Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Friday, 29 November 2013

நவீன சரஸ்வதி சபதம் - கடவுளின் மங்காத்தா


எங்கேயும் எப்போதும், ராஜாராணி படத்தில் ஜெய்யின் கலக்கலான நடிப்பு ரொம்ப பிடித்து இருந்ததால் இந்த படம் ஜெய்க்காக  பார்க்க வேண்டும் என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். தஞ்சை ஜி.வி காம்ப்ளெக்ஸ்ஸில் படம் நான் செல்வதற்குள் படம் 2.30 மணிக்கே தொடங்கி விட்டது. 10 நிமிடம் தாமதம் சரி ஜன்னல் ஓரம் 3.00 மணிக்கு அங்கு செல்வோம் என சென்றால். மாலை 6 மணி காட்சிக்கு தான் படம் திரையிட படுவதாக அறிவித்தார்கள். சரி மீண்டும் ஜி.வி காம்ப்ளெக்ஸ் சென்று 20 நிமிட தாமதமாக படம் பார்க்க அமர்ந்தேன்.

ரொம்ப நாள் ஆச்சு சாமி படம் பார்த்து சிறு வயதில் சிவாஜி கணேசன் சிவனாக நடித்து டி வியில் பார்த்ததுண்டு அது போல இந்த படமும் சிவபெருமானின் திருவிளையாடலே.

படம் டைட்டிலே நவீன சரஸ்வதி சபதம் என்று இருந்ததால் இது சாமி படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடவுள் நாரதர் பார்வையில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சிவபெருமானாக சுப்பு பஞ்சு நாரதராக மனோபாலா. சாமி படம் என்றதும் பூஜை,நாட்டியம் அப்படி நினைச்சுறாதிங்க. இவரு ஹைடெக்கான சிவபெருமான் சிஸ்டம்,ஆப்பிள் போன், ஐ பேட் என கலக்கலா இருக்காரு.


கதை;

சிவபெருமானான சுப்பு நாரதரான மனோபாலாவிடம் இந்த உலகில் தான் விளையாண்டு ரொம்ப நாள் ஆகுது அதுனால ஒரு நான்கு பேர தேர்ந்து எடு அவர்களோடு நாம் ஒரு திருவிளையாடல் விளையாடுவோம் என கூறுகிறார். மனோபாலாவால் தேர்ந்து எடுக்கப்படும் அந்த நால்வர் நம்ம ஜெய், வி.டி.வி கணேஷ், சத்யன், அப்பறம் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் பஜ்ஜி கதாபாத்திரத்தில் நடித்தவர். 

முதல் பாதி முழுவதும் இந்த நால்வரின் அறிமுகம் அவர்களை பற்றிய முன் கதை என நல்லா ஜாலி யா நகைச்சுவையா போகுது. அதிலும் ஜெய் கதாநாயகி நிவேதா தாமஸ் மேல் கொள்ளும் காதல் அத பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சூப்பர். நிவேதா பார்க்கவும் நல்ல அழகா இருகாங்க. ஒரு ஜாடையில் பார்க்கும் போது கண்ணா லட்டு திண்ண ஆசையா விசாகா மாதிரி இருக்கு. படம் இடைவேளை வரை தான் நிவேதாவிற்கு வேலை அதுக்கு அப்பறம் படத்தின் இறுதியில்தான் வாய்ப்பு.  எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல.

காதல் செட் ஆனதும் என்ன கல்யாணம் தானே. ஜெய் நிவேதா இருவருக்கும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் செய்வதாக நிச்சயம் ஆகிறது. ஜெய் தன் நண்பர்கள் நான்கு பேருக்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுக்க பாங்காங் செல்கிறார். அங்க தான் நம்ம சிவபெருமான் என்ன பண்ணுறாருன்னா ஹாலிவுட் படமான ப்ளூ லாகூன் பார்த்துட்டு அந்த படத்தில் வருவது போலவே இந்த நால்வரையும் ஒரு தீவில் சிக்க வைக்கிறார்.

அந்த சிக்கலில் இருந்து மீண்டு நால்வரும் ஊர் திரும்பி சென்றார்களா. ஜெய்யின் திருமணம் நடைபெற்றதா என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இந்த நவீன சரஸ்வதி சபதம்.


இரண்டாம் உலகம் பார்த்து வெறுத்து போய் இருந்த எனக்கு இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. ஜெய் வழக்கம் போல கலகல நடிப்பு அவரது அறிமுக கதை செம்ம காமெடி. இந்த ரூட்டில் பயணம் செய்தாலே போதும் ஜெய் சூப்பர் கலக்குங்க.

அடுத்து கதாநாயகி நிவேதா அழகு அவங்க வேலை என்னவோ அதை செய்து இருகாங்க.

படத்தில் ரொம்ப கவர்வது நம்ம கணேஷ் தான் அவரது கரகர குரலாகட்டும் பேச்சாகட்டும் செம்ம சிரிப்பு. அப்பறம் நம்ம சத்யன்,பஜ்ஜி எல்லாம் ஓகே குறை சொல்ல முடியல.

படத்தில் குறையே இல்லையா இருக்கு இடைவேளைக்கு பின்பு அந்த தீவில் இந்த நால்வரையே பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையா இருக்கு ப்ளூ லாகூன் ஆங்கில படத்தில் கெல்லி ப்ரொக் அந்த தீவில் ரொம்ப ப்ரீயா இருப்பாங்க பார்க்க கிளுகிளுப்பா இருந்துச்சு ஒரு பிட் கூட படத்தில் சேர்த்து இருப்பாங்க அந்த சீனுக்காகவே படம் நல்ல இருந்துச்சு எனக்கு. அது இந்த படத்தில் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் சென்சார்ல அவனுங்க பார்த்துட்டு கட் பண்ணிருவானுங்க பொறமை பிடிச்சவனுங்க.

