நியாயமான கேள்வி;
50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !
...
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !
இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!
இந்த வார நகைச்சுவை;
ஒரு இண்டர்வியூ வின் போது,,
மேலாளர் :
நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய
சொல்லுங்க
பையன்: ஓகே சார்,, சொல்லுங்க நான்
ட்ரை பண்றேன்.,
மேலாளர் : நல்லது,
பையன் : கெட்டது,
மேலாளர் : வாங்க சார்,
பையன் :போங்க சார்,
மேலாளர் : அழகு
பையன் : ஆபத்து,
மேலாளர் : நீங்க தப்பா சொல்றிங்க,
பையன் : நான் சரியா சொல்றேன்,
மேலாளர் : பேச்ச நிறுத்து,
பையன் : தொடர்ந்து பேசு,
மேலாளர் : இப்போ வாய
மூடுரியா இல்லையா
பையன் :
இப்போ பேசுறியா இல்லையா?
மேலாளர் :
நிறுத்துடா எல்லாத்தையும்,
பையன் :
தொடங்குடா எல்லாத்தையும
்
மேலாளர் : போடா வெளிய,
பையன் : வாடா உள்ள,,
மேலாளர் : ஐயோ கடவுளே..,
பையன் : ஆஹா பிசாசே,
மேலாளர் : யு ஆர் ரிஜக்டேட்.,
பையன் : ஐ ஆம் செலக்டட்...,-
கனிவாய் பேசுங்கள்;
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவேமகனை பெற்றுக்கொள்வதைவிட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றேஅழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரதுமனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..
இந்த வார கவிதை;
ஹைக்கூ;
ஐந்தில் தெரியாத அருமை..........
ஐம்பதில் தெரிந்தது......
முதியோர் கல்வி !
எழுதியவர்; வெ . ராம்குமார் வேலூர்
சுய மதிப்பிடு;
திருவோடு சுமந்தும்....
பிச்சை எடுக்கவில்லை....
ஆமை !
எழுதியவர்; டி.எஸ்.ரேவதி
தேவையா...இவையெல்லாம்....?
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில்
மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...
இவையெல்லாம்....?
நன்றி.....
|
|
Tweet |
8 comments:
அன்பின் சக்கர கட்டி
அருமை அருமை - பதிவு அருமை - அனைத்திஅயும் படித்தே - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
புகைப்பட ஏலம் பற்ரி கருத்து அருமை. எதிர் சொல் கலகல!
நியாயமான கேள்வி நெஞ்சை தொடுகிறது.நகைசுவை வயிறு குலுங்க்கிரது.தேவையாய் இதெல்லாம் மனம் பதறுகிறது.அத்தனையும் ஜொலிக்கிறது வாழ்த்துக்கள்.
அசத்தலான தோரணம்...
நியாயமான கேள்வி; என்ற பகுதி மிக மிக அருமை. என் சக்கரகட்டிக்கு பட்டுகுட்டிக்கு வெல்லக்குட்டிக்கு என் மன்மார்ந்த பாரட்டுக்கள்
உங்கள் நியாயமான கேள்விகள் அனைத்தும் அருமை அதிலும்.....3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் ! ...மனதைத் தொட்டது
அண்ணேன்...இந்தக் கேள்விகளுக்கு என்றும் பதில்கள் கிடைக்காது
அருமையான தோரணம்.....
வாழ்த்துகள்..
எல்லாமே அருமை...
மனிதனின் உடல் குறித்த பகிர்வு உண்மையை உரக்கச் சொல்லியது...
ஹைக்கூக்கள் அழகு....
Post a Comment