Showing posts with label சிரிக்க சிந்திக்க. Show all posts
Showing posts with label சிரிக்க சிந்திக்க. Show all posts

Thursday, 29 August 2013

வாய் விட்டு சிரிப்போம்..!!


மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
...................................................................................................

நன்றி

Sunday, 25 August 2013

என்ன உலகமடா இது..???


மேனேஜரும் நம்மளும்...

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..
......

ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்ய முடியலேன்னா….. நேரம் இல்லே..


.......

எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா… முட்டாள்தனம்

அவர் பண்ணினா.. அவரும் மனுஷந்தானே.. கடவுளா..?

.....

நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்

அவர் செஞ்சா.. முன்னுதாரணம்..


......

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.. பிடிவாதம்..

அவர் அப்படி நெனைச்சா… கொள்கையில் உறுதி..

....

நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.. காக்கா பிடிக்கறீங்க.

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.. ஒத்துழைப்பு.. பணிவு..


.....

நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.. ஊர் சுத்தறீங்க...

அவர் இருந்தா.. பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கிறார்..

.....

நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவுபோட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க..

அவர் லீவு போட்டா.. ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..

# என்ன உலகமடா இது..????

நன்றி!

Thursday, 11 April 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:


முக நூல் சும்மா அரட்டை அடிக்க மட்டும் இல்லைங்க. பல நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நமக்கு அப்படியே ஏத்த மாதிரி இருக்கும். அப்படி தான் இந்த தகவலும் பெரும்பான்மையான கணவன்மார்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே எனக்கு பட்டது. அதான் இதை இங்கு பகிர்ந்து உள்ளேன்.


1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


மனைவியிடம் பிடிக்காத விஷயங்கள் 12 இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள் ஆயிரத்திற்கு மேல் உள்ளது. [வீட்ல சோறு கிடைக்கணும்ல நண்பர்களே! அதான் கடைசி இரண்டு வரிகள் நம்ம  பிட்டு எப்புடி?


நன்றி!!!!!!!!!! 

Monday, 10 December 2012

சிரிப்போம் சிந்திப்போம்




மனிதர்களில் சிலபேர்… எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு.

எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவர் 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான்.

ஒரு நாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.

“நான் சொன்னபடியே செய் தண்ணிய மடக் மடக்குன்னு குடி அப்புறம் பாரு என்ன நடக்குதுண்ணு”. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மடாரென்று கீழே “ஓ” வென்று கத்தி அழுதது.

கிழவனார் குழந்தையைப் பார்த்தார். சத்தமான குரலில் “எந்தருச்சுவாடா.. தூக்கி விடுகிறேன்” என்று கத்தினார். குழந்தை அதே வேகத்தில் எழுந்த ஓடி அவரிடத்தில் வந்தது.

“முட்டாப் பயலே.. நீயா எந்திருச்சு வந்தப்பெறுகு நானா தூக்கி விடுவேன் போடா!” குழந்தை குழப்பமாக அவரைப் பார்த்தபடி நின்றது.
                                                                                                                          

புதிதாக வகுப்பிற்கு வந்த ஆசிரியர் வருகைப் பதிவை எடுத்து பெயர் வாசித்தார். பலர் வரவே இல்லை. கோபம் வந்தது அவருக்கு.

“டேய் வராதவனெல்லாம் ஒழுங்கா எந்திரிங்கடா”இருந்த மாணவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்.
                                                                                                                          

என் நண்பர் ஒருவர், தொடர்ந்து எப்பதும் யாராவது ஒருவருக்குத் கடிதம் எழுதிக்கண்டே இருப்பார் பதில் வருமா? வராதா? அதைப் பற்றியெல்லாம் கலைப்படமாட்டார். எல்லாம் எழுதிவிட்டுக் கடைசியில் ஒரு வரி மறக்காமல் எழுதிவிடுவார்.

“இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே பதில் எழுது” இதற்கு என்ன பொருள் என்று எனக்கு இன்றைக்கும் விளங்கவில்லை.
                                                                                                                            

சிலர் யாரையும் ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.

ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை கடவுள் மயங்கி விழுந்தார்.
                                                                                                                            

ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னோடு வந்த ஒருவர் கவலையோடு என்னிடம் கேட்டார்” உங்களுக்கு ஜிலேபி போட்டார்களா?”

“இல்லையே”என்றேன்.

“நல்லவேளை, எனக்கும் போடல… அதான் கேட்டேன்” திருப்தியாக நடந்து போனார்.