படம் மொக்கைலாம் இல்ல கண்டிப்பா ஒரு தடவ பார்க்கலாம் நான் மறுபடி ஒரு தடவ பார்க்கணும். சுமாரான கூட்டம் படத்திற்கு 80 ரூபாய் தான் டிக்கெட். 

நவீன சரஸ்வதி சபதம் - மொக்கை இல்லை 


Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சவால்


ஹாலிவுட்ல அவதார்ன்னு ஒரு படம் ஜேம்ஸ் கேமருன்னு ஒரு வெள்ளைக்கார இயக்குனரின் கைவண்ணத்தில் வந்து சக்கை போடு போட்டுசுல்ல. அந்த படத்த படம் மாதிரி தமிழ்ல நம்ம இயகுனர்களினால் எடுக்க முடியாதா என நாம் நினைக்கும் போது முடியும்னு நம்ம செல்வராகவன் களத்துல இறங்கி எடுத்து இருக்காரு.

இதுல சோகம் என்னன்னா அங்க உள்ள பட்ஜெட்டிற்கு டெக்னாலஜிக்கு அப்படி ஒரு படம் பண்ண ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சாத்தியம் ஆச்சு. ஆனா அது இங்க முடியுமா இந்த மாதிரி சொதபல்லா எடுத்ததற்கே 60 கோடி ஸ்வாக இந்த பணமே இப்போ தயாரிப்பாளருக்கு கிடைக்குமான்னு தெரியல ஐயோ பாவம்.
 
இந்த படத்தொட கதைய பத்தி எப்டி சொல்றதுன்னே எனக்கு தெரியல. படம் பார்த்த எனக்கே இந்த படத்த புரிஞ்சுகுறதுகுள்ள எ செல்வராகவன் பிலிம்ன்னு போட்டுடாங்க என்ன கொடுமை சார் இது. எனக்கு புரிஞ்ச வரைக்கும் சொல்றேன் மக்களே கேட்டுகங்க.

கதை;

ஏதோ ஒரு உலகம் அங்க தமிழ் பேசுற வெள்ளைகாரங்கள இருகாங்க. அந்த நாட்டை  ஒரு வெள்ளைகார ராஜா ஆளுகிறார். ராஜா இருந்த தளபதி இருக்கணும்ல அப்படி ஒரு தளபதி அவரு மகன் தான் நம்ம ஆர்யா. அந்த உலகத்துல ஒரு அனாதை வீரமிகு பெண்ணாக அனுஷ்காவும் இருகாங்க. இந்த உலகத்துல உள்ளவங்க யாருக்குமே காதல்ன்ன என்னானே தெரியல. ஆர்யாக்கு மட்டும் அனுஷ்கவ பார்க்கும் போது ஒரு இது இருக்கு. ஆனா ஆர்யாவ பார்க்கும் அனுஷ்காவிற்கு அது வரல.

இப்படி போற கதைல நம்ம வாழுற உலகத்தையும் காட்றாங்க. அதுல நம்ம அனுஷ்கா ஒரு டாக்டர் அங்க சேவை மனப்பான்மை உள்ள ஆர்யாவ பார்த்து காதல் வயப்பட்டு அவர்ட போயி காதல சொல்லும் போது ஆர்யா நோ சொல்லிருறாரு. அப்பறம் நிறைய யோசிச்சு கல்யாணம் பண்ணிகலான்னு அவரு போயி கேட்கும் போது அனுஷ்கா நோ சொல்றாங்க.

இப்படி இரண்டு உலகத்துலயும் நடக்குற கதைய மாத்தி மாத்தி நமக்கு காட்றாங்க.



ஒருவழியா நம்ம உலகத்துல இருக்குற ஆர்யா அனுஷ்கவா காதலிக்க வைக்கிறார். அப்போ திடிர்ன்னு ஒரு ட்விஸ்ட் கால் தடுக்கி விழும் அனுஷ்கா கல்லின் மேல விழுந்து மண்டை சிதறி மர்கயா ஆயிருரங்க. அப்பறம் என்ன வழக்கம் போல செல்வராகவன் படத்தில் வர மெண்டல் ஆகுறாரு ஆர்யா.

இப்போ இன்னொரு உலகம் இருக்குள்ள அங்க உள்ள மக்களால் கடவுளாக மதிக்கப்படும் ஒரு பெண் தனது மாந்திரிக சக்தியால் தன் உலகத்தில் உள்ள ஆர்யாவை அனுப்பி நம்ம மெண்டல் ஆர்யாவ உலகம் விட்டு உலகம் வர வைக்கிறார். நம்ம மெண்டல் இங்க வந்து காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்திற்கு காதலை புரிய வைத்து அந்த ஜோடியை சேர்த்து வைத்து பின்பு மூன்றாம் உலகத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பம் செய்வதே கதை.

என்ன மக்களே தலைய சுத்துதா..

இந்த படத்தில் பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அனிருத் தாம்.

1.கனிமொழியே பாடல்
2.தனுஷ் படிய பாடல்
இவை இரண்டும் நல்லா இருக்கு.

பின்னணி இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல இந்த படத்துக்கு இது போதும்ன்னு நினைச்சார இல்ல தம்பிட அவ்ளோ தான் சரக்க்கான்னு தெரியல. ஆண்டிரியா வாயில் மட்டும் வாசிச்சா பத்தாது தம்பி நீங்க இன்னும் கத்துக்கணும்.



சிஜே வொர்க் அதிகம் உள்ள படம் ஆனா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பார்த்த மாதிரி இருக்கு. ஆர்யா சிங்கத்தை வேட்டை ஆடும் இடம் செம்ம காமெடி அத பார்க்க சிங்கம் மாதிரியே இல்ல ஏன் இந்த தேவ இல்லாத வேலை.

