Wednesday 7 August 2013

தலைவா - தலை வலிக்குமா ?


தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் கலந்து கட்டுகிறது. இருநாளும் இல்லாத திருநாளாக (பலி நாளாக...?) தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், பெயரைச் சொல்ல திராணியற்ற சில போக்கி‌ரிகள். தலைவா கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு கிக் இருக்கதான் செய்கிறது.

ஏ.எல்.விஜய் மதராசப்பட்டணத்தை முடித்திருந்த நேரம். படத்தைப் பார்த்த விஜய், மதராசப்பட்டணத்தை பாராட்டியதுடன், நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார். அன்று சொன்னது தலைவாவில் சாத்தியமானது.

தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தை தயா‌ரித்தவர். கடைசிப்படம் - தயா‌ரிப்பாளராக - ‌ரிக்சா மாமா. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட். அது கைகூடிய மகிழ்ச்சியில் இன்னும் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு சின்ன வேடம். வெயிட் பண்ணு, பெ‌ரிய ரோலாக தருகிறேன் என்று ஏ.எல்.விஜய் சொன்னதாகவும், அந்த பெ‌ரிய ரோல்தான் தலைவாவில் அவர் விஜய் ஜோடியாக நடித்திருப்பது என்பதாகவும் கோடம்பாக்கம் இன்னமும் முணுமுணுக்கிறது. இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாகி ரோலுக்கு அடிபட்டது.


ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக இருக்கும் விஜய், தனது தந்தையின் மரணம் காரணமாக தமிழகம் திரும்புவதாகவும், தந்தையின் மரணத்துக்கு காரணமான சக்திகளை முறியடித்து மக்கள் தலைவராக உருவெடுப்பதாகவும் தலைவா கதை பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது (கவனிக்க, கூறப்படுகிறது). விஜய்யின் தந்தையாக சத்யரா‌ஜ் நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படத்தின் கதை என்று மீடியா கற்பனை செய்வதற்கும், நிஜ படத்துக்கும் ஆறு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். தலைவாவில் அப்படியிருந்தால்... வேறென்ன... திட்டாமல் மறந்திடுங்க.

அமலா பால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. விஜய் படத்துக்கு இசையமைக்கிறோம் என்றதும் அவர் முதலில் முடிவு செய்தது, விஜய்யை பாட வைக்க வேண்டும். அந்தப் பாடல்தான் நீங்கள் கேட்கும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. பாடல்.

தலைவாவின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. முடிந்தது ஆஸ்ட்ரேலியாவில்.

நடன கலைஞராக இதில் விஜய் நடித்திருக்கிறாராம். ஆஸ்ட்ரேலியாவில் நடந்த படப்பிடிப்பில் நிறைய நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர். சுமார் 300 பேர் என்கிறது தலைவா டீம்.

திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர் ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம், அனுராக் காஷ்யபின் குலால் ஆகிய படங்களில் கலக்கியவர்.

இவர்கள் தவிர இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயாவும் நடித்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

இவர்கள் தவிர இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயாவும் நடித்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன், சிவா‌ஜி கணேசனின் யாருக்காக... இது யாருக்காக... கெட்டப்பில் வருகிறார்.

சற்றே நீண்ட திரைப்படம். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது.

சென்சா‌ரில் யுஏ சான்றிதழ்தான் கிடைத்தது. யுஏ என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

தலைவா என்ற டைட்டிலும், படத்தின் ட்ரெய்லரும், டைம் டு லீட் என்ற கேப்ஷனும் (தெலுங்கில் பார்ன் டு லீட்) இதுவொரு அரசியல் படம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. படத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொந்தரவுகளுக்கு தலைவா அரசியல் படம் என்ற அனுமானம்தான் காரணம் என்று நினைத்ததால் இயக்குனர் விஜய்யும், இளைய தளபதி விஜய்யும் தொடர்ந்து, இது அரசியல் படம் இல்லை என அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

லேட்டஸ்ட் தகவல், தலைவா திரையிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல். வெத்துவேட்டு மிரட்டல் என்று தெரிந்தாலும் பொறுப்புணர்ச்சி காரணமாக போலீஸில் புகார் செய்து டிக்கெட் ‌ரிசர்வேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் விளம்பரத்துக்கே பெ‌ரிதும் உதவி செய்கின்றன.

மிஸ்‌ரி புரொடக்சன் தயா‌ரித்துள்ள படத்தை வேந்தர் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஆந்திராவில் அண்ணா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் தலைவா என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள்.

ச‌ரி, படத்தைப் பற்றிய ‌ரிசல்ட் என்ன? முதல் பகுதி சுமார், இரண்டாம் பகுதி பரவாயில்லை (சூப்பர் என்றும் சிலர் சொல்கிறார்கள்). ராம்கோபால் வர்மாவின் சர்க்காரை ஞாபகப்படுத்துவதாகவும் கமெண்ட் வந்துள்ளது.

தலைவா - தலை வலிக்குமா இன்னும் ஒரு நாள்தானே. திரையரங்கில் நேரடியாகவே தெரிந்து கொள்வோம்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

தலைவாவை விலாவாரியா ஆரம்பம் (தலய சொல்லலை) முதல் அமர்களமா எழுதியிருக்கீங்க...

முதல்பாதி சுமார்.... இரண்டாம் பாதி பரவாயில்லை... விமர்சனம் வந்தாச்சா....

தமிழ்நாட்டில் தலைவாவுக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்குமோ????

Unknown said...

பார்போம் சே.குமார் என்ன ஆகுது என்று வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

விரிவான விமர்சனம்.....

தில்லியிலும் திரையிடுவதாக இருக்கிறார்கள்.... பார்க்கலாம் என நினைத்திருக்கிறேன்.....