Saturday 1 June 2013

ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸ்


யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இப்போதைக்கு முதலிடம் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6 படத்துக்குதான். வின் டீசல், பால் வால்கர் நடித்து வந்த இந்த ஆக்ஷன் சீரிஸின் ஆறாவது பாகத்தில் டிவைனி ஜான்சனும் சேர்ந்திருக்கிறார். முடியை பிய்க்க வேண்டாம் ரெஸ்ட்லர் ராக் கின் ஒரிஜினல் பெயர்தான் டிவைனி ஜான்சன்.

24 ஆம் தேதி வெளியான படம் வார இறுதி மூன்று தினங்களில் 97.4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ப்ரிமியர் ஷேர்க்களையும் சேர்த்து வசூல் 117 மில்லியன் டாலர்கள்.


த ஹேங்ஓவர் 3 படம் இரண்டாவது இடத்தில். வார இறுதியில் 41.7 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ப்ரிமியரையும் சேர்த்து 62.1 மில்லியன் டாலர்கள்.


இரண்டாவது வார இறுதியில் ஸ்டார் ட்ரெக் இன்டூ டார்க்னெஸ் 37.3 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் இதுவரையான வசூல் 156 மில்லியன் டாலர்கள்.



அனிமேஷன் படமான எபிக் வார இறுதியில் 33.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. ப்ரிமியரும் சேர்த்து 42.8 மில்லியன் டாலர்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே வசூலித்துள்ளது.

அயன் மேன் இன்னமும் வார இறுதியில் 19.3 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பது ஆச்சாரியம். இரண்டாவது பாகத்தைவிட மொக்கையான இப்படம் இதுவரை 373 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இந்த வசூலை முறியடிக்குமா? ஹாலிவுட்டில் பெட் கட்டி 
காத்திருக்கிறார்கள். நாமும் பொருத்து இருந்து பார்ப்போம்?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹேங்... "ஓவர்"...!

Anonymous said...

panathai mattume prathanamaga vaithu ippothellam padam edukkirargal...cinema become a large scale industry..

குட்டன்ஜி said...

பார்ப்போம்

பால கணேஷ் said...

எங்கருந்து புடிக்கறீங்க இத்தனை தகவல்களை? சூப்பர்!