நம்ம செல்வராகவன் சார் நினைபெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரி எடுக்க ஆசைப்பட்டு இறங்கி நொந்து நுடுல்ஸ் ஆகி எப்டியாவது படத்த எடுத்தா போதும்ன்னு நினைச்சு இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த படத்திற்கு ஆயிரத்தில் ஒருவனே தேவலாம் போல. செல்வராகவன் சார் போதும் விட்ருங்க. இந்த படத்திற்கு அப்புறம் படம் இயக்க மாட்டேன்னு ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு பார்ப்போம்.

மொத்தத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் செலவில் ஜார்ஜியா நாட்டை நன்றாக சுத்தி பார்த்து விட்டு பொட்லுரிக்கு பொட்டு வைத்து விட்டார் நம்ம செல்வராகவன்.

 இரண்டாம் உலகம் - உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ சாமிய்ய்ய்ய்






  

Saturday, 26 October 2013

சுட்ட கதை - திரை விமர்சனம்


ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த படம் காரணம் அந்த படத்தோட தலைப்பு. தலைவா படத்தின் வெளியிடு காரணமாக தள்ளி போயி பின்பு வேந்தர் மூவிஸால் கைவிடப்பட்ட படம். இந்த படத்தை வெளி கொண்டு வருவதற்குள் இந்த படத்தின் தயாரிப்பாளர் நொந்து நூலா ஆயிருப்பார்.

இது வழக்கமா வர போலீஸ் படம் இல்லை. ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் டா அப்படி பஞ்ச் வசனமெல்லாம் இல்லை. அதுக்காகவே இந்த படத்த எடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

படத்தின் கதை என்ன? கோரமலை என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம். அங்கு இருக்கும் காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேரும்  இரண்டு கான்ஸ்டபில் போலீஸ் அதிகாரிகள் பாலாஜி&வெங்கி.

அந்த கிராமத்தின் மலைவாழ் மக்கள் தலைவரான m.s பாஸ்கர் சுட்டு கொல்லப்பட அவரை சுட்டது யார் என கண்டறிவதே இந்த சுட்ட கதை.

படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் உயர் அதிகாரியாக நாசர், சயின்டிஸ்டாக ஜெயபிரகாஷ், ஜமினாக லட்சுமி ராமகிருஷ்ணன், டிவி தொகுப்பாளர் பாலாஜி அறிமுக நடிகர் வெங்கி என  எல்லாம் இருந்தும் திரைக்கதை அவ்ளோ சுவாரசியமாக இல்லாததால் படம் சப் என இருக்கிறது.

படமே ஒன்னே முக்கால் மணி நேரம் தான் அதை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம். படத்தின் ட்ரைலர் பார்த்த போது செம்ம காமெடியா
இருக்கும்ன்னு நினைத்தேன் ஆனா அங்கங்க மட்டுமே சிரிப்பு வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் அந்த மலை பிரதேசமெல்லாம் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு. இசை மேட்லி ப்ருஸ் பின்னணி இசை நல்ல இருக்கு m.s விஸ்வநாதன் குரலில் ஒரு பாடல் சூப்பர்.

படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயகுனர் சுபு. எல்லாம் நல்ல இருக்கு படத்தின் திரைக்கதை இன்னும் நல்ல பண்ணி இருந்தா படம் சூப்பர் ன்னு சொல்லலாம் என்ன பன்றது. அடுத்த தடவ இன்னும் பேட்டர ட்ரை பண்ணுங்க சுபு. 

தஞ்சை ஜூபிடரில் படம் பார்த்தேன் மொத்தமே 15 பேர் தான். டிக்கெட் விலை 60 மட்டுமே. 

சுட்ட கதை - வெடிக்கவில்லை 
 

Tuesday, 3 September 2013

சும்மா நச்சுன்னு இருக்கு - அப்படி ஒன்னும் மோசம் இல்லை


ஆக்ஷன் மசாலாக்களை மட்டுமே எடுத்து வந்த ஏ.வெங்கடேஷ், மசாலாவுக்கு இப்போது மரியாதை குறைவு என்பதை உணர்ந்து, மக்கள் ரசனைப்படி திறந்திருக்கும் காமெடி கடைதான் இந்த சும்மா நச்சுன்னு இருக்கு.

பி.விமல் படத்தை தயாரித்திருக்கிறார். பவர் ஸ்டார் திகாரில் நடிப்பு பயிற்சி பெறுவதற்கு முன் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் கதை, காட்சி, ஹைலைட் என்று எதைக்கேட்டாலும் ஏ.வெங்கடேஷ் பவர் ஸ்டாரிலிருந்துதான் தொடங்குகிறார். அவரு ஒரு டான்சில் சிம்பு, விஜய் மாதிரி ஆடியிருக்கிறார். சில சீன்ஸ்ல முன்னணி ஹீரோக்களை இமிடேட் செய்திருக்கிறார்.... இந்த மாதிரி.

தமன்குமார், தம்பி ராமையா, அர்ச்சனா ஆகியோருடன் ஏ.வெங்கடேஷும் நடித்துள்ளார். அச்சு என்பவர் இசையமைக்க, சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், வி.டி.விஜயன் எடிட்டிங்.

பவர் ஸ்டாரின் இம்சைகளை சுகமான சுமைகளாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கான படம்.


கதை;
கதையின் நாயகன் தமன் குமார் ஊரில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னைக்கு வந்து அவரது நண்பர்களான தம்பி ராமையா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஆட்டோ ஒட்டி கொண்டு இருக்கிறார். நாயகி விபா காதலனை கரம் பிடிக்க மலேசியாவில் இருந்து இந்தியா வர ஒரு இரவில் ரௌடி கும்பலால் விரட்ட படுகிறார். அப்போது நமது நாயகன் அவரை காப்பாற்ற ரௌடி ஒருவன் வீசிய கல் நாயகியின் தலையில் அடிக்க அவர் கோமாவில் விழுகிறார்.

