Saturday 11 May 2013

கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி?


கண்களை பற்றி அறிந்து கொள்வோம்;

1.கருவில் முதன்  முதலாக உருவாகும் உறுப்பு கண்களே.

2.தேனிக்களுக்கு ஐந்து கண்கள் உண்டு.

3.டால்பின்கள் தூங்கும் பொழுதும் கண்கள் திறந்து இருக்கும்.

4.வண்டுகளுக்கும்,முயல்களுக்கும் கண் இமைகள் கிடையாது.

5.கண்கள் இருந்தும் பார்வை இல்லாத உயிரினம் வவ்வால்.

பதநீர் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?

நான் சிறுவனாக இருக்கும் பொழுது பதநீர் பருகியது அதன் பின்பு அதை கண்ணால் கண்டே பல ஆண்டுகள் ஆகி விட்டது. தெருக்கு தெரு டாஸ்மாக் தண்ணி கிடைக்கிறதே ஒழிய இந்த பதநீர் கிடைக்க மாட்டேன்கிறது.

பதநீரில் 85% நீர்சத்தும் 12% சர்க்கரை சத்தும் உள்ளது.மேலும் கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு போன்ற  தாது உப்புகளும், வைட்ட மின்கள் சி,பி,டி
ஆகியவையும் உள்ளன.

பதநீரில் உள்ள இரும்பு சத்து பித்தத்தை நீக்குகிறது. பற்களின் வளர்ச்சிக்கும், மலசிக்கலை போக்கவும் பதநீர் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரொம்ப நல்லது.

தினந்தோறும் காலையில் டீ குடிப்பதை விட பதநீர் பருகினால் காலை உணவு போல உடலுக்கு சக்தி அளிக்கிறது.

பல நாட்டு பழ  மொழிகள்;

1.கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை-ஸ்பெயின்

2.எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும்-ஸ்காட்லாந்து

3.பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்-ஜேர்மன்

4.தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல்-ருமேனியா

5.பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும்-துருக்கி

ஏன்டா தினமும் பதிவ போட்டு எங்கள சாகடிக்கிற அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.என்ன பன்றது நேற்று போட்ட பதிவ பார்த்துட்டு அண்ணன் பதிவு உலக மாணிக்கம் பிலாசபி பிரபாகரன் சாபம் கொடுத்து விட்டுட்டாரு. அதனால பயன் தர மாதிரி நான் படித்த விடயங்களை எழுதி இருக்கேன். கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி? ஹாஹா  

4 comments:

கார்த்திக் சரவணன் said...

கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு இதயம் என்று கேல்விப்பட்டிருக்கிறேன்....

Unknown said...

ஸ்கூல் பையன் நானும் கேள்வி பட்டு இருக்கேன் இது புத்தகத்தில் படித்தது தான்

யோசிக்க வட்சுடிங்க கேட்டுறலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

பல நாட்டு பழமொழிகள் அருமை...

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன் அண்ணே