Friday 1 November 2013

தித்திக்கும் தீபாவளி


குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல் தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.

அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி, குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.

அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.

அபராதமும் விதிக்கப்படும்.

இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.

ஹேப்பி தீபாவளி!
 (வீர சாகசம் வேணாம்)

பட்டாசு வெடிக்கிறீங்களா?

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிக ஒலி உடைய பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*  பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்க கூடாது.

* உடைந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வழக்கத்தை விட அதிக ஒலி ஏற்படும்.

* வீட்டின் பால்கனியில் நின்று பட்டாசு வெடிக்க கூடாது. அருகே உள்ள ஜன்னல், அலமாரியில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.


*  மது அருந்திவிட்டு பட்டாசு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

7 comments:

Anonymous said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு நண்பா..எத்தனை பேர் பின்பற்றுவார்கள் என்றுதான் தெரியவில்லை..நம்ம ஊர்க்காரங்களுக்கு அடுத்தவங்க முன்னாடி ஹீரோயிசம் காட்டறதுல ஒரு அற்ப ஆனந்தம்..

கரந்தை ஜெயக்குமார் said...

இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

ராஜி said...

பாதுகாப்பான தீபாவளி கொண்டாட சொன்ன அறிவுரைகள் நன்று.

வெற்றிவேல் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

எத்தனைதான் பெரியவங்க ஆர்வமா அட்வைஸ் பண்ணினாலும் ஆர்வக் கோளாறுல பெரிய வெடியைப் பத்தவெச்சு, அது வெடிக்கறதப் பக்கத்துல நின்னு பாக்கணும், ரசிக்கணும்னு நிக்கப் போக, நெருப்புக் கங்கு பட்டு புது டிரஸ்ஸில ஓட்டை விழ... வீட்டுல அடி விழ... என் சின்ன வயசு தீபாவளி நினைவு! இன்றைய இளைய தலைமுறைல்லாம் ரொம்பவே விவரமா இருக்குன்றதும், சொன்னாப் புரிஞ்சுக்கறாங்கன்றதும் கொஞ்சம் ஆறுதல்! பாதுகாப்பான தீபாவளிக்கு அக்கறையாய் யோசனை சொன்ன உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் சக்கரக்கட்டி!

Tamil Bloggers said...

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.