நாயகியை காண அவர் குடும்பம் இந்தியா வர அவர்கள் தமனை விபாவின் காதலன் என தப்பாக நினைக்க பணத்திற்காக தமனும் நாயகியின் காதலனாய் மலேசியா தனது நண்பர்களோடு பயணமாகிறார்.

அங்கு நாயகியின் அப்பாவின்{எ.வெங்கடேஷ்} தம்பி{பவர் ஸ்டார்} தனது அண்ணன் சொத்தில் பங்கு தராததால் அவரை பழிவாங்க சந்தர்பம் எதிர்பார்த்து காத்து இருக்கிறார். தமனை கடத்தி தன் அண்ணனை மிரட்டி சொத்தில் பங்கு வாங்கலாம் என நினைக்கிறார்.

தமன் ஆள் மாறாட்டம் செய்ததில் மாட்டி கொண்டாரா ?
நாயகியின் காதல் என்ன ஆனது ?
பவர் ஸ்டார் சொத்தை கை பற்றினரா ?

என காமெடி ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.


தமன்குமார் நல்ல நடிச்சு இருக்கார் குறை சொல்ல ஒன்னும் இல்லை. நாயகியாக விபா,அர்ச்சனா இதுல விபா முக்கால்வாசி படத்துல்ல கோமள படுத்துராங்க அதனால சொல்ல ஒன்னும் இல்ல. அர்ச்சனா நாயகியின் தங்கை தமனின் நல்ல குணத்தை பார்த்து லவ் பண்றாங்க ஓகே.

படத்தில் என்னை கவர்ந்தது தம்பி ராமையா,ஈரோடு மகேஷ் அப்பறம் நம்ம தமிழகத்தின் பொக்கிஷம் பவர் ஸ்டார் தான்.

படம் வழக்கம் போல நம்ம பவர் ஸ்டார் என்ட்ரி ஆனதும் செம்மையா கீது. தம்பி ராமையாவின் காமெடி சூப்பர். படத்துல்ல குறையே இல்லையான்னு கேட்டா நிறைய இருக்கு பாட்டெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்ல. ஆனாலும் பெரிய ஹிரோ பெரிய பட்ஜெட் அப்படின்னு நம்மகிட்ட 150 ரூபாய் கொள்ளை அடிக்காம வெறும் 60 ரூபாய்க்கு நம்மள நல்லா சிரிக்க வச்சு அனுப்புறாங்க.

சும்மா நச்சுன்னு இருக்கு ஜாலி யா ஒரு தடவ போயி பார்க்கலாம் பாஸ்.


Friday, 10 May 2013

நாகராஜ சோழன் M .A M.L.A

நம்ம தமிழ் சினிமால ஒரு படம் ஹிட் ஆனால் அதன் இரண்டாம் பாகம் தயாரிப்பது தற்போதைய ட்ரென்ட். அந்த வரிசையில் முன்பு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் 
டூப்பர் ஹிட் ஆனா அரசியல் கலக்கலான ஹிட் படம் அமைதி படை. இந்த 
படத்தோட இரண்டாம் பாகம் அப்படின்னு சொன்னதும் கேக்கனும்மா அரசியல் ஆர்வலர்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மீது மிக பெரிய எதிர் பார்ப்பு வந்து விட்டது.
சத்யராஜ் மணிவண்ணன் இரண்டு பேருமே லொள்ளு பார்ட்டிகள் இவர்களிடம் நாம எதிர்பார்ப்பதும் அதுவே. இவர்களின் முந்தைய படங்களும் 100% லொள்ளாகவே இருக்கும் இந்த படமும் அது போலவே இருக்கும்னு நமக்கு தெரியாதா? இவங்க இரண்டு பேரிடமும் மாட்டி கொண்டு யாரு யாரு எல்லாம் நாற போகிறார்கள் என்று எண்ணினேன் அதனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
இன்றைக்கு வெள்ளி கிழமை அதனால 11 மணி காட்சிக்கு போனால் 1.30 மணிக்கு தொழுக போக முடியாது. அப்ப மேட்னி போகலாம் என்று பார்த்தால் 2.00 மணிக்கு படம் நான் இங்க இருந்து கிளம்பி தியேட்டரை சென்று அடைய முப்பது நிமிடம் ஆகும் நான் போறதுகுள்ள படம் ஆரம்பம் ஆகி விடும். என்ன செய்யலாம் சரி சாப்பிட்டு விட்டு சாயங்காலம் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
போன முறை 3 பேர் 3 காதல் படத்திற்கு விமர்சனம் படிக்காமல் சென்று மாட்டி கொண்டோம் இந்த தடவை யாராச்சும் காலையில் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் போட்டு இருப்பாங்க அதை படிச்சு பார்த்து விட்டு செல்லலாம் என முடிவு பண்ணி அலசி பார்த்தேன். நம்ம அட்ராசக்க சிபி விமர்சனம் பண்ணி இருந்தாரு படிச்சேன் படம் ஒன்னும் வொர்தா தெரியல்ல வெறும் வசனத்திற்காக மட்டும் போயி பார்க்க வேண்டுமா என முடிவு செய்து கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். 250 ரூபாய் மிச்ச படுத்தி கொடுத்த அண்ணன் செந்தில் குமார் வாழ்க.

விமர்சனம் படிக்க வந்தா இப்படி ஏமாத்திட்டேன் என்று யாரும் சாபம் விட வேண்டாம் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும் ஹாஹா...

http://www.adrasaka.com/2013/05/blog-post_7352.html

நன்றி வணக்கம். 

