Thursday 28 November 2013

பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி?


1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்!
(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)

2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்!
(தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது)

3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்!
(பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல)

4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்!
(சிலசமயம் செத்துபோன பாட்டியக் கூட கிண்டல் பண்ணுவானுங்க)

5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்!
(இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது)

6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்!
(ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க)

ஆனா பொண்ணுங்களா இருந்தா கஸ்டமே இல்ல..
சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்!
(ஹீ ஹீ நானும் தான் லைக் போடுறேன்)

9 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஆலோசனைகள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்க சொன்ன சரி தான்...

Anonymous said...

வணக்கம்

தகவலுக்கு நன்றி... பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பாலா said...

நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனைகள்.... :)

த.ம. 3

Manimaran said...


//(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)//

இதுதான் நிதர்சனம். நீங்க வேணா பாருங்க.... 5 சதவிகிதத்துக்கு மேல யாருமே லைக் வாங்க மாட்டாங்க.. 5000 பிரண்ட்ஸ் ,10000 பாலோயர்ஸ் இருக்கும். ஆனா 100 லைக் வாங்கிவிட்டு பிரபலம்னு சொல்லிபாங்க... ஆனா பாருங்க 100 லைக் என்பது 1 சதவிகிதம் கூட கிடையாது

Anonymous said...

அவங்க லைக் வச்சிக்கிட்டு நாக்கதான் வழிக்கனும்

தனிமரம் said...

நல்ல ஜோசனை ஐயா!