Monday 9 September 2013

கபாலி இன்னா சொல்றாருன்னா 09/09/2013


எழுத்துகள்;

தமிழ் மொழி 247 எழுத்துகள் கொண்டது என்பது நமக்கு தெரியும் அதேபோல பிற மொழிகளும்  எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

ஆங்கிலம் -  26 எழுத்துகள்
ஸ்பெயின் - 27 எழுத்துகள்
இத்தாலி  - 20 எழுத்துகள்
அரபு - 28 எழுத்துகள்
லத்தின் - 22 எழுத்துகள்
துருக்கி - 28 எழுத்துகள்
கிரேக்கம் - 24 எழுத்துகள்
பாரசீகம் - 31 எழுத்துகள்
ஜெர்மனி - 26 எழுத்துகள்
சமஸ்கிருதம் - 48 எழுத்துகள்
பிரெஞ்சு - 26 எழுத்துகள்
சீனா - 214 எழுத்துகள்


தெரிந்து கொள்ளுங்கள் ;

1. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் லண்டனில் உள்ள 'மெட்ரோ பாலிடன் லைன்' ஆகும்.

2. விமானம் ஓட்ட லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய தொழில் அதிபர் ஜே.ஆர்.டி.டாடா ஆவார்.

3. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு அமெரிக்கா.

4. 'இக்ளு' எனப்படும் வீடுகள் பனிக்கட்டிகளால் கட்டப்பட்டது.

5. தங்க கடற்கரை என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்க நாடு கானா ஆகும்.

6. ஆங்கில கால்வாயை முதலில் நீந்தி கடந்தவர் 'மேத்யு வெப்' ஆவார்.

7. செவ்வாய் கிரகத்தில் முதலில் இறங்கிய ரோபோ 'ஆரெஸ் வல்லிஸ்'


எறும்பு ?  

எறும்புகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடம். 50 முதல் 100 நாட்கள் வரை இரை இல்லாமல் உயிர் வாழும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு. ஆனால் அவற்றின் சேமிப்பு பழக்கத்தால் அவை பட்டினி கிடக்கும் வாய்ப்புகள் குறைவு தான். ஏனெனில் ஒவ்வொரு எறும்புக்கும் தல 200 கிராம் உணவு வீதம் சேமித்து வைக்கபட்டிருக்கும்.


உலகின் அசுத்தமான நகரங்கள்;

உலகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, அசுத்த காற்று மற்றும் காரில் இருந்து வெளி வரும் அசுத்த புகை ஆகியவற்றை கணக்கிட்டு  அசுத்த நகரங்களாக 5 நகரங்களை குறிப்பிட்டுள்ளனர் அவை;

1. பாங்காங்
2.பீஜிங்
3.டெல்லி
4.கொல்கத்தா
5.டெக்ரான்

இன்னும் பிற தகவல்களுடன் வேறொரு பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்!

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

நல்லதகவல் சொன்னாரு கபாலி !
''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும் எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளுர் விட்டுப் போச்சு சார் !''>>>இது இன்றைய கபாலியின் விஜயம் ...என் வலைப்பூ 'ஜோக்காளி'யில்!

Unknown said...

த.ம .1.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல்கள்...


நன்றி...

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்கள்...
அருமை.

Manimaran said...

அருமை.. அறியாத தகவல்கள்.