Saturday, 27 April 2013

நான் ராஜாவாக போகின்றேன் - திரை விமர்சனம்



இன்னைக்கு சொல்லிக்கிற மாதிரி இரண்டு தமிழ் படம் ரிலிஸ் ஓன்று நான் ராஜாவாக போகின்றேன் இரண்டு யாருடா மகேஷ். மதியம் வரைக்கும் யாருடா மகேஷ் என்ற படத்த தான் பாக்குற ஐடியா தான் இருந்துச்சு. ஆனா முக நூலில் ஆரூர் மூனா செந்தில் அண்ணன் யாருடா மகேஷ் படம் பார்த்திக்கிட்டு இடைவேளை அப்பவே படம் சுமாரா போயிகிட்டு இருக்குறதா ஸ்டேடஸ் போட்டாரு. அத பார்த்ததுக்கு அப்பறம் நாம அங்க போயி சிக்குவோமா. அதான் பைக்க திருப்பி நான் ராஜாவாக போகிறேனுக்கு விட்டேன்.முதல் நாள் படம் மாதிரியே இல்ல காலியா இருந்துச்சு.டிக்கெட் எடுத்து கொண்டு உள்ளே சென்றேன்.




கதை;
படம் தொடங்கியவுடன் 16 மாதங்களுக்கு முன்பு என்று போட்டாங்க நகுல் ரௌடிகளை துவைத்து எடுத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு லாரி அவரை இடிக்க மருத்துவமையில் ஸ்டேச்சாரில் தள்ளி கொண்டு போகிறார்கள். அங்கு கட் பண்ணினா 26 மாதங்களுக்கு முன்பு என்று மணிவண்ணனின் மரணத்தை காட்டுகிறார்கள். அதை கட் பண்ணி அழகான மலை பிரதேசம் அந்த ரோட்டில் நகுல் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்.

நகுளின் அம்மா சீதாவொடு மேகாலயாவில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.நகுளிற்கு அவங்க அம்மா திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார். ஆனால் நகுலோ சிறுவர்களுடன் ஜாலி யா ஊர சுத்திகிட்டு இருக்கார். ஒரு நாள் நகுல் தவறுதலாய் அங்கு இருக்கும் மிலிட்டரி கேம்பில் நுழைந்து விடுகிறார். அங்கு ஒரு ராணுவ வீரனை சந்திக்கிறார். அந்த ராணுவ வீரன் நம்ம நகுலை ராஜா என்று அழைக்க நான் ராஜா இல்ல சார் ஏன் பேரு ஜீவா என்று கூறுகிறார். ராணுவ வீரருக்கு ஒரே ஆச்சரியம் நீ என்னுடன் கல்லூரியில் படித்த என் நண்பனை போன்றே இருக்கிறாய் என்று கூறி ஒரு விடியோவை காட்ட நகுல் ஆச்சரியப் படுகிறார்.

தன்ன மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள அந்த நகுலை காண இங்கு இருந்து சென்னைக்கு புறப்டுகிறார். அங்கு சென்ற பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே நான் ராஜாவாக போகின்றேன் கதை. கிளைமாக்ஸ் நம்ம தமிழ் படத்துல்ல வரது தான் ஆனா நம்ம யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட் இருக்கு படத்துல்ல சூப்பர்.

நடிகர்&நடிகைகள்;
ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கும் நகுல் படம். இவர் கடைசியா நடிச்ச படம் மண்ணை கவ்வ ஆளையே கொஞ்ச நாளா காணோம். தற்பொழுது இந்த படத்தின் மூலம் திரும்பி வந்தி இருக்கார். இவர் அறிமுகம் ஆனா பாய்ஸ் படத்தில் இருந்தே இவரை எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்கள் கமல் மாதிரி வித்தியாசம் எல்லாம் காட்டவில்லை. ஆனால் நன்றாக இருக்கிறது.
இந்த ஸ்டில் பார்த்து தான் நான் ஏமாந்துட்டேன் 

கதாநாயகியாக இரண்டு பேர். ஒருவர் பாக்யராஜ் அவர்களால் அறிமுகம் செய்ய பட்ட சாந்தினி. இவர் படத்திற்குள் என்டர் ஆனா பின்பே கதையில் வேகம் பிறக்கிறது. சட்ட கல்லுரி மாணவியாக இயல்பாக நடித்து இருக்கிறார். ஆனா பார்க்க ரொம்ப சுமாரா இருக்கிறார்.

இன்னொரு அறிமுக கதாநாயகி  அவானி. நகுல் நண்பியாகவும் அவரை ஒரு தலையாய் காதலிப்பதாகவும் அவருக்கு கொடுத்த பாத்திரத்தை குறை இல்லாமல் செய்து இருக்கிறார். அழகில்ஷந்தினிக்கு எவ்ளவோ தேவலாம்.

அம்மாவாக சீதா, குண்டு ஆர்த்தி, வனிதா விஜயகுமார், சேத்தன் இன்னும் நிறைய பேரு இருகாங்க.

இந்த படத்தில் இசை எல்லாம் பெரிதாக தெரியவில்லை. பாடல்கள் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஒரு குத்து பாடலில் ஆடும் நடிகை பார்க்க கேத்ரின கைப் மாதிரி இருகார்.நான் கூட அவர்தன்னோன்னு நினைத்து விட்டேன்.பிரகாஷ் சார் என்ன ஆச்சு.

சண்டை காட்சிகள் இயல்பாய் உள்ளது.

வசனம் வெற்றி மாறன். படத்தை இயக்கி இருப்பவர் ப்ரித்வி ராஜ்குமார்.

மத்த  எல்லாம் ஓகே. மொக்கை படம் ன்னு சொல்ல முடியல்ல. சூப்பர் படம்னு சொல்ல முடியாது. சுமாரா இருக்கு.

தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன். 80ருபாய் டிக்கெட் விலை. கொடுத்த காசுக்கு ஓகே தான்.

