Showing posts with label மொக்கை படங்கள். Show all posts
Showing posts with label மொக்கை படங்கள். Show all posts

Monday, 16 December 2013

2013 - ஆக சிறந்த மொக்கை படங்கள்

2013 ம் வருடம் தரமான படங்களை தவிர அதிகம் மொக்கை படங்களே வந்துள்ளன அவற்றில் நாம் ரொம்ப எதிர்பார்த்த இயக்குனர்கள்&நடிகர்கள் படம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபட்டு உள்ளன அவை இதோ.

10.அன்னக்கொடி;

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம் எடுத்து நம்ம தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் என்ற துடிப்பான ஹீரோவையும் ராதா என்ற அழகான ஹீரோயினையும் கொடுத்தவர் நம்ம இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அதே போல தன் மகளுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் தன்  மகளான கார்த்திகாவை நடிக்க வைத்தார் ராதா. ஆனா இந்த படத்தோடு மும்பைக்கு கார்த்திகா மூட்டை கட்டுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.


9.கடல்;

மணிரத்னத்தால் ரொம்ப பில்டப் பண்ணபட்ட படம். பாடல்களை தவிர படத்தில் வேற ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த ஆளு இப்படி இருட்டுளையும்,புரியாத வசனத்தையும் வச்சு படம் எடுப்பாருன்னு தெரியலையே.


8.ஆதி பகவான்;

அமீர் இவரு அடுத்த பில்டப் மேன். வருஷக் கணக்கா இந்த படத்த எடுத்தார்யா இந்த மனுஷன். அப்படி இந்த படத்தில் என்ன இருக்குன்னு இத்தனை வருஷமா இழு இழு ன்னு போட்டு எடுத்தார் இந்த ஆளு. ஒரு வேலை பாங்காங்ல இந்த பட ஹீரோயின் நீது சந்திராவோடு பல்லாங்குழி விளையாடி இருப்பாரோ.


7.கௌரவம்;

என்னா டைரக்டர்யா இவருன்னு நினைத்த ஒருத்தர் திரு.ராதாமோகன். அவரோடைய முந்தைய படங்கள் அந்த மாதிரி. அவரோட முதல் படமான அழகிய தீயே என்னோட பேவரிட் படம். அவரோட அனேக படமான பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம் என அனைத்துமே என்னால் ரசிக்கப்பட்ட படம். ஆனா இவரிடம் இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை. கருத்தான படம் தான் ஆனா மக்களிடம் எடுபடவில்லை.


6.மூன்று பேர் மூன்று காதல்;

இந்த வருஷம் நாம ரொம்ப எதிர்பார்க்கும் இயக்குனர்கள் எல்லாம் மண்ணை கவ்விட்டாங்க அதுல இவரும் ஒருத்தர் திரு.வசந்த். இவரு படத்தில் பாடல்களாவது தேறும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை தவிர சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை.


5.இரண்டாம் உலகம்;

இயக்குனர் செல்வராகவனின் கனவு படம். ஆனா இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் தூக்கம் தொலைந்து போய் விட்டதாக கூறுகிறார்கள். இனிமேலாவது செல்வராகவன் கனவு காண்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


4.பட்டது யானை;

ஏற்கனவே விஷாலை வைத்து மலைகோட்டை என்று படம் எடுத்துட்டு அதே விஷாலை வைத்து அதே கதையை பெயரை மற்றும் மாற்றி மறுபடி ரீமேக் பண்ணி இருக்கார் நம்ம இயக்குனர் திரு.பூபதிபாண்டியன்
ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் துணிச்சல்.


3.தலைவா;

இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றதுமே எனக்கு தெரிந்து விட்டது எப்படியும் இது தளபதிக்கு பட்டை தான் என்று என் நினைப்பு பொய் ஆகவில்லை. நன்றி இயக்குனர் விஜய் அவர்களுக்கு. தமிழகத்தை ஆளும் கனவில் இருந்து விடுபட்டு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் தளபதி ஆட்சி தான்.


2.நையாண்டி;

தேசிய விருது பெற்ற இயக்குனர்&நடிகர் இணைந்து செய்த படம் ஆனா இப்படி படம் பார்க்க சென்ற மக்களை நையப்புடைப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இதில் படத்திற்கு மட்டமான விளம்பரம் வேற போங்கடா டேய்.


1.அலெக்ஸ் பாண்டியன்&அழகுராஜா;

இந்த வருடம் கார்த்திக்கு சிறப்பானதாக அமையவில்லை பாவம் மனுஷன் ஹிட் மேல ஹிட் கொடுத்து இப்போ பிளாப் மேல பிளாப் பா கொடுத்து கொண்டு இருக்கிறார். அதுக்கு தான் ஓவரா பேச கூடாது இனிமே பேச்சை குறைத்து கொண்டு கொஞ்சம் நடிங்க பாஸ்.

இதை தவிர பாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள், மொக்க சிவா நடித்த யாயா&சொன்னா புரியாது&தில்லு முல்லு, தனுஷின் மரியான், விக்ரமின் டேவிட் என நீண்ட பட்டியலே இருக்கிறது. மொத்தத்தில் 2013 ம் ஆண்டு பல மொக்கைகளை கொண்டு உள்ளது.

Thursday, 16 May 2013

விஜய் டாப் 10 மொக்கை படங்கள்

நான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்.


இந்த பதிவை படித்த எனது நண்பர் திருப்பூர் கோபி முக புத்தகத்தில் அப்படியே டாப் மொக்கை படங்களை  வரிசை படுத்தி இருக்காலான்னு சொன்னாரு ஆஹா அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி என்று உருவானது தான் இந்த பதிவு.

விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்த பின்னர் தான் அவரை நடிகராக தமிழகம் ஏற்று கொண்டது அதுவரை அவர் பிட்டு பட நடிகராகவே சோப்பு போடவும் கபடி விளையாடவும் சங்கவியுடன் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தார். பூவே உனக்காக படத்தை பார்த்த பின்பு தான்  எனக்கு தளபதியை பிடிக்க ஆரம்பித்தது அதன் பின் அவர் நடித்த படங்கள் மட்டுமே என் கணக்கில் எடுத்து கொள்ள பட்டது.
10.மாண்புமிகு மாணவன்

எப்பவுமே விஜய்யை வைத்து அவரது தந்தை இயக்கி இருந்த ஒன்ஸ்மோர் தவிர  படமெல்லாம் மொக்கையாகவே இருக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒரு மொக்கை படமே.

9.நிலாவே வா

இந்த படத்தில் சிலுவை என்னும் கதாபத்திரத்தில் நடித்து இருப்பார். பாடல்கள் நன்றாக இருத்தாலும் படம் படு கேவலமா இருக்கும். இந்த படத்தின் கடைசி காட்சியில் அனைவரும் கடலில் நின்று கொண்டு சிலுவை சிலுவை ன்னு கத்துவாங்க கதறுவாங்க. தியேட்டர்ல இருந்து மக்களும் கதரிக்கிட்டே வெளிய ஓடிட்டாங்க.

8.என்றேன்றும்  காதல்

இந்த படத்துல்ல தயாரிப்பாளர் காசுல்ல நல்லா வெளிநாட்ட சுத்தி பார்த்துட்டு வந்துருபாங்க. விஜய் படம்னா பாட்டாவது நல்லா இருக்கும் இந்த படத்துல்ல அது கூட நல்லா இல்லை.

7.நெஞ்சினிலே

இதும் அவரது தந்தையின் இயக்கத்தில் வந்த செம்ம மொக்கை. இந்த படத்துல்ல இருந்து தான் ரசிகர்கள் இவர புகழுர மாதிரியும் பதிலுக்கு இவர் ரசிகர்களை புகழ்வது போல பாடல் இடம் பெற ஆரம்பித்தது. நான் இந்த பாட்ட கேட்டு மெய் மறந்து போனேன் அந்த கால கட்டத்தில் தலைவர் என்னம்மா நம்ம மேல பாசம் வச்சு இருக்கிறார் என்று.

6.மின்சார கண்ணா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலேயே மிக மட்டமான படம்னா அது இது தான் அந்த காரணத்தினால் தான் இந்த படத்துக்கு அப்புறம் இரண்டு பேரும் சேரவே இல்லை. இவரு யாரு புறாவுக்கே பெல் அடிச்சவருள்ளே என்று தேவை இல்லாத பில்ட் அப் கொடுத்தனால படம் படுத்து கொண்டது.

5.கண்ணுக்குள் நிலவு

காதலுக்க்கு மரியாதை என்னும் மிக பெரிய வெற்றியை தந்த அதே கூட்டணி ஆனா இந்த தடவ அதே வெற்றியை பெற முடியவில்லை. விஜய்யின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதாய் எடுபடவில்லை. ஆனா இசை மிகவும் பேசப்பட்டது பாடல்கள் மிகவும் அருமை.

4.தமிழன்

இந்த படத்தில் நம்ம இந்திய நாட்டு கடன்களை எல்லாம் அடைத்து அவருக்கு தபால் தலை வெளியிடும் அளவிற்கு சாதனை புரிந்த இளைஞராக தளபதி நடித்து இருப்பார் இந்தியாவின் கடனை அடைத்த இந்த படம் தயாரிப்பாளரின் கடனை அடைக்க முடியாமல் போயி விட்டது.

3.புதிய கீதை

இந்த படத்தில் திறமையான மாணவராக நடித்து இருப்பார். இந்த படத்தில் இருந்து தான் அஜித்தை வம்புக்கு இழுத்து படத்தில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி வசனம் வைக்கும் முறை ஆரம்பம் ஆனது. வழக்கம் போல பாடல்கள் அருமை ஆனால் படம் பப்படம்.

2.உதயா

இந்த படத்தில் தான் விஜய்யும் இசை அமைப்பாளர் ரஹ்மானும் முதன் முதலாக ஓன்று சேர்த்தனர். பொருளாதார சிக்கலில் சிக்கிய  இந்த படதின் தயாரிப்பாளர் நடராஜன்  பல வருசமா படத்தை கிடப்பில் போட்டு விட்டார். ரொம்ப நாள் கழித்து இந்த படத்தை வெளியிட்டார். உடனே எடுத்து ரிலிஸ் பண்ணுனாலே படம் ஓடுறது கஷ்டம் அதுல இது வேறயா படம் ஊஊ.

1.சுறா   

நான் விஜய் ரசிகனாக இருந்தும் விஜய் நடிபிற்காக மேல கூறிய அவரது அனைத்து  மொக்கை படங்களையும் ரசித்ததுண்டு. ஆனால் என்னையும் வெறுப்பேற்றிய  படம் என்றால் அது இதுவே எனவே இதற்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் டென் என்று சொல்லிவிட்டதால் அழகிய தமிழ்மகன், குருவி,வில்லு, ஆகிய படங்கள் இடம்பெற வில்லை.