Showing posts with label டாப் டென் ஹீரோஸ். Show all posts
Showing posts with label டாப் டென் ஹீரோஸ். Show all posts

Wednesday, 8 January 2014

தமிழ் சினிமா 2013 - டாப் 10 கதாநாயகர்கள்


போன வருடத்தின் டாப் 10 ஹீரோஸ் யார் என பார்ப்போமா ...

10. சீயான் விக்ரம் & விஜய்  ;

போன வருடம் விக்ரம் நடிப்பில் வெளி வந்த படம் ஒன்றே ஓன்று டேவிட்.
ஹிந்தி & தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எந்த மொழி ரசிகர்ளை திருப்தி படுத்துவது என தெரியாமல் இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார் குழம்பி படத்தையும் குழப்பிவிட்டார். எனவே இந்த ஆண்டில் வெளிவரும் ஷங்கரின் ஐ படம் அவரை காப்பாற்றும் என நம்புவோம்.

போன வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தலைவா இந்த படம் வெளிவருவதற்குள் நொந்து நுடுல்ஸ் ஆகி விட்டார் நம்ம தளபதி. நன்றாக ஹிட் கொடுக்கும் போதே அப்பாவின் அரசியல் ஆசையால் இதுபோல மொக்கை படமாக நடித்து பெயரை கெடுத்து கொள்வதே அவருடைய வாடிக்கை அதில் இந்த படமும் ஓன்று. இந்த வருடத்தில் அவருக்கு  ஒரு நல்லது நடந்து இருக்கிறது என்றால் அது ஒன்றே ஓன்று தான். அவரது அப்பாவின் அரசியல் ஆசையால் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை அறிந்து கொண்ட விஜய் அவரது அப்பாவை இனி தன்னுடைய தொழிலில் தலையிட தடை விதித்து விட்டாராம் இனி அவருக்கு நல்ல காலம் தான்.


9. கார்த்தி ;

போன வருடம் இவர் நடித்த அலெக்ஸ் பாண்டியன் & ஆல் இன் ஆள் அழகுராஜா போன்ற படங்களை கண்ட ரசிகர்கள் இவர் மேல் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். தொடக்கம் சரியாக அமையாவிட்டால் எப்படி இந்திய அணி தடால் என கிழே விழுந்து தோற்று போகிறதோ அதே போல இவரும் ஆண்டின் துவக்கத்தில் கிழே விழுந்தவர் வருட கடைசிவரை அடிமேல் அடி தான். ஆண்டின் இறுதியில் வெளி ஆகி இருந்த பிரியாணி ஏதோ ஒரு அளவுக்கு இவரை காப்பாற்றி விட்டது இது மட்டுமே ஒரே ஒரு ஆறுதல் போன வருடத்தில் இவருக்கு.


8. தனுஷ் ;

போன வருடம் ஒரு தயாரிப்பாளராக வெற்றி பெற்ற தனுஷ் ஒரு நடிகராக கோட்டை விட்டு விட்டார் என்றே கூற வேண்டும். அவருடைய மரியான்& நையாண்டி என்ற இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. ஹிந்தியில் அவர் நடித்த ரஞ்சனா என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தமிழில் மரியான் என்ற படத்தில் தனுஷ் பார்வதி இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது இருந்தும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நையாண்டி ரசிகர்களை நையாண்டி செய்துவிட்டு போனது தான் மிச்சம். மொத்தத்தில் போன வருடம் தனுஷிற்கு ராசியாக அமையவில்லை.


7. ஆர்யா ;

போன வருடம் ஆர்யாவிற்கு நல்லதும் கேட்டதும் சேர்ந்து அமைந்த ஆண்டாக உள்ளது. சேட்டை என்ற தோல்வி படத்தை கொடுத்து பின்பு ராஜாராணி என்ற ஹிட் படம் கொடுத்து பின்பு  தல அஜித்துடன் இவர் சேர்ந்து நடித்த ஆரம்பம் படமும் வசூலை குவிக்க அது முடிவதற்குள் செல்வராகவனின் இரண்டாம் உலகம் இவரை காலை வாரிவிட்டது. ஆர்யாவிற்கு 2013 சுமாரான ஆண்டாக அமைந்தது.