Friday, 19 April 2013

உதயம் NH4-திரை விமர்சனம்


இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும் பொழுது அம்சமான க்ரைம் ஸ்டோரி ன்னு  நெனச்சேன். ஆனா எதிர் பார்த்த த்ரில் இல்லை.

கதை;

பெருசா என்ன இருக்க போகுது வழக்கமான அரத பழசான அதே கதை தான். கர்நாடகாவின் மிக பெரிய அரசியல்வாதி அவருக்கு ஒரே பொண்ணு.  அவ படிக்கிற காலேஜ்ல சென்னையில் இருந்து வந்து சேரும் நாயகன். இருவருக்கும் காதல் வருகிறது. உடனே அரசியல்வாதி என்ன பண்ணுவாரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணுறாரு. அரசியல்வாதியின் எதிர்ப்பை சமாளித்து நண்பர்களின் உதவியோடு  நாயகியை மீட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதே கதை.

நாயகனாக சித்தார்த். கல்லூரி மாணவராக வருகிறார். அவருக்கு ஏத்த கதாபாத்திரம் தான். இந்த படத்துல்ல பெருசா சொல்லிக்கிற மாதிரி நடிபெல்லாம் இல்ல. காலேஜ் போறாரு தம் அடிக்கிறார், சரக்கடிகிறார். ஆனா படிக்கிற மாதிரி படத்துல்ல காட்சியே இல்ல. காதலியை அவரது மாநிலத்தில் இருந்து தன்னோட மாநிலத்துக்கு கொண்டு போய்விட்டால் பிரச்னை இல்லைன்னு பிளான் பண்ணுறாரு. எல்லாம் மட்டமான பிளான்பா. இது மட்டும் இல்லாம படத்தோட இறுதி காட்சில்ல உதடோட உதடு வச்சு ஒரு பச்சக் அடிக்கிறார். அது மட்டும் தான் படத்துல்ல அவர் நடிச்சதுள்ள எனக்கு பிடிச்சது. அதோட அவருக்கு முடிஞ்சு வேலை.

நாயகியாக அஷ்ரிதா ஜட்டி சாரி ஷெட்டி. பாப்பா பார்க்குறதுக்கு ஓகே பரவா இல்ல. ஆனா தமிழ் பேசுறத பார்க்கும் பொழுது நமக்கு அழுகையே வந்துரும் போல. யாருய்யா டப்பிங் பேசுனது. எரிச்சல்லா இருந்துச்சு பார்க்க. படத்துல்ல நாயகனுக்கே வேலை இல்ல. பின்ன இவங்களுக்கு மட்டும் என்ன  இருக்க போகுது ஓகே.
(ஆளு சூப்பரா இருக்காருல்ல)

(+)
படத்துல்ல எனக்கு மிகவும் பிடிச்சதுன்னு சொன்ன அந்த அசிஸ்டென்ட் கமிஷ்னராக வரும் கே.கே.மேனன். மலையாளத்தில் இருந்து வந்து இருக்கிறார். அட்டகாசமாக நடிச்சு இருகார். அந்த போலீஸ்கே  உள்ள மிடுக்கு சூப்பர். ஆனா நிஜத்துள்ள அப்படி போலீஸ்காரங்க யாரையும் பார்கள பா.
இவர தான் படத்துல்ல எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகர் கிடைத்து உள்ளார்.

இந்த குறும் படங்களினால்  தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்லது நடந்து  இருக்கு. திறமையான இயகுனர்கள் ஆனா பிட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி தந்த பாலாஜி மோகன், நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனரான பாலாஜி பரணிதரன் போன்றோர். மற்றும்  குறும் படத்தில் இருந்து வந்த நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா படத்தில் நடித்த  கண்ணாடி அணிந்த அந்த நபர் அவரு பேரு தெரில்ல. அந்த வரிசையில் ஒரு மேலும்  நடிகர் கிடைத்து உள்ளார். இவரு பேரும் தெரில்ல இவரு நடிச்ச குறும் படங்களை நான் பார்த்து இருக்கிறேன்.படத்துல்ல இவரு ஒரு காமெடி பண்ணி இருக்காறு பாருங்க அத நினைத்து நான் வீடுக்கு வர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன். இது மாதிரி திறமை உள்ளவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா.


படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணம் கான பாலா பாடிய ஒரே கண்ணாலே அந்த பாடல் தான். கானா பாலாவே அந்த பாடலை படத்தில் பாடுகிறார்.அந்த பாட்டு பாதி தான் படத்துல்ல வருது. அந்த பாடலை படமாக்கிய விதம் சுத்தமா நல்லாவே இல்ல. பாடல் கேட்க மட்டும் நன்றாய் உள்ளது.


(-)
நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க நண்பர்கள் அனைவரும் பைக், கார் என அனைத்து உதவிகளும்  செய்கின்றனர். ஆனா நமக்கு உள்ள நண்பர்கள்ட பைக் கேட்டா மச்சான் பெட்ரோல் இல்லடா அப்ப்டிம்பானுங்க. இதெல்லாம் படத்துல்ல தான் நடக்கும்.

இந்த காலத்துள்ள யாருங்க இந்த அளவு சீரியசா காதலிகிரங்க. 50 ரூபாய்க்கு டாப் அப் பன்னலனாலே கோயிந்தா இப்ப போயி இந்த மாதிரி படம் எடுத்துக்கிட்டு உஸ்ஸ்ஸ்.

இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. சித்தார்த் நடித்த 180 படம் விஷுவலாய் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இந்த படம் என்னமோ அந்த அளவு கிளியறாய் இல்ல. பார்க்க ஏதோ பழைய படம் பார்க்குற மாதிரியே ஒரு பீலிங்.

