Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts
Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts

Wednesday, 1 May 2013

சூது கவ்வும் திரை விமர்சனம்


இன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் கூறி கொள்கிறேன்.

1.வசந்தின் இயக்கத்தில் அர்ஜுன்,சேரன்,விமல் நடிப்பில்  மூன்று பேர் மூன்று காதல்.
2.தனுஷ் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் நம்ம பழம் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர் நீச்சல்.

3.பிட்சா, நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் என இரண்டு தொடர் ஹிட் படம் கொடுத்த விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம்.

இதுல்ல நான் ரொம்ப எதிர் பார்த்த படம் சூது கவ்வும் தான். ட்ரைலர் மங்காத்தா படத்தினை போல இருந்த காரணத்தினால் முதலில் அதையே பார்ப்போம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.


கதை;

இந்த படத்தோட முழு கதையையும் நான் சொல்ல போறது இல்லை. பார்க்க போற உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விட கூடாது என்பதற்காகவே சிம்பிளா சொல்றேன். வேலை இல்லாத 3 பசங்க 40 வயது பெரியவர் ஒரு பார் மோதலில் சந்தித்து கொள்கிறார்கள். அவர்கள் சேர்ந்து சிறு சிறு கடத்தல்கள் புரிகின்றனர். அப்போது மந்திரி மகனை கடத்த வேண்டும் என்ற அசைன்மெண்ட் வருகிறது முதலில் தயங்கி பின்னர் ஏற்று கொள்கிறார்கள். கடத்தலில் மந்திரி மகனே அவர்களுக்கு உதவி செய்து கிடைக்கும் பணத்தில் பாதி பாதி பிரித்து கொள்வது என முடிவு ஆகிறது. டீலிங் வெற்றிகரமாக முடிந்து பணம் கைக்கு கிடைத்தவுடன் பணத்துடன் மந்திரி மகன் எஸ்கேப் ஆகி விடுகிறார். இதற்க்கு இடையே அந்த மந்திரி கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு டெர்ரெர் போலீஸ் ஆபிசரை நியமிக்கிறார்.

பணம் இவர்களுக்கு கிடைத்ததா ?

போலீசிடம் சிக்கினர்களா?

மந்திரியின் மகனின் நாடகம் மந்திரிக்கு தெரிந்ததா?

இவர்கள் அனைவருக்கும் நடக்கும் கண்ணாமுச்சி ஆட்டமே  படத்தின் பரபர த்ரில்லிங் திரைக்கதை.

இந்த படத்த பார்த்து முடிச்சதும் எனக்கு முதல்ல பாராட்டணும்னு தோணுனது. இந்த படத்தின் இயக்குனர் நலன் அவர்களை தான். இவரோட குறும் படங்களின் ரசிகன் நான். படத்திலும் அதிகமாக குறும் படங்களில் நடித்தவர்களே நடித்து உள்ளனர் என்பதை விட அந்த கதா பாத்திரங்களாகவே மாறி இருகிறாக்கள். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளார். தேவை இல்லாத பாடல்கள் சண்டைகள் இல்லவே இல்லை. கடத்தல் எனபது எவ்வளவு சீரீஎஸ் ஆனா விஷயம் அந்த சீரீஎஸ் குறையாமல் அதை நகைச்சுவையாக சொன்னதற்கே இவரை பாராட்டனும் நலன் சூப்பர் கலக்கிடிங்க. இது மாதிரி அடுத்த அடுத்த வித்தியாசமான படங்களை நீங்க தரனும் குட் ஜாப்.

அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு குமரன் இவரின் தயாரிப்பில் வெளி வந்த முந்தைய இரு படங்களான அட்டகத்தி பிட்சா இரண்டுமே ஹிட். அந்த வரிசையில் இதும் சூப்பர் ஹிட் தான். பெரிய நடிகர்களை நம்பி மொக்கை படமா எடுத்து தானும் கைய சுட்டுகிட்டு எங்க கழுத்தையும் அறுக்காம இந்த மாதிரி திறமை உள்ள இளம் இயக்குனர்களுக்கு வாய்பளித்து வரும் இந்த தயாரிப்பாளரையும் நாம் பாராட்ட வேண்டும்.

