சுமந்தது நீ அல்லவா!!!
பிறகு சுமப்பவன் நான் அல்லவா!!
பெற்றது நீ அல்லவா!!
பேணி காப்பவன் நான் அல்லவா!!!
வலியால் துடிப்பது நீ அல்லவா!!
மனத்தால் துடிப்பவன் நான் அல்லவா!!
இத்தனையும் எதற்காக?
என்று தோன்றும் முன்னர்...
"குவா குவா..." சதம் கேட்டு
அத்தனையும் மறந்துபோக...
ஓடிச்சென்று கையில் எடுக்க...
வாரி அணைத்து முத்தம் கொடுக்க...
உற்ற துணையை உற்று நோக்க...
நீர் மல்க என்னை கண்ணால் அழைக்க...
வேண்டி நின்ற வரம் இன்று...
வந்ததென அவள் உரைக்க...
நாடி வந்து என் தோளில்...
ஆறுதலாய் முகம் புதைக்க...
என்ன தவம் செய்தேனென்று மனம் நினைக்க...
என் கணங்களில் இருந்து நீர் வழிந்தோடியது!!!
ஆனந்தக்கண்ணீர்!!! - முதன்முறையாக!!!
கவிதையை எழுதியவர்- மலர்விழி (A) Malar
இப்போ எதுக்கு இந்த கவிதைன்னு கேக்குறிங்களா? ஆமாங்க நேற்று தான் நான் அப்பா ஆனேன். இனி இந்த உலகத்தில் எங்களுக்கு என்று ஒரு சொந்தம் மலர்ந்து விட்டது.
பிரசவ அறையில் வழியில் துடித்தது என்னவோ என் மனைவி தான். ஆனால் வெளியில் நின்ற எனக்கு? அந்த நிலையை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.
எல்லாம் இனிதாய் முடிந்து அந்த பெண் மருத்துவர் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று என் குழந்தையை என் கைகளில் கொடுத்த பொழுது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர். இதற்கு பெயர் தான் ஆனந்த கண்ணீரோ? சத்தியமா இதுக்கு முன்னாடி நான் அழுததே இல்லைங்க.
தாயையும்&மகளையும் எந்த குறையும் இல்லாது என்னிடம் சேர்த்த அந்த இறைவனுக்கு என் நன்றியை செலுத்துகிறேன். இறைவனின் நாட்டத்தை செயல்படுத்திய அந்த பெண் மருத்துவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனது சந்தோசத்தை என் பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே...
|
|
Tweet |
13 comments:
மிக்க மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள்...
அப்பாவானதுக்கு வாழ்த்துகள்! ஸ்வீட் எங்க!?
Super!! வாழ்த்துக்கள் சார்!!!
முதல் குழந்தை பெண்ணாய் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.வாழ்த்துக்க
முதல் குழந்தை பெண்ணாய் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி தனபாலன் அண்ணே
ராஜி அக்கா ரொம்ப நன்றி தஞ்சைக்கு வரும் போது சொல்லுங்க ஸ்வீட் கிலோ கணக்குல வாங்கி தரேன் அக்கா
ரொம்ப நன்றி மணி சார்
மிக்க நன்றி பராரி என் குழந்தை பெயரும் உங்கள் பெயரை போலவே சிறு மாறுதல் மட்டுமே
பரீரா
இனிய வாழ்த்து. very bad வெளியே சுத்திக்கொண்ட நன்றிர்களா?
இங்கே பிரசவ அறைக்குள் மனைவி அருகில் நிற்க வேண்டும்.
உங்கு மிகப் பெரிய அநியாயம் செய்கிறார்கள்
better half என்ற அர்த்தத்தையே மறந்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க மகிழ்ச்சி சக்கரகட்டி.....
மிக்க நன்றி கோவை கவி வெளியே நிற்க வேண்டும் என கூறி விட்டார்கள்
ரொம்ப நன்றி நாகராஜ் அண்ணே
Post a Comment