நான் இதுவரைக்கும் எத்தனையோ படம் பார்த்து இருக்கேன். எல்லா படத்துக்கும் ஒரு இடைவேளை தான் விடுவாங்க. ஆனா இந்த படத்துக்கு மட்டும் மூன்று இடைவேளை விட்டாங்க. ஏன்னு கேக்குறிங்களா! பவர் கட் தான். படம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் கழிச்சு பவர் கட் ஆச்சு அப்பறம் இருட்டுள்ள சும்மா 30 நிமிஷம் உக்கார வச்சுட்டானுங்க. மறுபடி படம் ஆரம்பத்துல்ல இருந்து போடுறானுங்க. அப்பறம் நிறுத்திட்டு 10 நிமிடம் கழித்து ஆரம்பம் ஆகியது. ஏண்டா டேய் தியேட்டர் கட்டுன்ன மட்டும் போதுமா அத ஒழுங்கா உருபுட்டியா செய்ய மாட்டிங்களா. இந்த லட்சனத்துள்ள இவனுகளுக்கு 5 ஸ்க்ரீன் வேற விளங்கிரும்.

கதை வசனம் வெற்றி மாறன் இத நீங்க எழுதாமலே இருந்து இருக்கலாம்.
இயக்கம் மணிமாறன். சாரி அடுத்த படம் நல்ல பண்ணுங்க பாஸ்.

மொத்ததுல்ல இந்த படத்துக்கு போயி ஏன்டா போனேன்னு ஆயிருச்சு.


Friday, 5 April 2013

சேட்டை திரை விமர்சனம்


மிக பெரிய எதிர்பார்போடு வெளி வந்திருக்கும் படம். நான் ரொம்ப ஆவல இருந்தேன் இந்த படத்த பார்க்க. ஏனென்றல் ஹிந்தியில் மிக பெரிய வெற்றி பெற்ற டெல்லி பெல்லி என்ற ஹிந்தி படத்தை தான் தமிழில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். அந்த படத்தை ஹிந்தியில் மொழி புரியாமல் பார்த்து இருக்கிறேன். அதை பார்த்த பொழுது இந்த படத்துல்ல அப்படி என்ன இருக்கு என்று நினைத்து கொண்டேன். இப்போது பார்த்த பிறகு தான் புரிகிறது ஏன் வெற்றி பெற்றது என்று. முழு நீள நகைச்சுவை திரைப்படம்.

படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டு வீட்டம்மாகிட்ட பொய்ய சொல்லிட்டு கிளம்பக்ககுள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. அப்டியே அரக்க பறக்க போறகுள்ள ஐந்து நிமிடம் தாமதம் ஆயிருச்சு. போயி உட்கார்ந்தேன். லேட்டா போன நாள நம்ம முகேஷ  பார்க்க முடியல்ல.
[என்ன சோப்புமா போடுற] 
கதை;

நம்ம பிரியாணி ஆர்யா, கோமாளி பிரேம்ஜி ஒரே பத்திரிகை ஆபிஸ்ல வேலை செய்கிறாங்க. அங்க புதுசா வேலைக்கு சேருறாரு. நம்ம காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம். என்ன காமெடி சூப்பர் ஸ்டார்னு சொல்றேன்னு பாற்குரிங்களா. டைட்டில்லயே அப்படி தான் போட்டாங்க. நம்ம தல கௌண்டமணி கூட பட்டமெல்லாம் போட்டுகல்ல அவரோட ஜெராக்ஸ் இவருக்கு போட்டு இருகாங்க ஓகே விட்ருவோம் அதும் அவருக்கு நல்ல தான் இருக்கு. இதுல்ல நம்ம பிரியாணிய நம்ம பூசணிக்காய் காதலிக்குது அது யாருன்னு கேக்குறிங்களா நம்ம ஹன்சிகா தான் முன்ன விட ரொம்ப கும்சிக்காவா இருகாங்க. [ஒரு சில காட்சில பாப்பா ஒல்லியா தெரியுது].
இன்னொரு பத்திரிகை ஆபீஸ்ல நம்ம முதிர்கன்னி அஞ்சலி வேலை பாக்குராங்க.

பூசணிக்காய் ஹன்சியோட  நண்பி ஒருத்தி ஒருத்தன் கொண்டு வர பார்சல்ல வாங்கி ஒரு அட்டறேஸ்ல பூசணிக்காய் ஹன்சிய  கொடுக்க சொல்லுறா. அது என்ன பண்ணுது தன்னோட பிரியாணி ஆர்யாட கொடுத்து டெலிவெரி பண்ண சொல்லுது. அவன் தன்னோட நண்பர்கள்ட கொடுத்து கொடுக்க சொல்றான்.
இப்படி மாத்தி மாத்தி பார்செல் போயி சேராம பார்செல்லுக்கு சொந்தகாரனான  நாசர் தேடி வராரு.

அந்த பார்சல்ல என்ன இருந்துச்சு?

நாசர்க்கு அது கிடைச்சுச்சா?

பிரியாணி ஆர்யா யாருக்கு சொந்தம் ஆனாரு?

இவை அனைத்திற்கும் நகைச்சுவையாக பதில் சொல்லி இருகாங்க.

படம் முழுக்க ஒரே கலாட்டா தான்.

நடிகர்கள்;

ஆர்யா இவர என்னமோ எனக்கு அவ்ளவா பிடிக்கல. கூட நடிக்கிற எல்லாத்துக்கும் பிரியாணி ஆக்கி போட்டு கவர் பன்றாரு. இவரு அஞ்சலிக்கு கொடுத்த முத்த காட்சிய கண்ணுல காட்டல.நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க.
மொத்ததுல்ல அவர பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல ஓகே.

இரண்டு ஹீரோஇன் ஹன்சிகா, அஞ்சலி அவங்களுக்கு பெருசா நடிப்புல்ல பெரிய வேலை இல்ல. அவங்க டான்ஸ் பன்றப்ப சதை தனியா ஆடுது. அம்மா தாயிங்கள உடம்ப குறைங்க பார்க்க சகிக்கல.

