றி இன்னைக்கு உங்க பெயர்ல ஒரு பதிவே வந்துருக்கு படிச்சிங்களா
பயனுள்ள தகவல்... காளான், புதினா கொட்டாவி பற்றி அதிகம் அறிந்துகொண்டோம்!!! நன்றி...
அன்பின் சக்கர கட்டி - வலைச் சரம் மூலமாக வந்தேன் . அருமையான பதிவு - பயனுள்ள பதிவு - புதினா, சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதது, காளான் மற்றும் காற்று பற்றிய செய்திகள் அனைத்துமே நன்று - சயின்ஸ் கபாலிக்கு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment