Tuesday, 11 June 2013

பேருந்தில் பெண்கள் படும் அவஸ்தை?


இந்த பஸ்ல போறது இருக்கே எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் அதனாலே பொதுவாவே நான் வெளியூர் போறதெல்லாம் விரும்புவது இல்லை. ஆனா என்ன பன்றது நான் வேலை செய்யும் ஆபீஸ்க்கு தினமும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு அதுக்கு சரக்கு ஊத்தனும் அதாங்க பெட்ரோல் இதே பஸ்ல போயிட்டு வந்தா 25 ரூபாயில் முடிந்து விடுகிறது. வேற வழி இல்ல என்ன பன்றது

 சரி பஸ்ல போறோம்னா இந்த கவெர்மெண்ட் பஸ்காரங்க பன்ற ரவுசு தாங்கலப்பா இங்க நிக்கமட்டோம் அங்க நிக்கமாட்டோம் அப்படின்னு பஸ்க்கே முதலாளி மாதிரி பம்மாத்து வேலை காட்றானுங்க. ஆனா இவனுகளுக்கு பின்னாடி கிளம்புற தனியார் பஸ் இவனுகளுக்கு முன்னாடி போயிருது.

பொதுவாக பேருந்தில் ஆம்பளைங்க எப்பவும் பின்னாடி தானே ஏறனும் அதானே முறை. ஆனா சில பேர பாருங்களேன் முன்னாடி ஏறிக்கிட்டு உள்ளேயும் போகாம பின்னாடியும் ஏறாம படியிலேயே நின்னு தொங்கிகிட்டு பன்ற சேட்டை இருக்கே பந்தாவாம். இவனுங்கள எல்லாம் செவுளுலையே போடணும்.  

படில பந்தா பன்றவனுங்கள கூட விட்டுரலாம் இன்னொரு குருப் ஆளுங்க இருக்கானுங்க அவனுங்க தான் நம்ம இடியமின்கல்.  இவனுங்கள பத்தி சொல்லியே ஆகணும். போறவறவங்க எல்லாத்தையும் இடிசுகிட்டு ரொம்ப அப்பாவியா முகத்த வச்சுகிட்டு நிப்பானுங்க. இவனுகள பார்த்தாலே கடுப்பா வருது. இந்த மாதிரி இடிமாடுகளிடம் சிக்கி பாடுபடும் ஒரு பெண் அதை தனது முக நூலில் மிக எதார்த்தமாக அழகாக செருப்பால அடிக்காத குறை தான் எழுதி இருகாங்க படிச்சு பாருங்க.


ஒரு பெண்ணின் பதிவு :

குனிந்து எடுத்த நொடியில்...

என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்...

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர்

கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்

ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!


நன்றி;

17 comments:

கோவை நேரம் said...

ஆமாங்க...நானும் இந்த கூட்டத்தில இடிபட்டு மிதிபட்டு போகனுமா அப்ப்டின்னு நினைச்சு போறதே இல்ல...

Thozhirkalam Channel said...

சரியாகத் தான் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள்....

தொழிற்களம் வாசியுங்கள்

Unknown said...

உண்மை தான் தல பேருந்தில் போறதே கடுப்பு கருத்திற்கு நன்றி கோவை நேரம்

Unknown said...

வருகைக்கு நன்றி தொழிர்களம் நண்பரே ஒட்டி வேலை செய்யவில்லை

K said...

பேருந்து தொல்லை பெரும் தொல்லை போல! கவிதையின் கடைசி வரி நச்!!

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணி ஜி

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த பெண்ணின் அவலத்தை உணர வேண்டும்...

ராஜி said...

அந்த கவிதையை நானும் படிச்சேன். பந்த அவஸ்தைகளை நானும் படிச்சிருக்கேன். இப்போ வர்ற பஸ் படிக்கட்டுகள் ரொம்ப உயரமா இருக்கு. சேலை கட்டிண்டு வர்ற பெண்கள் ஏறும்போது பார்த்து ரசிக்கும் ஈனப்பிறவிகளை சமீபத்தில் சந்தித்தேன் சகோ!

Avargal Unmaigal said...

உண்மையை எடுத்துரைத்த கவிதை.. நான் சென்னையில் வேலை பார்த்த போது பஸ்ஸில் போகவே சங்கடப்படுவேன் காரணம் கூட்ட நெருக்கத்தில் தவறுதலாக எந்த பெண்ணையாவது இடித்துவிடுவோமோ என்ற பயம் அதிகம். பஸ்ஸில் போவது பெண்களுக்கு மட்டுமல்ல என்னைப் போல உள்ள ஆண்களுக்கும் கடினம்தான்

sathishsangkavi.blogspot.com said...

உண்மைதான்...

இன்று வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற நிலையில் பலர் உள்ளனர்... எல்லோராலும் வாகனங்கள் வாங்க முடியாது...
வேறு வழி சகிச்சிகிட்டுத்தான் வாழ்கிறார்கள்...

சதீஷ் செல்லதுரை said...

உண்மைதான் .....இதற்க்கு என்னதான் தீர்வு?

சமுத்ரா said...

இதற்கு தீர்வை அரசாங்கம்தான் செய்ய வேண்டும். பஸ்ஸில் இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடுபவர்களை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். குறைந்தது ஒரு மாத காலத்திற்கு தனிமைச்சிறையில் அடைக்கவேண்டும். இதுபோன்ற தண்டனைகளால் பஸ் ரோமியோக்கள் மனதில் பயத்தை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து.
http://samuthranews.blogspot.com

Anonymous said...

பெண்ணின் பதிவு...சுளீர்.

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தனபாலன் சார்
சகோதரி ராஜி
மதுரை தமிழன் அண்ணே
சங்கவி சகோ
செல்லதுரை சார்
சமுத்ரா சகோ
சிவகுமார் அண்ணே

கவிதை வானம் said...

அட்டகாசமான பதிவு...நல்ல விழிப்புணர்வு ...முகநூல் வரிகள் அருமை

கலியபெருமாள் புதுச்சேரி said...

சமுத்ரா அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ம்ம்ம்ம்ம்- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா