எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து அநாதைகள் தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெ ல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்.....
இதயம் தாண்டி பழகியவர்களெல்லா ம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறா ர்கள்....!
இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும்-திர்ஹமும்-டாலரும்
தந்துவிடுவதில்லை !
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?
பெற்ற குழந்தையின் முகத்தை கூட
தொலைபேசி வழியாகத்தான்
உருவகபடுத்தி
சிலாகித்து கொள்கிறோம்
யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்...!
ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்.. .
பெற்ற குழந்தையின்
முதல் பார்வை...
நெருங்கியவர்களி ன்
மவுணம், திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
குழந்தைகளின் எதிர்காலமும்...
எதிர்கால பயமும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது!
மீண்டும் அயல்தேசத்திற்கு !
என்று விடியும் ...? எங்களின் வைகறை !
வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்! ! ! !
பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும் போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம்.
நெஞ்சங்களில் படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை.
கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.
வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம்.
மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் – குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த...
இதே புலம்பல் தான் தினந்தோறும் அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒரு நாள் அணையும் ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம் ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும்...
வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவார் உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவார் அப்படிஇல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவார் இதே புலம்பல்தான் தினந்தோறும்...
குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும் அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத்தாய் நாடு சென்றால் மட்டும் வாலிபங்கள் துள்ளும்.
வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டிடங்களை காணுகிறோம் நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்...
பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம் அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டுகூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்...
-இதே புலம்பல்தான் தினந்தோறும்...
நன்றி - நாகூர் யூசப் (DUBAI)
நன்றி-இணையம்
|
|
Tweet |
17 comments:
இதுதான் வாழ்க்கை!சிலவற்றைப் பெற சிலதை இழக்கத்தான் வேண்டும்? என்ன செய்வது!
tha.ma.1
குட்டன் அது என்ன THA MAA 1
இப்படித்தான் பலரின் வாழ்வு பெறுவதுக்காக இழக்கப்படுவது அதிகம் தான் மனித வாழ்வில் .அருமையான கவிதை.
தங்கள் கருத்த்து மிக சரி தனிமரம் நேசன்
மனதை நெகிழ வைத்தது இந்த பதிவு.
2 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிற்கு சென்று வரும் வழியில் துபாய் சென்றேன். அப்பப்பா என்னா சூடு.... ஏசி ஹோட்டலில் இருந்து இரவு 7 மணியளவில் சிறிது தூரம் வாக்கிங்க் செல்வோம் என்று சென்ற நாங்கள் 2 பில்டிங்க் தாண்டி இருக்கமாட்டோம் சூடு தாளாமல் திரும்ப ரூமுக்கு நடந்து வரவில்லை ஒடித்தான் வந்தோம். எப்படிதான் அரையும் குறையுமாக சாப்பிட்டு இந்த வெயிலில் எப்படிதான் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதெல்லாம் அழுகத்தான் செய்கிறது.
இவர்கள் வாழும் காலத்தில் நரகத்தில்தான் வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் இறுதியாக செல்லும் இடம் சொர்க்கமாகதான் இருக்கும்
பெண்டாட்டி ,பிள்ளைகளை இங்கே விட்டு விட்டு அங்கே போய்என்ன ஆணிப் பிடுங்க வேண்டி இருக்கிறது என்று நானும் நினைத்ததுண்டு ...எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு கணவன் வெளிநாட்டு வேலைக்கு போனால்தான் நிம்மதி ,ஏன் என்றால் இங்கே இருந்தால் தினசரி குடிகாரனிடம் அடி வாங்கி முடியலேயாம் !
பாலைவன அரபு நாடுகள் மட்டும் என்றில்லாமல்,
எந்த ஒரு வெளிநாட்டிலும் வாழுகின்ற நடுத்தர
வர்க்க மக்களின் குமுறல்கள்தான் இந்தக்
கவிதையும் கட்டுரையும்.
த.ம. 2 voted!
வெளிநாடுகளில் வாழும் பல நண்பர்களின் நிலை இது தான்......
இந்தியாவிலேயே வெளியூர்களில் வாழ்பவர்களின் நிலையும் ஏறாத்தாழ இதே தான்!
கண்டிப்பா மதுரை தமிழன் அண்ணே ரொம்ப வருத்தமான விசயம்
அவனுக்கு அங்க போன இன்னும் நிரய குடிக்கலாம் என அவன் சென்று விட்டான் போல பகவான் ஜீ
ஆமா நிஜாமுதீன் வெளிநாட்டு வாழ்க்கையே அப்படி தான்
ஆமாம் வெங்கட் அண்ணே இதுக்கு விசா தேவா இல்ல அதுக்கு விசா தேவை அவ்ளோ தான் வித்தியாசம்
உண்மையை விளக்கும் கவிதை...
கட்டுரை நானும் மெயிலில் படித்தேன்....
பகிர்வுக்கு நன்றி....
வருத்தம்தான்...பிழைப்பு?
வருகைக்கு நன்றி சே.குமார்
என்ன பண்ணுவது கண்ணதாசன் ஐயா வருத்தப்பட தான் முடியும் நம்மால்
Post a Comment