வாசலில் என் செருப்பைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த “ஜிலேபி” மீண்டும் வந்தார். “சே – 300, 400 ரூபாய் இருக்கும் புத்தம் புது செருப்பு. சாப்பிட்டு வந்து பார்க்கிறேன் காணம் சார்”

“ஐயோ அப்பறம் என்ன பண்ணீங்க” நான் கவலையோடு கேட்டேன்
.
“அப்புறம் என்ன.. என் செருப்பைத் போட்டுட்டு வந்தேன்… எல்லாம் நேரம் சார் நேரம்!” அவர் பேசிக்கொண்டே போனார். எனக்கு பிறகுதான் புரிந்தது, யாரோ ஒருவருடைய செருப்பை இவர் பார்த்து வைத்து அது கிடைக்காத ஏக்கத்தில் பேசுகிறார் என்று.
                                                                                                               

“எங்க அப்பா ரெண்டு கையிலேயும் ஒரே தள்ளு…. பஸ் ஓடியே போயிரும்” சொன்னான் ஒரு சிறுவன் பெருமையாக.

“ம்… இதென்ன பெரிசு, எங்கப்பா ஒரே கையில பஸ்ஸைத் தள்ளிருவாரு!” இன்னொரு பையன் சொன்னான்.

மூன்றாவது பையன் சொன்னான்; “எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னா போதும் பஸ் ஓடியே போயிரும்”.

ஆமா உங்கப்பா யாரு பயில்வானா?”

“இல்லடா… கண்டக்டரு”
                                                                                                               

புதுவருட காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய ஆசிரிய நண்பர் மகிழ்ச்சியோடு சொன்னார் “அட, இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல தான் வருது… பார்த்தீங்களா?”

இந்த மாதிரித் தொடர் குழப்பங்கள் உங்களுக்கு வந்ததுண்டா?

Sunday, 4 November 2012

எதற்கு கொடுத்தோம் லஞ்சம்?


'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்''லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்'

இது ஒரு படத்துல்ல வர வசனம் அது தான் இப்ப நம்ம நாடுள்ள நடக்குற உண்மையான நிலவரம். வயித்து பசிக்காக ஒருவன் திருடும் பொழுது அவனை தண்டிக்கும் நம் சமுதாயம் வேண்டும் என்றே லஞ்சம் என்ற பெயரில் திருடும்  ஒரு அரசியல்வாதியையோ மக்களை சுரண்டும் பெரும் நிறுவனத்தையோ இந்த சட்டமும் சமூகமும் ஒன்றும் செய்வதில்லை. முன்பை விட இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை.

இதனால் மக்களும் லஞ்சம் கொடுக்கும் மன நிலைக்கு வந்து விட்டார்கள். வீட்டில் டெலிபோன் பளுதடைந்தலோ சரி செய்ய வரும் ஊழியர்க்கு கேஸ் தாமதிக்காமல் விட்டிற்கு வர அவருக்கு மணி ஆர்டர் வந்தா அதை கொண்டு வரும் தபால்காரருக்கு வீட்ல பீஸ் போயிட்ட சரி செய்ய வரும் மின்வாரிய ஊழியர்  இப்படி எதற்கெடுத்தாலும் கொடுத்தல்  மட்டுமே நம்மால் எதையும் பெற முடியும் அந்த நிலைமைக்கு வந்து விட்டது நம் அன்றாட நிலைமை.சரி இந்த லஞ்சத்தை எப்படி ஒழிப்பது அதை பற்றிய தொகுப்பு கிழே.

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?




லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்
சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!
[நன்றி-முகநூல்]

இது சிரிப்பதற்காக சொல்லவில்லை நமது நாட்டின் உண்மை நிலை இது தான். திருடன்கிட்டவே சாவிய குடுத்த என்ன ஆகும். நம் நாடுள்ள உள்ள திருடன்லையே பெரிய திருடன் நம்ம அரசியல்வாதி தான். திருடுன்ன என்ன தண்டனைன்னு சட்டம் போடுரவனும் அவன் தன இது வரை தப்பு பண்ணுன யாரும் தண்டனையை முழுதா அனுபவிச்ச மாதிரி தெரியல்ல அப்பரம் எதுக்குயா சட்டம். லஞ்சம் வாங்க கூடாது ன்னு ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து செயல் படும் போது மட்டுமே இவற்றை எல்லாம் ஒழிக்க முடியும்.
அது வரை இது தொடரும்.