Monday 15 April 2013

பிரபல பதிவர்களை காணவில்லை?


நானும் ப்ளாக் ஆரம்பிச்சதுள்ள இருந்து மத்த ப்ளோக்ல இருக்குற மாதிரி ஒட்டு பட்டைகளை நம்ம ப்ளாக்ல சேர்க்கணும்னு ஒரு வருசமா முயற்சி பண்ணுறேன் முடியல்ல. வழி முறை எல்லாம் பார்த்து செட்டிங்க்ஸ் உள்ள போனால் ஒரே கசமுசான்னு இருக்கு ஒண்ணுமே புரியல்ல யாருட்டடா கேக்குறதுன்னு ஒரே யோசனை. அப்பறம் தான் நம்ம தல  தமிழ் வாசி பிரகாஷ் அண்ணன்க்கு மெயில் பண்ணினேன் உடனே அண்ணன் ஒட்டு பட்டைகளை எல்லாம் இணைத்து குடுத்தாரு. அதுக்கு அப்பரம்மா தான். ஹிட்ஸ் அதிகமா ஆகி இருக்கு. இந்த பதிவின் வழியாக அண்ணன் பிரகாஷிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
  
1.பன்னிகுட்டி ராமசாமி;

அண்ணனே கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. இவரு கடைசியா மார்ச் 4 கடைசியா ஒரு பதிவு போட்டதோட காணோம். இவரோட பதிவெல்லாம் படிச்சா யப்பா என்னமாதிரி நகைச்சுவையா எழுதி இருப்பாரு.அண்ணனை கண்டு பிடித்து பதிவெழுத சொல்பவர்க்கு அண்ணனிடம் இருந்தே ஒரு பெட்ரோமாஸ் லைட் வாங்கி இனமாக தரப்படும். 

2.செங்கோவி;

தலைவரு சொல்லிட்டே கிளம்பிட்டாரு. இரண்டு மூன்று மாதங்களுக்கு வர முடியாது என்று. தல சிக்கிரம் வந்து பதிவ போடுங்க.

3.இரவு வானம்;

நம்ம ஆளு கடைசியா பிப்ரவரி மாசம் பதிவு எழுதுனது தான். நல்ல எழுதுவாரு. இது மாதிரி நல்ல எழுத தெரிந்த ஆளுங்க எல்லாம் எழுதம இருந்த எங்கள மாதிரி மொக்கையா எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் பார்த்துகோங்க சுரேஷ்.

4.கிஷோகரின் பக்கங்கள்;

தம்பி கடந்த 3 மாத காலமாக பதிவு எழுதாமல் இருக்கிறார். ஆனா முக புத்தகத்தில் மட்டும் பெண்களுடன் அரட்டை அடிப்பதாக தகவல் வந்து உள்ளது.உண்மையா தம்பி.

5.அகாதுகா அப்பாடக்கர்ஸ்;

நம்ம காமெடி சூப்பர் ஸ்டார்ஸ் சந்தனத்தின் ரசிகரால் எழுதப்படும் இந்த ப்ளாக். கடந்த இரண்டு மாதங்களாக எழுதபடாமல் உள்ளது. மிண்டும் சந்தனத்தை வைத்து திறப்பு விழா எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபடுகிறது.

6.அவிங்க;

நம்ம தலைவரு எல்லாத்தையும் கலந்து எழுதுவாரு. சூப்பரா இருக்கும் கோபால் அப்படின்னு ஒரு கதாபாத்திரத தனது நண்பனாக ஆக்கி நல்ல காமெடி யா எழுதி இருபாரு. சூப்பர் சூப்பர். எனக்கு அந்த கோவாலு கலந்து கொள்ளும் ஒரு கோடி பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சது. அண்ணே அமெரிக்கால இருக்காருன்னு நெனைக்கிறேன். அவரும் தொடர்சிய பதிவு எழுதுனா சந்தோசமா இருக்கும்.

7.நாய்_ நக்ஸ்;

நம்ம ஆள  போன வருஷம் கடைசியா பதிவு போட்டதோட காணவில்லை.
கடைசியா கவிதை ன்னு எழுதி ஒரு பதிவு போட்டாரு பாருங்க அதுக்கு அப்பறம் தான் ஆளையே காணோம். அந்த கவிதைய படிச்சு அவரே மயக்கமாயிட்டாரோ??

இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இன்னும் ஒரு சில ப்ளாக் லாம் இருக்கு அந்த ப்ளாக் பெயரலாம் சொல்லல. அந்த ப்ளாக் ல உள்ள பதிவெல்லாம் காமெடி யா இருந்தாலும் அதிகமான உள் குத்து பதிவாக இருந்ததால படிச்சு சிரித்ததோட முடிச்சுகிட்டேன். அவங்களும் பதிவு எழுதுனா நல்ல இருக்கும்.

மத்தபடி இப்ப  நெறைய பதிவு எழுதி சந்தோஷ படுத்துறது நம்ம வீடு சுரேஷ் குமார் அண்ணன் தான். அண்ணே நீங்க இது மாதிரி எழுதிகிட்டே இருங்க. அப்பரம் நம்ம ஆரூர் மூனா அண்ணே அவங்களும் அடிகடி பதிவு போடுறாங்க சந்தோசம். மெட்ராஸ் பவன் சிவகுமார் அண்ணே,அதிரடிக்காரன், பிலாசபி பிரபாகரன் வாரம் ஒண்ணு இரண்டு பதிவு எழுதுறாங்க அதிக படுத்தனும்னு கேட்டு கொள்கிறேன்.

நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணன பத்தி சொல்லணும் நானும் எந்த ப்ளாக் போனாலும் முதல் ஆள எல்லோர்க்கும் முன்னாடி  அண்ணன் தான் பாரட்டுறாரு. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரொம்ப நன்றிண்ணே.

நன்றி.. 

10 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காணாமல் போன பதிவர்களை தேடிக் கண்டு பிடித்து பதிவு எழுத வைக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிதரன் சார்

கவியாழி said...

மறக்காம எல்லோரையும் பாலோ பண்ணி சொல்லியமைக்கு பாராட்டுக்கள்

Unknown said...

கண்ணதாசன் ஐயா வருகைக்கும் பின்னோடதிற்கும் நன்றி எல்லாம் மறக்க கூடிய ஆட்களா?

நாய் நக்ஸ் said...

Naan university
poraattathithi.....
Poraaliyaaga....
Irukkiren.....

Inruthaan....
University....
Govt. Undertake.....
Pannathu....

I will come...
After julay month.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆமா...

பன்னிக்குட்டி அண்ணன் வாசகர்களின் ஆசையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்...

Unknown said...

நாய் நக்ஸ் அண்ணே வாங்க வாங்க வருகைக்கும் பின்னோடதிற்கும் நன்றி

Unknown said...

பிரகாஷ் அண்ணே சீக்கிரம் ராமாசாமி நிறைவேற்றுவார் என்று நம்புவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்... ஆனாலும் சொல்லவில்லை... நல்லது...

என்னால் வாரம் ஒரு பதிவு தான்... [அதுவும் ஞாயிறு அன்று எழுதி, அதை எடிட் செய்து (சுருக்கி + பிழைகளை நீக்கி) வெளியிட இரண்டு மூன்று நாட்கள் ஆகி விடுகிறது...] மற்ற நாட்களில் நண்பர் தளங்களை வாசிப்பது மட்டுமே...

Reader-களில் பதிவுகளை வாசிக்க முயற்சி செய்யுங்கள்... எளிதாக இருக்கும்... தொடரும் தளத்திற்கே செல்லாமலும் படிக்க முடியும்...

முடிந்தால் அதைப் பற்றி ஒரு பகிர்வு எழுதுகிறேன்...

நன்றி...

Unknown said...

தனபாலன் அண்ணே ஆமா நீங்க சொல்ற மாதிரி நிறைய ப்ளாக் நமக்கு தெரிய மாட்டேன்குது அத பத்தி சொன்னிங்கன நாங்களும் படிக்க வசதியாக இருக்கும்

இன்னும் நெறைய பதிவர்கள் இருகாங்க சொன்னா சொல்லிகிட்டே போகலாம்

வருகைக்கு நன்றிண்ணே