Sunday 4 August 2013

தோரணம் - 04/08/2013


இந்த வார நகைச்சுவை;

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"

9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க
சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள்
சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

இந்த வார நகைச்சுவை; 2

2.500 ரூபாய்க்கு முடி வெட்டி,
100 ரூபாய்க்கு ஜெல் வாங்கி,
அத அரைமனி நேரமா
தலயில போட்டு தேய்ச்சி
Spike வச்சிக்கிட்டு,
சும்மா... பந்தாவா...
ஆபிஸ் வந்தா...
பக்கத்து டேபிள் தம்பி
சொல்றாரு...
.
.
"சார் ...., தல கலஞ்சிருக்கு!.


இந்த வார கவிதை;

பேருந்து

உங்களை ஜாதி மதம் பார்க்காமல்
சுமந்து சென்றேன் ...

ஆனால் நீங்கள் ஜாதி சண்டைக்காக என்னை கல்லை கொண்டு எரிவது சரிதானா .????

கல்லெடுத்து எறிந்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத கவர்மெண்ட் பஸ்ஸின் குமுறல்....

மாற்றம்;

அழகிய கூந்தல் அதிலொரு பின்னல்,
காதில் கம்மல், அதில் ஒரு மாட்டல் ,
பின்னழகு பரவாயில்லை,
முன்னழகு எடுப்பாயில்லை,ஏறெடுத்து பார்த்தேன்,
மொத்தமாய் ஏமாந்தேன்,
ஆடவன் அவன்.

கே.தமிழ் இனியா - கொள்ளிடம்



மரத்தின் மகிமை;

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.

''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம்.காரணம் கேட்க அவர் சொன்னார்,

''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு

எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.


ஆறறிவு படைத்த-அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?'


பயனுள்ள தகவல்;

*மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -தாய்,தந்தை
*மிக மிக நல்ல நாள் -இன்று
*மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
*மிகவும் வேண்டியது -பணிவு
*மிகவும் வேண்டாதது -வெறுப்பு
*மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
*மிக்க கொடிய நோய் -பேராசை
*மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
*கீழ்த்தரமான விடையம் -பொறமை
*நம்பக் கூடாதது -வதந்தி
*ஆபத்தை விளைவிப்பது -ஆதிக்க பேச்சு
*செய்ய கூடாதது -நம்பிக்கை துரோகம்
*செய்ய கூடியது -உதவி
*விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
*உயர்வுக்கு வழி -உழைப்பு
*நழுவ விடக் கூடாதது -வாய்ப்பு
*பிரிய கூடாதது -கணவன் மனைவி ,சொந்தம் ,நட்பு
*மறக்க கூடாதது -நன்றி


இரங்கல்;

எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை!

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் வாலி திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 1931ல் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் வாலிக்கு 2007ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி

சிறுகதை, கவிதை, உரைநடை நூல்களையும் வாலி எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இளம் தலைமுறை கவிஞர்களை ஊக்குவிப்பதிலும், வாய்ப்புக்கு வழிவகுப்பதிலும் முதன்மையானவர் கவிஞர் வாலி.

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இது போன்ற பாடல்கள் ஏராளம்.

இன்றுடன் வாலி இறந்து 15 நாட்கள் ஆகின்றன..
அவரது இழப்பு தமிழிற்கு பெரும் இழப்பு தான்..
வாலி மறைந்தாலும் அவரது புகழ் மறையாது ..
வாலிக்கு நிகர் வாலிதான்!


வலைச்சரம்;

ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுபேற்க சீனா ஐயா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு வார காலத்திற்கு எனக்கு பிடித்த பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் அங்கு பதிவாக இட போகிறேன். நாளையில் இருந்து வலைச்சரத்தில் எனது பதிவுகள் தொடரும்.

15 comments:

கவிதை வானம் said...

பேஸ்புக் ஓனர் தமிழர் என்று
புதுசா கதைவிட்டு கலக்கிட்ட நண்பா...
இன்று நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

துரை செல்வராஜூ said...

வலைச்சரத்தில் உங்களது தனித் தன்மையினை எதிர்பார்க்கின்றேன்!.. முன்னதாகவே ஈத் முபாரக்!.. வாழ்க!.. வளர்க!..

Unknown said...

வருகைக்கு நன்றி பரிதி முத்துராசன் நண்பரே

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி துரை செல்வராஜ் நண்பரே என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல் படுவேன் உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

S.டினேஷ்சாந்த் said...

மாற்றம் கவிதை சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

கவர்மெண்ட் பஸ்ஸின் குமுறல் வேதனையான விஷயம் !

என்னாது தலை கலைஞ்சிருக்குன்னு சொன்னானா ? கல்லெடுத்து எரிலேய் அவனை...!

வலைச்சரம் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் சக்கரகட்டி

முக நூலின் சொந்தக் காரர ஒரு தமிழர் தான் - ஐயமேஇல்லை - சக்கரகட்டி தரவுகளுடன் நிரூபித்து விட்டார். நகைச்சுவை சூப்பர் - பேருந்தின் குமுறல் - மாற்றம் கவிதை நன்று - மரத்தின் மகிமை, பயனுள்ள தகவல், இரவல் அனைத்துமே நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சக்கரகட்டி

முக நூலின் சொந்தக் காரர ஒரு தமிழர் தான் - ஐயமேஇல்லை - சக்கரகட்டி தரவுகளுடன் நிரூபித்து விட்டார். நகைச்சுவை சூப்பர் - பேருந்தின் குமுறல் - மாற்றம் கவிதை நன்று - மரத்தின் மகிமை, பயனுள்ள தகவல், இரவல் அனைத்துமே நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

தோரணத்தில் தொடுத்த பூக்கள் அனைத்துமே நன்று.....

வலைச்சரத்தில் ஆசிரியர் - வாழ்த்துகள்.

கார்த்திக் சரவணன் said...

வலைச்சரத்தில் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

'பரிவை' சே.குமார் said...

அருமை....


பேருந்து சூப்பர்...

வலைச்சரப்பணிக்கு வாழ்த்துக்கள்.

வெற்றிவேல் said...

அனைத்தும் அருமை...

வலைச்சர பணிக்கு வாழ்த்துகள்...

கலாகுமரன் said...

தோரணம் வண்ணமயமா இருக்கு...வலைசர ஆசிரியர் பணி..வாழ்த்துக்கள்!

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்!.. தங்களுக்கு பெருநாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..