Wednesday 13 March 2013

பாலா மன நோயாளியா?

[பவர் ஸ்டார ஒரு பாட்டுக்கு போடலாமா]

காலை எழுந்தவுடன் நம்ம பிரபல பதிவர்கள் எழுதுன பதிவுகள படிச்சுட்டு இருந்தேன். அப்ப நம்ம அண்ணன் கேபிள் சங்கர்  ப்ளாக் ல நம்ம இயக்குனர் பாலாவோட படத்த பத்தின  டீசர் ஒன்னு அப்லோட் பண்ணி இருந்தாரு. அந்த  வீடியோவ பார்த்தேன். அப்படியே ஷாக் ஆயிட்டேன் இந்த ஆளு படமெடுக்குரார இல்ல மாடு மேய்கிறாரா. அவங்கள் எல்லாம் நடிகர்கள்னு நெனைக்கிறாரா இல்ல அடிமைகள்னு நினைத்து கொண்டரானு தெரியல்ல. அவர் பக்கத்துல்ல நின்று கொண்டு இருக்கும் பொழுது கூட நடிப்வர்களின் முகத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது ஏதோ பேயறைந்தது போல முகம் விளரி போயி காணப் படுகிறார்கள். எல்லா ஆளையும் வெளுதுட்டு அண்ணன் ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க நான் சொன்ன மட்டும் போதாது. நீங்களே இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.


அவன்-இவன் படத்துல்ல அந்த வயசான ஜெமின்தார் கதா பாத்திரத நிர்வாணமாக ஓடவிட்டார். நான் கடவுள் படத்துல்ல ஆர்யாவ கோமணதோட ஓட விட்டார். தத்ருபமாக படம் எடுக்கலாம் அதற்காக இந்த அளவு கொடுமைபடுத்த கூடாது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை எல்லாம் நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. நடிப்பதற்காக இவ்வளவு மெனக்கெடல்கள் படும் பொழுது மிக வருத்தமாக உள்ளது.

[எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்]

அதர்வா பார்க்க எவ்வளோ அழகா இருப்பாப்ல அவர இப்படி நடிக்க வச்சாலும் பரவா இல்லை. பிரம்பால போட்டு இந்த வெளு வெளுதுட்டார். பாவம் யா இந்த கதா நாயகிங்க அது ஏன்யா கருப்பா  நம்ம தமிழ் நாடுள்ள கதா நாயகிங்க இல்லையா வெள்ளை தோல் உள்ள ஆளா பிடிச்சு கருப்பு பெய்ன்ட் அடிக்கிறிங்க. பெய்ன்ட் செலவாவது மிச்சம் ஆகும். 

[அண்ணே விட்ருகண்ணே நாங்க பாவம்]

பாலா அவர்களே நீங்க திறமையான இயக்குனர் தான். அதுக்காக நடிகர்களை மிருகங்களாக பயன் படுத்தாதிர்கள். சுதந்திரமாக நடிக்க விடுங்க. உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்னு நினைக்க வேண்டாம். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் இவர்களை விடவா. சொந்த காச வேற படத்துல்ல முதலீடு பண்ணி இருக்கீங்க அதனால ரொம்ப தத்ருபமா வரணும்னு நினச்சுடின்களா பயபடாதிங்க போட்ட காச எடுத்துறலாம். அடுத்த படத்துல்ல இருந்து கதை களத்த மாத்துங்க.  நாங்களும் உங்கள்ட வேற மாதிரியான படங்களை எதிர்பார்கிறோம். 
[இதே மாறி நம்ம படத்துக்கு கூட்டம் வருமா?]

மற்றவை படம் வெளி வந்த பிறகு பார்க்கலாம்.

நன்றி!
      

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியெல்லாம் பணத்தை அள்ளலாம் என்று தெரிந்தவனுக்கு... இதெல்லாம்

...

...

...


ஒரு விளம்பரம்...

Unknown said...

வருகைக்கு கருத்திற்கும் நன்றி தனபாலன் சார்

முத்தரசு said...

படம் முழுவதும் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாேம

Unknown said...

முத்தரசு சார் டீசரே இப்படி வெளுத்துறுகர் படத்துல்ல எப்படியோ? படத்தையும் பார்ப்போம் வருகைக்கு நன்றி சார்

kk said...

எனக்கும் அதிர்ச்சியைக்கொடுத்த வீடியோதான் இது ஆனால் அதர்வா முதற்கொண்டு இதுவரை பாலாவின் படத்தில் நடந்த அனைவருக்கும் இதே அடிதான் விழுந்தது என்றால் ஏன் யாரும் இதைவெளியில்கூறவில்லை பொலீஸில் புகாரளித்திருக்கவேண்டுமே என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை

Unknown said...

வருகைக்கு நன்றி யோகராஜா