பின்பு விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே இயக்குனர்க்கு இல்லை இவராக சென்று இந்த கதா  பாத்திரத்தை தானே செய்வதாக இயக்குனரிடம் கேட்டு விரும்பி வாங்கி உள்ளார். நாற்பது வயது உள்ள சராசரி மனிதனாக மட்டும் இல்லாமல் மன நல பாதிக்கபட்டவராகவும் நடித்து அசத்தி உள்ளார்.நடித்து இருக்கிறார். படத்துக்கு படம் இவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே உள்ளது. இது மாதிரி அவரும் வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். இவரின் அடுத்த படத்தினை இப்போதே என்னை எதிர் பார்க்க வைத்து விட்டார்.

நாயகி சஞ்சிதா ஷெட்டி இவரடோட கதாபத்திரம் செம்ம இன்ட்ரெஸ்டிங்க். அது நமக்கு தெரிய வரும் போது அட அப்படின்னு நெனைக்க தோணுது.
இவரும் அவருக்கு உரிய வேலையை சரியாக செய்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் கை ஆட்களாக நடித்துள்ள மூன்று பேருமே நல்ல தேர்வு. நல்லா பெர்போர்மேன்ஸ் பண்ணி இருகாங்க.

மந்திரியின் மகன் அருமை பிரகாசமாக நடித்துள்ள கருணாகரன். குறும்படங்களில் நாயகனாக நடித்தவர். இப்ப வர படங்களில் எல்லாம் காமெடியன்களுக்கு பாடல்கள் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவருக்கும் படத்துல்ல சாங் இருக்கு. அது ரொம்ப சரியாகவும் இருக்கு.  கருணா சூப்பர்.

படத்தில் டெரெர் போலீஸ் அதிகாரியாக வருபவர் அஜித்தின் பில்லா படத்தில் அவரின் வலது கையாக நடித்து இருப்பவர் பில்லா ஜெகன் உற என்று முகத்தை வைத்து கொண்டு டெரெரகா நடித்துள்ளார். இவரிடம் அவர்கள் என்ன அவர்களோ என்று நாம் பயப்படும் அளவிற்கு உள்ளது.

படத்தில் தேவை இல்லாத பாடல்கள் இல்லை. கதை ஓட்டத்துடன் கூடிய சிறு சிறு பாடல்கள் மட்டுமே அனைத்தும் ரசிக்கும் படி தந்துள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையும் அருமையாக உள்ளது. கலக்கலான கான பாலாவின் பாடல் படத்தில் உள்ளது. அதை படமாக்கிய விதம் இன்னும் சூப்பர்.

நானும் விமர்சனம் எழுதும் போதெலாம் கஷ்டப்பட்டு படம் எடுக்குறாங்க நாம ஈஸி யா நல்ல இல்லைன்னு எழுதுறோமே என்று வருத்தமாக இருக்கும் அதை இந்த படம் மாத்திருச்சு. படத்தில் குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் எனக்கு படத்தில் ஒன்றும் குறையாக தெரியவில்லை. ஒரு சினிமா ரசிகனாக படத்தை நல்ல என்ஜாய் பண்ணினேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது மறுபடி பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் அனைவரும் சென்று தியேட்டரில் பாருங்கள். முழமையான பொழுது போக்கு சினிமா உங்களுக்காக காத்து இருக்கிறது என்று மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். கும்பகோணம் காசியில் படத்தை பார்த்தேன் 80 ரூபாய் டிக்கெட் விலை சவுண்ட் சிஸ்டம் சூப்பர்.

கில்லி+மங்கத்தா= சூது கவ்வும்

நன்றி


Sunday, 28 April 2013

விஜய் சேதுபதியும்- நானும்


பல சமயங்களில் நாம் நினைப்பது தவறாய் போய் விடுவதுண்டு. நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம் துள்ளுவதோ இளமை படத்தின் ட்ரைலர் டி வி யில் பார்த்த பொழுது இவன்லாம் நடிக்க வந்துட்டான் பாரு என்று நொந்து கொண்டேன் தனுஷை பார்த்த உடன். பதினொன்னாம் வகுப்பு படிக்கும் பொழுது காதல் கொண்டேன் திரை படத்தை பார்த்த பொழுது இவன் இப்படி கூட நடிப்பான என்று பார்த்து வியந்தேன். திருடா திருடி பட ரிலிஸ் அன்று முதல் ஆளை டிக்கெட் எடுத்து பார்த்தேன். அன்று சீ இவன்லாம் நடிக்க வந்துடான்ன்னு நெனச்ச நடிகன் இன்று இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற நடிகனாய் மாறி இருக்கிறார்.

இவர் மட்டும் அல்ல விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என அனைத்து நடிகர்களும் ஆரம்பத்தில் இழி சொல்லுக்கு ஆளானபட்டவர்கள் தான். அந்த இழி சொல்லே இவர்களை உயரத்திற்கு வர காரணமாய் அமைந்தது.


அந்த வரிசையில் தற்பொழுது இருப்பவர் விஜய் சேதுபதி. நான் சிறிது காலம் சென்னை பெரம்பூரில் உள்ள S2 திரை அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போ சுந்தர பாண்டியன் ரிலிஸ் சமயம் அப்ப வேறு ஏதோ படம் பார்க்க வந்து இருந்தார் விஜய் சேதுபதி. திரை அரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணி இருந்தால் மட்டுமே அவர்களின் இருக்கைக்கு சென்று கொடுப்பார்கள். 

அவ்வாறு கொடுக்கும் பொழுது விஜய் சேதுபதி தனக்கும் கொண்டு வந்து தருமாறு என்னுடன் பணி புரிந்த நண்பனிடம் கேட்டு கொள்ள அவனும் கொண்டு வர சென்றான். இதை கண்ட உடன் நான் அவன் என்ன பெரிய இவனா? அவனையே போயி வாங்க சொல்லு ரசிகர்கள் யாரும் ஆட்டோகிராப் கேட்டு தொல்ல பண்ண மாட்டாங்க என்று நண்பனிடம் கூறினேன். என் நண்பனோ சிரித்து கொண்டு விடுப்பா போயிட்டு போறான் என்று கூறி அவனிடம் சென்று அவனது ஆர்டர்ரை கொடுத்து விட்டு என்னிடம் வந்தான். பெரிய பிச்சகாரனாய்  இருப்பான் போல பத்து பத்து ரூபாயாய் வச்சு இருக்கான் என்று என்னிடம் கூறினான்.


இது நடந்து ஆறு மாதத்தில் இன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வசூல் நாயகனாக விஜய் சேதுபதி மாறி இருகின்றார். பிட்சா, நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் என்ற இரண்டு பெரிய படங்கள் ஹிட். கோடி ருபாய் சம்பளம் கொடுக்க தயார். அவரது கால்ஷிட் கிடைக்க தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கின்றனர். நான் யாரை பெரிய ஆளா? அப்படி என்று நினைத்தேனோ அவர் இன்னைக்கு தயாரிப்பளர்கலின் வசூல் ஹீரோ. இனி யாரையும் மட்டமா நினைக்க கூடாது என்று என்னிடம் நானே கூறி கொண்டேன். இறைவன் யாரை எப்போது எங்கு  கொண்டு செல்வான் என்பதை அறிந்தவன் அவன் மட்டுமே.

அவரின் சூது கவ்வும் என்னுடைய அடுத்த எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்.