Monday 26 August 2013

சாதனை எக்ஸ்பிரஸ் - இந்திய வசூலில் முதலிடம்


நம்ம ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரெகார்ட் எல்லாத்தையும் அடித்து நொறுக்கி கொண்டு உள்ளது. அந்த படத்தின் இன்றைய வசூல் நிலவரம் கிழே

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இந்திய சினிமா சரித்திரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை சொந்தமாக்கியது. இதுவரை முதலிடத்தில் இருந்த 3 இடியட்ஸின் வசூலை அது தாண்டியது.

சென்னை எக்ஸ்பிரஸ் வெளியான நாளில் இருந்து வசூல் சாதனைகளை உடைத்து வந்தது. இதுவரை 100 கோடியை குறைவான நாட்களில் எட்டிய பெருமை சல்மான்கானின் ஏக் த டைகர் படத்துக்கு இருந்தது. ஐந்து தினங்களில் அப்படம் 100 கோடியை எட்டியது. சென்னை எக்ஸ்பிரஸ் நாலே நாளில் 100 கோடியை தாண்டியது. அதேபோல் வெளிநாடுகளிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வசூலை குவித்து வருகிறது.

அமீர்கானின் 3 இடியட்ஸ் 206.28 கோடிகளை வசூலித்திருந்ததே இதுவரை இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையாக இருந்தது. நேற்று முன்தினம் அதனை சென்னை எக்ஸ்பிரஸ் கடந்தது. இன்றுவரை 210 கோடியை தாண்டி அது வசூல் செய்துள்ளது.

இதுதான் இன்றைய தேதியில் இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல்.

மொழி தெரியாத நானே இந்த படத்த இரண்டு தடவ பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் செம்மே. நான் பார்க்கும் பொழுதே நிறைய ஹிந்தி ரசிகர்கள் ரிப்பிட் ஆடியன்ஸ் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது.

ஷாருக்கின் காமெடி சூப்பர் இடையழகி திபிகா படுகோனே சும்மா ஜிவ்வுன்னு இருகாங்க பா. இந்த படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டிய நாம  பாராட்டியே ஆகணும் நிறைய படத்துல்ல இருந்து பல காட்சிகளா உருவி இருந்தாலும் அதை ரசிக்கும் படியா செய்து இருக்கிறார். அதே தலைவா படத்துல்ல இயக்குனர் விஜய்  பண்ணி இருக்கார் மக்கள் மிரண்டு ஓடுற மாதிரி விஜய் சார் நீங்க ரோஹித் ஷெட்டிட போயி இதெல்லாம் கத்துகங்க.

இந்த படம் இன்னும் வசுலை வாரி குவிக்கும்  என்று நம்ப படுகிறது.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி.....

குட்டன்ஜி said...

சரிதான்!

'பரிவை' சே.குமார் said...

ம்... படம் அருமை...
பார்த்தாச்சு... பாடல்கள் அருமை.