Saturday, 8 June 2013

அறிவியல் ஆயிரம் 08.06.13


வணக்கம் நண்பர்களே! 

நாம படிச்ச எவ்ளவோ நல்ல விசயங்களை இந்த பதிஉலகில் பதிவாக  பகிர்ந்து இருப்போம். அது அதிகமான வாசகர்களை போய் சேருவதில்லை. ஆனா இந்த சினிமாவ பத்தின பதிவு போட்டா மட்டும். மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது.  அந்த அளவு இந்த சினிமா மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சும்மாவா அதனாலேயே எத்தன தகுதி இல்லாத சினிமாகாரர்களை நம்ம மக்கள் முதல்வர் ஆக்கி அழகு பார்த்து இருகாங்க பார்த்து கொண்டும் இருகாங்க கொடுத்து வச்சவங்கயா சினிமாக்காரர்கள். அப்பறம் என்ன 
ம--துக்கு  சினிமாவ பத்தி நீ எழுத்துற அப்படி என்று நீங்கள் கேட்கலாம். அண்ணே ஹிட்ஸ் அப்படிங்குறது பதிவர்கள் ரத்தத்திலேயே ஊறி போனதுன்னே அத மாத்த முடியும்மா முடியாது அதான் யாருமே படிக்காத செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு அனைவரும் படிக்க விரும்பும் செய்திகளை  வெளியிடலாம் என்ற எண்ணம் தான். 

ஆனாலும் நல்ல விடயங்களை தேடி படிக்கும் நபர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவாக வாரம் வாரம் பொது அறிவு விரும்பிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவியல் ஆயிரம் பகுதி வெளி இடப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

கடல் நீர் எப்படி குடி நீர் ஆகிறது?

கடல் நீர், ரொம்பவே உப்புக் கரிப்பதை அறிவிர்கள். அதிலிருந்து குடிநீர் தயாரித்து விநியோகிப்பதாக செய்திகளையும் படித்திருப்பிர்கள். அவ்வளவு உப்பு நீர் எப்படி குடிநீராக மாறுகிறது என்று தெரியுமா?

கடல் நீரிலுள்ள உப்புகளை நீக்கினால் அது குடிநீராக மாறிவிடும். கடல் நீரை குடிநீராக்கும் முறைக்கு 'உப்பு நீக்குதல் முறை' என்றே பெயர். 3 முறைகளில் கடல் நீரை உப்பு நீக்க செய்யலாம்.

அனைவரும் பரவலாக அறிந்த உப்பு நீக்கும் முறை 'ஆவியக்குதல் முறை' கடல் நீரை ஆவியாக்கி குளிர்விக்கும் பொழுது ஆவியாகி குளிர்ந்தது குடிநீராகவும், உப்புகள் படிமனாகவும் மாறுகிறது.

உறைய வைத்தல் முறையிலும் உப்பு நீரை குடி நீராக்கலாம். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் நிறைந்து இருப்பதை அறிவிர்கள். அவை எல்லாமே நல்ல குடிநீர் தான். இதே போல உறைய வைத்தல் முறையிலும் குடிநீர் தயாரிக்கலாம்.

மின் கலவை பகுப்பு முறையிலும் குடி நீர் தயாரிக்கபடுகிறது. சவ்வூடு பரவல், அயனிப் பரிமாற்றம் ஆகிய முறைகளிலும் கடல் நீரின் உப்பு தன்மையை நீக்கலாம். ஆனால் இவை எல்லாமே செலவு மிக்கவை.

பாம்பு பால் குடிக்குமா?

நமது ஹாலிவுட் புகழ் இயக்குனர் இராம நாராயணன் படங்களில் நாம் பார்த்து இருப்போம் பாம்பு பால் குடிப்பது போல காட்சிகள் இருக்கும் ஆனால் உண்மையிலேயே பாம்பு பால் குடிக்குமா என்றால் குடிக்காது என்பதே உண்மை. பொதுவாக பாம்புகள் திட பொருட்களையே உணவாக உண்ணும். தவளை,தேரை,எலிகள்,சிறு பறவைகள், பூச்சிகள் ஆகியனவையே பாம்பின் உணவுகள். பாம்பகள் திரவ நிலையில் எதையுமே உண்ணாது. சில பாம்புகள் அரிதாக நீரை பருகும். இதுபோலவே பாம்புகள் மகுடிக்கு ஆடும் என்பதே பொய்.

காது சொல்லும் செய்தி;

காதுகள் மூலம் செய்திகளை கேட்கலாம் சொல்ல முடியுமா?

பிரபல காட்டு நாய் இனம் ஜேக்கல். இவை தங்கள் கூட்டதினருக்கு காது அசைவின் மூலமே செய்திகளை சொல்கின்றன. அதே போல கால்கள், மற்றும் வாலை அசைத்தும் சங்கதிகளை பரிமாறி கொள்கின்றன.

மாறாத வெப்பநிலை;

பூமியில் இன்ன்றைய வெப்ப நிலை நாளை கூடி விடுகிறது. மறு நாள் மழை பெய்து வெப்ப நிலை அப்படியே தலை கீழாய் குறைந்து விடுகிறது. இது போலவே பூமியின் உட்பகுதியிலும் வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்குமா என்றால் இல்லை. பூமியின் உட்பகுதி மாறாத வெப்பநிலையை கொண்டது.

பாரிஸில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில் தரைக்கு கீழே 28 மீட்டர் ஆழத்தில் பாதாள அறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு லாவைய்ச்சர் என்ற அறிவியல் வல்லுநர் வெப்பமானி ஒன்றை வைத்தார். அது இன்றைக்கும் ஒரே வெப்ப நிலையை தான் காட்டிக்கொண்டு உள்ளது. அந்த அளவு 11.7 சென்டிகிரேட் வெப்ப நிலையாகும். இதிலிருந்து பூமியின் வெப்ப நிலை மாறுவதில்லை எனபது தெளிவானது.

ஆனால் பூமிக்கடியில் ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து கொண்டே போகும் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா.

நம்ம பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் ஸ்பெஷல் தலைப்புல பதிவு எழுதுறாங்க உதாரணதுக்கு

மெட்ராஸ்பவன்ல -ஸ்பெஷல் மீள்ஸ்
பரிசல்காரன்-அவியல்
வீடு திரும்பல்- தொல்லை காட்சி
கேபிள் சங்கர்-கொத்து பரோட்டா
ஜாக்கி சேகர்-உப்பு காத்து
பிலாசபி-பிரபா ஒயின்ஷாப்

இதுபோல வாரம் வாரம் நம்ம வலைதளத்திலும் பதிவு இடம் பெறும் அதற்கான தலைப்பு தான் இன்னும் சரியாய் கிடைக்கல உங்களுக்கு தெரிஞ்ச தலைப்ப பின்னோட்டத்தில் சொல்லுங்களேன். அழகான தலைப்பு கூறுவோருக்கு பரிசு காத்து இருக்கிறது.



  

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இந்த அறிவியல் ஆயிரம் பகுதி வெளி இடப்படும் ///

உங்களின் விருப்பம் போல் தேர்ந்தெடுப்பது தான் நல்லது...

Example :

1. அறிவோம் அறிவியல் ஆயிரம்.... அ அ ஆ....!

2. சயின்ஸ் சால்னா...!

ஹிஹி... வாழ்த்துக்கள்...

Barari said...

சினிமா என்ற குப்பையை கிளர எழுத பலர் இருக்கிறார்கள்.ஆனால் அறிவியலை பற்றி எழுத உங்களை போன்ற சிலர் தான் இருக்கிறீர்கள்.தயவு செய்து தொடர்ந்து எழுதவும்.அறிய தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

தினகரன் said...

இதே போல் பயனுள்ள பல தகவல்களை எதிர் பார்த்து . .

ராஜி said...

தனபாலன் அண்ணா சொன்ன மாதிரி சயின்ஸ் சால்னா நல்லா இருக்கு. இல்லாட்டி வானவில்.., கூட்டாஞ்சோறு.., அறிவியல் அமுது..,

Unknown said...

நன்றி தனபாலன் சார் சயின்ஸ் சால்னா நல்லா தான் இருக்கு ஹீ ஹீ

Unknown said...

நன்றி பராரி கண்டிப்பாக தொடர்கிறேன்

Unknown said...

வருகைக்கு நன்றி தினகரன் தொடர்ந்து சந்திப்போம்

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜி கூட்டான்ச்சோறு நல்லா இருக்கே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அறிவியல் தகவல்களை எளிமையாக கூறி வருவது நன்று. பாராட்டுக்கள்

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிதரன் அய்யா