Saturday, 4 April 2015

பெண்கள் பற்றிய பழமொழிகள் !!!!

1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை, கண் இன்றிக் காட்சியும் இல்லை .

2 . பெண் கிளை, பெருங்கிளை .

3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7 . பெண் பாவம் பொல்லாதது .

8 . பெண் வாழ, பிறந்தகம் மகிழ

9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.

10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்.

11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் - வேட்லி.

12 . பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.

13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட் பைரன்.

14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.

16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.

17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்

18 . தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.

20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் முத்துக்கள் தான்...

என்ன ஆளையே காணாம்...? விசேசமா...? அது தான் இப்பதிவா...? ஹிஹி...

வாழ்க நலம்...

Unknown said...

இல்லைண்ணே முன்ன மாதிரி வர முடியல்லே நினைவு வைத்து கேட்டதற்கு நன்றி அண்ணே