Monday 16 September 2013

பிரதம வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் யார் கொடுத்தது ?


4 முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் !! நாட்டின் ஒரு கட்சியின் பிரதம வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் யார் கொடுத்தது ?

இந்திய அரசால் நான்கு முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் ஆர் எஸ் எஸ் அது எப்படி ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பதை எல்லாம் சிந்திக்கின்ற மனநிலையில் யாரும் இங்கே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது . இந்த ஆர் எஸ் எஸ் இயக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் தான் வாய் மூடி இருக்கிறார்கள் என்றால் அவர்களை மூலத்த்தை அறிந்தவர்கள் கூட இவர்களை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது தான் நம்முடையா ஆதங்கமாக இருக்கிறது .

இன்றைய செய்தி நிறுவங்கள் எப்படி இருக்கிறது '' POST MAN JOB '' என்று சொல்லுவார்கள் அதை போல இருக்கிறது எது உண்மை எது பொய் என்று தெரியாமல் யாருடைய சுய லாபத்திற்காக எடுத்த வாந்தியே இவனும் எடுக்கிறான் பரபப்பு தலைப்புடன் வெட்கி தலைகுனிய வேண்டும் இந்த செயலுக்கு இப்போது இருக்கிற ஊடகம்.


பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.

ஆர் எஸ் எஸ் கொள்கைகளை படித்த எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் மனிதாபிமானம் உள்ளவன் இந்த இயக்கத்தை அடியோடு வெறுக்காமல் இருக்க மாட்டான் . இவர்களுடைய முகத்திரையே அவ்வப்போது தி .க மற்றும் கம்யூநிஸ்ட் இயக்கவாதிகள் மற்றும் சமூக எழுத்தாளர்கள் பலர் சுட்டி காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.


இன்றும் இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளை சார்ந்தவர்கள் சிறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி இருக்கும் போது இவர்கள் எப்படி நாட்டின் முக்கியமான இடம் வகிக்கும் பிரதம வேட்பாளரை தேர்தெடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது ?

யாரும் கொடுக்க வில்லை இவர்களே உருவாக்கியது தான் இந்த பாரதிய ஜனதா கட்சி இதில் முற்றிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பில் உள்ளவர்கள் தான் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் . அதுவும் உயர் சாதியே சார்ந்தவர்கள் தான் . ஒன்றும் அறியாத சாதாரண  ஹிந்து மக்களை மூளை சலவை செய்து நாட்டில் கலவரங்களை உருவாக்கி ஆட்சியே பிடிப்பதே இவர்களுடைய முக்கிய நோக்கம்


இவர்கள் நாட்டில் நடந்த கலவரங்கள் குண்டுவேண்டிப்புகளில் முக்கிய பங்கு உள்ளவர்கள் ஆர் எஸ் எஸ் எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளை சார்ந்தவர்கள் லோகேஷ் சர்மா,தேவேந்திர குப்தா ,புரோஹித் ,ராம்ஜி ,சந்தீர்ப டாங்கே ,தயாநந்த் பாண்டே ,சுனில் ஜோஷி ,யோகி ஆதித்யநாத் , இந்திரேஷ் குமார் ,சுவாமி அசீமானந்தா , இன்னும் சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள். இப்படி பொய்யே சொல்லி நஞ்சை உருவாக்கும் கூட்டம் .சில இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் என்று கூறி தடை செய்த இந்திய அரசு . அந்த செயலுக்கு முழு காரணமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தை இன்னும் ஏன் முழுமையாக தடை செய்யவில்லை எனபது தான் கேள்வி குறியாக இருக்கிறது

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்! 

4 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

கிறித்தவ மதம் வளர்ந்த அளவுக்கு இந்துமதம் வளராமல் போனதற்கு இவர்களின் அணுகுமுறைதான் காரணமோ?

கவிதை வானம் said...

பொதுவாக மதம் சார்ந்த இயக்கங்கள்...கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப்படவேண்டும்
அப்போதுதான் இந்தியா உண்மையான மதசார்பற்ற நாடு ஆகும்

ப.கந்தசாமி said...

கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கறவனுக்கு மதி எங்க போச்சு? ஒழுங்கா ஓட்டுப் போடத் தெரியாத கபோதி இந்தியனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

Mr. P.Krishnakumar Assistant Professor said...

But congress continue for next P.M Scam must uncontrollable (2G Scam, coal scam, altering CBI Report, falling currency rate, irresponsible for taking decisions for Tamil people, Pakistan china and other boarder countries will occupy our country, no military power, finally total waste if congress continues.)