Monday 16 December 2013

2013 - ஆக சிறந்த மொக்கை படங்கள்

2013 ம் வருடம் தரமான படங்களை தவிர அதிகம் மொக்கை படங்களே வந்துள்ளன அவற்றில் நாம் ரொம்ப எதிர்பார்த்த இயக்குனர்கள்&நடிகர்கள் படம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபட்டு உள்ளன அவை இதோ.

10.அன்னக்கொடி;

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம் எடுத்து நம்ம தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் என்ற துடிப்பான ஹீரோவையும் ராதா என்ற அழகான ஹீரோயினையும் கொடுத்தவர் நம்ம இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அதே போல தன் மகளுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் தன்  மகளான கார்த்திகாவை நடிக்க வைத்தார் ராதா. ஆனா இந்த படத்தோடு மும்பைக்கு கார்த்திகா மூட்டை கட்டுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.


9.கடல்;

மணிரத்னத்தால் ரொம்ப பில்டப் பண்ணபட்ட படம். பாடல்களை தவிர படத்தில் வேற ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த ஆளு இப்படி இருட்டுளையும்,புரியாத வசனத்தையும் வச்சு படம் எடுப்பாருன்னு தெரியலையே.


8.ஆதி பகவான்;

அமீர் இவரு அடுத்த பில்டப் மேன். வருஷக் கணக்கா இந்த படத்த எடுத்தார்யா இந்த மனுஷன். அப்படி இந்த படத்தில் என்ன இருக்குன்னு இத்தனை வருஷமா இழு இழு ன்னு போட்டு எடுத்தார் இந்த ஆளு. ஒரு வேலை பாங்காங்ல இந்த பட ஹீரோயின் நீது சந்திராவோடு பல்லாங்குழி விளையாடி இருப்பாரோ.


7.கௌரவம்;

என்னா டைரக்டர்யா இவருன்னு நினைத்த ஒருத்தர் திரு.ராதாமோகன். அவரோடைய முந்தைய படங்கள் அந்த மாதிரி. அவரோட முதல் படமான அழகிய தீயே என்னோட பேவரிட் படம். அவரோட அனேக படமான பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம் என அனைத்துமே என்னால் ரசிக்கப்பட்ட படம். ஆனா இவரிடம் இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை. கருத்தான படம் தான் ஆனா மக்களிடம் எடுபடவில்லை.


6.மூன்று பேர் மூன்று காதல்;

இந்த வருஷம் நாம ரொம்ப எதிர்பார்க்கும் இயக்குனர்கள் எல்லாம் மண்ணை கவ்விட்டாங்க அதுல இவரும் ஒருத்தர் திரு.வசந்த். இவரு படத்தில் பாடல்களாவது தேறும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை தவிர சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை.


5.இரண்டாம் உலகம்;

இயக்குனர் செல்வராகவனின் கனவு படம். ஆனா இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் தூக்கம் தொலைந்து போய் விட்டதாக கூறுகிறார்கள். இனிமேலாவது செல்வராகவன் கனவு காண்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


4.பட்டது யானை;

ஏற்கனவே விஷாலை வைத்து மலைகோட்டை என்று படம் எடுத்துட்டு அதே விஷாலை வைத்து அதே கதையை பெயரை மற்றும் மாற்றி மறுபடி ரீமேக் பண்ணி இருக்கார் நம்ம இயக்குனர் திரு.பூபதிபாண்டியன்
ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் துணிச்சல்.


3.தலைவா;

இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றதுமே எனக்கு தெரிந்து விட்டது எப்படியும் இது தளபதிக்கு பட்டை தான் என்று என் நினைப்பு பொய் ஆகவில்லை. நன்றி இயக்குனர் விஜய் அவர்களுக்கு. தமிழகத்தை ஆளும் கனவில் இருந்து விடுபட்டு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் தளபதி ஆட்சி தான்.


2.நையாண்டி;

தேசிய விருது பெற்ற இயக்குனர்&நடிகர் இணைந்து செய்த படம் ஆனா இப்படி படம் பார்க்க சென்ற மக்களை நையப்புடைப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இதில் படத்திற்கு மட்டமான விளம்பரம் வேற போங்கடா டேய்.


1.அலெக்ஸ் பாண்டியன்&அழகுராஜா;

இந்த வருடம் கார்த்திக்கு சிறப்பானதாக அமையவில்லை பாவம் மனுஷன் ஹிட் மேல ஹிட் கொடுத்து இப்போ பிளாப் மேல பிளாப் பா கொடுத்து கொண்டு இருக்கிறார். அதுக்கு தான் ஓவரா பேச கூடாது இனிமே பேச்சை குறைத்து கொண்டு கொஞ்சம் நடிங்க பாஸ்.

இதை தவிர பாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள், மொக்க சிவா நடித்த யாயா&சொன்னா புரியாது&தில்லு முல்லு, தனுஷின் மரியான், விக்ரமின் டேவிட் என நீண்ட பட்டியலே இருக்கிறது. மொத்தத்தில் 2013 ம் ஆண்டு பல மொக்கைகளை கொண்டு உள்ளது.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான ஆய்வு தான் நண்பா...!

திண்டுக்கல் தனபாலன் said...

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

விளக்கம் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

M (Real Santhanam Fanz) said...

நாமளும் எத்தன மொக்க படத்ததான்யா பார்க்குறது.. அடுத்த வருசமாவது நெலம மாறுதான்னு பார்ப்போம்!

செங்கோவி said...

//இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றதுமே எனக்கு தெரிந்து விட்டது// ஹா..ஹா..எப்படி இந்த மாதிரி ஆளை தேடிப்பிடித்து வாய்ப்பு தருகிறார்களோ!

செங்கோவி said...

படங்களின் செலக்சன் சூப்பர்..!

வெண்ணிற இரவுகள்....! said...

Singam2 , all in all missing

வெண்ணிற இரவுகள்....! said...

thala thanga meenkal mokkaiyaa..........konjam over

வெங்கட் நாகராஜ் said...

பட்டியலில் இருக்கும் ஒரு படத்தினைக் கூட பார்க்கவில்லை! :)))