Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சவால்


ஹாலிவுட்ல அவதார்ன்னு ஒரு படம் ஜேம்ஸ் கேமருன்னு ஒரு வெள்ளைக்கார இயக்குனரின் கைவண்ணத்தில் வந்து சக்கை போடு போட்டுசுல்ல. அந்த படத்த படம் மாதிரி தமிழ்ல நம்ம இயகுனர்களினால் எடுக்க முடியாதா என நாம் நினைக்கும் போது முடியும்னு நம்ம செல்வராகவன் களத்துல இறங்கி எடுத்து இருக்காரு.

இதுல சோகம் என்னன்னா அங்க உள்ள பட்ஜெட்டிற்கு டெக்னாலஜிக்கு அப்படி ஒரு படம் பண்ண ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சாத்தியம் ஆச்சு. ஆனா அது இங்க முடியுமா இந்த மாதிரி சொதபல்லா எடுத்ததற்கே 60 கோடி ஸ்வாக இந்த பணமே இப்போ தயாரிப்பாளருக்கு கிடைக்குமான்னு தெரியல ஐயோ பாவம்.
 
இந்த படத்தொட கதைய பத்தி எப்டி சொல்றதுன்னே எனக்கு தெரியல. படம் பார்த்த எனக்கே இந்த படத்த புரிஞ்சுகுறதுகுள்ள எ செல்வராகவன் பிலிம்ன்னு போட்டுடாங்க என்ன கொடுமை சார் இது. எனக்கு புரிஞ்ச வரைக்கும் சொல்றேன் மக்களே கேட்டுகங்க.

கதை;

ஏதோ ஒரு உலகம் அங்க தமிழ் பேசுற வெள்ளைகாரங்கள இருகாங்க. அந்த நாட்டை  ஒரு வெள்ளைகார ராஜா ஆளுகிறார். ராஜா இருந்த தளபதி இருக்கணும்ல அப்படி ஒரு தளபதி அவரு மகன் தான் நம்ம ஆர்யா. அந்த உலகத்துல ஒரு அனாதை வீரமிகு பெண்ணாக அனுஷ்காவும் இருகாங்க. இந்த உலகத்துல உள்ளவங்க யாருக்குமே காதல்ன்ன என்னானே தெரியல. ஆர்யாக்கு மட்டும் அனுஷ்கவ பார்க்கும் போது ஒரு இது இருக்கு. ஆனா ஆர்யாவ பார்க்கும் அனுஷ்காவிற்கு அது வரல.

இப்படி போற கதைல நம்ம வாழுற உலகத்தையும் காட்றாங்க. அதுல நம்ம அனுஷ்கா ஒரு டாக்டர் அங்க சேவை மனப்பான்மை உள்ள ஆர்யாவ பார்த்து காதல் வயப்பட்டு அவர்ட போயி காதல சொல்லும் போது ஆர்யா நோ சொல்லிருறாரு. அப்பறம் நிறைய யோசிச்சு கல்யாணம் பண்ணிகலான்னு அவரு போயி கேட்கும் போது அனுஷ்கா நோ சொல்றாங்க.

இப்படி இரண்டு உலகத்துலயும் நடக்குற கதைய மாத்தி மாத்தி நமக்கு காட்றாங்க.



ஒருவழியா நம்ம உலகத்துல இருக்குற ஆர்யா அனுஷ்கவா காதலிக்க வைக்கிறார். அப்போ திடிர்ன்னு ஒரு ட்விஸ்ட் கால் தடுக்கி விழும் அனுஷ்கா கல்லின் மேல விழுந்து மண்டை சிதறி மர்கயா ஆயிருரங்க. அப்பறம் என்ன வழக்கம் போல செல்வராகவன் படத்தில் வர மெண்டல் ஆகுறாரு ஆர்யா.

இப்போ இன்னொரு உலகம் இருக்குள்ள அங்க உள்ள மக்களால் கடவுளாக மதிக்கப்படும் ஒரு பெண் தனது மாந்திரிக சக்தியால் தன் உலகத்தில் உள்ள ஆர்யாவை அனுப்பி நம்ம மெண்டல் ஆர்யாவ உலகம் விட்டு உலகம் வர வைக்கிறார். நம்ம மெண்டல் இங்க வந்து காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்திற்கு காதலை புரிய வைத்து அந்த ஜோடியை சேர்த்து வைத்து பின்பு மூன்றாம் உலகத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பம் செய்வதே கதை.

என்ன மக்களே தலைய சுத்துதா..

இந்த படத்தில் பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அனிருத் தாம்.

1.கனிமொழியே பாடல்
2.தனுஷ் படிய பாடல்
இவை இரண்டும் நல்லா இருக்கு.

பின்னணி இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல இந்த படத்துக்கு இது போதும்ன்னு நினைச்சார இல்ல தம்பிட அவ்ளோ தான் சரக்க்கான்னு தெரியல. ஆண்டிரியா வாயில் மட்டும் வாசிச்சா பத்தாது தம்பி நீங்க இன்னும் கத்துக்கணும்.



