Friday 9 August 2013

49 ஓ - கவுண்டமணி விவசாய ஹீரோவாக நடிக்கும் படம்


தமிழ் சினிமாவில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென மக்கள் மனதில் தனி இடம் பதித்தவர் நம்ம கவுண்டமணி அவரை பற்றிய ஒரு புதிய செய்தி இதோ.

நக்கல் நையாண்டி காமெடிக்கு கவுண்டர்தான் எப்போதுமே முதல் சாய்ஸ். மற்ற காமெடியன்கள் மற்றும் ஹீரோக்களால் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும்தான் நக்கல் செய்ய முடியும். கவுண்டமணிதான் ஜனங்களின் மொண்ணைத்தனத்தையும் கிண்டல் செய்யக் கூடியவர். குவாட்டருக்கும், கோழி பி‌‌ரியாணிக்கும் ஓட்டை விற்றவங்கதாண்டா நீங்க என்று ஜனங்களையே கேலி செய்கிறவர்.

ச‌ரி, இவ்வளவு டீட்டெயில் எதுக்கு என்றால் கவுண்டர் மீண்டும் தனது கடையை திறந்திருக்கிறார். எஸ், ஹி இஸ் பேக்.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் 49 ஓ படிவத்தை வாங்கி நிரப்பித்தர வேண்டும். எழுத்தாளர் ஞானிதான் இப்படியொரு முறை இருப்பதை தமிழகத்தில் பிரபலப்படுத்தினார். அதன் பிறகு பலரும் தேர்தலின் போது 49 ஓ படிவத்தை வாங்கி பூர்த்தி செய்தனர். பல வாக்குச்சாவடிகளில் 49 ஓ படிவம் இல்லாத கூத்தும் நடந்தேறியது.

இந்த 49 ஓ என்பதைதான் கவுண்டமணி நடிக்கும் படத்துக்கு பெயராக வைத்துள்ளனர். இதில் கவுண்டர் விவசாயியாக வருகிறார். இன்றைய மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கையும், விவசாயிகளின் கஷ்டத்தையும் தனக்கேயு‌‌ரிய கேலியுடன் படம் நெடுக பட்டைய கிளப்பயிருக்கிறாராம். இந்த தகவல்களை தெ‌ரிவித்தவர், 49 ஓ வை இயக்கப் போகிற ஆரோக்கியதாஸ்.

கவுண்டமணி இதுவரை ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றியடைந்ததில்லை. 49 ஓ தீர்ப்பை திருத்தி எழுதுமா?


6 comments:

தனிமரம் said...

Ooஓ அப்படியா அப்பஒரு ஓப்போடுவம்:))))

cheena (சீனா) said...

அன்பின் சக்கரகட்டி - தகவலுக்கு நன்றீ - படம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சக்கரகட்டி - தகவலுக்கு நன்றீ - படம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் said...

தலைவர் கவுண்டருக்கு ஒரு ஓ போடுவோம்...

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் அவரது படம்....

தகவலுக்கு நன்றி சக்கர கட்டி.

Unknown said...

என் தலைவர் படம் 49 ஓ-வின் தீர்ப்பை மட்டுமல்ல இந்தியாவின் தலையெழுத்தையும் திருத்தி எழுதும்.
49-ஓ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.