அடுத்து நம்ம போண்டா பிரேம்ஜி. அவருக்கு பொருத்தமான வேடம் தான். இவருக்கு தனிய ஒரு குத்து பாட்டு வேற ஆர்யாக்கு உள்ள பாட்ட விட நல்லா இருக்கு. மத்த படத்துல்ல வர மாதிரி ஏதும் கோமாளித்தனம் பன்னல. அது வரைக்கும் சந்தோசம்.

நாசர் இவர்ட எந்த கதா பாத்திரம் கொடுத்தாலும் மனுஷன் பின்னிருவாறு.
அவர் மூக்க குறி வச்சு சந்தானம் அடிக்கிற பஞ்ச் எல்லாம் செம்ம.
[பாப்பா சூப்பர்] 

இறுதியா படத்துக்கு மிக பெரிய பலம் நம்ம சந்தானம் தான். என்னா பஞ்ச் டா செம்மையா கலக்கி இருக்காரு. இவரு சொல்ற ஒவ்வொரு பஞ்ச்சும் சூப்பர்.இவர தவிர வேற யாரும் இவ்வளவு நல்லா பண்ணி இருக்க முடியாது. டைட்டில்ல இவரு பேர பார்த்ததுமே கை தட்டல் அள்ளுது. காமெடி சூப்பர் ஸ்டார் பொருத்தமான பட்டம் தான்.

இசை தமன் பாடல்கள் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. நம்ம தள தள  நீது சந்திரா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுறாங்க நல்ல இருக்கு. பிரேம்ஜிக்கு கொடுத்த பாட்டு நல்லா இருக்கு. வேற பாட்டு ஒன்னும் நல்லா இல்ல. ஆனா பின்னணி இசை சூப்பர் சூப்பர் பா கலக்கலா இரூக்கு.
[போட்டோனாலே கைய கட்டனும்மா பாஸ் ]

இயக்கம் கண்ணன். ஏற்கனவே கண்டேன் காதலை என்ற படத்தை இயக்கியவர். அதும் ஹிந்தி ரீமேக் தான். ரீமேக் படம்னா இனி இவர் தான் போல நல்லா பண்ணி இருக்காறு. வெல் டன் கண்ணன்.

யூ.டிவி தயாரித்து முதல் முறையாக லாபம் சம்பாரிக்கும் படம் இதுவாக தான் இருக்கும். தப்பிச்சார் தனஞ்செயன்.

மொத்ததுல்ல படம் நல்ல பொழுது போக்கு அம்சம் உள்ள படம். குடும்பத்தோட போக வேணாம். தனியா போயி பார்த்த நல்லா என்ஜாய் பண்ணலாம்.

சேட்டை தலைப்புக்கு ஏத்த மாதிரி சேட்டையா இரூக்கு.

தஞ்சை ஜுபிட்டர் ல பார்த்தேன் பெரிய கூட்டமெல்லாம் இல்லை.

நன்றி.. 

Wednesday, 3 April 2013

சென்னையில் ஒரு நாள்

இந்த வாரம் வெளியான முக்கிய படங்கள் இரண்டு அதில் என்ன படம் முதலில் பார்க்கலாம் என்று குழப்பத்தில் இருந்தேன்.  பின்பு நம்ம பதிவர்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் பாராட்டை பெற்ற படம் என்ற காரணத்தால் முதலில் சென்னையில் ஒரு நாள் பார்க்கலாம் என்று முடிவு செய்து டிக்கெட் எடுத்து அமர்தேன்

ஆட்சி மாற்றம் எந்த அளவு இவர்களை மாற செய்து இருக்கிறது.  முன்பு இவர்கள் படம் ரீலிஸ் என்றால் எந்த அளவு ஆர்ப்பாட்டத்துடன் சன் பிக்சர்ஸ் என்று பெரிய எப்பெக்ட் லாம் குடுத்து கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் அப்டின்னு ஓவர் பில்டப்பா பெயர் போடுவங்கே. இப்ப சன் பிக்சர்ஸ் நல்லாசியுடன் அப்டின்னு முடிசிகிட்டாங்க. பார்க்க நல்ல தான் இருந்துச்சு.


சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை சிறுமி அபிராமிக்கு பொருத்தி அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்".
ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலையில் ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார்.

இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற பொலிசார் அனைவரும் பின்வாங்கும்பொழுது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை 
நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

பொலிஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.

தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த பொலிஸ் கார் டிரைவராக சேரன்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.

செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா.

மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டொக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஷஹித் காதர்.

பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம்.

அதேபோல் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.

மருத்துவமனையில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.

படம் கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டர்ரில் பார்த்தேன் 100 ரூபாய் கட்டணமாக இருந்தாலும் மனதுக்கு நிறைவான படமாக இருந்தது. மொக்கை படமான அலெக்ஸ் பாண்டியனுக்கு 150ரூபாய் தண்ட செலவு பண்ணியது போல் இல்லை.ஆனா என்ன படம் பார்க்கும் பொழுது கடுப்பு என்றால் நான் அமர்ந்து இருக்கும் சீட்டின் பின் பக்கம் ஒரு பெண்மணி கை குழந்தையுடன் வந்து இருந்தார். படம் சீரியசான கட்டத்தில் எல்லாம் அந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது. படம் பார்க்க எரிச்சலை கிளப்பியது.இது மாதிரி கை குழந்தியுடன் வருபவர்கள் குலைந்தி அழும் பொழுது வெளியில் சென்று விடலாம்.இல்லை படத்திற்கு வராமல் இருந்து விடலாம். மற்றவர்களுக்கு சிரமம் தராமல். 

மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்"

நன்றி;சினிஉலகம்