Wednesday 11 September 2013

அஜித்திற்காக விட்டுக்கொடுத்த சிம்பு

{அண்ணே தலைவா படம் ஊத்திகுச்சு}  

அஜித்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாவதால் தனது படமான வாலுவின் வெளியீட்டை தள்ளிப் போட்டுள்ளாராம் சிம்பு.

அஜித் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரம்பம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

அதே நாளில் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜாவும், ஆர்யாவின் இரண்டாம் உலகமும் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகவிருந்த சில படங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

நான் எல்லாம் 'தல' ரசிகராக்கும் என்று சொல்லித் திரிபவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த சிம்புவின் வாலு படம் ஒரு வழியாக தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அஜித் படத்துடன் தன் படம் மோத வேண்டாம் என்று நினைத்த சிம்பு வாலு படத்தின் வெளியீட்டு திகதியை தள்ளிப் போட்டுவிட்டாராம்.

3 comments:

Manimaran said...

அதான.... 'தல' இருக்கும்போது 'வாலு' ஆடலாமா....? :-)))

aavee said...

உண்மையான ரசிகன்..

தனிமரம் said...

oஓ அப்படியா !ம்ம்