சிஜே வொர்க் அதிகம் உள்ள படம் ஆனா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பார்த்த மாதிரி இருக்கு. ஆர்யா சிங்கத்தை வேட்டை ஆடும் இடம் செம்ம காமெடி அத பார்க்க சிங்கம் மாதிரியே இல்ல ஏன் இந்த தேவ இல்லாத வேலை.

நம்ம செல்வராகவன் சார் நினைபெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரி எடுக்க ஆசைப்பட்டு இறங்கி நொந்து நுடுல்ஸ் ஆகி எப்டியாவது படத்த எடுத்தா போதும்ன்னு நினைச்சு இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த படத்திற்கு ஆயிரத்தில் ஒருவனே தேவலாம் போல. செல்வராகவன் சார் போதும் விட்ருங்க. இந்த படத்திற்கு அப்புறம் படம் இயக்க மாட்டேன்னு ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு பார்ப்போம்.

மொத்தத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் செலவில் ஜார்ஜியா நாட்டை நன்றாக சுத்தி பார்த்து விட்டு பொட்லுரிக்கு பொட்டு வைத்து விட்டார் நம்ம செல்வராகவன்.

 இரண்டாம் உலகம் - உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ சாமிய்ய்ய்ய்






  

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

உங்களுக்கும் நன்றி...

Anonymous said...

வணக்கம்

பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர்கள் படம் பார்த்தது போல உணர்வு.. இருந்தாலும் படம் எப்படி சாதனைபடைக்கும் என்பது புரியாத புதிர்..... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

aavee said...

எனக்கு பட்ட சில விஷயங்கள் உங்களோட ஒத்துப் போகுது. என் விமர்சனம் http://www.kovaiaavee.com/2013/11/irandamulagam.html

பால கணேஷ் said...

அட ராமா.... நான் இப்போ எந்த உலகத்துல இருக்கேன்?

பால கணேஷ் said...

எலே ஆவி... சந்தடி சாக்குல விளம்பரமா? நடத்து... நடத்து!

'பரிவை' சே.குமார் said...

படம் நல்லாயில்லையா..?
செல்வராகவன் பீல்டு அவுட்டா??

கரந்தை ஜெயக்குமார் said...

முன்னெச்சரிக்கைக்கு நன்றி நண்பரே. தப்பித்தேன்

Anonymous said...

Parallel universe எனும் அறிவியல் புனைவை மையமாக எடுத்திருக்கும் இக்கதையிலும் காதல் புனிதமானது எனும் அரதப்பழசான formula. Parallel universe கான்செப்டில் இரு உலகிலும் ஒரே விதமான மனிதர்கள்தான் இருப்பார்கள்.
உதாரணமாக இவ்வுலகில் ஆர்யா-அனுஷ்கா, இரண்டாம் உலகில் ஆர்யா-அனுஷ்கா. ஆனால் இப்படத்தில் இரண்டாம் உலகத்தில் ஆர்யா-அனுஷ்கா தவிர அனைவரும் படம் எடுக்கப்பட்ட georgia நாட்டுக்காரர்கள். இது எப்படி என்றால் நம்மவூர் கில்லியில் விஜய்-த்ரிஷாவுக்கு மட்டும் மாற்றாக ஜாக்-ரோஸ்ஐ போட்டதுபோல் உள்ளது. லியோநார்டோ டிகாப்ரியோவிடம் நம்ம ஊர் பிரகாஷ்ராஜ் “என் செல்லத்த விட்டுடுடா” என கத்தினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இப்படத்தின் இரண்டாம் பாதி உள்ளது.

செல்வாவின் படத்தில் ஒரு சிறப்பான characterization இருக்கும். அதுவும்போக மனிதர் உணர்வுகளோடு விளையாடி இருப்பார்.நாம் கதையோடு ஒன்றிவிடுவோம் (உதாரணம் காதல் கொண்டேன்,7g, மயக்கம் என்ன). அவரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில்கூட எல்லா கதாப்பாத்திரங்களும் மிகவும் நன்றாக செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டாம் உலகம் படத்தில் இது எல்லாமே மிஸ்ஸிங்.வில்லனாக காட்டப்படும் எதிரி நாட்டு ராஜா வரும்போது எல்லாம் சிரிப்புதான் வருகிறது. எதோ ஒரு இங்கிலீஷ் spoof திரைப்படம்தான் பார்கிறோமோ? என சந்தேகம் வருகிறது.. :(

Manimaran said...

செமையா நொந்து போயிருக்கேங்க போல ஹா ஹா ..

Unknown said...

சக்கரகட்டி இப்படி நொந்து நூடுல்ஸ் ஆனதை இப்போதுதான் பார்க்கிறேன் !த.ம 2

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் இருப்பதால் இந்த மாதிரி தொல்லைகளிலிருந்து தப்ப முடிகிறது! :)

இந்த படம் பார்க்கும் தொல்லையைத் தான் சொல்கிறேன்!