6. சிவகார்த்திகேயன் ;

2013ம் வருடம் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஆண்டாக அமைந்து விட்டது. இவரின் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்து படங்களும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்து உள்ளது. ஆடி கார் கூட சிவா வாங்கிட்டாராம் அப்புறம் என்ன அடிச்சு தூள் கிளப்புங்க சிவா. ஆனா முகத்தை மட்டும் அழுவுன வாழைபழம் மாதிரி வட்சுக்காதிங்க.


5. விஷால் ;

ஆண்டின் தொடக்கத்தில் சமர் என்ற சுமாரான படமும் நடுவில் பட்டத்துயானை என்ற மொக்கை படமும் கொடுத்து இறுதியில் பாண்டிய நாடு என்ற நல்ல படத்தை கொடுத்து தப்பித்து விட்டார். விரைவில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக பரிசிலனை செய்வதாக கிசுகிசு தலைவா படம் சந்தித்த பிரச்சனையை மறந்து இருப்பரோ?  வேணாம் விஷால் அரசியல் ஆசை இருந்தால் இப்போதே லப்பர் வைத்து அழித்து விட்டுடுங்க.


4. விஜய் சேதுபதி ;

தமிழ் சினிமாவின் அரத பழசான ட்ரெண்டை மாற்றி தமிழ் சினிமாவை புதிய தளத்திற்கு அழைத்து சென்றவர். இவரின் வருகைக்கு பின்பு புதிய பரிசிலனை முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதேபோன்று பல வித்தியாசமான கதைகளை நாம் விஜய் சேதுபதியிடம் எதிர்பார்ப்போமாக.


3. சூர்யா ;

கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிய சூர்யா 2013ம் வருடம் சிங்கம்2  படத்தின் மூலம் தன்னை வசூல் ராஜாவாக நிலைநிறுத்தி கொண்டார். கௌதம் மேனன் படத்தில் இருந்து விலகியது சூர்யாவிற்கு இழப்புதான். அவரை தமிழ் சினிமாவின் ஸ்டாராக உயர்த்தியது கௌதம் என்பதை மறுக்க முடியாது. சரி இந்த வருடம் சூர்யாவிற்கு ஓகே ஓகே.


2. அஜித் ;

தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்றால் மிக நல்லவனாகவும்  மக்களை காப்பாற்றும் சக்தியாகவும் வில்லனுடன் சண்டை போடவும் கதாநாயகியுடன் கட்டி உருளவும் என விதிமுறை எல்லாம் இருக்கிறது. அதை எல்லாம் செய்யாமல் ஒரு நடிகனால் வெற்றி பெற முடியும் என்றால் அது அஜித் என்ற நடிகனால் மட்டுமே முடியும். அனைத்து நடிகர்களுடன் இணைத்து நடித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. தன் படம் என்றால் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைக்காமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து நடிக்க அவரால் மட்டுமே முடியும். ஆரம்பம் படம் அஜித் என்ற நடிகனை தவிர்த்து வேறு யாரும் நடித்து இருந்தால் இந்தளவு வசூலை குவித்து இருக்குமா எனபது சந்தேகமே.


1. கமல்ஹாசன் ;

உலக நாயகனின் நடிப்பில் 2013ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளி வந்த படம் விஸ்வரூபம். இந்த படம் வெளியாவதற்கு எவ்ளோ சிரமங்களை சந்தித்தார் கமல். அத்தனை தடங்களையும் தாண்டி வசூலை குவித்தது இந்த படம். ஆனா ஆண்டின் இறுதியில் பட்டிமன்றம் நடத்தி அடுத்த படத்திற்கு சிக்கல் வராமல் பார்த்து கொண்டார் கமல். உலக நாயகன் மூளைனா சும்மாவா உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?


நன்றி