Saturday 13 April 2013

உதயம் NH4- ஒரு பார்வை


பொதுவாவே நான் எந்த படத்தையும் ரொம்ப எதிர் பார்த்துலாம் போக மாட்டேன்.நம்ம பதிவர்கள் படத்த பார்த்து கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட்டதுக்கு அப்பறம் தான் போயி பார்ப்பேன்.ஆனா ஒரு பாடல் அந்த பாடலினால் இந்த படத்த முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்று எனக்கு தோன்றி விட்டது இந்த படம். அந்த பாட்டு நம்ம கான பாலா பாடின ஒர கண்ணாலே என்ற பாடல் தான். ட்ரைலர் கூட பார்த்தேன் லவ் ஸ்டோரி அண்ட் திரில்லர் மூவி மாதிரி இருக்கு. 

ஹீரோ நம்ம ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சித்தார்த். இவர் அந்த படத்திலேயே நடிச்சு இருந்தாலும் அடுத்து வேற ஏதும் பெரிய  படமாக அமையல. தெலுங்குல தான் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு    இவரும் பெரிய ஸ்டார் ஆயிட்டாரு. தமிழில் நீண்ட இடைவேளைக்கு அப்பறம் இவர் நடிப்பில் வெளி வந்த படம் தான் 180 படம். அந்த படம் சுமாரா போச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுக்கு அப்பறம் காதலில் சொதப்புவது எப்படின்னு ஒரு படம் பண்ணி இருந்தாரு. செம்மயா போச்சு அந்த படம் போன வருட ஹிட் லிஸ்டில் உள்ள படம். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளி வரும் படமே உதயம் nh 4.
(பாப்பவ பார்குறப்ப ஒரு ஜாடைல சன்னி லியோன் மாதிரி இல்ல )

ஹீரோஇன் அர்ஷிதா ஷெட்டி அறிமுகம் ஆகுறாங்க. பாப்பா பார்க்க சுமாரா இருக்கு படம் வெளி வரட்டும் மத்தத அப்பறம் பார்த்துக்கலாம்.

இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இரண்டு பாடல்கள் தான் கேட்டேன் இரண்டுமே சூப்பர். அதுலயும் நம்ம பாலா பாடுன்ன அந்த பாட்டு சூப்பர் டுப்பர் ஹிட். பின்னணி இசை படம் வந்ததுக்கு பின்பு.

ஒளி பதிவு வேல்ராஜ் எடிட்டிங் கிஷோர் வசனம் நம்ம  வெற்றி மாறன் தனது உதவியாலருக்காக எழுதி இருக்கார்.

இயக்கம் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி ஆற்றிய மணிமாறன் என்பவர். படத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. படத்தை ரெட் ஜெயெண்ட் மூவி வெளியிடுகிறது.

வரும் 19 தேதி படம் வெளியாகிறது.

10 comments:

rajamelaiyur said...

போங்க பாஸ். . .விமர்சனம்னு நினைத்து ஆர்வமா வந்தேன். . .

தினகரன் said...

ராஜா . . சேம் ப்ளட் . :-)

Unknown said...

ஹா ஹா ராஜா சார் படம் வராமலே விமர்சனமா ?

Unknown said...

தினகரன் சார் 19 விமர்சனம் போட்டுறலாம்

முத்தரசு said...

ம் ம்

Unknown said...

முத்தரசு என்னமோ சொல்ல வந்துட்டு சொல்லாம போயிட்டிங்க திட்டனும்னா திட்டிருங்க தல

சீனு said...

//போங்க பாஸ். . .விமர்சனம்னு நினைத்து ஆர்வமா வந்தேன். . .// mee to0 :-)

Unknown said...

சீனு தல எப்படி ரீலிஸ் கு முன்னாடியே விமர்சனம் எழுதுறது

மாலதி said...

parattukal

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மாலதி